விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாட்டம் ஊராட்சியில் உள்ள தென்றல் நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இன்று (08.04.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் மதிய உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (08.04.2025) நடைபெற்ற சிறப்பு “காபி வித் கலெக்டர்” 161-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் 11-ம் வகுப்பு முடித்த அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 50 இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி பெறும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். தமிழ்நாடு அரசின் மூலம் பொதுமக்களுக்கு சுற்றுசூழல் பாதிப்பால் ஏற்படும் விளைவுகளை வலியுறுத்தும் வகையிலும், இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அரசும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களுக்கும், அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நமது விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என அனைவருக்கும் காடு சூழல், பறவைகள் மற்றும் பூச்சியினங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி சூற்றுச்சுழலை பாதுகாக்கும் நோக்கத்திலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட நிர்வாகமும், சுழயச என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து காடுகளைப் பற்றியும், வன உயிரினங்களை பற்றியும் அது சூழலுக்கும், மனித வாழ்வியலுக்கும் ஆற்றும் பங்குகளையும் எடுத்துரைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 257 அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் இளம் பசுமை ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில், மாணவர்களுக்கு இயற்கையை பாதுகாப்பது குறித்தும், பறவையினங்கள், பூச்சினங்கள், பட்டாம்பூச்சி இனங்கள் என காடுகளில் வாழும் உயிரினங்கள் குறித்தும், அவை எவ்வாறு மனிதன் வாழ்வியலில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு உயர்ந்த நோக்கில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில்,11-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 50 இளம் பசுமை ஆர்வலர்களுக்கான பயிற்சி முகாமானது 04.04.2025 முதல் 13.04.2025 வரை நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், பல்லுயிர் சமநிலையின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடி மாணவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்;ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
புவிசார் குறியீடு (GI) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படுவதாகும். அந்த பொருள் அந்த பகுதியில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுவதையும் அதன் தரத்தையும், நற்பெயரையும் உறுதி செய்கிறது.அதனடிப்படையில் விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு ஏப்ரல் 04, 2025 அன்று வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடானது வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில், தற்போது விருதுநகர் சம்பா மிளகாய் வத்தலுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாற்றாங்கல் நடவு செய்யப்பட்டு, மார்ச் இறுதியில் அறுவடை செய்யப்படுவது வழக்கம். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 3042 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக கே1, கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பயிரிடப்படுகின்றன.மிளகாய் பணப்பயிர். இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது. சம்பா வத்தல் மற்ற மிளகாயை விட அதிக காரத்தன்மை (‘காப்சைசின்;”) அளவு 0.24 சதவிகிதம் கொண்டது மற்றும் பிரகாசமான சிவப்பு நிறத்தில் உள்ளது. சம்பா வத்தல் நீளம் 6 - 6.5 செ.மீ நீளமுடையதாகவும், கூர் முனை கொண்டதாகவும் இருக்கும். அதிக காரத்தன்மை கொண்ட சம்பா வத்தல் மதிப்பு கூட்டு பொருட்களான ஒலியோரெசின் எண்ணெய் தயாரிக்க பயன்படுகிறது.புவிசார் குறியீடு மூலம் தயாரிப்புகளுக்கு சட்டப் பாதுகாப்பு, அங்கீகாரம் பெறாத மற்றவர்கள் புவிசார் குறியீடு தயாரிப்புகளை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கிறது. இது நுகர்வோர் விரும்பிய பண்புகளின் தரமான தயாரிப்புகளைப் பெற உதவுகிறது மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் அவர்களின் தேவையை அதிகரிப்பதன் மூலம் புவிசார் குறியீடு பொருட்களின் உற்பத்தியாளர்களின் பொருளாதார செழுமையை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் தற்போது, இந்த சம்பா மிளகாய் வத்தலுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், இனிமேல், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் அதிக விலை கிடைக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.மேலும், விருதுநகர் அதலக்காய், சாத்தூர் வெள்ளரி, இராஜபாளையம் மாம்பழம், தாதம்பட்டி கொடுக்காப்புளி மற்றும் பஞ்சவர்ணம் மாம்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வாங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (08.04.2025) வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக, புதிய மினி பேருந்துகளுக்கான அனுமதி சீட்டு வழங்குவதற்கான 3 செயல்முறை ஆணைகள் மற்றும் மினி பேருந்து வழித்தட நீட்டிப்பு (Migration) தொடர்பான 6 செயல்முஓற ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ்; வேலைவாய்ப்பு பயிற்சி (PM INTERNSHIP) வழங்கும் திட்டத்தின்வாயிலான நடப்பாண்டில் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 14889 நபர்களுக்கு முன்னனி தொழிற்நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்வதற்கு தேவையான கல்வி தகுதியுடைய 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக பயிற்சி அளிக்கும் பொருட்டு இணையதளத்தில் பதிவு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற 21 முதல் 24வயதிற்குள் இருக்கவேண்டும். பயிற்சிக்காலத்தில் 12 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5000- வீதம் வழங்கப்படும்.மேலும் பயிற்சிக்காலத்தில் ஒருமுறை மட்டும் மானியமாக ரூ.6000 வழங்கப்படும். இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவர்கள் கல்விச்சான்றிதழ்கள், ஆதார்அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசியுடன் வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறாhர்கள். மேலும் ஏற்கனவே தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தில் தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றிருக்க கூடாது. மேலும் முழுநேர பணிசெய்பவராகவோ, முழுநேரக் கல்வி கற்பவராக இருக்ககூடாது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கவேண்டிய தேதி 15.04.2025 அன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம் மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்; (04562 -294755) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் இணையம் மூலம் விண்ணப்பிக்க https://pminternship.mcg.gov.in/ என்ற வலைதளத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 11.04.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு;ம் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BAVAN, WAY 2 NEWS, RK MOTORS, PAYTM, ANAAMALAIS TOYOTA போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு ஐ.டி.ஐ.,டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 11.04.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. மேலும், இம்முகாமில் பாரத பிரதமரின் தொழிற் பயிற்சி திட்டத்திற்கான பதிவு முகாமும் இணைந்து நடத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சேர்ந்து தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிலக பயிற்சியும், வருடம் ஒரு முறை மானியமாக ரூ.6000- மற்றும் மாத ஊக்கத் தொகையாக ரூ.5000- வழங்கப்படும். இத்திட்டத்தில், சேர விருப்பமுள்ள 21 முதல் 24 வரை வயதுடைய மற்றும் கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்;த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேரில் வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பான விபரங்களுக்கு https://pminternship.mca.gov.in என்ற இணையதள வழியாக தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-I மற்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வு (தாலுகா & ஆயுதப்படை) விரைவில் நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விருப்பமுள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒருநாள் கருத்தரங்கு 10.04.2025 அன்று விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் துறை சார்ந்த சிறந்த நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.இந்நிகழ்வு TNUSRB SI தேர்வர்களுக்கு காலை 9.30 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை மற்றும் TNPSC GROUP - 1 தேர்வர்களுக்கு மதியம் 1.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் இத்தேர்வு குறித்து விளக்கங்கள் மற்றும் தெளிவுரை வழங்கப்படும். இந்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/yqdmFbP1tGqBfA7Z6 என்ற கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினையோ அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளலாம். எனவே TNPSC குரூப் 1 மற்றும் TNUSRB SI தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் (05.04.2025) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நாட்டின் செழுமைக்காக அவர்களின் சிறந்த திறமையைக் கண்டறிய வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காகமாணவர்களின் திறன், கல்வித்திறன் மற்றும் மறைந்திருக்கும் திறமை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதாகும்.இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையிலும் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விகடன் குறித்த தகவல்களும் எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி பிரிவுகள் மற்றும் படிப்புகள், வாய்ப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு தெரிந்துகொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பள்ளிக்கல்வித்துறையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள் அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.மாணவர்களுக்கு தங்களுக்கான வாய்ப்புகள் வாய்ப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து இருக்கவேண்டும். இந்திய அளவில் பல்வேறு தலைசிறந்த உயர்கல்வி கல்லூரிகள் உள்ளன. அவற்றை பற்றி அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதில் உள்ள வாய்ப்புகளையும், அதற்கான நுழைவுத் தேர்வு, உதவித்தொகை, சலுகைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்ளவேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப உயர்கல்வியில் உள்ள சிறந்த வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து பயிலவேண்டும்.தமிழக அரசு மூலம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கீழ் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 12-ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்தவர்கள் தமிழ்நாடு அரசு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் எந்த தொழிற்கல்விக்கு சென்றாலும் கட்டணம் இலவசமாக அளிக்கப்படுகிறது.எனவே, மாணவ, மாணவிகள் அரசு தங்களுக்காக செயல்படுத்தும் திட்டத்தின் நோக்கத்தினை புரிந்துகொண்டு, நல்ல கல்வியறிவு பெற்று,தங்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் குறித்து நன்கு அறிந்துகொண்டு, பயணிக்கும் போது நிச்சயமாக வெற்றியடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலஅலுவலர் திரு.ரமேஷ், உட்பட அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 141 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 115 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கு 23.04.2025 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் தொடர்ந்து பன்னிரெண்டு மாத காலம் பணியினை முடித்தப்பின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின்கீழ் ஊதியம் பெறுவர்
ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் முதற்கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 05.04.2025 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.