ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகார் ஆகியோர் நடிப்பில் தயாராகியுயுள்ள படம் 'அயலான்'. கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ...ஏலியனை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தபடம் சில வருடங்கள் கிடப்பில் இருந்த நிலையில் பின்னர் கிராபிக்ஸ.கிராபிக்ஸ் காட்சிகளால் தாமதமாகி வந்தது. தற்போது வரும் ஜனவரி 12ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வருகின்ற ஜனவரி 5ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
அதிக அளவில் பட்ஜெட் படங்கள்தான் வெற்றி பெறும் என்பதை சின்ன பட்ஜெட் படங்கள் வசூலை அதிகமாக்கி வெற்றி பெற்றுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச்31ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் விடுதலை படம் வெளியானது. இப்படத்தில் நடிப்பதற்கு முன் காமெடி நடிகராக இருந்த சூரி இதில் முதன்முதலாக ஹீரோவாக நடித்தார். அப்படி நடித்த இந்த படம் மக்கள் ஹீரோவாக வரவேற்கும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பும் கதைக்கு ஏற்ற தத்ரூபமான விஷயங்களும் அமைந்து இருந்தது. அதனாலேயே மக்கள் இப்படத்திற்கு பெரிதும் வரவேற்பு கொடுத்தார்கள்..கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் திரைப்படம்.இப்படத்தின் கதை ஹரிஸ்க்கும், எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே நடக்கும் வரட்டு கௌரவத்தால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி அழகாக விவரித்து காட்டப்பட்டிருக்கும். படம் பார்க்கிற இரண்டு மணி நேரம் எந்தவித எரிச்சலும் இல்லாமல் படம் பார்க்கும் திருப்தியை கொடுத்தது ரா. வெங்கட் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காளி வெங்கட் மற்றும் ராமு நடிப்பில் கிடா திரைப்படம் வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்டையும் பாசத்தையும் வைத்து தாத்தா பேரனின் அன்பை வெளிப்படுத்தும் கதைஇப் படம் சர்வதேச திரைப்படம் விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.: யுவராஜ் தயாளன் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் நடிப்பில் இறுகப்பற்று திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது காதலித்து கல்யாணம் செய்த தம்பதிகள் மற்றும் பெற்றோர்களால் பார்த்து திருமணம் செய்த தம்பதிகள் இருவருக்கும் வாழ்க்கையில் நடக்கும் இயல்பான விஷயங்களை காட்டும் விதமாக கதை ,மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுவிட்டது.எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சித்தா திரைப்படம் வெளிவந்தது. இப்படம் குழந்தைகளுக்கு நடக்கும் வன்கொடுமையை எதிர்த்து காட்டும் விதமாக எந்தவித அலப்பரையும் காட்டாமல் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
ரஜினிகதாநாயகனாக நடிக்கும்.'வேட்டையன்'.படம்ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவருகிறது.அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும்இப்படத்தின் படப்பிடிப்புபல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.'வேட்டையன்' படத்தின் தலைப்பு மற்றும் டீசர் ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின்கவனத்தை ஈர்த்தது.இந்நிலையில், நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்றுள்ளார். 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில்நடைபெறுவதால் நடிகர்ரஜினி தூத்துக்குடி 'சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு வெளியான நல்ல கதை கரு கொண்ட 5 படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படாமல் படு தோல்வி அடைந்தது. பொம்மை நாயகி: காமெடியனாக ரசிகர்களை சிரிக்க வைத்த யோகிபாபு கதாநாயகனாக நடித்த படம் தான்பொம்மை நாயகி. இந்தப் படத்தில்யோகி பாபுவின் சென்டிமென்ட் ஆன நடிப்பை பார்க்கமுடிந்தது. ஷாம் இயக்கத்தில் நீலம்ப்ரொடக்சன் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ‘பாரதமாதா’ என பெண்கள் பெயரால்போற்றப்படும் இந்த பாரத நாட்டில், தாழ்த்தப்பட்ட பெண்களின் நிலைமை என்ன என்பதைஇந்த படம் அப்பட்டமாக சொல்கிறது. அதிலும் இதில் அப்பா தன்னுடையமகளுக்கு நேர்ந்த அநீதியை எப்படிதட்டி கேட்கிறார் என்பதை மையமாகக் கொண்டுபடத்தை எடுத்தனர். நல்ல கருத்துக்களை சொன்னஇந்தப் படத்தை தியேட்டரில் : பார்ப்பதற்கு தான்ஆளில்லாமல் போச்சு. லக்கி மேன்: காமன் மேனுக்கும், கராரான போலீஸ் மேனுக்கும் இடையே நடக்கும் ஈகோ யுத்தம் தான் இந்த லக்கி மேன் படத்தின் கதை கரு. ரொம்ப சிம்பிளான காமெடி கதை என்றாலும் யோகி பாபுவின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது. இந்த படத்தில் தனக்கு அதிர்ஷ்டத்தை அளித்த காரையும், இழந்த தன் அதிர்ஷ்டத்தையும் யோகி பாபு எப்படி மீட்டெடுக்கிறார் என்பதை கிளைமாக்ஸில் உருக்கத்துடன் காட்டினார். கிடா: சில தினங்களுக்கு முன்பு ரா வெங்கட் இயக்கத்தில் காளி வெங்கட், பூராமு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கிடா படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களின் திரையிடப்பட்டு விருதுகளை வாங்கி குவித்தது. இந்த படத்தில், தாத்தா தீபாவளிக்கு தன் பேரனுக்கு புது துணியை வாங்கித் தர முடியவில்லை என்ற சோகத்தில், வீட்டில் செல்லமாக வளர்த்த கிடாயை விற்பதற்கு முயற்சி செய்கிறார். பின்பு அந்த கிடா காணாமல் போகிறது. கடைசியில் கிடா கிடைக்கிறதா? பேரனுக்கு தாத்தா துணி வாங்கி கொடுத்தாரா? என பல உணர்ச்சிப்பூர்வ காட்சிகளை இந்த படத்தில் காட்டினர்.யாத்திசை: ஏழாம் நூற்றாண்டில் சேர, சோழ அரசர்களை வென்று சோழ நாட்டிற்கு வந்து ஆட்சி செய்தனர் பாண்டியர்கள். ஆனால் பாண்டியர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் எயினர் எனும் பழங்குடிகள் குழுவும் ஒன்று. பாண்டியர்களின் வெற்றிக்குப் பிறகு பாலை நில நாடோடி வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட அக்குழுவினருக்கு அரசு அதிகாரத்தை கைப்பற்ற கிளம்பிய கொதி என்னும் மாவீரனின் வீரப் போராட்டத்தை இந்த படத்தில் காட்டினர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு, யாத்திசையை கொண்டாட மனசில்லை. இதனால் இந்த படம் நல்ல கதை களத்தில் சிறப்பான படைப்பாக வெளிவந்தாலும் மக்களிடம் போய் சேரவில்லை.நூடுல்ஸ்: அருவி புகழ் மதன் இயக்கத்தில் வெளியான படம் தான் நூடுல்ஸ். இந்தப் படத்தில் ஹரிஷ் உத்தமன் ஷீலா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம், ஒரு எளிமையான கதையை வைத்துக்கொண்டு சுவாரசியமான திரை கதையை அமைத்து ரசிக்க வைத்தனர். இந்த படத்தில் போலீஸ் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை மதன் தனது நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கடைசி அரை மணி நேரம் கூடுதல் சுவாரசியமாக இருந்தது. இரண்டு நிமிடங்களில் ஒரு மனிதனின் வாழ்க்கை மாறவும் முடியும், எல்லா பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நல்ல கதை கரு கொண்ட இந்த படம், மக்களிடம் போய் சேராமல் போனது.
கொடியநோயால் பாதிக்கப்பட்டுள்ளஇவர் படங்களில்நடிப்பது இல்லை,மற்றபடி சின்னசின்ன நிகழ்ச்சிகள்கலந்துகொள்வது எனபிஸியாக இருக்கிறார்.அவர்பூரண குணமடைந்துவிரைவில் திரையுலகில்பிஸியாக நடிக்கவேண்டும் என்பதுரசிகர்களின் ஆசையாகஉள்ளது.அண்மையில்அவர் கொஞ்சம்கிளாமரான உடையில்போட்டோ ஷுட்நடத்தி வெளியிடஅதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வந்தார்கள்.சமந்தாஏற்கெனவே பள்ளி குழந்தைகளுக்காகEkam நிறுவனம், ஆடை துறையில்Saaki என்ற நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார்.இந்த நிலையில் அவர்Tralala என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.எனது சொந்ததயாரிப்பு நிறுவனத்தைஅறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிறுவனத்தின்மூலம் நல்ல படங்களை கொடுப்பேன். என பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் திரைப்படம் 700 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் அந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும், வட இந்தியாவிலேயே சக்கைப் போடு போட்டு வருகிறது., அந்த படத்தில் இடம்பெற்ற அந்த சுத்தியல் சண்டைக் காட்சி பிரபலமான படத்தில் இருந்து சுடப்பட்ட சீன் என்றும் அர்ஜுன் ரெட்டி படத்திலேயே அட்லீயை மிஞ்சுகிற அளவுக்கு சந்தீப் ரெட்டி ஹாலிவுட் படத்தில்இருந்துஅப்படியேகாப்பியடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் ஆதாரத்துடன் போஸ்ட் போட்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜுன் ரெட்டி என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா.தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை வைத்து பேன் இந்திய அளவில் அனிமல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இப்படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் நெகட்டிவ் ஆக தான் விமர்சனங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.அதிலும் வட இந்தியாவில் இப்படம் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.இந்நிலையில் ஷாருக்கான், சல்மான் படங்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அனிமல் படம்4 நாட்களில்410 கோடிகளை வசூல் செய்து மிரட்டியுள்ளது.இதில் வட இந்தியா மட்டும் ரூ250 கோடி வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரன்பீர் கபூர் தான் அடுத்த பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஷாருக்கான், சல்மான் கானை அச்சத்தில் ஆழ்த்திய அனிமல் வசூல்.
லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தீயாக பரவின, நடிகர் விஜய் மட்டுமின்றி தயாரிப்பாளர் லலித்குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட வீடியோ காட்சிகளை அந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு உணவு தயார் செய்து கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மாஸ் காட்டிய விஜய்: லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிம்பிளாக வந்து அந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக மாற்றி, ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் நடிகர் விஜய் ஈர்த்து இருந்தார். நடிகர் விஜய் வரும்போது அவருக்கு உற்சாக வரவேற்பை மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த வீடியோவையும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனியாக வெளியிட்டுள்ளார்.விஜய் அம்மா, அப்பா: நடிகர் விஜய் மட்டுமின்றி அவரது தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு உண்ட காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் தற்போது சினிமா பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு புக் செய்யப்பட்டு வருகிறதுவிக்னேஷ் சிவனை உட்கார வைத்து: மேலும், இப்ப நான் விக்னேஷ் சிவனை உட்கார வைத்து அவருக்கு மாதம்பட்டி ரங்கராஜ் உணவு பரிமாறும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. ராக்ஸ்டார் அனிருத், கவிஞர் பா விஜய், விஜய் அட்மின் ஜெகதீஷ், புஸ்ஸி ஆனந்த், நடிகர் சூரி, சாந்தனு உள்ளிட்ட பல பிரபலங்கள் லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காட்சிகளை மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ளார். உணவு மெனு: ஜாலபெனோ சீஸ் சமோசாவில் ஆரம்பித்து, பானிபூரி ஸ்டால், ஃப்ரூட் சாலட், விதவிதமான இனிப்பு பண்டங்கள், ஐஸ்கிரீம் ஸ்டால்கள் என களைகட்டிய நிலையில், மெயின் மெனுவாக கோதுமை தந்தூர் ரொட்டி குல்ச்சா, மாதம்பட்டி ஸ்பெஷல் கொத்து பரோட்டா - தண்ணி குழம்பு, ராஜஸ்தானுக்கு செடி - குஜராத்தி கடி, மினி தட்டு இட்லி - தேங்காய் சட்னி, போடி கோதுமை தோசை - வெஜ் ஆம்லெட், கொள்ளு ரசம் சாதம், சிறிய வெங்காயம் சாமை தயிர் சாதம் - இஞ்சி ஊறுகாய் என மெயின் கோர்ஸ் களைகட்டியது.
ரியோ ராஜ் நடித்துள்ள புதிய படத்துக்கு'ஜோ" என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அன்பு தாசன், மாள விகா மனோஜ், ஏகன், பவ்யா திரிக்கா ஆகியோரும் முக் கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஹரிஹரன் ராம் டைரக்டு செய்துள்ளார்.படம்பற்றி அவர் கூறும்போது,“கேரளா, தமிழ்நாடு எல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் சில மாணவ- மாணவிகளின் பதினேழு வயது முதல் இருபத்தி ஏழு வயது வரையிலான வாழ்க்கையை மூன்று கட்டங்களாக சொல்லும் படம் இது. ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞனுக்கும்,கேரளப் பெண்ணுக்கும் வரும் காதலும், அதன் விளைவுகளுமே இந்தப் படம். படத்தில் வைசாக் வரிகளில் உருவாகி உள்ள'ஒரே கானா' பாடலில் யுவன் சங்கர்ராஜாதோன்றியுள்ளது படத்துக்கு பெரும் பலம் என்றார். இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஒரிஜினலாக தாடி வளர்த்ததாகவும், இதனால் வேறு எந்த பட வாய்ப்புகளையும் ஏற்க முடியவில்லை என்றும் ரியோ கூறி னார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ ஆகியோர் தயாரித்துள்ளனர். இசை: சித்துக்குமார், ஒளிப் பதிவு: ராகுல் கே. விக்னேஷ்.
சினிமாவில் கொஞ்சம் வளர்ந்து விட்டாலும் எவ்வளவு பெரிய இடத்திற்கு வந்தாலும் மரியாதை மற்றும் கண்ணியம் தவறாமல்இந்த ஐந்து ஹீரோக்கள் மட்டும் தனித்துவமாக நடந்து கொள்கிறார்கள் .சமுத்திரக்கனி: இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் சமுத்திரக்கனி. ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இன்று தெலுங்கு சினிமா கொண்டாடும் கலைஞனாக இருக்கிறார். நடிப்பு மட்டுமே தொழில், அதை சரியாக செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர் இவர்.சத்யராஜ்: நடிகர் சத்யராஜ் சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம்.. சத்யராஜ் எப்போதுமே மனதில் பட்டதை மறைக்காமல் பேசக்கூடியவர். பிரச்சனையே வந்தாலும் உண்மையை பேச இவர் எந்த மேடையிலும் தவறியதே இல்லை.மம்மூட்டி: மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மம்மூட்டி. தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் நடிகராக இருக்கிறார். ஆனால் இவரிடம் எந்த பந்தாவும் இருக்காது. இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமும் ரொம்பவும் மரியாதையாக நடந்து கொள்வாராம்.பாக்யராஜ்: இந்திய சினிமா உலகில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் பாக்யராஜ். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறைய கதைகளை படமாக இயக்கி, நடித்து இருக்கிறார். பாக்யராஜுக்கு நிஜ வாழ்க்கையில் எந்த கெட்ட பழக்கமும் கிடையாதாம். எல்லோரிடமும் பண்பாக பேசும் பழக்கம் உடையவர் கூட.டி.ராஜேந்தர்: நடிகர் டி. ராஜேந்தர் இயக்குனர், பாடல் ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் நடிக்கும் படங்களில் நடிகைகளிடம் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்வாராம். அதே போன்று நடிகைகளுக்கு ரொம்ப கவர்ச்சியான காட்சிகளை வைப்பதில்லை. படங்களிலும் அப்படிப்பட்ட காட்சிகளை வைக்க மாட்டார்.