சர்வதேச டேபிள் டென்னிஸ்
சர்வதேச டேபிள் டென்னிஸ்
'சிங்கப்பூர் ஸ்மாஷ்' சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் நடக்கிறது. கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில், இத்தொடரின் 'நம்பர்-8', இந்தியாவின் மனுஷ் ஷா, தியா சிட்டாலே ஜோடி, மெக்சிகோ வின் அரான்ட்சா, மார்கஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதன் முதல் இருசெட்டை 11-4, 11-5 என வசப்படுத்திய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 5-11 என கோட்டை விட்டது. பின் சுதாரித்த இந்திய ஜோடி நான்காவது செட்டை 11-7 என கைப்பற்றியது.முடிவில் இந்திய ஜோடி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது...
டென்னிஸ்
சென்னை சாலஞ்சர் டென்னிஸ் காலிறுதியில் இந்திய ஜோடி, சென்னையில் ஆண்களுக்கான சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சித்தாந்த், பரிக்சித் சோமானி ஜோடி, இந்தியாவின் விஷ்ணுவர்தன், சாய் கார்தீக் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை சித் தாந்த்-சோமானி ஜோடி 6-3 என கைப்பற்றியது. அடுத்த செட்டை 3-6 என கோட்டை விட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'சூப்பர்டை பிரேக்கரில்" சித்தாந்த் -சோமானி ஜோடி 10-7 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 33 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சித்தாந்த் - சோமானி ஜோடி 6-3, 3-6, 10-7 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
0
Leave a Reply