25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வெள்ளித்திரை

Feb 14, 2023

அஜித் கைவிட்ட நிலையில் விக்னேஷ் சிவன்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில்,அஜித் அந்த படத்தை நிராகரித்ததற்கான காரணம் விக்னேஷ் சிவனின் ஆட்டிட்யூட் சரி இல்லை, கதை பிடிக்கவில்லை என பல காரணங்கள் இணையத்தில் உலாவி வருகிறது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்று தற்போது வரை வெளியாகவில்லை .இந்த படம் பாதியிலேயே டிராப்பானது.  அடுத்து விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகள் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் பெரிய நடிகரின் பட வாய்ப்பு பறிபோய் உள்ளதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் வருமா? விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகள் கடினம்.   காமெடி படங்களை இயக்கி வந்த விக்னேஷ் சிவன், இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள, ஒரு கதையை தயார் செய்து வருகிறாராம். அதாவது இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டு. வருகிறாராம் .அஜித்தின்" ஏகே62" படத்திற்கு முன்னதாகவே இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் விக்னேஷ் சிவன் உள்ளாராம்.. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.கோலிவுட் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும், நயன்தாராவை வைத்து படம் இயக்கினால், நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில், விக்னேஷ் சிவன் உள்ளார். மேலும் இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறதாம்.

Feb 10, 2023

28 வருடங்களுக்கு முன் வெளியான 'ஸ்படிகம்' மறுவெளியீடு வசூலைக்குவிக்கும் மோகன்லாலின் திரைப்படம்.

இரண்டு வாரங்கள் முன்பு வெளியான மோகன்லாலின் புதிய படம் அலோன் முதல் நாளில்10 லட்சங்கள் வசூலித்து, மோகன்லால் படங்களிலேயே அடிமட்ட வசூலைப் பெற்ற படமான போது, 1995 இல் வெளியான மோன்லாலின் ஸ்படிகம் திரைப்படத்தை 28 வருடங்களுக்குமுன் வெளியான ஸ்படிகம் மறுவெளியீடு செய்யப்பட்ட அன்று, அதிகாலை ரசிகர்கள் காட்சி, முன்பதிவில்27 லட்ச ரூபாய் வசூல் என்று அமர்களப்படுத்தியது.. ஸ்படிகத்தில் என்ன ஸ்பெஷல்?இயக்குனர் பத்ரன் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மம்முட்டியை வைத்து ஐயர் தி கிரேட் படத்தையும், மோகன்லாலை வைத்து அங்கிள் பன் படத்தையும் எடுத்தார். இதில் மம்முட்டி படம் ஹிட் அடிக்க, காமெடிப் படமான அங்கிள் பன் பாக்ஸ் ஆபிஸில் நொண்டியடித்தது. அதையடுத்து 1995 இல் ஸ்படிகம் படத்தை இயக்கினார். கண்டிப்பான கணக்கு வாத்தியார் சாக்கோ மாஸ்டரின் மகன் தாமஸ் சாக்கோவுக்கு கணக்கைவிட அறிவியலில் ஆர்வம், மகனின் ஆர்வத்தை மதிக்காமல் பூமியே கணக்கில்தான் சுத்துது என்று மற்ற மாணவர்கள் முன்பு மகனை அவமானப்படுத்த, அந்த டார்ச்சரில் மகன்  தலைதிரிந்து ரவுடியாகிறான். விஞ்ஞானியாகும் புத்தி உள்ளவன் கல்குவாரி லாரி டிரைவராகிறான். அப்பனும், மகனும் பரஸ்பர எதிரியாகிறார்கள். மோகன்லாலுக்கு அப்படி அமைந்த படம்தான் ஸ்படிகம். சுருட்டிவிட்ட சட்டைக் கை, ரேபான் குளிர் கண்ணாடி, வெள்ளை வேட்டி, அதை எதிராளி முன் தூக்கிக்கட்டி தொடையை தடவும் மேனரிசம் என்று ஆடு தோமா கதாபாத்திரத்தை மலையாள சினிமாவின் அழியாத கதாபாத்திரமாக்கினார்.மாஸுக்கு மாஸ் கிளாஸுக்கு கிளாஸ் என்று கலந்துகட்டி அடித்த ஸ்படிகத்திடம் மலையாளிகள் உலகம் இன்றும் மயங்கிப் போய்தான் கிடக்கிறது.அப்படி சாகாவரம் பெற்ற கதாபாத்திரமான ஆடு தோமாதான் ஸ்படிகத்தின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன். அதனைத்தான் மலையாள ரசிகர்கள் இன்று திரையரங்கில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் தமிழில் யுத்தம் என்று'டப்' செய்யப்பட்டு வெளியான போது யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு சுந்தர் சி. ஸ்படிகத்தை வீராப்பு என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து நடித்தார். ஸ்படிகத்தின் எந்தவொரு நேர்மறை அம்சமும் இல்லாத மோசமான ரீமேக்காக வீராப்பு எஞ்சியது. ஸ்படிகத்தை மலையாளத்தில் பார்ப்பதுதான் அட்ராக்ஷன்..

Sep 14, 2022

மணி ரத்னம் சாதித்து விட்டார் என ரசிகர்களும் திரையுலக வட்டாரங்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்மணி ரத்னம் இயக்கிய“பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என வெளிவர உள்ளது. அதில் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி வெளிவருகிறது“பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்குவதற்கு எம் ஜி ஆர் காலத்தில் இருந்தே பலரும் முயன்று தோற்றும் வந்திருக்கின்றனர்.தஞ்சை பெரிய கோவிலை கட்டியபோது ராஜ ராஜ சோழனிடம் நெருக்கமாக இருந்த கருவூர் சித்தர், அவரது திட்டத்திற்கு மாறாக மன்னர் கோயிலை கட்டியதாகவும் ஆதலால் அந்த கோயில் மேல் அவர் சாபம் விட்டதாகவும் ஒரு பழங்கதை இன்று வரை பரவி வருகிறது. இந்திரா காந்தியே ஒரு முறை தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று வந்த போது அதற்கு அடுத்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அதே போல் கலைஞர் கருணாநிதி தஞ்சை பெரிய கோவிலில் விழா எடுத்த பிறகு அவர் அதன் பின் ஆட்சிக்கே வரவில்லை. இது போன்ற சம்பவங்களால் இந்த கதை மிகவும் பலமாக பரவ ஆரம்பித்தது. இதற்கு காரணமாக ராஜ ராஜ சோழன் மேல் உள்ள சாபம் தான் காரணம் என பல கதைகள் உலாவி வந்தன.ராஜ ராஜ சோழன் சம்பந்தமாக எதை தொட்டாலும் அது தோல்வியிலேயே முடியும் என ஒருபழங்கதை பரவியது. இந்த நிலையில் தான் கடந்த2008 ஆம் ஆண்டு மணி ரத்னம்“பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்குவதற்கான பணிகளை தொடங்கினார். ஆனால் அந்த பணி தொடராமல் போனது. மணி ரத்னம் மீண்டும்“பொன்னியின் செல்வன்” பணிகளை தொடங்கினார். ஆனால் அதன் பின் அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டதாக செய்திகள் வந்தது.இதனை தொடர்ந்து கடந்த2019 ஆம் ஆண்டு ஆண்டு ஒரு வழியாக“பொன்னியின் செல்வன்” பணிகள் தொடங்கியது. ஆனால் அதன் பின் கொரோனா தொற்று பரவி படப்பிடிப்பு பணிகள் முடங்கியது.கொரோனா ஊரடங்கு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டப் பின், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி தற்போது திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது.இந்த நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தில் பணியாற்றிய வசன கர்த்தா ஜெயமோகன்“படப்பிடிப்பின் போது தனக்கு எதாவது நேர்ந்துவிட்டால் யார் இந்த பணியை தொடர வேண்டும் என முடிவு செய்து தான் படப்பிடிப்பையே தொடங்கினார் மணி ரத்னம். ஒரு போர் வீரன் போருக்கு போவது போல் தான் இத்திரைப்படத்தை இயக்கினார். கிட்டதட்ட சாவை நோக்கி, போய்க்கொண்டிருப்பது போல் எல்லாத்துக்கும் தயாராக இருந்தார்” என கூறினார்.எனினும் யாரும் இதுவரை சாதிக்காத செயலை தற்போது மணி ரத்னம் சாதித்து விட்டார் என ரசிகர்களும் திரையுலக வட்டாரங்களும் அவரை பாராட்டி வருகின்றனர். 

1 2 ... 51 52 53 54 55 56 57 58 59 60

AD's



More News