25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வெள்ளித்திரை

Jan 24, 2024

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் 10 ஆயிரம் சதுர அடியில் வீட்டுமனை வாங்கி உள்ளார்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்  ஜன.,22ல் பிரமாண்டமாய் நடந்தது. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பிரதமர் முதல் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்றனர். அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பின் அந்த ஊரும் வேகமாக வளர்ந்து வருகிறது.உலகமே எதிர்பார்க்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்குபின், வர்த்தக ரீதியாகவும், தொழில் நகரகமாக மாறி வருகிறது. இதனால் முதலீடுகளும் அதிகமாகி வருகின்றன. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் 10 ஆயிரம் சதுர அடியில் ரூ.14.50 கோடி மதிப்புள்ள வீட்டுமனை வாங்கி உள்ளார். 

Jan 24, 2024

10 ஆண்டுகளில் வெளியான த்ரில்லர் படங்கள்

தமிழ்ப்படங்களில் இதுவரை வெளிவராத முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்கள் தான் இவை. கடந்த10 ஆண்டுகளில் வெளியான துப்பறியும் படங்களைப் பார்க்கலாம்.துருவங்கள்16 டி16 என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்கியவர் கார்த்திக் நரேன்.2016ல் வெளியானது. ரகுமான் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்த படம் இது.மெட்ரோ-2016ல் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம். ஸ்ரீஷ், பாபிசிம்ஹா, சென்ட்ராயன் உள்பட பலர் நடித்துள்ளனர். திருடர்களிடமிருந்து பெண்கள் எப்படி தப்பிப்பது என்பதை சொல்லித் தரும் ஒரு விழிப்புணர்வு படம். தோட்டாக்கள்-2017ல் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளியான படம். வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.யுத்தம் செய்-2011ல் மிஷ்கின் இயக்கிய படம் யுத்தம் செய். சேரன், ஒய்.ஜி.மகேந்திரன், லட்சுமி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சேரன் நடித்த ஒரே த்ரில்லர் படம் இது. கொஞ்சம் ரூட்டை மாற்றித் தான் பார்ப்போமே என்று நடித்தார். ஆனால் படம் பிளாப் ஆகிவிட்டது. அதனால் தன் வழக்கமான பாதைக்கே திரும்பவும் சென்றுவிட்டார்.நான்-2012ல் வெளியான படம். ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்து இசை அமைத்துள்ளார். சித்தார்த், வேணுகோபால் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியை வித்தியாசமாகக் காட்டிய படம்.குற்றமே தண்டனை-2016ல் எம்.மணிகண்டன் இயக்கத்தில் வெளியான படம். விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் நாயகி கொல்லப்படுகிறாள். அந்தக் கொலைகாரன் யார் என்பதைக் கண்டறியும் படம்.ஈரம்-2009ல் அறிவழகன் இயக்கத்தில் வெளியான படம். ஆதி, நந்தா, சிந்து மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். தண்ணீர் எப்படி பழிவாங்குகிறது என்பது தான் கதை. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.தெகிடி-2014ல் ரமேஷ் இயக்கிய படம். அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கொலையை மையமாகக் கொண்டு துப்பறியும் படம். படத்தின் தலைப்பே புரியாத புதிராக உள்ளதே என்ற கோணத்தில் என்ன தான் படத்தில் எடுத்திருக்கிறார்கள் என்பதப் பார்ப்பதற்காகவே பலரும் திரையரங்கிற்கு வந்தனர். அந்த வகையில் யாரையும் ஏமாற்றாமல் பலரையும் ரசிக்க வைத்தது இந்தப் படம்.

Jan 17, 2024

100 கோடி வசூலித்துள்ள 'ஹனு மான்'

தெலுங்கில் மட்டுமல்லாது பான் இந்தியா படமாக மற்ற மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியான படம்'ஹனுமான்”பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் மற்றும் பலர் நடி த்துள்ள 'ஹனுமான்” படம்இப்படம் நான்கு நாட்களில் உலக அளவில் 100 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “குறைந்த தியேட்டர்களிலும், குறைவான டிக்கெட் கட்டணங்களில்,” இந்தத் தொகைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இப்படம்200 கோடி வசூலைக் கடக்க வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். படத்தின் இயக்குனர் பிரசாந்த்...வர்மா, “எனது திரைப்படங்களில் முதல் செஞ்சுரி,” என்று குறிப்பிட்டுள்ளார்..

Jan 17, 2024

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளி வந்த திரைப்படங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்' நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் விஜய் சேதுபதி  நடித்த இந்தி படம் மெரி கிறிஸ்துமஸ் : அருண்விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'.:ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜோ'. 'ஹாட்ஸ்டார்' ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. 3 ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு இயக்குனர் சேரன் புதிய வெப் சீரிஸ் ஜர்னி :வெப் சீரிஸ் நேரடியாக 'சோனி லிவ்' ஓடிடி தளத்தில் வெளியான செவப்பி.

Jan 17, 2024

Top 5 Best multiplex in TAMILNADU - 2023

1. Broadway Cinemas, Coimbatore + Epiq, laser imax, seats, Food - outside city centre www ww (travel time) rest room maintenance.2. DNC, Dharmapuri +2 gaint screens, top notch picture clarity, Dolby sound, ample parking space, food - interval time local advertisements it's kill ur time.3. Varadharaja Cinemas. Chennai + Food, especially pastry all screens, RGB laser and Atmos, couple seats screen, - car parking conjunction, staff behaviour.4. PVR aero mall, Chennai + Latest RGB Laser and seats, leg room timing, parking.5. PSS Tirunelveli + Seats RGB Laser - Food

Jan 14, 2024

2023-ல் 2 வெற்றிப்படங்கள் கொடுத்த நடிகை

.மலையாளத்தில்2017ம் ஆண்டு வெளியாக கேர் ஆஃப் சாய்ரா பானு என்ற 2023ம் ஆண்டு சித்தா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற இரண்டு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன்.அதே ஆண்டு பகத் பாசிலுடன் இவர் நடித்த தொண்டி முதலும் த்ர்காக்ஷியம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.அடுத்து இடா, ஒரு கர்புரசிதா பையன், சோலா, தி கிரேட் இன்டியன் கிச்சன், நயட்டு, மாலிக் எனபல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான சித்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிமிஷா சஜயன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.சித்தார்த் நாயகனாக நடித்து அவரே தயாரித்த இந்த படத்தை, அருண்குமார் இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா2 படத்தில் மலையரசி என்ற கேரக்டரில் சிறப்பான நடித்திருந்தார் நிமிஷா சஜயன்.காடுகளின் வாழும் பழக்குடியின மக்கள், மற்றும் காட்டு யானைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த படத்தில் லாரன்சின் மனைவியாக நிமிஷா சஜயன் நடித்திருந்தார்.தமிழில் நடித்த இரு படங்களுக்குமே நிமிஷா சஜயனுக்கு வெற்றியை கொடுத்துள்ள நிலையில், அடுத்து அருண் விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள மிஷன் சாப்டர்1 படத்தில் நடித்துள்ளார்,சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நிமிஷா சஜயன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

Jan 12, 2024

ஐடி ஊழியராக இருந்து நடிகரான துல்கர் சல்மான்

தந்தையை பலரும் பெருமையாக பேசுவதை கேட்கும்போது மகனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும், அதேவேளையில் தனது மகனை பலரும் பாராட்டி பேசும் போது தந்தைக்கு பெருமையாக இருக்கும். இந்த இரண்டு நிகழ்வுகளையும் அனுபவித்தவர்கள் இறைவனின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மலையாள திரையுலகின் உச்ச நடிகர்களில் ஒருவரான மம்முட்டியும், அவரது மகனும் இளம் நடிகருமான துல்கர் சல்மானும் அந்த விஷயத்தில் பாக்கியம் செய்தவர்கள்தான்.துல்கர் சல்மான் பர்டூ பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர். படிப்பை முடித்தவுடன், துபாயில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றினார்.இருப்பினும் தனக்கு உண்மையான ஆர்வம் நடிப்பில் இருப்பதை உணர்ந்து வேலையை துறந்து விட்டு கேரளாவுக்கு விமானம் ஏறினார். 2012ல் செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். நடித்தால் கதாநாயகனாகத் தான் நடிப்பேன் என்பவர்களுக்கு மத்தியில், தனது முதல் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.துல்கர் சல்மானின் நடிப்பில் வெளிவந்த உஸ்தாத் ஹோட்டல், பெங்களூரு டேஸ், சார்லி மற்றும் குரூப் போன்ற படங்கள் விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றிகளை பதிவு செய்தன.தனது தந்தை மம்முட்டியின் புகழ் நிழலை தவிர்த்து, தனது வெற்றி பாதையை செதுக்கியுள்ளார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த நடிப்பு அவரை நட்சத்திர அந்தஸ்து உயரத்துக்கு உயர்த்தியது. 2024ல் லக்கி பாஸ்கர், கன்ஸ் & குலாப்ஸ் மற்றும் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஒரு படம் என துல்கர் சல்மானின் நடிப்பில் வெளிவர உள்ளது. கல்கி 2898-கி.பி. என்ற புதிரான படமும் அவரது கையில் உள்ளது. துல்கர் சல்மான் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த தொழிலதிபரும் கூட. வேஃபேரர் பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களும் தயாரிக்கிறார். மேலும் பல விளம்பரங்களில் நடித்தும் வருமானம் ஈட்டுகிறார். 2023ம் ஆண்டு நிலவரப்படி துல்கர் சல்மானின் சொத்து மதிப்பு சுமார் ரூ.57 கோடியாகும். இவருக்கு துபாயில் சுமார் ரூ.14 கோடி மதிப்பிலான பென்ட்ஹவுஸ் மற்றும் கொச்சியின் மேல்தட்டு பகுதியான கடவந்தாராவில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து ஆகியவையும் அவரது ரியல் சொத்துக்களில் அடங்கும் துல்கர் சல்மானுக்கு சொகுசு கார்கள் மீது அலாதி பிரியம். அவரது கேரேஜில், கார்கள் அணிவகுத்து நிற்கின்றன தனிப்பயன் சொகுசு பைக்குகளும் உள்ளன. 

Jan 12, 2024

100 கோடி சம்பளம் வாங்கும் அட்லீ.

மும்பை: ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்க சில ஆண்டுகள் மும்பையிலேயே முகாமிட்டு இருந்த அட்லீ அங்கே ஷாருக்கான் நிறுவனத்துடன் இணைந்து பயணித்ததில் ஏகப்பட்ட பிசினஸ்களை கற்றுக் கொண்டதாக கூறுகின்றனர். ஷாருக்கான் தயாரிப்பில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி இதுவரை வசூல் ரீதியாக நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இயக்குநர் ஷங்கருக்கே கிடைக்காத வாய்ப்பாக பாலிவுட்டில் முதல் படத்திலேயே தனது கொடியை நாட்டி விட்டார்.ஜவான் படத்தை முடித்த கையோடு பாலிவுட்டில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தெறி படத்தின் இந்தி ரீமேக்கை உருவாக்கி வருகிறார். அந்த படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது, மும்பையில் சொந்தமாக பெரிய அலுவலகம் ஒன்றையே அட்லீ உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்த படம் ஹிட் அடித்த நிலையில், மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த அட்லீ, தற்போது ஜவான் படத்தின் மூலம் இண்டஸ்ட்ரி ஹீட் கொடுத்துள்ளார்.இயக்குநர் ஷங்கரே இவ்வளவு சம்பளம் வாங்குவாரா என தெரியவில்லை. அட்லீ 100 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்ததாக விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து பிரம்மண்டமாக ஒரு படத்தை இயக்க திரைக்கதை வடிவமைத்து வருகிறார். 10,000 சதுர அடியில் அலுவலகம்: ஏற்கனவே மும்பையில் வீடு வாங்கியுள்ள அட்லீ தற்போது அங்கே 40 கோடி செலவில் 10 ஆயிரம் சதுரடியில் அலுவலகம் ஒன்றை உருவாக்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களை தயாரித்து மிகப்பெரிய லாபத்தை அடைவதற்கான அத்தனை வழிகளையும் அட்லீ அறிந்து வைத்துள்ளார் எனக் கூறுகின்றனர். காப்பி இயக்குநர் என தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தாலும் அட்லீயின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு போய் தான் முன்னணி நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்க தவமாய் தவம் கிடந்து வருகின்றனர். ஷாருக்கானுக்கு ஜவான் படத்தின் மூலம் பெரிய சம்பவம் செய்த அட்லீ, என் அண்ணனுக்கு நான் தான் செய்வேன் என அடுத்து ஷாருக்கானையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பான் வேல்ர்ட் படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன: அட்லீயின் இந்த அசுர வேக வளர்ச்சியை பார்த்து பாலிவுட்டில் பல பிரபலங்களே பொறாமைப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். அவர்களை அங்கே சமாளிக்கவே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல முன்னணி நடிகர்களை தனது நண்பர்களாக மாற்றும் முயற்சியில் அட்லீ ஈடுபட்டு வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

Jan 10, 2024

2023 - ரசிகர்கள் கொண்டாடிய தமிழ் பட பாடல்கள்

ஜெயிலர் - ஹுகும்திரைப்படம் – ஜெயிலர் பாடல் – ஹுகும்,இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்தர் வாரிசு - தீ தளபதி,திரைப்படம் - வாரிசுபாடல் - தீ தளபதி,இசையமைப்பாளர் - தமன் எஸ்துணிவு - காசேதான் கடவுளடா- துணிவு பாடல் - காசேதான் கடவுளடா,இசையமைப்பாளர் – ஜிப்ரான்ஜெயிலர் – காவாலா,திரைப்படம் - ஜெயிலர்பாடல் – காவாலா,இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்தர்லியோ - பேட் தாஸ்,திரைப்படம் - லியோபாடல் - பேட் தாஸ்,இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்தர்அயோத்தி திரைப்படம் - அயோத்திபாடல் - காற்றோடு பட்டம் போல இசையமைப்பாளர் - என் ஆர் ரகுநந்தன் குட் நைட் - நான் காலிதிரைப்படம் - குட் நைட்பாடல் - நான் காலி,இசையமைப்பாளர் - சீன் ரோல்டன்விடுதலை – காட்டுமல்லிதிரைப்படம் - விடுதலைபாடல் – காட்டுமல்லி,இசையமைப்பாளர் - இளையராஜாமார்க் ஆன்டனி – அதிருதாதிரைப்படம் - மார்க் ஆன்டனிபாடல் – அதிருதா,இசையமைப்பாளர் - ஜி வி பிரகாஷ் குமார் விடுதலை - உன்னோடு நடந்தா திரைப்படம் - விடுதலைபாடல் - உன்னோடு நடந்தாஇசையமைப்பாளர் - இளையராஜாபொன்னியின் செல்வன் 2 – அகநகதிரைப்படம் - பொன்னியின் செல்வன் 2பாடல் – அகநக,இசையமைப்பாளர் - ஏ ஆர் ரஹ்மான்லியோ - நா ரெடி தான்,திரைப்படம் – லியோ,பாடல் - நா ரெடி தான்,இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்தர்மாமன்னன் – நெஞ்சமே,திரைப்படம் - மாமன்னன்பாடல் – நெஞ்சமே,இசையமைப்பாளர் - ஏ ஆர் ரஹ்மான்மாவீரன் – வண்ணாரப்பேட்டை,திரைப்படம் – மாவீரன்,பாடல் - வண்ணாரப்பேட்டைஇசையமைப்பாளர் - பரத் ஷங்கர்வாத்தி - வா வாத்தி,திரைப்படம் - வாத்திபாடல் - வா வாத்தி,இசையமைப்பாளர் - ஜி வி பிரகாஷ் குமார்பத்து தல - நீ சிங்கம் தான்,திரைப்படம் - பத்து தலபாடல் - நீ சிங்கம் தான்,இசையமைப்பாளர் - ஏ ஆர் ரஹ்மான்வாரிசு - சோல் ஆப் வாரிசு,திரைப்படம் - வாரிசுபாடல் - சோல் ஆப் வாரிசுஇசையமைப்பாளர் - தமன் எஸ்டாடா - தாயாக நான்,திரைப்படம் - டாடாபாடல் - டாடா பாடல்இசையமைப்பாளர் - ஜென் மார்ட்டின்ஜிகர்தண்டா XX - மா மதுர,திரைப்படம் - ஜிகர்தண்டா XXபாடல் - மா மதுர,இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன்துணிவு - சில்லா சில்லா,திரைப்படம் - துணிவுபாடல் - சில்லா சில்லா,இசையமைப்பாளர் - ஜிப்ரான்

Jan 10, 2024

அனிமல் பட நாயகி ராஷ்மிகா மந்தனா சொத்து மதிப்பு ரூ.45 கோடி

கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டை நகரில்1996 ஏப்ரல்5ம் தேதியன்று ராஷ்மிகா மந்தனா பிறந்தார். பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமய்யா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.2014ல் கிளீன் அண்ட் கிளியர் டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் பட்டத்தை வென்றதையடுத்து பிரபலமானார்2016ல் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு தெலுங்கு, தமிழ் என்று பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.கீதா கோவிந்தம், புஷ்பா என இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அவர் நடித்த அனிமல் படம் வெளியாகி அதிக வசூல் செய்து வருகிறது.27 வயதான ராஷ்மிகா மந்தனாவுக்கு பெங்களூரில் ரூ.8 கோடி மதிப்புள்ள பங்களா, மும்பையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு, கோவா, கூர்க் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் சொத்துக்கள் உள்ளன.இவரிடம் நவீன அம்சங்களுடன் கூடிய ஜெர்மன் எஸ்.வி.யூ. காரான ஆடி க்யூ3 உள்ளது. இது தவிர அவரது வீட்டில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், மெர்சிடிஸ் பென்ஸ் சிகிளாஸ், டொயோட்டா இன்னோவா மற்றும் ஹுண்டாய் க்ரெட்டா கார்களும் உள்ளன.சினிமாவை தவிர்த்து, கல்யாண் ஜூவல்லர்ஸ், எப்சன் இந்தியா, ஒனிட்சுகா டைகர் மற்றும்7அப் போன்ற பிராண்டடு விளம்பரங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார்.ஒவ்வொரு படத்திற்கும் சுமார்4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு ரூ.45 கோடி இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

1 2 ... 48 49 50 51 52 53 54 ... 59 60

AD's



More News