விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 300 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.10.51 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளையும், 15 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் (13.04.2025) வழங்கினார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் இலட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 143 பயனாளிகளுக்கு ரூ.5.05 கோடி மதிப்பிலும், இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில்தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கபாண்டியன் அவர்கள் மற்றும் சீர்மரபினர் நல வாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி ஆகியோர் முன்னிலையில்,157 பயனாளிகளுக்கு ரூ.5.50 கோடிமதிப்பிலும்,எனஆகமொத்தம்300பயனாளிகளுக்குமொத்தம்ரூ.10.51கோடிமதிப்பில்வீடுகட்டுவதற்கானவேலைஉத்தரவுகளைவருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் மிகுந்த முனைப்போடு செயலாற்றி வருகிறது.டாக்டர் கலைஞர் அவர்கள் எதையெல்லாம் நினைத்தாரோ அதையெல்லாம் செய்கின்றவராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார். கடந்த 2000 ஆம் ஆண்டில் டாக்டர் கலைஞர் அவர்கள் முதன் முதலில் கிராமங்களில் நத்தம் புறம்போக்குகளில் குடியிருப்போருக்கு பட்டாக்களை வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல் 2010 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் வீடு கட்டும் திட்டத்தை கொண்டு வந்தார்.அவர் நினைவாக தற்போதைய நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அந்த திட்டத்தை கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில், மீதமுள்ள குடிசைகளையெல்லாம் தமிழ்நாட்டில் குடிசை இல்லாத வீடுகளாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்பொழுது தமிழ்நாட்டில் 1 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்டடும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் 2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.அதன்படி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீட்டில் குறைந்தபட்ச அடித்தளப் பரப்பளவு சமையலறை உட்பட 360 சதுர அடியாகவும், அதில் 300 சதுர அடி கான்கிரீட் கூரையாலும், மீதமுள்ள 60 சதுர அடி கான்கிரீட் அல்லது பயனாளியின் விருப்பப்படி எரியாத பொருட்களால் செய்யப்பட்ட வேறு எந்த வகையான கூரையாகவும் வீடுகளை பயனாளியே விரும்பத்தக்க வகையில் கட்டும் வகையில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.ஆண்களை விட அதிகமாக வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யும் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகிறது.தமிழ்நாட்டில் குடிசை வீடுகளே இல்லை என்ற நிலையை மாற்றி, அவர்களுக்கு சொந்த வீடு என்ற இலக்கோடு நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகளை வழங்கி வருகிறார்.அதற்காக 2025-26 ஆம் ஆண்டு மட்டும் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.நமது விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 1900 குடும்பங்களுக்கு ரூ.66.50 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. வேலை உத்தரவுகள் பெற்ற அனைவரும் விரைவில் வீடுகள் கட்டு, தங்களது சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனவும், இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசிற்கு என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மா.ஊ.வ.மு) மரு.தண்டபாணி, நகர்மன்றத் தலைவர்கள் திரு.ரவிக்கண்ணன்(திருவில்லிபுத்தூர்), திருமதி பவித்ரா ஷ்யாம்(இராஜபாளையம்), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.தனுஷ் எம் குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் திரு.கு.ஆறுமுகம், திரு.சிங்கராஜ்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது-2025-க்கு தகுதியானவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தகவல்.சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.2025ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது1. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த (01.04.2024) 2024 ஏப்ரல் 1ந் தேதி அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது (31.03.2025) மார்;ச் 31-ந் தேதி 2025 அன்று 35 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.2. கடந்த நிதியாண்டில் (2024-2025) அதாவது 01.04.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்;தில் கொள்ளப்படும்.3. விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் ( சான்று இணைக்கப்பட வேண்டும்).4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும் அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.5. ஒன்றிய /மாநிலஅரசுகள், பொது துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள்/ பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.6. விண்ணப்பதாரருக்கு உள்ளுர் சமுதாய மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.7. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 03.04.2025 முதல் கடைசி நாள் 03.05.2025 அன்று மாலை 4.00 மணி ஆகும்.8. விண்ணப்பதாரர்கள் தங்கள் மாவட்ட காவல் நிலையத்தில் இருந்து அன்னார்களுக்கு உள்ள நன்னடத்தை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இவ்விருதிற்கு 03.05.2025 மாலை 4.00 மணிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S.., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 614 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.21.49 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளையும், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் மூலம் 33 பயனாளிகளுக்கு ரூ.31.20 இலட்சம் மதிப்பில் வேலை உத்தரவுகளையும் என மொத்தம் 647 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.22.28 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் இன்று(12.04.2025) வழங்கினார்.ஆக மொத்தம் 647 பயனாளிகளுக்கு ரூ.22.28 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறைஅமைச்சர்திரு.தங்கம்தென்னரசு அவர்கள் வழங்கி, தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பு ஏற்று இருக்கக்கூடிய இந்த நான்கு ஆண்டு காலத்தில்.நாளுக்கு ஒரு திட்டம், அவையாகும் நன்மை பயக்கும் திட்டம், நாட்டு மக்களுக்கு உரித்தான திட்டம், ஏழை எளிய மக்களுக்கான திட்டம், சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கான திட்டம், சமூகத்தில் அவர்களின் நிலையை உயர்த்துவதற்கான திட்டம் என்ற வகையில் பார்த்து பார்த்து இந்த அரசு செயல்பட்டு வருவதை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.வெற்றிகரமாக இன்று செயல்படுத்தி வரக்கூடிய திட்டன்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டமும் ஒன்று..1971 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவர்தான் சென்னை மாநகரம் முழுவதும் இருக்கக்கூடிய குடிசைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், குடிசை மாற்று வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி குடிசையில் குடியிருந்த அனைவரும் அடுக்குமாடிகளில் குடியேற வீடுகளை உருவாக்கி தந்தார்.தமிழ்நாட்டினுடைய தமிழ்க்குடிகள்; அனைவரும் அவர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான கான்கிரீட் வீடு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கி இருந்த திட்டத்தை செயல்படுத்தினார்.. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை ஏழை மக்களுக்கு எல்லாம் வீடுகள் வழங்கக்கூடிய திட்டத்தை நாம் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், 2025-26 ஆம் ஆண்டில் 1 இலட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..மழைக்காலத்திற்கு முன்பாக வீடுகளை கட்ட வேண்டும் என்பதற்காக பயனாளிகளை எல்லாம் தேர்வு செய்து, இன்றைக்கு ஒரு பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படுகிறது. நம்முடைய மாவட்டத்திலே அனைத்து மாவட்டங்களை விட அதிகமான அளவிற்கு வழங்கி இருக்கின்றோம்.தகுதியான பயனாளிகள் விடுபட்டிருந்தால், அவர்கள் அத்தனை பேருக்கும் நிச்சயமாக வீடு வழங்கும் திட்டத்தின் வீடுகள் வழங்கப்படும்.என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 22.04.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ,நடப்பு ஆண்டு 20 மெ.டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் 20 மெ.டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்திடவும்இ அவர்களின் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் தமிழக அரசு பல்வேறு உழவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் பாசிப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த பாசிப்பயறு விளைபொருளை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் (Nயுகுநுனு) மூலம்இ விலை ஆதரவு திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதன்மை கொள்முதல் நிலையங்களான சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பாசிப்பயறு 10 மெ.டன் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பாசிப்பயறு 10 மெ.டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது. பாசிப்பயறுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூ.86.82- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நியாயமான சராசரி தரத்தின்படி பாசிப்பயறு விளைபொருளில் அதிகபட்சமாக இதர பொருட்கள் கலப்பு 0.1 சதவீதமும்இ இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதமும்இ சேதமடைந்த பருப்புகள் 0.5 சதவீதமும் வண்டு தாக்கிய பருப்புகள் 2 சதவீதமும்இ ஈரப்பதம் 10 சதவீதமும் இருக்கலாம்.விவசாயிகள்; பாசிப்பயறு விளைபொருளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு சம்மந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அசல் சிட்டாஇ கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்ட அடங்கல்இ வங்கி கணக்கு புத்தக நகல்இ ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இக்கொள்முதல் 15.03.2025 முதல் 12.06.2025 வரை நடைபெறும். விவசாயிகளுக்கு உரிய தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான விவரங்களை சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 04562 - 260410இ 90033-56172 என்ற எண்ணிற்கும்இ அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 04566 - 220225இ 79045-37699 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.மேலும்இ கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ஃ தனிஅலுவலர் மற்றும் விருதுநகர் விற்பனைக்குழுஇ செயலாளர் ஆகியோர்களை அணுகி தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
குத்துசண்டை பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ளவர்களுக்கான உடற்தகுதி தேர்வு 28.04.2025-அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது எனமாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் தகவல்.தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் பல்வேறு விளையாட்டுகளில் உயர்தர பயிற்சிக்கான வழிகளை உருவாக்கி வீரர் வீராங்கனைகளை தேசிய (ம) சர்வதேச அளவில் அவர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திடும் நோக்கத்தோடு விளையாட்டு வீரர்களின் பின்புலம் தனித்திறன்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கு சமவாய்ப்பினை வழங்கி அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும் ஒரு சீரான விளையாட்டு மேம்பாட்டு அணுகுமுறையை வழங்குவதை செயல்படுத்தும் விதமாக இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் குத்துசண்டை விளையாட்டானது தேர்வு செய்யப்பட்டுள்ளது .இவ்விளையாட்டு பயிற்சி மையத்திற்கு குத்துசண்டை (BOXING) பயிற்றுநர் பதவிக்கான விண்ணப்பங்கள் 11.04.2025 முதல் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பயிற்றுநருக்கான அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகும் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பித்திட கடைசி நாள் 20.04.2025 மாலை 5.00 மணி ஆகும் . விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு (ம) உடற்தகுதித்தேர்வு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெறும் நாள் 25.04.2025 ஆகும். நேர்முகத் தேர்வு அன்று உரிய அசல் (ம) நகல் சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும் . இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ, நிரந்தரப்பணியோ கோர இயலாது. இவ்விளையாட்டு பயிற்சி மையத்தில் குத்துசண்டை (BOXING) பயிற்சி மேற்கொள்ள விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த 12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம் இதற்கான உடற்தகுதித் தேர்வு 28.04.2025 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கம் விருதுநகர், வைத்து நடைபெற உள்ளது. உடற்தகுதித் தேர்விற்கு பங்கேற்க வருபவர்கள் ஆதார்அட்டை, பிறப்புச்சான்றிதழ் மற்றும் பள்ளி, கல்லுரியிலிருந்து பெறப்பட்ட போனபைடு சான்றிதழ், புகைப்படம் ஆகியவை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், மாவட்ட மருத்துவ கல்லூரி எதர்புறம் , விருதுநகர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7824009970 / 04562 - 252947 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரளவயில் 13.4.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலளமச்சர் அவர்கள், “வடக்பக உதித்த சமத்துவச் சூரியன், வாழ்வில் கிழக்காய் இருந்த ேகலவன்” நமது அரசியலளமப்புச் சட்டத்ளத வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுளடய பிறந்த நாைான ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாளை, “சமத்துவ நாைாக” சகாண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிசவடுத்துள்ைது எனச் சட்டமன்ற விதி எண்.110-ன் கீழ் அறிவித்தார்கள். அதனடிப்ேளடயில், தமிழ்நாட்டில் ண்ணல் அம்பேத்கர் அவர்களுளடய பிறந்த நாைான ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள் ஆண்டுபதாறும் சமத்துவ நாைாகக் களடப்பிடிக்கப்டுகிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளைக் சகாண்டாடும் விதமாக, சசய்தி மக்கள் சதாடர்புத் துளறயின் ஊடக ளமயம் வாயிலாக “சமத்துவம் காண்போம்” என்ற தளலப்பில் சோதுமக்கள் மற்றும் மாணவர்கள் ேங்கு சேறும் வளகயில் சமூக ஊடகங்கைான எக்ஸ் தைம் 2 (X), ேடவரி (Instagram), முகநூல் (Facebook), புலனம் WhatsApp), வளலசயாளி (YouTube) வாயிலாக 10.4.2025 முதல் 30.4.2025 வளர ேல்பவறு போட்டிகள் நடத்தப்ேடுகின்றன.“சமத்துவம் காண்போம்” என்கிற முழக்கம் சமூகநீதி (Social Justice) என்ற கருத்தாக்கத்ளத அடிப்ேளடயாகக் சகாண்டது. தனிமனிதருக்கும், சமூகத்திற்கும் ளடபயயுள்ை சமமான, நியாயமான உறளவக் குறிக்கிறது. தனிமனிதரின் சமூகச் சசயல்ோடுகளுக்குத் பதளவயானவற்ளற நிளறவுசசய்து, ோகுோடற்ற நீதிளயயும், நியாயத்ளதயும் நிளலநிறுத்துவதற்கான சூழளல உருவாக்குவதற்காகக் களடப்பிடிக்கப்ேடுகிறது. இதன்மூலம் மக்கள் அளனவருக்கும் சமமான நீதி, பவளல வாய்ப்புகள், வாழ்க்ளக ஆகியளவ அளமவதற்கான சூழல் ஏற்ேட்டுள்ைது.
ருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறளானி நல அலுவலகத்தின் சார்பில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.இக்கூட்டத்தில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடத்திடவும், அவர்களுக்கான பிரத்யேக மருந்து பெட்டகங்கள் வழங்கிடவும், முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆல்பா பெட் வழங்குவதற்கான பட்டியல் தயார் செய்வது குறித்தும், அறிவுரை மற்றும் ஆலோசனைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில், மருத்துவ கல்லூரி முதல்வர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்), மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு ராபி பருவத்தில் 500 மெ.டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்திடவும், அவர்களின்; வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் தமிழக அரசு பல்வேறு உழவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த உளுந்து விளைபொருளை மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இணையத்தின் (NCCF) மூலம், விலை ஆதரவு திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதன்மை கொள்முதல் நிலையங்களான சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்து 250 மெ.டன் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்து 250 மெ.டன் கொள்முதல் செய்யப்பட உள்ளது. உளுந்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோ ஒன்றுக்கு ரூ.74- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நியாயமான சராசரி தரத்தின்படி உளுந்து விளைபொருளில் அதிகபட்சமாக இதர பொருட்கள் கலப்பு 0.1 சதவீதமும், இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதமும், சேதமடைந்த பருப்புகள் 0.5 சதவீதமும், வண்டுதாக்கிய பருப்புகள் 2 சதவீதமும், ஈரப்பதம் 10 சதவீதமும் இருக்கலாம்.விவசாயிகள்; உளுந்து விளைபொருளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு சம்மந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அசல் சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்ட அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இக்கொள்முதல் 15.03.2025 முதல் 12.06.2025 வரை நடைபெறும்.விவசாயிகளுக்கு உரிய தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்பான விவரங்களை சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 04562 - 260410, 9003356172 என்ற எண்ணிற்கும், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 04566 - 220225, 7904537699 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) / தனி அலுவலர் மற்றும் விருதுநகர் விற்பனைக்குழு, செயலாளர் ஆகியோர்களை அணுகியும் தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் விவேஷியஸ் அகடாமி (Vivacious Academy) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான (Diploma In Aari Embroidery and Hand Printing On Textiles) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடச்சியாக தற்போது சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகடாமி (Vivacious Academy) நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான (Diploma in Aari Embroidery and Hand Printing On Textiles) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்கவேண்டும்.இப்பயிற்சிக்கான கால அளவு 30 நாட்கள் ஆகும். மேலும் சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் NSDI (National Skill Development of India) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.