விருதுநகர் மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் ((PMMSY) கீழ் புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டம், கொல்லைபுற மற்றும் நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அ) புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டத்தில் (Construction of New Grow Out Pond)ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 1.00-ஹெக்டேர் அலகு இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு பயனாளிகளுக்கு 1-ஹெக்டேர் அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.7,00,000-ல் 60 சதவீதம் மானியமாக ரூ.4,20,000- வழங்கப்படும்.ஆ) 300 சதுர அடி இடத்தில் கொல்லைப்புற மற்றும் புறக்கடை அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் (Backyard Ornamental Fish Rearing Unit) மகளிர் பிரிவில் 02 அலகு இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3,00,000-ல் மகளிர் பிரிவு பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.1,80,000- வழங்கப்படும்.இ) 150 சதுர மீட்டர் இடத்தில்;; நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் (Medium Scale Ornamental Fish Rearing Unit) பொதுப்பிரிவில் 1அலகிற்கு பயனாளி தேர்வு செய்யப்படவுள்ளனர். பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு1-அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.8,00,000-ல் 40 சதவீதம் மானியமாக ரூ.3,20,000- வழங்கப்படும். மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் 15 தினங்களுக்குள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் (ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பட்டா, சிட்டா அடங்கல், நிலத்தின் வரைபடம்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மூப்பு நிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும், திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் 114, B 27-1, வேல்சாமி நகர், என்ற முகவரியில் இயங்கிவரும் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண். 04562 - 244707 தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று(10.04.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்துஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-I மற்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.பெரும்பாலான அரசுப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே, வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வாணையங்களின் போட்டித் தேர்வுகள் வாயிலாக மாநில மற்றும் ஒன்றிய அரசின் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்படுகின்றன. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் போட்டித் தேர்விற்கான பயிற்சி கையேடுகள், பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சிறிய அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றது. இக்கருத்தரங்கில்தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 75 தேர்வர்களும்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-I தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 78 தேர்வர்களுக்கு கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இந்த நிகழ்ச்சி மூலம் பயன்பெற்றவர்கள் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் கிடைத்ததாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தெளிவான விடை கிடைத்ததாகவும், இது போன்று போட்டித்தேர்வுகளுக்கு தேர்ச்சி பெற ஏதுவாக எண்ணற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் தமிழ்நாடு அரசுக்கும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆணைக்குட்டம் அணையில் ரூ.28.20 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள்,சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் இன்று (10.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆணைக்குட்டம் அணையானது விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம் ஆணைக்குட்டம் கிராமத்தில் 1984-1989 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டு, 1989 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.ஆணைக்குட்டம் நீர்த்தேக்கம் 2940 மீட்டர் நீளம் கொண்டது. இதில் நெடுகை 1178மீ - 1295மீ ல் 9 எண்ணம் கொண்ட நீர்ப்போக்கி கதவணைகள் உள்ளன. மேலும் நெடுகை 1350மீ ல் ஒரு இடதுபுற கால்வாய் கொண்ட பாசன மதகு உள்ளது.இந்த அணையின் நீர்வரத்து பகுதி 591 சதுர கி.மீ மற்றும் கொள்ளளவு 125 மீ கனஅடி, இவ்வணையில் வெள்ள நீர் வெளியேற்றம் அளவு நொடிக்கு 1469 மீ ஆகும். ஆணைக்குட்டம் நீர்த்தேக்கத்தில் 7.5 மீட்டர் கொண்ட உயர்வில் அதிகபட்சமாக 125.75 மி.கனஅடி தண்ணீர் தேக்கலாம். 2024-25ம் ஆண்டு அறிவிப்பு திட்டத்தில் ஆணைக்குட்டம் நீர்த்தேக்கத்தின் 9 எண்ணம் கொண்ட கதவணைகளை புதுப்பிக்கும் பணிக்கு ரூ.28.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி, தற்பொழுது 85 சதவீத பணிகள் முடிவுற்று பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இப்பணிகளை மேற்கொள்வதினால் அணையின் மதகுகளில் நீர் கசிவு நிறுத்தப்படுவதுடன் கரை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு ஆணைக்குட்டம் அணையின் முழு கொள்ளளவான 125.75 மி.கனஅடி உறுதி செய்யப்படும். இதனால் 4500 ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும் என மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர்கள், உதவிபொறியாளர்கள், வட்டாட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் இன்று(10.04.2025) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், 85 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000/- வீதம் மொத்தம் ரூ.90.10 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களையும், 84 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை என மொத்தம் 169 பயனாளிகளுக்கு ரூ.90.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை, ரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுய தொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவிலான விருதுகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.அதனடிப்படையில், இன்று 85 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000- வீதம் மொத்தம் ரூ.90.10 இலட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.சமுதாய வளர்ச்சி என்பது ஒருசாரார் மட்டும் வளர்ச்சி அடைவதாக இருக்கக்கூடாது. சமச்சீரான ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு இது போன்ற தொடர்ச்சியான திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.இவ்விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன், சிவகாசி வட்டாட்சியர் திரு.இலட்சம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், வீரக்குடி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (09.04.2025) நடைபெற்றது.இம்முகாமில், 25 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா ரூ.8,18,100/- மதிப்பிலும், 100 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும், 50 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டையினையும், 50 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் என மொத்தம் 225 பயனாளிகளுக்கு ரூ.8.18 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும்; அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த பெண்கள் ஏறத்தாழ 1.10 இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் மூலமாக பல்வேறு பொருளாதார வளர்ச்சிகள் அடைய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.தொழிற்பயிற்சிகள் மட்டுமல்லாமல் அவர்களுக்கென்று பல்வேறு துறைகளின் சார்பாக அதிகமான கடன்களையும் வழங்கி வருகிறது. நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்களுக்கு தொடர்ச்சியாக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடனை பெற்று நீங்கள் அனைவரும் அதனை முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் கடனை பெற்று அதனை நல்ல முறையில் முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் பெற்று, கடனையும் அடைத்து, வாழ்வாதாரத்தையும் பார்த்து கொள்ள வேண்டும்.பெண்ணிற்கு கல்வி கற்பதற்கான முழு சுதந்திரம், விரும்பிய இடத்திற்கு செல்வதற்கான சுதந்திரம் இப்படி எத்தனை சுதந்திரம் இருந்தாலும், பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் என்பது அவர்களுடைய பொருளாதார சுதந்திரம் தான். தன்னுடைய பொருளாதாரத்திற்கு மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது. எனவே, பெண்களுக்கான சுதந்திரமும், வலிமையும் இருந்தாலும், இன்றைய நவீன சூழலில் பெண்களுக்கான வலிமை என்பது இருக்கக்கூடிய பல்வேறு தொழில் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பது தான். அதற்கு தான் அரசு பல்வேறு வாய்ப்புகளை செய்து வருகிறது. நீங்கள் அனைவரும் புதிய பயிற்சிகளை பெற்று, கடனுதவிகள் பெற்று, தன்னம்பிக்கையோடு முன்னேறக்கூடிய பொருளாதார வலிமை மிகுந்த பெண்களாக நமது பெண்கள் இருக்க வேண்டும்.இந்தியாவிலேயே பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றால் அது நமது மாவட்டம் தான். இந்தியாவில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலே முதல் மாவட்டமாக இருக்கிறது.கிராமப்புறங்களில் இன்றளவும் கூட பெண்கள் 12 வகுப்பு முடித்தாலே போதும் என்ற மனநிலை உள்ளது. இதனை மாற்றி அனைவரும் பெண்களுக்கான உயர்கல்வியை உறுதிசெய்ய வேண்டும். இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள். பெண்களின் உயர்கல்விக்காக புதுமைப்பெண் மற்றும் மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.எனவே, இது போன்ற திட்டங்களை எல்லாம் நன்கு பயன்படுத்திக்கொண்டு, அனைவரும் பல்வேறு தொழில் வாய்ப்புகளை பெற வேண்டும். தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொண்டு பல்வேறு அரசு பணிக்கும், தனியார் பணிக்கும் சென்று, அதிகம் சம்பளம் தரக்கூடிய வேலைகளை பெற்று உங்களுடைய வாழ்க்கையும், உங்கள் குடும்பமும் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு 2024-25-ஆம் நிதி ஆண்டிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு, 2024-25-ஆம் ஆண்டு செயல் திட்டத்தின்படி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் சமுதாய அமைப்புகளை கீழ்க்காணும் 6 காரணிகளின் அடிப்படையில் தேர்வு செய்திடவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1. கூட்டம் தொடர்ந்து முறையாக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.2. சேமிப்புத் தொகையினை பயனுள்ளதாக பயன்படுத்திருக்க வேண்டும்.3. வங்கிக்கடன் பெற்றிருக்க வேண்டும்.4. குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்திருக்க வேண்டும்.5. திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.6. சமூக நல நடவடிக்கைகளில் பங்கெடுத்திருக்க வேண்டும். அதன்படி, விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு 2024-25-ம் நிதி ஆண்டிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தகுதியுடைய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது 16.04.2025 அன்று காலை 09.00 மணி முதல் மறுநாள் 17.04.2025 அன்று காலை 09.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் 16.04.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், அரசு சேவைகளும் தங்கு தடையின்றி சென்றடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக, 16.04.2025 மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 06.00 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர். எனவே, அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், வீரசோழன் அல் அமீன் திருமண மஹாலில் (09.04.2025) தமிழ்நாடு அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான ரே ஆப் ஹோப் தொழிற்நுட்ப பயிற்சியகம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த ஜிங்கா அறக்கட்டளை இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வுசெய்யப்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.நமது பகுதிக்கு குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் திறன் மிகுந்த இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இந்த முகாம் இன்று நடைபெறுகிறது.இன்று உலக அளவில் இருக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை வேலைவாய்ப்பின்மை ஆகும். அதே நேரத்தில் உலகத்தினுடைய மிக முக்கியமான வேலை வாய்ப்புகளை ஆய்வு செய்யும் அமைப்பான இன்டர்நேஷனல் லேபர் ஆர்கனேஷன் என்ற அமைப்பு பல மில்லியன் கணக்கான வேலைகளுக்கு ஆட்கள் சரியாக கிடைக்கவில்லை என்று தெரிவிக்கிறது. இன்றைக்கு வேலை வாய்ப்புகள் இல்லை என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் வேலைக்கு தகுதியான நபர்கள் இல்லை என்பது தான். எனவே, ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவை திறன்களாக மாற்றி கொள்ள வேண்டும்.அதனடிப்படையில் தான், தமிழ்நாடு அரசு நான் முதல்வன்என்றதிட்டத்தின்மூலம்பல்வேறுமுன்னெடுப்புகளைசெய்துவருகிறார்கள்.அதன்மூலம்மாணவர்களுக்கும்,இளைஞர்களுக்கும் பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது.தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் டான்செம் நிறுவனம், உலகளாவிய வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளை கண்டறிந்து அவர்களுக்கு அந்த வேலைசார்ந்த பயிற்சிகளை அளித்து வேலையில் அமர்த்தும் பணியை டான்செம் நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது.குறிப்பாக கிராமப்பகுதிகளில் உள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உலகளாவிய அளவில் உருவாக்கி தரும் பொழுது அது பொருளாதாரத்தில் ஒரு சமநிலையையும், பண சுழற்சியும் ஏற்படுத்துகிறது.தாங்கள் பெற்ற அறிவு, கற்ற அறிவு ஆகியவற்றை வைத்து தங்கள் திறன்களை வளர்த்து கொள்வது மிக மிக முக்கியம் ஆகும். தற்பொழுது உள்ள காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் நமது திறன்களை வளர்ப்பது என்பது மிக எளிதான ஒன்றாக உள்ளது.நீங்கள் அனைவரும் அறிவை திறன்களாக மாற்ற வேண்டும். உலகளவில் உள்ள வாய்ப்புகள், இந்திய அளவில் உள்ள வாய்ப்புகள், பயிற்சி வாய்ப்புகள் என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, தங்களுடைய திறன்களை வளர்த்து முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துளார்.இந்நிகழ்ச்சியில், டான்செம் அலுவலர்கள், ஜிங்கா அறக்கட்டளை நிர்வாகிகள், 800-ற்கும் மேற்பட்ட வேலை நாடுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (09.04.2025) அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகை தமிழில் சட்டப்படி அமைக்கப்படுவதை 100 சதவிகிதம் உறுதி செய்வது குறித்து, தொடர்புடைய அரசு அலுவலர்கள், மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்க பிரதிநிதிகள், உணவு நிறுவன உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசினால் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் 2023 ல்“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்னும் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை தலைவராகவும் விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), விருதுநகர் மற்றும் சிவகாசி இணை இயக்குநர்கள் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர், நகராட்சி ஆணையாளர்கள், உதவி இயக்குநர்கள், தமிழ் வளர்ச்சித் துறை, பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்க பிரதிநிதிகள், உணவு நிறுவன உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் பிரதிநிதிகளை (VIDITSSIA) உறுப்பினர்களாகவும் கொண்ட மாவட்ட குழு அமைக்கப்பட்டது.அதன்படி, இன்று மாவட்ட குழு கூட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்து “தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதிகள் விதி 15, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்ட விதி 42 B, மற்றும் தொழிற்சாலைகள் சட்ட விதிகள் 113 ஆகியவற்றில் அனைத்து கடைகள் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அவற்றின் பெயர் பலகைகள் “தமிழ் மொழியில் முதன்மையாகவும், பிரதானமாகவும் அமைக்க வேண்டும். பிற மொழிகளிலும் எழுத வேண்டும் எனில் தமிழ் மொழிக்கு கீழ் ஆங்கிலத்தில் இரண்டாவது இடத்திலும், இதர மொழிகளில் மூன்றாவது இடத்தில் அதற்கு கீழேயும் எழுதப்பட வேண்டும் என வரையறை “ செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களால், தங்கள் ஆட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து நிறுவன மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்களுடன் கூட்டம் நடத்தி தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வர்த்தகர் , தொழிற்சாலை உரிமையாளர்கள் ,உணவு நிறுவன உரிமையாளர் சங்கங்கள் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக எடுத்துரைத்து 15.05.2025 க்குள் அனைத்து நிறுவனங்களிலும் 100% தமிழில் பெயர் பலகைகள் அமைக்க அறிவுறுத்த வேண்டும். ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளின் மூலம் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் வர்த்தகர்கள் வணிகர்கள் தொழில் முனைவோர்களுக்கு 2025 மே மாதம் 15 ஆம் தேதி வரை மேற்கூறியவாறு பெயர் பலகை அமைக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது.15.05.2025ம் தேதிக்கு பின்னரும் தமிழில் பெயர் பலகை அமைக்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களிலும் 100% தமிழில் பெயர் பலகைகள் அமைக்க அனைத்து கடைகள் உணவு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசாணை எண்.55 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை நாள்.02.07.2024ன்படி தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட அபராதமானது ரூ.50லிருந்து ரூ.2000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சட்டப்படியும் தமிழ் உணர்வுடனும் அனைவரும் தமது நிறுவனங்களில் மேற்கூறியவாறு தமிழில் பெயர் பலகை அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் உட்பட பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
விருதுநகர் மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் ((PMMSY) கீழ் புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டம், கொல்லைபுற மற்றும் நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அ) புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டத்தில் (Construction of New Grow Out Pond)ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 1.00-ஹெக்டேர் அலகு இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு பயனாளிகளுக்கு 1-ஹெக்டேர் அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.7,00,000-ல் 60 சதவீதம் மானியமாக ரூ.4,20,000- வழங்கப்படும்.ஆ) 300 சதுர அடி இடத்தில் கொல்லைப்புற மற்றும் புறக்கடை அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் (Backyard Ornamental Fish Rearing Unit) மகளிர் பிரிவில் 02 அலகு இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3,00,000-ல் மகளிர் பிரிவு பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.1,80,000- வழங்கப்படும்.இ) 150 சதுர மீட்டர் இடத்தில் நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் (Medium Scale Ornamental Fish Rearing Unit) பொதுப்பிரிவில் 1அலகிற்கு பயனாளி தேர்வு செய்யப்படவுள்ளனர். பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு1-அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.8,00,000-ல் 40 சதவீதம் மானியமாக ரூ.3,20,000- வழங்கப்படும்.மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் 15 தினங்களுக்குள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் (ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பட்டா, சிட்டா அடங்கல், நிலத்தின் வரைபடம்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மூப்பு நிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும், திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் 114, B 27-1, வேல்சாமி நகர், என்ற முகவரியில் இயங்கிவரும் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண். 04562 - 244707 தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.