விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 16.06.2026 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து தீர்வு காணவும், வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II) பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் (Consolidate Pay) அடிப்படையில் மாதம் ரூ.15000/-ஊதியத்தில் மாவட்ட நலச் சங்கம் மூலம் நிரப்பப்பட உள்ளது. (Under District Health Society)பணியின் பெயர்: ஆய்வக நுட்புநர் நிலை 2 (Lab Technician Grade-II)மொத்த பணியிடங்கள்: 6மாத ஊதியம்: ரூ.15000/-வயது வரம்பு:குறைந்த பட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 59 (ஆண்டுகளில்)கல்வித்தகுதி:மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் பட்டய படிப்பு- DMLT (இரண்டு ஆண்டுகள்) KING INSTITUTE OF RESEARCH AND PREVENTIVE MEDICINE அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டது. விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும் சான்றிதழ்கள் நகல்கள் (கல்வி தகுதி/ சாதிச் சான்று/ஆதார் நகல்) தபால் மூலமாக அனுப்ப வேண்டிய இறுதி நாள்: 29.06.2026 பிற்பகல் 5.00 மணிவரை முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, எண்:1, பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், கூரைக்குண்டு கிராமம், விருதுநகர்-626 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-விருதுநகர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 407 Rly KM: 541/200-300 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் 11.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 வரையிலும்,மத்தியசேனை-சங்கரலிங்காபுரம் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 417 Rly KM: 550/800-900 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதை மற்றும் அழகாபுரி - மீசலூர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 410 Rly KM: 544/400-500 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதை ஆகிய வழித்தடங்களில் 12.06.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 வரையிலும், பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. எனவே 11.06.2026 மற்றும் 12.06.2026 ஆகிய இரண்டு தினங்கள் அன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, மேற்குறிப்பிட்டுள்ள வழித்தடங்களை மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழிகளை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (09.06.2026) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - தரப் பரிசோதனை:ஆய்வு செய்த இடம்: இராஜபாளையம் நாடார் துவக்கப்பள்ளி.ஆய்வு விவரம்: பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுவை மற்றும் அளவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்து பள்ளி சமையலறையை எப்போதும் மிகத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். குழந்தைகளுக்குக் கால அட்டவணைப்படி (Menu) சத்தான, சுவையான உணவைத் தடையின்றி வழங்க வேண்டும். காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் தரத்தினை பள்ளித் தலைமை ஆசிரியர் தினசரி கண்காணிக்க வேண்டும் என உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.சீரான குடிநீர் விநியோகம் & குளோரின் அளவு ஆய்வு:ஆய்வு செய்த இடம்: குறிஞ்சி நகர் பகுதி.ஆய்வு விவரம்: பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் விநியோகிக்கப்படும் கால அளவு குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். மேலும், நீரிலுள்ள குளோரின் (Chlorine) அளவு சரியான விகிதத்தில் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது.கோடைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றிச் சீரான குடிநீர் விநியோகத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குழாய் உடைப்புகள் அல்லது குடிநீர் வீணாகுதல் போன்ற புகார்கள் வந்தால் 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.அம்ரூட் 2.0 திட்டம் – புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்:திட்ட மதிப்பு: ரூ.27.25 கோடிஆய்வு விவரம்: இராஜபாளையம் நகராட்சியின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, மத்திய-மாநில அரசின் கூட்டு நிதி பங்களிப்புடன் (Amrut 2.0) கட்டப்பட்டு வரும் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளைப் பார்வையிட்டார்.கட்டுமானப் பணிகளில் எவ்விதத் தொய்வும் இன்றி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். சுத்திகரிப்பு இயந்திரங்களின் தரம் மற்றும் சிவில் கட்டுமானப் பணிகளின் நிலைத்தன்மையை (Quality Control) பொறியாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.அதிநவீன அறிவுசார் மையம் (Intellectual Centre / Library):நகராட்சியில் நகர்ப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (UIDF) 2025-2026 ன் கீழ் ரூ.2.15 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.நுண் உரம் செயலாக்க மையம்: இராஜபாளையம் நகராட்சியில் செயல்பட்டு வரும் 5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நுண் உரம் செயலாக்க மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது இம்மையத்திற்கு நகராட்சி வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதைப் பார்வையிட்டார்.பிரதான குடிநீர் நீரேற்று நிலையம்: பின்னர், இராஜபாளையம் நகராட்சிக்கான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.200.06 கோடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் கட்டப்பட்டு இயங்கி வரும் பிரதான குடிநீர் நீரேற்று நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.முன்னதாக, இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின் போது, இராஜபாளையம் நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய (TWAD) அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்பாக களப்பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (08.06.2026) அன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.“மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027” பணிகளில் ஈடுபடவுள்ள மாவட்ட அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்றுநர்கள் (Field Trainers) 68 நபர்களுக்கு 08.06.2026 முதல் 10.06.2026 வரை மற்றும் 15.06.2026 முதல் 17.06.2026 வரை என இரண்டு பகுதிகளாக மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. தற்போது முதல் பகுதி பயிற்சி வகுப்பு 08.06.2026 அன்று மாவட்ட ஆட்சியர்அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியின் முக்கியத்துவம் குறித்து, எடுத்துரைக்கப்பட்டது.தொடர்ந்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்களின் உருவாக்கத்திற்கு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை விரிவாக எடுத்துரைத்தார். களப்பணியாளர்கள் அனைவரும் எவ்வித தொய்வுமின்றி, துல்லியமான விவரங்களைச் சேகரிக்கும் வகையில் தங்களை இப்பயிற்சியில் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் திரு. சின்னத்துரை, புள்ளியியல் ஆய்வாளர் திரு.ப. ராஜா மற்றும் முதன்மை பயிற்றுநர்கள் திரு. ப. கருப்பசாமி, புள்ளியியல் துணை இயக்குநர் திரு. கெ. கணேசன் புள்ளியியல் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, மற்றும் SSC & RRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. அலுவலகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் Wifi வசதியுடன் கணினி ஆய்வகம் உள்ளது. இலவசப் பயிற்சி வகுப்பு விவரம்:தேர்வு: பணியாளர் தேர்வு வாரியத்தின் *SSC Combined Graduate Level (CGL) - CBT 1* தேர்வு.தொடக்க நாள்: *10.06.2026 (புதன்கிழமை)* முதல் தினசரி வகுப்புகள் நடைபெறும்.இடம்: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகம்.பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:திறன் வாய்ந்த சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.இலவச பாடவாரியான தேர்வுகள் (Topic-wise Tests) மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் (Full Mock Tests) தொடர்ச்சியாக நடத்தப்படும். பதிவு செய்யும் முறை:இவ்வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள விருதுநகர் மாவட்டத் தேர்வர்கள் கீழே உள்ள வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்: 1. மின்னஞ்சல் வழியாக: studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம். 2. நேரடிப் பதிவு: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு *நேரடியாகச் சென்று* தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். எனவே SSC Combined Gradual Level (CGL) தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தலைமையில்(08.06.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் சிவகாசி வட்டம், வேலூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி அய்யம்மாள் என்பவர், தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வேண்டி கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்ததன் பேரில், அவரது மனுவினை பரிசீலனை செய்து, அவருக்கு பட்டாவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.பின்னர், விபத்தில் பெற்றோரை இழந்த 9 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.75,000/- வீதம் மொத்தம் ரூ.6.75 இலட்சம் மதிப்பிலான காப்பீட்டு பத்திரங்களையும்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் புதிரை வண்ணார் சமூகத்தை சார்ந்த 21 நபர்களுக்கு புதிரை வண்ணார் நல வாரிய உறுப்பினர் அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். பின்னர், மாவட்டத்தில், நியாயவிலைக்கடைகளில் சிறப்பாக பணியாற்றிய விற்பனையாளருக்கு முதல் பரிசாக ரூ.4000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.3000/-மும், சிறப்பாக பணியாற்றிய எடையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.2000/-மும் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம்-2026 முன்னிட்டு நடைபெற்ற உணவு பாதுகாப்பு கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (08.06.2026) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.உலக உணவு பாதுகாப்பு தினம் (World Food Safety Day) ஆண்டுதோறும் ஜூன் 7 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற உணவுகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவை அனைவருக்கும் உறுதி செய்யவும் ஐக்கிய நாடுகள் சபை (UN) இந்த தினத்தை அறிவித்தது.அதன்படி, உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உணவுப் பாதுகாப்பு கண்காட்சி இன்று நடைபெற்றது. இக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.பின்னர், கலப்படத்தைக் கண்டறியும் விரைவுச் சோதனை முறைகள் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.இந்தக் கண்காட்சியில், கலப்பட உணவுகளைக் கண்டறிவது எப்படி, அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சத்துக்கள், பாரம்பரிய உணவு முறைகளின் நன்மைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் விதிகள் குறித்த பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.உண்ணும் உணவு பாதுகாப்பானதாக இருப்பது அவசியமாகும். ரசாயனம் கலந்த உணவுப் பொருட்கள் மற்றும் கலப்படங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இக்கண்காட்சி நுகர்வோருக்கும், வணிகர்களுக்கும் உணவுப் பாதுகாப்பு குறித்த நல்ல புரிதலை ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஊரகப்புற வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I AS ., அவர்கள் (05.06.2026) நேரில் சென்று பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.திடக்கழிவு மேலாண்மை மற்றும் நுண் உர மையம் ஆய்வு:சிவஞானபுரம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 ன் படி தினசரி வீடுகள் தோறும் நான்கு விதமாக குப்பைகளை பிரித்து வழங்குவதை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொது இடங்களில் குப்பைகள் தேங்காதவாறு தூய்மையைப் பராமரிக்க அறிவுறுத்தினார்.இதன் தொடர்ச்சியாக, தூய்மை பாரத இயக்கத்தின் (Swachh Bharat Mission) கீழ்* கூரைக்குண்டு ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நுண் உர செயலாக்க மையத்திற்குச் (Micro Composting Centre) சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு ஊராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதைப் பார்வையிட்டார்.மேலும், இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளைத் தொய்வின்றி செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.பாதுகாப்பு:குப்பை கிடங்குகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தீ விபத்துகள் (தீ எரிதல்) ஏற்படக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.நேரடி ஆய்வு:நகராட்சியின் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்கள் (MCC), மறுசுழற்சி மையங்கள் (MRF) மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு: நகராட்சியில் *5 MCC* (நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம்) மற்றும் *3 MRF* (மறுசுழற்சி மையம்) செயல்பாட்டில் உள்ளதாகவும், தற்போதுள்ள 2 MCC மையங்களுக்குப் புதியதாக *அரைக்கும் இயந்திரம் (Shredding Machine)* மற்றும் *கடத்து பட்டை (Conveyor Machine)* கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், MCC-ல் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு அதிகளவில் விநியோகம் செய்ய வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.குடிநீர் தரம் மற்றும் விநியோக இடைவெளி ஆய்வு:அதனைத் தொடர்ந்து, விருதுநகர் நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் குறித்தும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் (Overhead Tanks) தூய்மைத் தன்மை குறித்தும் ஆய்வு செய்தார்.வல்லநாடு CWSS (பழைய திட்டம்) + சீவலப்பேரி (புதிய திட்டம்): 6.5 MLD ஆனைக்குட்டம் உள்ளூர் நீர்ஆதாரம்: 1.00 MLD என மொத்தம் 2 தரைமட்டத் தொட்டிகள் வழியாக, 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.இதன் மூலம் 36 வார்டுகளுக்கும் *2 நாட்களுக்கு ஒருமுறை* சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.குடிநீர் விநியோகத்தினை அதிகாரிகள் தொடர்ந்து முறையாகக் கண்காணிக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கான சீரான குடிநீர் விநியோகத்தினை எவ்வித தடையுமின்றி உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.துப்புரவுப் பணிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நலன்:நகராட்சியில் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், அவர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்ததுடன், அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு குறித்தும் விவாதித்தார்.சிறப்பு நிகழ்வாக, உலக சுற்றுச்சூழல் தினம்-2026 னை முன்னிட்டு, MRF வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு:ஆய்வின் இறுதி நிகழ்வாக, அல்லம்பட்டி வே.வ. வன்னிய பெருமாள் துவக்கப்பள்ளிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்' கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தினை நேரில் சுவைத்து ஆய்வு செய்தார். பள்ளி சமையல் அறையின் தூய்மையைப் பராமரிக்கவும், குழந்தைகளுக்குக் கால அட்டவணைப்படி சத்தான மற்றும் சுவையான உணவினைத் தடையின்றி வழங்கவும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சமையலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வின் போது, நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Courses) மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் (Certificate in Textile Painting, Dyeing & Printing Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார். வழங்கப்படும் பயிற்சிகள்: 1. ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Courses) 2. துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல்* (Certificate in Textile Painting, Dyeing & Printing Courses) தகுதி மற்றும் நிபந்தனைகள்: வகுப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC / ST) வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு (Plus Two) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம்: குடும்ப ஆண்டு வருமானம் *ரூ.3.00 லட்சத்திற்குள்* இருக்க வேண்டும். பயிற்சியின் சிறப்பம்சங்கள்: கால அளவு: 4 மாதங்கள் இடம் மற்றும் தங்குமிடம்: இப்பயிற்சி *கோயம்புத்தூர்* மாவட்டத்தில் நடைபெறும். தேர்வு செய்யப்படும் நபர்கள் அங்கு தங்கிப் படிப்பதற்கான விடுதி மற்றும் உணவுச் செலவினங்கள் முழுவதையும் *தாட்கோ (TAHDCO)* ஏற்கும். சான்றிதழ் & வேலைவாய்ப்பு: பயிற்சி நிறைவுற்றதும் சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன், தகுதியான நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் *ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரை* ஆரம்ப கால ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான *www.tahdco.com* என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.