25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வெள்ளித்திரை

Apr 16, 2026

புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தும் சிவகார்த்திகேயன் .

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகராகவும்தயாரிப்பாளராகவும்இருக்கிறார்.அவர்இதுவரைதயாரித்த 9 படங்களில் ' கனா, நெஞ்சமுண்டுநேர்மையுண்டு, டான், கொட்டுக்காளி,ஹவுஸ்மேட்,தாய்கிழவி'ஆகியபடங்களில்,புதுமுகஇயக்குனர்களைஅறிமுகப்படுத்தியிருந்தார்.   தனது 10வது தயாரிப்பாக அம்மா முத்து சூர்யா என்ற புது இயக்குனரின் படத்தை அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Apr 16, 2026

தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன் தயாரிப்பாளரானார்

தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன். நடிப்பு தாண்டி சில பாடல்கள் பாடியிருப்பவர். கேயுரி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி உள்ளார்., 'நான் நடிக்க துவங்கியது முதல் இது எனது செயல்முறை நோக்கமாக இருந்தது என்கிறார்  நித்யா மேனன். 

Apr 16, 2026

'அறம்' இயக்குனர் கோபி நயினார், ராதிகாவை கதையின் நாயகியாக வைத்து 'காலனி'' என்ற படத்தை இயக்குகிறார்.

 துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் இப்படத்தில் முக்கிய விஷயமாக இருக்கும் என போஸ்டர் பிரதிபலிக்கிறது ."தாய் கிழவி' பட வெற்றிக்கு பின் ராதிகாவை தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன.  தேவா இசையமைக்க 'காலனி'' படத்தின் முதல் பார்வை போஸ்டர், வீடியோ வெளியாகி உள்ளது. 

Apr 16, 2026

ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்'..

ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ள, மனு ஆனந்த் இயக்கத்தில் 'மிஸ்டர் எக்ஸ்' படம் இந்தவாரம் ரிலீஸாகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயற்சிக்காத ஒன்றை ஆர்யா செய்தார் என்கிறார் இயக்குனர் இதில் ஒரு காட்சியில் ஆர்யா உடலில் ஆடையின்றி குளிர்ந்த நீரில் 20 அடி ஆழத்தில் இறங்கி நடித்துள்ளார். ஆர்யா கூறுகையில், "நாம் ஆழமாக இறங்க இறங்க, நீரின் வெப்பநிலை குறைந்து 15 முதல் 16 டிகிரி வரை இருந்தது. ஆடையின்றி நடிக்கும் போது, உடல் நடுங்கக் கூடாது.30 முதல் 40 வினாடிகள் மூச்சை அடக்கிக் கொண்டே நடுக்கத்தை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தது" என்றார்

Apr 16, 2026

'வாழ 2' ரூ.100 கோடி வசூலை  கடந்துள்ளது. உருவாகிறது 'வாழ 3'.

ஹஷிர், ஆலன்  பின் சிராஜ்,  அஜின் ஜாய், வினாயக் மற்றும் பலர் நடிப்பில்,  சவின் இயக்கத்தில் , 2024ல் வெளிவந்த 'வாழ' படத்தின் இரண்டாம் பாகமாக ,கடந்த வாரம் வெளியான மலையாளத் திரைப் படம் 'வாழ 2' வந்துள்ளது. இப்படம் ரூ .100 கோடி வசூலை கடந்துள்ளது. மலையாளத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ள 15 வது  மலையாளப் படம். பள்ளி மாணவர்கள் பிரச்னைகள், அது அவர்களின் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை மையப்படுத்தி உருவான இந்த இரு பாகங்களும் வசூலை குவித்தன.   3ம் பாகம் குறித்த அறிவிப் பையும் விபின் தாஸ் வெளியிட்டுள்ளார்.இரு பாகங்கள் ஆண்களை மையமாக கொண்டு உருவானது, 3ம் பாகம்  விஸ்வன் ஸ்ரீஜித்  இயக்க ,பெண்களை பற்றிய கதை. 

Apr 09, 2026

“ராமாயணா' வீடியோ வெளியீடு.

'ராமாயணா' படம் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகிறது.  ராமராக   ரன்பீர் கபூர், சீதாவாக சாய்பல்லவி, லட்சுமணராக ரவி துபே, ஹனுமனாக சன்னி தியோல், ராவணனாக யஷ் நடிக்கின்றனர். முதல்பாகம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகிறது .படத்தின் மேக்கிங், கிராபிக்ஸ் சிறப்பாக அமைந்துள்ள,. ஆஸ்கர் விருதை வென்ற ஹாலிவுட் நிறுவனமான 'டி என்இஜி' இந்த படத்திற்கு விஷூவல் எபெக்ட்ஸ் பணியை செய்கின்றது.

Apr 09, 2026

4 படங்கள் ஏப்ரல் 10ல் ரிலீஸ்.

ஐபிஎல் போட்டிகள், தமிழக சட்டசபை தேர்தல்,  பள்ளி மாணவர்கள் தேர்வுகள்   என தமிழகத்தில் இவ்வளவு விஷயங்களுக்கு மத்தியிலும் வாரா வாரம் படங்கள் வந்த வண்ணம் உள்ளன. நடிகர் தம்பி ராமையா  கதையில், அவர் மகன் உமாபதி இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள படம் 'டிஎன் 2026'. சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் தொடர் பான கதையில் உருவாகி உள்ளது. இந்தவாரம் ஏப்., 10 "கெஸ்ட், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மனிதன் தெய்வமாகலாம், டிஎன் 2026" ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.

Apr 09, 2026

'பவுசி' படத்தில். ஜெயப்பிரதா பிரபாஸின் அம்மாவாக நடிக்கிறார்.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ,ஹனு ராகவபுடி இயக்கத்தில் படம் 'பவுசி'. நாயகியாக இமான்வி இஸ்மாயில் நடிக்கிறார். இதில் பிரபாஸின் அம்மாவாக பிரபல நடிகை ஜெயப்பிரதா நடிக்கிறார். அரசியலில் பயணித்து வரும் இவர் அவ்வப்போது படங்களிலும் நடிக்கிறார். ஜெயப்பிரதா கூறுகையில், "இந்த படத்தில் பிரபாஸ் உடன் நடிப்பது மகிழ்ச்சி. படப்பிடிப்பு தளத்தில் அவரது அர்ப்பணிப்பு, வேலை பார்க்கும் ஸ்டைலையும் பார்த்து பிரமித்தேன்" என்கிறார்.

Apr 09, 2026

“ திரில்லர் “ரன்வீர் சிங் நடிக்கும் படம்.

 300 கோடி பட்ஜெட்டில் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடித்த ஆதித்யாதர் இயக்கத்தில் 'துரந்தர்' படத்தின் இரண்டு பாகங் களும் பெரிய வெற்றி பெற்றன. அடுத்ததாக ஹன்சல் மேத்தா இயக்கும் 'பிரலே' என்ற ஷோம்பி திரில்லர் படத்தில் 300 கோடி பட்ஜெட்டில் ரன்வீர் சிங்கே தயாரித்து ,நடிக்கிறார் . இதில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்கிறார். 

Apr 09, 2026

'நுாறு சாமி' ஜாதி பாகுபாட்டை பேசும் இப்படம்.

'நுாறு சாமி' இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள படம். மே மாதம் ரிலீசாகிறது. சுவாசிகா, அஜய் திஷன்,லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இதன் டீசர் வெளியானது. ஜாதி பாகுபாடு, ஜாதி கொடுமை போன்றவற்றை பற்றிய படம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 75 76

AD's



More News