25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


வெள்ளித்திரை

Apr 23, 2026

'தீயோர் கூடம்"

இயக்குனர் சக்திவேல்  படம் பற்றி கூறியதாவது "ஒரே நாளில் நடக்கும் கிரைம் கதை. ஒரு வீட்டில் திடீரென நடக்கும் கொலை, அதில் மூன்று பேர் சந்திக்கும் பிரச்னைகளை திரில்லர் பாணியில் சொல்லும் படம் இது" என்றார். நடிகை சாக்ஷி அகர்வால் கதையின் நாயகியாக நடிக்கும் படம் 'தீயோர் கூடம்'.டேனியல் ஆனி போப், வையாபுரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Apr 23, 2026

கிராமத்து கதையில் 'லெனின் பாண்டியன்'

கங்கை அமரன், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் 2வது மகன் தர்ஷன் நடித்திருக்கும் படம் பாலசந்திரன் இயக்கத்தில், 'லெனின் பாண்டியன்'. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ரோஜா இதில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. கிராமத்து கதையில் மணல் கொள்ளை, போலீசின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை பின்னணியாக கொண்டு படத்தை எடுத்துள்ளனர்.

Apr 23, 2026

மே மாதத்தை குறி வைக்கும் 'ஏழு கடல் ஏழு மலை'

நிவின்பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ராம் இயக்கத்தில் 'ஏழு கடல் ஏழு மலை'. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. படத்தின் பிஸினஸ் முடியாததாலும், பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்றதாலும் ரிலீஸ் தள்ளிப்போனது. துபாயை சேர்ந்த நிறுவனத்தினர் ,இந்த படத்தின் உரிமையை பெற்று  ,அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Apr 23, 2026

'கிருஷ்ணவதாரம்'  படம் மூன்று பாகங்களாக ஹிந்தியில் உருவாகிறது.

பகவான் கிருஷ்ணன் அவதாரத்தை மையமாக வைத்து ஹர்திக் கஜார் இயக்கத்தில் 'கிருஷ்ணவதாரம்' என்ற படம் ஹிந்தியில் உருவாகிறது. சித்தார்த் குப்தா, சுஷ்மிதா பட், நிவாஷினி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். மூன்று  பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் மே 7ல் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். அதோடு படத்தின் டிரைலரை ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.

Apr 23, 2026

மறைந்த மலையாள நடிகரான திலகன் பேரன் , தமிழில் அறிமுகமாகும் அபிமன்யு.

மறைந்த மலையாள நடிகரான திலகன் ,இவரது மகனான ஷம்மி திலகன் மலையாள படங்களில் நடிக்கிறார். இவரது மகன் அபிமன்யுவும் மலையாள படங்களில்  நடிப்பவர் இப்போது தமிழில் அறிமுகமாகிறார். 2009ல் பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான ' ரேணிகுண்டா'  படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார்."90 சதவீதம் எனக்கான காட்சிகளை முடித்துவிட்டேன் என்கிறார் அபிமன்யு.

Apr 23, 2026

குற்றம் கடிதல் 2' ஜூனில் ரிலீஸ் ஆகலாம்.

'குற்றம் கடிதல்'2014ல் வெளியாகி தேசிய விருதை பெற்ற படம். இதன் 2ம் பாகம் உருவாகி உள்ளது., தயாரிப்பாளர் ஜே சதீஷ் குமார், எஸ். ஜே.ஜீவா இயக்க, பாண்டியராஜன், பாலாஜி முருகதாஸ், அப்புக்குட்டி, கீர்த்தி சாவ்லா நடித்துள்ளனர். பள்ளிக்கூட பின்னணியில் திரில்லர் பாணியில் கதை நகர்வதோடு, சமூக அவலங்களையும் பேசுகிறது. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட உள்ளது. ஜூனில் ரிலீஸ் ஆகலாம்.

Apr 23, 2026

ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு ஜெயிலர் 2' வர வாய்ப்புள்ளது.

இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினி கூட்டணியில் 'ஜெயிலர் 2' படம் உருவாகி வருகிறது. கடந்தாண்டு மார்ச்சில் ஆரம்பமாகி பல்வேறு காலகட்டங்களில் படப்பிடிப்பு நடந்து ,இப்போது நிறைவடைந்துள்ளது. இதை ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். 

Apr 23, 2026

புது படங்களுக்கு இணையாக, ரீ ரிலீசாகும் பழைய படங்கள்.

புதிய படங்களுக்கு இணையாக அஜித்தின் 'அமர்க் களம்', விஜயின் 'சிவகாசி', மாதவனின் ''ரன்' பழைய படங்களும் ரீ ரிலீசாகின்றன. எம்ஜிஆரின் 'மாட்டுக்கார வேலன்' படம் ஏப்.23ல் ரீ ரிலீஸ் ஆகிறது. இந்தவாரம் ஏப்., 24 'பிரேக்பாஸ்ட், கமாண்டோவின் லவ் ஸ்டோரி, பேட்டில், பாவக் கூத்து, தீயோர் கூடம்' ஆகிய 5 தமிழ் படங்கள் ரிலீசாகின்றன.

Apr 16, 2026

அட்லி இயக்கத்தில் ,அல்லு அர்ஜுனின்  22வது படம் 'ராக்கா'.

அல்லு அர்ஜு ன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 22வது படத்தின் தலைப்பு 'ராக்கா' .அட்லி இயக்கத்தில், சயின்ஸ் பிக்ஷன் கலந்த சூப்பர் ஹீரோ கதையில் , உருவாகி வெளியாகி உள்ளது.. முதல் பார்வை போஸ்டரில் மனித முகம், மிருக கையுடன் அல்லு அர்ஜுன் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார்.

Apr 16, 2026

சித்திரை விஷூவை முன்னிட்டு. ‘பள்ளிச்சட்டம்பி' படத்தை வெளியிட்டுள்ளனர்.

 மலையாளத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிப்பில், உருவாகி தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் வெளியாக உள்ள படம் 'பள்ளிச்சட்டம்பி' . டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். சித்திரை விஷூவை முன்னிட்டு படத்தை வெளியிட்டுள்ளனர்

1 2 3 4 5 6 7 8 9 10 ... 75 76

AD's



More News