நட்சத்திரங்கள் சினிமாவை'தாண்டி வேறு தொழில்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆரம்பக் கால புகழ்பெற்ற ஹீரோக்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, நடிகை பானுமதி போன்றோர் சொந் தமாக ஸ்டூடியோக்கள் வைத்து இருந்தனர்.அதன் பிறகு வந்த ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நிலத்தில் முதலீடு செய்தனர். நடிகைகள் அம்பிகா,ராதா ஸ்டூடியோ கட்டி வருமானம் பார்த்தனர். தற்போதைய முன் னணி கதாநாயகன் விஜய் திருமண மண்டபம், ரியல் எஸ்டேட் முதலீடு என்று இருக்கிறார்.அஜித்குமார் சமீபத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் சாலை பயணம்'மேற்கொள்பவர்களுக்காக ஏ.கே. மோடோ ரைட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். சூர்யா படக் கம்பெனி உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார்.ஆர்யா சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஓட்டல் தொழில் செய்தார். இப்போது சினிமாவில் கிடைத்த வருமானம் மூலம் பல இடங்களில் உணவகம் திறந்திருக்கிறார்.தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத் தில் இருக்கும் நயன்தாரா சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட், துபாயில் எண் ணெய் நிறுவனம், படக்கம்பெனி, சர்வதேச சந்தையில் போட்டியிடக் கூடியளவுக்கு அழகு சாதனப் பொருட்கள் என பல துறைகளில் முதலீடு செய்துள்ளார்.தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் மார்க்கெட்டை தக்க வைத்திருக்கும் தமன்னா இணையதளம் மூலம் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார். சினிமாவுக்கு வந்த கொஞ்ச காலத் திலேயே விஜய், சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களுடன் நடித்ததோடு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்த கீர்த்தி சுரேஷ் சம்பாத்தியத்தை முதலீடாக்கி அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் நடத்துகிறார்.தமிழில் அறிமுகமாகி இந்தியில் கொடிகட்டி பறக்கும் டாப்சி ஈவண்ட் மேனஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.‘மைனா' படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற அமலா பால் தன் சொந்த மாநிலமான கேரளாவில் யோகா மையங்கள், ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் உற்பத்தி நிறுவனம் என பல வியாபாரம் செய்து வருகிறார்.தமிழ், தெலுங்கு என இரு மொழி களிலும் பிசியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் ஆந்திரா மாநிலத்தில் பல இடங் களில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் தன் தங்கையுடன் சேர்ந்து தங்க நகை வியாபாரம் செய்கிறார்.தனுஷ், சிவகார்த்திகேயன், திரிஷா, அனுஷ்கா, சமந்தா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்துள்ளனர்.
ஜெயம் ரவி சைரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ், மற்றும் யோகிபாபு, சமுத்திரக்கனி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆண்டனி பாக்யராஜ் டைரக்டு செய்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. டீசரில் ஜெயிலில் இருக்கும் ஜெயம் ரவி பரோலில் வெளியே வருவதுபோன்ற காட்சி இடம்பெற்று உள்ளது. ஜெயம் ரவியின் கைதி கதாபாத்திரத்தில் ஒரு கதையும், போலீசாக வரும் கீர்த்தி சுரேஷ் குரலில் ஒரு கதையும் என இரண்டு கதாபாத்திரங்களின் கதையை விவரிக்கும் காட்சி டீசரில் உள்ளது.பரபரப்பான திருப்பங்களுடன் மாறுபட்ட கதைக் களத்தில் ஜெயம் ரவியின் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகி இருக்கும் இந்த டீசர், படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் ஜெயம்ரவி முதல் முறையாக 'சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் வருகிறார்.ஆக் ஷன் திரில்லர் கதையம்சத்தில் உருவாகிறது. ஜெயம்ரவி இது வரை ஏற்றிராத இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். யோகி பாபு நகைச்சுவை மட்டுமின்றி கதையுடன் ஒன்றிய வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ட பணிகள் நடக்கின்றன. விரைவில் திரைக்கு வர உள்ளது. இசை ஜி வி.பிரகாஷ், ஒளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்..
தமிழ் சினிமாவில் பெண் இசை அமைப்பாளர்கள் மிகவும் குறைவு ஒரு சிலர் வருகிறார்கள். ஓரிரு படங்களுடன் ஒதுங்கி விடுகிறார்கள். இளையராஜாவின் மகள் பவதாரிணி. ஏ.ஆர்.ரகுமானின் தங்கை ரெஹானா உள்ளிட்ட ஒரு சிலர் அவ்வப்போது படங்களுக்கு இசையமைக்கிறார்கள் இந்த நிலையில் 'வடக்கன்' என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக ஜனனி அறிமுகமாகிறார்.இவர் கர்நாடக இசைத் துறையில் தனி இடத்தைப் பிடித்தவர் இந்துஸ்தானி, வெஸ்டர்ன். கிளாசிக் முதலிய பல்வேறு இசைப் பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவர் தனிப் பாடல்கள் மற்றும் இசை ஆல்பங்களை வெளியிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றவர் இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராகிறார் படத்தில் பிரதானமாக இடம் பெறும் முக்கியமானதொரு பாடலை ரமேஷ் வைதியா எழுத. தேவா பாடினார் பாடலைப் பாடி முடித்ததும் ஜனனியை தேவா பாராட்டி ஆசி வழங்கினார்.எம்டன் மகன் வெண்ணிலா கபடிக்குழு. நான் மகான் அல்ல. அழகர்சாமியின் குதிரை பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனத்தை எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கும் படம் வடக்கன்' தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குங்குமராஜ் கதாநாயகனாகவும் பாரதிராஜா கண்டுபிடிப்பான வைரமாலா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், பெரு நகரம் துவங்கி குக்கிராமங்கள் வரை வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு நிகழும் ஒரு உணர்வு மயமான நகைச்சுவை கலந்த பொழுது போக்குத் திரைப்படமாக வடக்கன் உருவாகியுள்ளது
தனுஷ் நடித்திருக்கும்47வது படம் கேப்டன் மில்லர் அவருடன் பிரியங்கா மோகன். சிவராஜ்குமார். சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இந்த படம் பிரியாடிக் ஆக்சன் அட்வெஞ்சரஸ் படமாக உருவாகி இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள கேப்டன் மில்லர் படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில், இப்படம் திரைக்கு வருவதற்கு 38 நாட்கள் இருப்பதால் விரைவில் புரமோஷன் பணிகளை தொடங்கவிருக்கிறோம். சமீப காலமாக படங்களின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்துவது ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதனால் இப்படத்தின் ஆடியோ விழாவையும் பிரமாண்டமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதோடு இதுவரை தனுஷ் நடித்த படங்களில் இது ஒரு தனித்துவமான படமாக இருக்கும் தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆகவும் இந்த படம் இருக்கும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்கள் மீது படையெடுத்த அந்த அடிமைத்தனத்தை மட்டுமின்றி இன்றைய சமூகத்தில் இருக்கும் அடிமைத்தனம் ஆதிக்க வர்க்கத்தின் செயல்களையும் பேசக்கூடியதாக இந்த கேப்டன் மில்லர் படம் இருக்கும் என்கிறார் அருண் மாதேஸ்வரன்.
தமிழில் அஜித், லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா சங்கர் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அஜித்தின் மற்றொரு படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.. இந்த படத்தை பாலிவுட்டில் கௌதம் மேனன் இயக்க இருக்கிறார்.இதில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் நடிக்க இருக்கிறார். சமீபகாலமாக அங்கு ஷாருக்கானின் படங்கள் மட்டும் தான் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் இயக்குனர் கௌதம் மேனன் சல்மான் கான் வைத்து என்னை அறிந்தால் படத்தை ரீமேக் செய்ய உள்ளதால் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது.ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தார். மேலும் என்னை அறிந்தால் ரீமேக்கில் மற்ற பிரபலங்கள் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஒரு காலத்தில் ஹிந்தி மொழியில் வெளியான படங்கள் தான் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் உருவாகும் பல படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.jith
ராகவா லாரன்ஸின் “ ஜிகிர்தண்டா டபுள் x ”, கார்த்திக்கின் “ ஜப்பான்”, விக்ரம் பிரவுவின் “ரெய்டு” வெளியாக உள்ளது.2023 தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் “அயலான் ” படமும் வெளியிட பட உள்ளது.
...'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் அவரது170வது படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் ஆரம்பமானது. பின் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்புமும்பையில் நடந்து வருகிறது.அதில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்த்தும் அதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அமிதாப்புடன் நடிப்பது பற்றி ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவில், “லைக்காவின் தயாரிப்பில், ஞானவேல் இயக்கத்தில், தலைவர்170 படத்தில்,33 வருடங்களுக்குப் பிறகு எனது வழிகாட்டி, அமிதாப்புடன் மீண்டும் பணியாற்றுகிறேன். எனது இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது,” என அமிதாப்புடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்....ரஜினிகாந்த், அமிதாப் இருவரும் ஹிந்தியில் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இருவரும் இணைந்து கடைசியாக நடித்த ஹிந்திப் படம் 'ஹம்'. அப்படம் தான் தமிழில் 'பாட்ஷா'வாக ரீமேக் ஆனது.ரஜினியின்170வது படத்தில் அமிதாப் தவிர மஞ்சு வாரியர், ராணா, பஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா...விஜயன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024ம் ஆண்டு வெளியாக உள்ளது.
அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. மகிழ்திருமேருமேனிஇயக்குகிறார். த்ரிஷா, ரெஜினா, பிரியாபவானி சங்கர் உள்பட பலர்நடிக்கிறார்கள்.லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்புக்காக குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளனர். அவர்களுடன்...கலை இயக்குனர் மிலனும்சென்றிருந்தார். அங்கு அவர் திடீரெனமாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதுபடக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது...இந்த நிலையில் அஜித்படக்குழுவினைரை அழைத்து பேசியுள்ளார். அனைவரும்உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்என்றும், ஆண்டுக்கு ஒரு முறையாவது முழுஉடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும்அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மிலன் மரணம் தன்னைமிகவும் பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனிதன் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளாராம். இதை தொடர்ந்து .அஜர்பைஜானில் உள்ள குழுவினருக்கு மருத்துவபரிசோதனை நடத்த ஏற்பாடு நடக்கிறது..
கடந்த வாரம் விஜய் நடித்து வெளிவந்த படம் 'லியோ'. இப்படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியானது. அதே நாளில்பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படமும், மறுநாள் ரவி தேஜா நடித்த'டைகர் நாகேஸ்வரராவ்' படமும் தெலுங்கில் வெளியாகின. அந்த இரண்டு நேரடித் தெலுங்குப் படங்களுக்கு முன்பாகவே'லியோ' படம் வசூலில் லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.தெலுங்கில் சுமார் 16 கோடிக்கு விற்கப்பட்ட 'லியோ' படத்தின் நிகர வசூல் 18 கோடியைத் தாண்டி லாபக் கணக்கை.ஆரம்பித்துவிட்டது. கடந்த ஐந்து நாட்களில் 35 கோடி வரை வசூலாகியுள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள். . விஜய்யின் முந்தைய படங்களின் வசூலை தெலுங்கில் இப்படம் முறியடித்துள்ளது. அது போலவே மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அதிக வசூலைக் குவித்துள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.