25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வெள்ளித்திரை

Sep 20, 2023

ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய நடிகர் கார்த்தி கைவசம் இருக்கும் அடுத்தடுத்த படங்கள்

குக்கூ, ஜோக்கர் போன்ற விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் ராஜு முருகனுடன் இணைந்து கார்த்தி நடிக்கும் படம் தான் ஜப்பான். இந்தப் படத்தை தமிழ் மட்டுமில்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது கார்த்தி தன்னுடைய26 ஆவது படத்தில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி செட்டி நடிக்கவிருக்கிறார். தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலா படங்களுக்கு ட்ரிபியூட் கொடுப்பது போல் இந்தப் படத்தை எடுக்க இருப்பதாக படக்குழு  அறிவித்திருக்கிறார்கள்96 படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தவர் தான் இயக்குனர் பிரேம்குமார். இவர்தான் கார்த்தியின் 27 ஆவது படத்தை இயக்க இருக்கிறார். கண்டிப்பாக இந்த படம் நல்ல ஒரு காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி100 கோடி வசூல் வேட்டை ஆடிய படம் தான் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது கைதி. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரெடி ஆகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்.கார்த்திசதிஷ் செல்வகுமார்: நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷை வைத்து பேச்சிலர் படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் சதிஷ் செல்வகுமார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தி இவருடைய இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அருண் ராஜா காமராஜ். இவரும் கார்த்திக்கு கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும்.நடிகர் கார்த்தி கைவசம் அடுத்தடுத்து இருக்கும் படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

Sep 13, 2023

ஜீவாவுக்கு திருப்புமுனை தந்த எஸ் எம் எஸ்

சிறிது காலம் எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் பிரேக் எடுத்து கொண்ட சில ஹீரோக்களுக்கு 2 வது . முறை வெற்றியை கொடுத்த படங்கள்தொடக்கத்தில் அமோக வரவேற்பு பெற்று, சிறிது காலம் எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் பிரேக் எடுத்து கொண்ட சில ஹீரோக்களுக்கு செகண்ட் இன்னிங்ஸ் மூலம் வெற்றியை கொடுத்த படங்களை பார்க்கலாம்.ஆசை ஆசையாய், தித்திக்குதே போன்ற திரைப்படங்களின் மூலம்2000 களின் தொடக்கத்தில் பயங்கர வைரலாக இருந்த நடிகர் தான் ஜீவா. பிறகு சில வருடங்களிலேயே காணாமல் போய்விட்டார். இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைக்காமல் இருந்தது. ராஜேஷ் இயக்கத்தில் 2009இல் வெளியான“சிவா மனசுல சக்தி” என்ற திரைப்படம் பயங்கர ரீச் ஆனது. இவருக்கு மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு எக்கச்சக்க திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது.வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் விஷ்ணு விஷால். முதல் படத்திலே சிறந்த கதாநாயகன் விருதும் வாங்கி,. அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். ஆனால் அது எதுவும் இவருக்கு பெரிதாக வெற்றி படமாக அமையவில்லை. நடிகரில் இருந்து தயாரிப்பாளராகவும் மாறி பார்த்தார், எதுவுமே வொர்க் அவுட் ஆகவில்லை. பிறகு2017 இல் வெளியான ராட்சசன் திரைப்படதின் மூலம் இவருக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட் ஆகியது.90களில் இருந்து முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருந்தவர்தான் அரவிந்த்சாமி. இவர்2000 வரை நடித்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு இணையாக இருக்கும் நடிகர்களே பயப்படும் அளவிற்கு இருந்தது. அதற்குப் பிறகு சில வருடங்கள் எங்கே போனார் என்று தெரியாமல் இருந்தார். பிறகு 2015 இல் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கம் பேக் குடுத்தார்.ஆரம்ப காலகட்டத்தில் காதல் அழிவதில்லை, கோவில் போன்ற திரைப்படங்கள் மூலம் பீக்கிலிருந்தவர் தான் சிலம்பரசன். அதனைத் தொடர்ந்து 2015 வரை நல்ல படங்கள் நடித்து அமோக வரவேற்புடன் இருந்தார். பின்னர் இவர் நடித்த படங்களுக்கு அந்த அளவிற்கு வரவேற்பும் கிடைக்காமல் போனது. அந்த சமயத்தில் இவருக்கு ரி என்ட்ரி திரைப்படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் 2021 வெளியான மாநாடு திரைப்படம் அமைந்தது..தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான்மாதவன். இவர் பல பேரின் கனவு கண்ணனாகவே இருந்தவர்.2000 களின் தொடக்கத்தில் அமோக வரவேற்பு கொடுத்த அலைபாயுதே, மின்னலே போன்ற திரைப்படங்களின் மூலம் பயங்கர பேமஸ் ஆக இருந்தார். பிறகு2010 க்கு மேல் தேடும் அளவிற்கு பட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.2016ல் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தின் மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் தடத்தை பதித்தார்.பல வருடங்களாக சினிமாவில் இருந்தும், அருண் விஜய்க்கு வெற்றி எட்டா கனியாகவே இருந்தது. அதனை தொடர்ந்து அழகாய் இருக்கிறாய் பயமாக இருக்கு, தவம், வேதா போன்று தொடர்ச்சியாக திரைப்படங்கள் நடித்திருந்தாலும், போதிய அளவிற்கு ரீச் கிடைக்கவில்லை. பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்2015இல் அஜித் குமார் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம், திரும்ப வந்துட்டேன்னு சொல்லுன்ற மாதிரி விக்டர் மனோகரன் ஆக மாசாக என்ட்ரி கொடுத்தார். 

Sep 06, 2023

2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் நான்கு படங்கள்

 பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் எப்போதுமே பண்டிகை நாட்களை குறி வைத்து தான் வெளியாகும். அந்த வகையில் ரஜினியின் ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியான நிலையில் அடுத்ததாக விஜய்யின் லியோ படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகைக்கு ரிலீஸாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நான்கு படம் வெளியாகிறது.இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் பல வருடங்களாக உருவாகி வந்த படம் தான் அயலான். சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகம் வைத்துள்ளனர். ஏனென்றால் இப்படம் அறிவியல் சார்ந்த படமாக உருவாகி இருக்கிறது.அயலான் படத்திற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் எல்லாம் வெளியான நிலையில் இப்படம் மட்டும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த சூழலில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு அயலான் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் விஏபிக்ஸ் வேலைகள் நிறைய இருப்பதால் அதற்கான பணிகள் இப்போது மும்மரமாக நடந்து வருகிறது.மேலும் சிவகார்த்திகேயனுடன் 57 வயது நடிகர்ஒருவரும் போட்டிபோட இருக்கிறார். அதாவது விக்ரமின்தங்கலான் படமும்பொங்கல் பண்டிகைக்குவெளியாகிறது. பாரஞ்சித் இயக்கத்தில்உருவாகி இருக்கும்இந்தப் படம்கோலார் தங்கசுரங்கத்தை மையமாகவைத்து எடுக்கப்பட்டுவருகிறது. தங்கலான்படத்தில் மாளவிகாமோகன் கதாநாயகியாகநடித்திருக்கிறார்.கேஜி எஃப் பட இயக்குனர்பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிஇருக்கும் படம் தான் சலார். சமீபகாலமாக பிரபாஸ் நடிப்பில் வெளியானபடங்கள் எதுவும் பெரிய அளவில்ஹிட் கொடுக்கவில்லை. பாகுபலி 2 படத்திற்கு பிறகு அவர் எந்தவெற்றி படமும் தரவில்லை. குறிப்பாககடைசியாக வெளியான ஆதிபுருஷ் படம்மிகப்பெரிய அடி வாங்கி இருந்தது. இந்த சூழலில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள சலார் படத்தின் மீது பிரபாஸ் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குண்டூர் காரம் படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

Sep 06, 2023

ஜெயிலர் வசூலில்635 கோடிக்கு காரணமான 2 பேர் காஸ்ட்லி கிப்ட் கொடுத்த கலாநிதி மாறன்

சன் பிக்சர்ஸ் சூப்பர் ஸ்டார் கூட்டணியில் கடந்த மாதம் வெளிவந்த ஜெயிலர் வசூலில் பலரையும் மிரட்டியது. தற்போது வரை635 கோடிகளை வாரி குவித்திருக்கும் இப்படம் பொன்னியின் செல்வன், விக்ரம் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களின் சாதனையையும் முறியடித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு படு ஸ்டைலாக மிரட்டி இருந்த சூப்பர் ஸ்டார் தான் என்பதை நம்மால் மறுக்க முடியாது. ஆனால் அவரை விடவும் இரண்டு முக்கிய நபர்கள் ஜெயிலரின் மாபெரும் வெற்றிக்கு காரணமாக இருக்கின்றனர். அதில் இயக்குனர் நெல்சனுக்கு மிகப்பெரும் பங்கு இருக்கிறது.பீஸ்ட் படத்தின் மூலம் பல அவமானங்களை சந்தித்த இவர் ஒரு வெற்றியை கொடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இப்படத்தை எடுத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் காயம் பட்ட சிங்கத்தின் கர்ஜனையாகத் தான் ஜெயிலர் இருந்தது. அதேபோன்று அனிருத்துக்கும் இந்த வெற்றி சொந்தமானது தான்.ஏனென்றால் படம் வெளிவருவதற்கு முன்பே பாடல்களை உலக அளவில் கொண்டாட வைத்த பெருமை இவரையே சேரும். அதிலும் காவாலா பாட்டுக்கு சிறுசு முதல் பெருசு வரை ஆட்டம் போட்டு சோசியல் மீடியாவையே ரணகளப்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து வெளியான ஹுக்கும் பாடலும் வேற லெவலில் வைரலானது.இப்படி ரிலீசுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அனிருத் படம் முழுவதிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியிருந்தார். அப்படி பார்த்தால் சூப்பர் ஸ்டாரை விடவும் படத்தின் வெற்றிக்கு இந்த இருவர் தான் முக்கிய காரணமாக இருக்கின்றனர். அதை வெளிக்காட்டும் விதமாக தான் கலாநிதி மாறன் இவர்கள் இருவருக்கும் காஸ்ட்லியான காரை கொடுத்து சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.அந்த வகையில் சூப்பர் ஸ்டாருக்கு1.26 கோடி மதிப்புள்ளBMWX7 கார் பரிசாக கொடுக்கப்பட்டது. அதேபோன்று நெல்சன், அனிருத் இருவருக்கும் அதை விட அதிக விலையுள்ள1.44 கோடி மதிப்பிலானPorscheMacanS கார் வழங்கப்பட்டது. இதிலிருந்தே கலாநிதி மாறன் இவர்கள் இருவரும் தான் வெற்றிக்கு முக்கியமானவர்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

Aug 30, 2023

லியோ வெளி வருவதற்கு முன் மொத்த கதையும் தெரிஞ்சிரும் போல…..

லோகேஷ் கனகராஜ் தற்போது வாண்டட் இயக்குனராக மாறிவிட்டார். இதற்கு காரணம் கமல், சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் போன்ற பல நடிகர்களை வைத்து விறுவிறுப்பான படத்தை திரில்லர் மூவியாக கொடுத்தது தான். அந்த வகையில் இப்பொழுது விஜய், லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.அத்துடன் இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து இப்பொழுது வரை மிகப்பெரியஹைப்பை ஏற்படுத்திருக்கிறது. இப்படம் வருகிற அக்டோபர்19ஆம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது. ஆனால் இப்படத்தின் கதை இந்த மாதிரி இருக்குமா, எல்சியு கதையாக இருக்குமா என்று பல கேள்விகளை முன்வைத்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் பல ஆர்டிஸ்ட்கள் நடித்துள்ளார்கள்.லியோ வெளி வருவதற்கு முன் மொத்த கதையும் தெரிஞ்சிரும் போலலியோ படத்தின் சீக்ரெட்காக சில நடிகர்களின் உளறு வாய்க்கு பிளாஸ்திரி போட்டலோகேஷ்..அவர்கள் ஒவ்வொருவரும் கொடுக்கும் சில விஷயங்களை வைத்து இப்படித்தான் இருக்கும் என்று கதை ஓரளவுக்கு புரிந்து விட்டது. ஆனால் இப்பொழுதே கதை தெரிந்து விட்டால் இதில் சுவாரசியம் குறைந்து விடும். அத்துடன் வசூல் ரீதியாகவும் அடிபட்டு விடும் என்பதற்காக லோகேஷ் இப்படத்தில் நடித்த சில நடிகர்கள் வாய்க்கு பிளாஸ்திரி போட்டு அடைத்து இருக்கிறார்.இப்படத்தில் உளறு வாய்களாக இருக்கும் ஐந்து பேரை படம் ரிலீஸ் ஆகும் வரை கப்பிச்சிப்பின்னு வாயை மூடிகிட்டு அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறார் லோகேஷ். அந்த வகையில் மன்சூர் அலிகானை முதலில் வாயை மூடிகிட்டு சும்மா இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் லீக் செய்யக்கூடாது என்று ஆர்டர் போட்டிருக்கிறார்.இவரை தொடர்ந்து இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு மற்றும் இவருக்கு உதவியாளராக இருக்கும் தவசி ராஜ் இவர்கள் மூலமாகவும் எந்த ஒரு விஷயமும் வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக இவர்களையும் கூப்பிட்டு படம் திரையரங்குகளில் வரும் வரை மௌனம் காத்திருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.அத்துடன் சாண்டி மாஸ்டர் இவரிடமும் லியோ படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடக் கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். இப்படி இவர்கள் ஐந்து பேரையும் படத்தை பற்றி தயவு செய்து எதுவும் சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறார். குறிப்பாக மன்சூர் அலிகானை தேவையில்லாமல் அதிகமாக யாரிடமும் பேச வேண்டாம் என்று வார்னிங் கொடுத்து இருக்கிறார்.

Aug 23, 2023

அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு சத்யராஜ் பதில். கடந்த 45 ஆண்டுகளாக ரஜினி மட்டுமே ,சூப்பர் ஸ்டார்.

மோகன் டச்சுஇயக்கத்தில்அங்காரகன் என்ற படத்தில் மாறுபட்ட காதபாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்யராஜ்.இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய சத்யராஜ்" மணிவண்ணன் அண்ணனுக்கு பிறகு எனக்கான ஒரு டைரக்டர் அமையவில்லை. இப்ப இருக்கிற டைரக்டர் நிறைய கேரக்டர் தந்தாலும் மணிவண்ணன் போல் இல்லை. மணி அண்ணன் எனக்காக கேரக்டரை உருவாக்குவார். அங்காரகன் படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறேன்.நான் செல்லும் இடங்களில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்வியை கேட்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை அந்தந்த கால கட்டத்தில் வசூலில் நம்பர் ஒன் ஆகஇருப்பவரை சொல்வார்கள். முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை ஏழிசை மன்னன் என்பார்கள். அடுத்துMGR அவர்களை மக்கள் திலகம் என்றார்கள். இப்போது ரஜினியை சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். தியாகராஜ பாகவதரை சூப்பர் ஸ்டார் பாகவதர் என்றும், எம். ஜி. ஆர்அவர்களை சூப்பர் ஸ்டார் எம். ஜி. ஆர் என்று ஏன் அழைக்கவில்லை என்று கேட்க முடியுமா? சிவாஜிக்கு பிறகு நடிப்பில் கமல் தான் என்கிறோம்.ஆனால் கமலை நடிகர் திலகம் கமல் என்று அழைப்பதில்லையே. பட்டம் என்பது அந்தந்த காலகாட்டித்தில் மக்களால் தரப்படுவன. கடந்த45 ஆண்டுகளாக ரஜினி மட்டுமே,சூப்பர் ஸ்டார். தமிழ் நாட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிதான். விஜய், அஜித் போன்றவர்களுக்கு தளபதி, தல பட்டங்கள் தான் பொருத்தமானது என்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பரபரப்பு கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் வசந்த மாளிகை படத்தை ரீ ரிலீஸ் செய்தது போல் தான் நடித்த அமைதிப் படை படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முன் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

Aug 16, 2023

கவினை டாப் ஹீரோ ரேஞ்சுக்கு வளர்த்த "டாடா"  படம்

கவினின் வளர்ச்சி நம்ம நட்பில் ஒருவரோட வளர்ச்சியைப் போல மகிழ்வைக் கொடுக்குது. குறைகளைக் களைந்து நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து இன்று டாப் ஹீரோவாக வளர்ந்திருக்கிறார்.இவர் விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ்3வது சீசனில் பங்கேற்று மாபெரும் பிரபலடைந்தார். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிக்பாஸ் வாய்ப்பை கைப்பற்றினார்.தொடர்ந்து அவரவர் தன்  கேரியரில் கவனத்தை செலுத்தி நட்புன்னா என்னான்னு தெரியுமா, டாடா உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார்.இதில் டாடா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து வசூல் வாரி குவித்தது. நடிச்சது ரெண்டு படமா இருந்தாலும் கோடியில் சொத்து வைத்திருக்கிறாராம். சென்னை ஒரு பிளாட், சொகுசு கார் என கவினின் சொத்து மதிப்பு சுமார்5 முதல்7 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. கவின் டாடா படத்திற்கு பிறகு  1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். அவரின் ஆண்டு வருமானம்  ரூ. 1 கோடி வரை இருக்குமாம். 

Aug 16, 2023

வயசுக்கு ஏத்த மாதிரி வாய்ப்பை தேடி நடிக்கும் நடிகர்கள்

தன் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைக்காதா என வாய்ப்புக்காக சுற்றித்திரிந்து அதன் பின் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பிரபலங்களும் உண்டு. இந்நிலையில் தன்னோட வயதிற்கு ஏற்றவாறு வாய்ப்பை தேடி நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவலை இங்கு காண்போம்.  80- 90 காலகட்டத்தில்  முன்னணி கதாநாயகனாய் சத்யராஜ் மேற்கொண்டு எண்ணற்ற படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது. இவரின் கொங்கு தமிழ் குசும்பு பேச்சும், நகைச்சுவையும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து தற்போது தன் வயதுக்கு ஏற்றவாறு குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்புற நடித்து வருகிறார்.இவரைத் தொடர்ந்து சுப்ரீம்ஸ்டார் என அழைக்கப்படும் சரத்குமார்நடிப்பில் எண்ணற்ற படங்கள் வெற்றியைக்கண்டிருக்கிறது. அவ்வாறு ஹீரோவாய் கலக்கிவந்த இவர் தற்பொழுது தன்வயதிற்கு ஏற்றவாறு வில்லன் கதாபாத்திரங்களையும், குணச்சித்திர கதாபாத்திரங்களையும்ஏற்று நடித்து வெற்றி கண்டுவருகிறார். சமீபத்தில் PS 1 மற்றும் PS 2 வில் தன் சிறப்பானநடிப்பினை வெளிக்கட்டியிருப்பார். ஒரே வெற்றியால் 8 படத்திற்கு புக் ஆன சரத்குமார் இப்படத்தின் வெற்றியை கொண்டு தன் அடுத்தகட்ட படங்களை புக் செய்துவிட்டார் என்றே சொல்லலாம். தன் அதிரடியான நடிப்பினை வெளிக்காட்டி ஆக்சன் நிறைந்த படங்களை மேற்கொண்டு வந்தவர் ராஜ்கிரண். தற்பொழுது தன் வயதை கருதி படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.வில்லன் கதாபாத்திரத்திற்கு பேர் போனவர் பிரகாஷ்ராஜ். படத்திற்கு ஏற்றவாறு தன் தத்ரூபமான நடிப்பினை வெளிக்காட்டும் இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்புற நடித்து வருகிறார்.   80 - 90  காலகட்டத்தில் வில்லனாக குடைச்சல் கொடுத்தவர்தான் நாசர். தற்பொழுது தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை மட்டுமே  தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.,சிறந்த இயக்குனராய் நாடோடிகள், போராளி போன்ற படங்களை இயக்கி வெற்றுக் கண்டவர் தான் இயக்குனர் சமுத்திரக்கனி. தற்பொழுது இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பில் இறங்கிய இவர் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். தற்பொழுது தமிழ் மட்டும் அல்லாது அக்கட தேசத்திலும் தன் அடுத்த கட்ட பட வாய்ப்புகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Aug 09, 2023

சன் பிக்சர்ஸ் “ ஜெயிலர் ” படம்  திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. ரஜினியின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்

.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள ஜெயிலர் படம். டிக்கெட் புக்கிங் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில்ஜெயிலர் பட உரிமத்தை வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது,சன் பிக்சர்ஸ்.ரஜினிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இங்கு இவருடைய படத்தின் ரிலீஸ் நாளை எப்படி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்களோ அதே போல் மலேசியாவிலும் ரஜினி படம் திருவிழா போல் கொண்டாடப்படும்.அதன் காரணமாகவே வெளிநாடுகளிலும் ரஜினியின் படங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். ஆனால் இந்த முறை அதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ரஜினியின் படத்தை வழக்கமாக வாங்கும் வெளிநாட்டு விநியோகஸ்தர் மாலிக் இந்த முறை ஜெயிலரின் உரிமையை ஆறு கோடிக்கு விலை பேசி இருந்தார்.இவர் ஒரு லாபகரமான விநியோகஸ்தர் என்பதால் பொதுவாக ரஜினி பட உரிமம் இவருக்கு தான் கிடைக்கும். ஆனால் இப்போது இவருக்கே பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போது அமலாக்கத்துறை பிரச்சினையை சந்தித்து வரும் இவரால் ரஜினி படத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஏனென்றால் தற்போது பணப்புழக்கம் செய்ய முடியாத சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டுள்ளார். இவரை தவிர மலேசியாவில் சொல்லிக்கொள்ளும்படியான விநியோகஸ்தர்கள் கிடையாது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த சன் பிக்சர்ஸ் தற்போது லோட்டஸ் நிறுவனத்திற்கு ஜெயிலர் பட உரிமத்தை வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.அடி மாட்டு விலைக்கு விற்பனையாகி இருந்தாலும் படம் வெளி வந்தால் பல மடங்கு கலெக்சனை தட்டி தூக்கி விடலாம் என சன் பிக்சர்ஸ் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறது.ரஜினியின் ரசிகரான தனுஷ் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தார்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான ஜெயிலர் படத்தை நடிகர் தனுஷ், கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் படம் பார்த்தார். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தனுஷ், இதற்கு முன் வெளியான லிங்கா, காலா, கபாலி போன்ற படங்களை எல்லாம் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்துள்ளார். அந்த வகையில் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை ரசிகர்களோடு சேர்த்துப்பார்த்தார்.அதே போல சென்னையில் உள்ள குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ஜெயிலர் படம் பார்ப்பதற்காக இசையமைப்பாளர் அனிருத், நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வந்திருந்தனர். அங்கு ரசிகர்களோடு சேர்ந்து பாட்டுப்பாடி அசத்தினார்.பெரிய எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் படம் வருவதால் அவரது ரசிகர்கள் இதனை ஒரு திருவிழா போலவே கொண்டாட ஆரம்பித்திருக்கின்றனர். கட் அவுட்டுகள், பேனர்கள் என திரையரங்குகள் களைகட்டியிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு சிறிய ஏமாற்றமாக இருப்பது அதிகாலை காட்சி இல்லாததுதான்.படமானது தங்களுக்கு முழு திருப்தியை கொடுத்திருப்பதாகவும்; முழுக்க முழுக்க ரஜினி படத்தில் மாஸ் செய்திருக்கிறார்; யோகிபாபு - ரஜினியின் காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என பெரும்பாலானோர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின் மூலம் வெறித்தனமான கம்பேக் கொடுத்துவிட்டார். பீஸ்ட்டால் ரோஸ்ட் செய்தவர்களுக்கு பதிலடி அளித்திருக்கிறார் எனவும் கூறுகின்றனர்.படத்துக்கு பெரும்பாலானோரிடத்திலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சிலர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனத்தையும் கூறிவருகின்றனர். அதாவது ஜெயிலர் படத்தின் திரைக்கதை மோசமாக இருக்கிறது; கதை ஆங்காங்கே சொதப்பியிருக்கிறது. டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவே இல்லை. முதல் பாதி பரவாயில்லை ரகம். இரண்டாம் பாதி மோசம் என பதிவிடுகின்றனர்.இந்தப் படம் தற்போது சில ஷோக்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். முதல் பாதி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது பாதி குறித்தும் நல்ல விமர்சனங்களே வந்துள்ளன.

Aug 02, 2023

எகிறிய பட்ஜெட் கங்குவா பட இயக்குனர் சிறுத்தை சிவா

 .சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது சூர்யாவின் கங்குவா படம் உருவாகி வருகிறது.3d அனிமேஷனில் உருவாகி வரும் இப்படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பட்ஜெட் ஆரம்பத்தில்250 கோடி என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது நாளுக்கு நாள் பட்ஜெட் எகிறி கொண்டே போகிறதாம். இதனால் தயாரிப்பாளரை கதிகலங்க வைத்திருக்கிறார் சிறுத்தை சிவா.. இந்த சூழலில் சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காட செய்தது இயக்குனர் ஷங்கரை மிஞ்சும் அளவிற்கு சிறுத்தை சிவாவின் கங்குவா பட பட்ஜெட் அதிகமாகியுள்ளது. முதலில் 250 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட நிலையில் இப்போது500 கோடி பட்ஜெட்டை நெருங்க இருக்கிறதாம். இப்படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் பாதி முடிந்த நிலையில், இப்போது மீதி உள்ள காட்சிகளை எடுப்பதற்காக படக்குழு வெளிநாடு சென்று இருக்கிறதாம்.கங்குவா படம் ஹிஸ்டாரிக்கல் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இப்போது ஒரு தீவு பகுதியில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இதற்காக படக்குழு தாய்லாந்து சென்றிருக்கிறார்கள். ஆகையால் இங்கும் பல கோடிகள் செலவாகும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் இப்போது தயாரிப்பாளருக்கு சிறு கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.ஆனாலும் சூர்யா ரசிகர்கள் கங்குவா படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை பார்க்கும் போட்ட பட்ஜெட்டை விட கண்டிப்பாக பல மடங்கு வசூலை பெரும் என்ற நம்பிக்கையை தயாரிப்பாளருக்கு சிறுத்தை சிவா கொடுத்திருக்கிறாராம். அந்த தைரியத்தில் தான் தயாரிப்பாளரும் கங்குவா படத்திற்கு செலவு செய்து வருகிறார்.

1 2 ... 51 52 53 54 55 56 57 58 59 60

AD's



More News