25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வெள்ளித்திரை

Oct 25, 2023

'அன்னபூரணி' நயன்தாராவின்75வது படம் .

ஜீ ஸ்டூடியோஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள்நடிகை நயன்தாராவின்75வது படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்...இந்த படத்தை ஷங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இந்தப். படத்தில் நடிகை நயன்தாரா உடன் நடிகர்கள் ஜெய் மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்கின்றனர்... கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு'அன்னபூரணி' என தலைப்பு வைத்துள்ளதாக வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர்.இதில் நயன்தாரா உணவுப் பிரியையாக நடித்திருக்கிறார் என தெரிகிறது. மேலும் படத்தின் டேக் லைனா ‛‛அன்னப்பூரணி - சாப்பாட்டு பிரியை' என குறிப்பிட்டுள்ளனர்.

Oct 18, 2023

சந்திரமுகி 2

சந்திரமுகி 2 - இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரென்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திகில் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பாளரான சுபாஷ்கரன் தனது லைக்கா புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.திகில் - திரில்லர் மற்றும் நகைச்சுவை திரைக்கதையில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரென்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், சுபிக்ஸா, சுரேஷ் சந்திரா மேனன், வடிவேலு என பல தமிழ் பிரபலங்கள் நடித்துள்ளனர்.ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் தொடர்ச்சி கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் அதே அரண்மனையில் சந்திரமுகி மீண்டும் வர இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.முதல் பாகத்தின் முடிவை தொடர்ந்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்) குடும்பத்தில் தொடர்ந்து அசம்பாவித சம்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், குல தெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த குடும்பத்துடன் வேட்டைய புரத்துக்கு வரும் ராதிகா சரத்குமார் தனது பெரிய குடும்பத்தினர் தங்க சந்திரமுகி பங்களாவுக்கு வருகின்றனர்.அந்த பங்களாவில் உள்ள அமானுஷ்ய கதைகளை கேட்கும் அந்த வீட்டின் இளம் பெண்களில் ஒருவர் சந்திரமுகி அறைக்கு மீண்டும் செல்ல, ரியல் சந்திரமுகியே இந்த முறை இறங்கி வருவதும் அதனை அடக்க வேட்டையன் (ராகவா லாரென்ஸ்) வருகிறார். பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை.இப்படம் 2023 விநாயகர் சதுர்த்தி-க்கு ரிலீஸாகும் என எதிர்பார்த்த நிலையில் இப்படம் செப் 28ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.வடிவேலு நடித்துள்ள முருகேசன் கதாபத்திரம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்திலும் உருவாகியுள்ளது. நகைச்சுவை - திகில் - திரில்லர் என இப்படம் குடும்பங்கள் ரசிக்கும் திரைக்கதையில் உருவாகியுள்ளது.

Oct 18, 2023

69வது தேசிய திரைப்பட விருதுகள் 2023

கடந்த2021ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்டில் அறிவிக்கப்பட்டன., புதுடில்லியில்,69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில், திரையுலக பிரபலங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கினார்.பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு, சினிமா துறையின் உச்சபட்ச விருதான, தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறந்த நடிகருக்கான விருது, புஷ்பா படத்துக்காக அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட் டது. சிறந்த நடிகையருக்கான விருது, அலியா பட், கிருத்தி சனோன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்துக்கான விருது, ராக்கெட்ரி படத்தை இயக்கியதற்காக, நடிகர் மாதவனுக்கு வழங்கப்பட்டது. தேவிஸ்ரீ பிரசாத், ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி ஆகியோருக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது  வழங்கப்பட்டது.சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை இரவின் நிழல் படத்துக்காக பாடகி ஸ்ரேயா கோஷல் பெற்றார். கருவறை குறும்படத்துக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா விருது பெற்றார். கடைசி விவசாயி திரைப்படம் இரண்டு பிரிவில் தேசிய விருது வென்றது. படத்தின் இயக்குனர் மணிகண்டன் தேசிய விருதைப் பெற்றார்.இப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டிக்கும் சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. நல்லாண்டி மறைந்ததால், அவர் குடும்பத்தினர் சார்பில் விருதை இயக்குனர் மணிகண்டன் பெற்றார். ஆர்ஆர்ஆர் பட இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோர் தேசிய விருதுகளை  பெற்றனர்.  

Oct 11, 2023

அஜித்தின் விடாமுயற்சி  திரைப்படம்

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒருவழியாக துவங்கிரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. துணிவு படத்திற்கு பிறகு கடந்த பத்து மாதங்களாக அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருப்பது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மறுபக்கம் விஜய், ரஜினி, கமல் ஆகியோரின் படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகிவந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்புஅஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகாமல் இருந்தது.இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பிற்காக ஆவலாக,காத்துக்கொண்டிருந்தனர்..விடாமுயற்சி திரைப்படம் கண்டிப்பாக நடக்கும் என்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல் வந்த பிறகு தான் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் அஜித், த்ரிஷா, ரெஜினா ஆகியோர் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.விடாமுயற்சி படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. 

Oct 11, 2023

2024 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ள ரஜினியின் படம்.

பண்டிகை நாட்களில் தான் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். அந்த2024ஆம் ஆண்டு தீபாவளியை குறிவைத்து ரஜினியின் படம் ஒன்று வெளியாக இருக்கிறது.சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் கிட்டத்தட்ட600 கோடி வசூலை எட்டியது. இந்தப் படம் எப்படியும் ஆயிரம் கோடி வசூலை தொடும் என எதிர்பார்த்த நிலையில் அதற்குள்ளாகவே ஓடிடியில் வெளியாகிவிட்டது. இந்த சூழலில் ஜெயிலரில் விட்ட அந்த ஆயிரம் கோடி வசூலை கண்டிப்பாக அடுத்த படத்தில் அடித்து விட வேண்டும் என்ற ரஜினி திட்டம் போட்டு இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின்171 வது படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.எப்போதுமே லோகேஷ் தனது படத்தின் அறிவிப்புடன் ரிலீஸ் தேதியையும் அறிவிப்பார். அந்த வகையில் இந்த படத்தின் பூஜை போடும்போது 2024 தீபாவளிக்கு தலைவர்171 ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பும் வெளியாக இருக்கிறது. மேலும் பிப்ரவரியில் இருந்து தொடர்ந்து8 மாதங்களுக்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.இந்த படத்திற்கு முன்னதாக ரஜினி நடித்துள்ள லால் சலாம் படம் வெளியாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் லைக்கா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. ஆகையால் அடுத்த வருடம் ரஜினியின் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு படங்களாவது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Oct 04, 2023

மலையாள திரையுலகிலும், தமிழிலும் விருதுகளை பெற்ற மம்மூட்டி

முகம்மது குட்டி பனம்பரிம்பில் இஸ்மாயில் என்ற இயற்பெயரை கொண்டவர் மம்மூட்டி. கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி பிறந்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மம்மூட்டி அடிப்படையில் ஒரு வழக்கறிஞர் .அவருக்கு கலை மீது தீராத ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக சினிமாவில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என ஆர்வத்தோடு, 1971ஆம் ஆண்டு வெளியான அனுபவங்கள் பாளிசிக்கல் என்ற படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சில படங்களில் நடித்துவந்த அவருக்கு 1976ஆம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் அறிமுகம் கிடைக்க அவரது வாசுதேவனின் இயக்கத்தில் தேவலோகம் படத்தில் நடித்தார். 1979ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மம்மூட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டாக முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார்.மம்மூட்டியை பொறுத்தவரை தனது நடிப்பில் எந்த விதமான அலட்டலையும் காட்டிக்கொள்ளாதவர். தனது முக பாவனையிலேயே அனைத்தையும் சொல்லி அனைவரையும் கவர்ந்துவிடுவார். அதனால்தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை அவர் பெற்றிருக்கிறார்.. மலையாள திரையுலகில் மம்மூட்டிதான் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த ஹீரோ..: மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் தமிழிலும் நடித்திருக்கிறார். 1990ஆம் ஆண்டு வெளியான மௌனம் சம்மதம் மற்றும் 1991ஆம் ஆண்டு வெளியான அழகன் படத்தில் நடித்த மம்மூட்டிக்கு தமிழில் மெகா ஹிட் படமாக அமைந்தது ரஜினியுடன் இணைந்து நடித்த தளபதி. அந்தப் படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த மம்மூட்டி நட்புக்கு இலக்கணமாக இருக்கும் ஒருவர் எப்படி இருப்பாரோ அப்படி; பக்குவமாக நடித்திருந்தார். அதேபோல் தமிழில் அவர் நடித்த மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்கள் ஹிட்டடித்திருக்கின்றன. மம்மூட்டி ஏராளமான கேரள மாநில அரசின் விருதுகளை பெற்றிருக்கிறார். அதேபோல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஐந்து முறையும் பெற்றிருக்கிறார்.அந்த ஐந்து விருதுகளில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக ஒரு முறை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மம்மூட்டியின் நடிப்பில் கடைசியாக கிரிஸ்டோபர் வெளியானது.: இந்நிலையில் இன்று அவர் தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கைராலி டிவியின் ஓனர் மம்மூட்டி .மம்மூட்டிக்கு மொத்தம் 360 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. 

Oct 04, 2023

சுதந்திரத்திற்கு முன் பிறந்த சினிமா நட்சத்திரங்கள்..

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே பிறந்து, அப்போது இருந்த சூழ்நிலையிலும் வளர்ந்து சினிமா துறையின் வளர்ச்சிகளை படிப்படியாக பார்த்து, அனைத்தையும் கரைத்துக் குடித்து, பல திறமைகளை உள்ளே அடக்கி கொண்டு, தற்போது உள்ள சூழ்நிலைகளும் புரிந்து நடித்துக் கொண்டிருக்கும் மாபெரும் பிரபலங்கள்..கவுண்டமணி1939 ஆம் ஆண்டு மே29ம் தேதி பிறந்தார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். சில சமயங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் தமிழில்60களில் ஆரம்பித்து தனது தனித்துவமான நடிப்பினால்2010 ஆம் ஆண்டு வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவைகள் அனைத்தும் ரசிகர்களால் தற்போதும் ரசிக்கும் வகையில் இருக்கும். பாரதிராஜா. தமிழ் சினிமாவில் மிகவும் பரிச்சயமான இயக்குனர்.பாரதிராஜா.1941ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார். இவரது முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்“16 வயதினிலே”. இத்திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது. தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் இயக்குனராக இருந்தார். நடிகராகவும் சினிமாவில் வலம் வந்தவர். கே ராஜன்தமிழ் திரையுலகின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர்.. இவர்“பிரம்மச்சாரிகள்” எனும் திரைப்பட த்தை முதலில் இயக்கியுள்ளார். இவர்1941 ஆம் ஆண்டு பிறந்தார்.80களில் ஆரம்பித்த திரையுலக பயணத்தை, தற்போது வரை தொடர்ந்து துணிவு திரைப்படம் வரை நடித்துள்ளார். விஜயகுமார்1943இல் பிறந்து“ஸ்ரீ வள்ளி” என்ற திரைப்படத்தில்1961இல் குழந்தை முருகராக நடித்து திரை உலகிற்கு அறிமுகமானவர்.. இவர் பொண்ணுக்கு தங்க மனசு, இன்று போல் என்றும் வாழ்க, தீபம் நீயா, அவள் ஒரு தொடர்கதை போன்ற400 திரைப்படங்களுக்கு மேல் இவர் நடித்து விட்டார். இவர் சப்போர்ட்டிங் நடிகராகவே அதிகபட்சம் நடிப்பார். தங்கம், வம்சம் போன்ற  சீரியல்களில்  நடித்துள்ளார். டெல்லி கணேஷ்தமிழ் சினிமாவில்1970களில் ஆரம்பித்து தற்போது வரை நடித்துக் கொண்டிருப்பவர் ..1944ல் பிறந்தவர், கிட்டத்தட்ட400 திரைப்படங்களுக்கு மேலே நடித்து இருக்கிறார். இந்திய விமானப்படையிலும் இவர் வேலை செய்துள்ளார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன் போன்ற எக்கச்சக்க திரைப்படங்களில் சப்போர்ட்டிங் மற்றும் காமெடி நடிகராகவும் நடித்து உள்ளார். குறிப்பாக அபூர்வ சகோதரர் திரைப்படத்தில் வில்லத்தனமாகவும் நடித்துள்ளர். தற்போது கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தியாகராஜன்.1981ல்“அலைகள் ஓய்வதில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்.1946ல் பிறந்தவர், இவர் நடிகர் பிரசாந்தின் தந்தை ஆவார்.80ல் ஆரம்பித்த இவரின் பயணம்2020 வரை தொடர்ந்தது. இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எண்ணில் அடங்காதவை. மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

Sep 27, 2023

பேராசைப்படாமல் நிதானமாக செயல்பட்டு ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள ஜெயம் ரவி

 சினிமாவை பொறுத்தவரையில் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல தான். ஒரு படம் வெற்றி பெறுமா, தோல்வி பெறுமா என்பது ரசிகர்களின் கையில் மட்டுமே இருக்கிறது.அரசியல்வாதிகளுக்காவது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் வெற்றி, தோல்வி பயம் வரும். ஆனால் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு தங்கள் படம் வெளியாகும் ஒவ்வொரு முதல் நாளும் அந்த பயம் இருக்கும். இதில் சில நடிகர்கள் அதிக பண ஆசையில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்கள்.தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் நடிப்பில் பட்டையை கிளப்பினாலும் தயாரிப்பில் இறங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கும் விதமாக படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் தனுஷ் சில வருடங்களாக படம் தயாரிப்பதையே விட்டுவிட்டார்.சிவகார்த்திகேயன். படம் தயாரித்து கடனில் அவதிப்பட்டு அதை அடைக்க பல பிரச்சனைகளை சந்தித்தார்..“போதும் என்ற மனமே பொன்னானது” என்பது போல வாழ்ந்து சினிமாவை தவிர அவர் வேறு எந்த தொழிலிலும் கவனம் செலுத்த விரும்பவில்லை. தேவையில்லாமல் எதிலாவது தலையை கொடுத்து மாட்டிக்கொண்டால் அதன் பிறகு நிம்மதி தொலைந்து விடும் என்கிறார். தனக்கு எந்த கதாபாத்திரம் வருமோ அதை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஜெயம் ரவி கைவசம் இப்போது இறைவன், சைரன் மற்றும் பிரதர் போன்ற படங்கள் இருக்கிறது. நிதானமாக செயல்பட்டு இப்போது ஒரு டஜன் படங்களை கைவசம் ஜெயம் ரவி வைத்துள்ளார்.

Sep 27, 2023

மாதவனின் ராக்கெட்ரி தேசிய விருது

69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே சிறந்த படமாக மாதவனின் ராக்கெட்ரி: நம்பி விளைவு (இந்தி) படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த விருது விழா முடிந்தவுடனே பத்திரிகையாளர் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கிய நிலையில், ராக்கெட்ரி படத்துக்கு என்ன காரணத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டோம். ஆனால், நீங்கள் கேட்டதற்காக பதில் அளிக்கிறேன் எனக்கூறிய கேத்தன் மேத்தா 4 - C தான் காரணம் என விளக்கி உள்ளார்.இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன் ராக்கெட்டுக்கான இன்ஜினை கண்டுபிடித்த நிலையில், அவருக்கு பாராட்டுக்கள் கிடைப்பதற்கு பதிலாக தேசதுரோகி என்கிற பட்டம் கிடைத்து பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். மேலும், தன்னை நிரபராதி என நிரூபிக்க நீதி போராட்டத்தையும் நடத்தி வென்றார்.அவரது வாழ்க்கை வரலாற்று கதையை படமாக இயக்கி அதில் நம்பி நாராயணனாகவே நடிகர் மாதவன் வாழ்ந்திருந்தார். இந்தியில் ஷாருக்கான் கேமியோ ரோலிலும், தமிழில் சூர்யா கேமியோ ரோலிலும் நடித்திருந்தனர். நடிகை சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.சிறந்த படம் ராக்கெட்ரி: 69வது தேசிய விருதுகள் ஆகஸ்ட் 28ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது ராக்கெட்ரி படத்துக்கு அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை இயக்கி, நடித்த மாதவனுக்கு தேசிய விருது வழங்கப்படும் என அறிவித்தனர்.

Sep 20, 2023

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவிக்கு, வரிசையாக திரைப்படங்களில் வாய்ப்பு

.தனி ஒருவன்- ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற திரைப்படங்களை இயக்கிய மோகன் ராஜா கூட்டணியில் மீண்டும் ஜெயம் ரவி தற்போது இணைந்துள்ளார்.2015 இல் வெளியான தனி ஒருவன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு, பிறகு அதன் தொடர்ச்சியாக தனி ஒருவன் 2 திரைப்படம் தற்போது எடுக்கப் போவதாக அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது.ஜன கன மன: வானம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அகமது. இவர் என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜெயம் ரவியுடன் இணைந்து ஜனகனமன திரைப்படத்தையும் தொடங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு 2019 ஆம் ஆண்டு தொடங்கியது, அதன் பிறகு பாதியிலேயே லாக்டவுன் காரணமாக நின்றது. இந்நிலையில் படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். இதில் ஜெயம் ரவியுடன் டாப்ஸி, அர்ஜுன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்...ஜே ஆர்30: ராஜேஷ் இயக்கத்தில் ரவி தன்னுடைய30 ஆவது படத்தில் நடிக்கிறார்.பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். வி டிவி கணேஷ், நடராஜன் சுப்பிரமணியன், ஐயோ ரமேஷ் போன்றோர் இணைந்து நடித்து உள்ளனர். கூடிய விரைவில் திரைப்படம் வெளிவர போகிறது என்று அப்டேட் அளித்துள்ளனர் பட குழுவினர்.இறைவன்: அகமத் இயக்கத்தில் உருவாகும் இறைவன் திரைப்படத்திலும் ரவி நடிக்கின்றார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதுஜீனி: அடுத்ததாக புவனேஷ் இயக்கத்தில் ஜீனி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு மொத்தமாகவே மூன்று வாரங்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறாம். இதில் கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷேன், ஓமிகா கேபி போன்ற மூன்று பெண்கள் முக்கிய கதாபாத்திரங்களாக நடக்கின்றனர்களாம். திரைப்படம் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் செய்யும் அளவிற்கு உருவாக்கப்படுகிறது, இதில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சைரன்: ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ரிவர்ஸ் திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது சைரன் இதில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி போன்றோர  நடித்துள்ளனர்.. ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

1 2 ... 51 52 53 54 55 56 57 58 59 60

AD's



More News