25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Feb 18, 2025

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் இன்று தொடக்கம்.

இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த கிரிக்கெட்திருவிழாவில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.சாம்பியன்ஸ் கோப்பையில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். 

Feb 18, 2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 23-வது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 1476 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் கைப்பற்றிய சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), ஒலிம்பிக்கில் 3 பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ சுத்தின் மாரியப்பன் (உயரம் தாண்டுதல்) ஒலிம்பிக்கில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் காதுன்யா (வட்டு எறிதல்) உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இதில் அடங்குவார்கள்.நேற்று மாலை நடந்ததொடக்கவிழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்து ,வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுமேம்பாட்டுதுறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாதரெட்டி, இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா, பொதுச் செயலாளர் சத்ய நாராயணா. முன்னாள் தலைவர் தீபா மாலிக், பாரா தடகள வீரர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் நாடு பாரா ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் கிருபாகர ராஜா வரவேற்றார். முடிவில் சென்னை மாவட்ட பாரா ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் எம்.எஸ். நாகராஜ் நன்றி கூறினார். முன்னதாக நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் (எப்.41 பிரிவு) அரியானா வீரா நவ்தீப் 39.93 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். பெண்களுக்கான குண்டு எறிதலில் (எப்.56 பிரிவு) அரியானா வீராங்கனை பூனம் ஷர்மா 6.86 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 

Feb 17, 2025

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் (பிப். 19- மார்ச் 9) நடக்க உள்ளது

பாகிஸ்தான், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19- மார்ச் 9) நடக்க உள்ளது. ஒருநாள் போட்டி ''ரேங்கிங்' பட்டியலில் 'டாப்-8' அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் ரோகித் சர்மா தலைமையிலான * இந்திய அணி கோப்பை வெல்ல காத்திருக்கிறது. 29 ஆண்டுக்கு பின் பாகிஸ்தானில் 1996ல் ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடந்தது. அப்போது அலைபேசி, சோசியல் மீடியா கிடையாது.29 ஆண்டுக்குப் பின், பாகிஸ்தான் மண்ணில் முதன் முறையாக ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்க உள்ளது.  பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. லீக் சுற்றில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகளும் (எதிர், வங்கதேசம், பாக்., நியூசி.,) துபாயில் நடக்கவுள்ளன. அரையிறுதி, பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றால், போட்டிகள் துபாயில் நடக்கும். 

Feb 16, 2025

ஐபில் கிரிக்கெட் 2025 18வது சீசன்

ஐ.பி.எல்., தொடரின் 18வது சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. 65 நாட்கள் நடக்கும் 18வது சீசனில் பைனல் உட்பட 74 போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் 12 நாட்கள், தலா இரண்டு போட்டிகள் நடத்தப்படும். மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் வரும் மார்ச் 22 ல் கோல்கட்டாவில் துவங்குகிறது. ஈடன்கார்டனில் நடக்கும் முதல் லீக் போட்டியில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, தனது முதல் போட்டியில் மும்பை அணியை மார்ச் 24ல் சென்னையில் சந்திக்கிறது. 

Feb 16, 2025

விளையாட்டு போட்டிகள் 17 th FEBRUARY

ஹாக்கி சர்வதேசஹாக்கிகூட்டமைப்புசார்பில்பெண்களுக்கானபுரோலீக்6வதுசீசன்(2024,25)நடக்கிறது.மொத்தம்9 அணிகள்பங்கேற்கின்றன.ஒடிசாமாநிலம்புவனேஸ்வரில்நேற்று நடந்த லீக்போட்டியில்இந்தியா, இங்கிலாந்துஅணிகள்மோதின. இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியது. கால்பந்து இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. சென்னை அணிக்குகிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் வில்மர் ஜோர்டான்(19வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.  முடிவில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டென்னிஸ் புனேயில், மகாராஷ்டிரா ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுவீடனின் எலியாஸ் மோதினர். ஒரு மணி நேரம்,52 நிமிடம் நீடித்த போட்டியில் ராம்குமார் 5-7, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்  தடகளம்  மாற்றுத் திறனாளிக்கான, தேசிய பாரா தடகளப் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை துவங்குகிறது. பாரா தடகள வீரர், வீராங்கனைகள், பல்வேறு மாநிலங்களில் இருந்து, இன்று காலை சென்னை வருகின்றனர். இதுவரை, 1,430க்கும் அதிகமான, வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக தமிழகத்தில் இருந்து 180க்கு மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். 

Feb 16, 2025

அமெரிக்காவின் பாஸ்டனில் நடந்த 3000 மீ ஓட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்த குல்வீர்சிங்

அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ளரங்கு தடகள போட்டி நடந்தன. இதன் 3000 மீ.,'ஷார்ட் டிராக்' போட்டியில் இந்தியா சார்பில் குல்வீர் சிங் பங்கேற்றார். ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இவர், இம்முறை பந்தய துாரத்தை 7 நிமிடம், 38.26 வினாடி நேரத்தில் கடந்து இரண்டாவது இடம் பிடித்து புதிய தேசிய சாதனை படைத்தார்.

Feb 14, 2025

விளையாட்டு போட்டிகள் 15 th FEBRUARY

கோல்ப்கோல்கட்டாவில் நடந்த 'டாடா ஸ்டீல் புரோ பஷனல் கோல்ப் டூர் ஆப் இந்தியா (பி.ஜி.டி.ஐ.,) பிளேயர்ஸ் சாம்பியன்ஷிப்' தொடரில் சண்டிகரின் யுவராஜ் சாந்து சாம்பியன் பட்டம் வென்றார். டென்னிஸ் டில்லியில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நிக்கி கலியாண்டா பூனாச்சா, ஜிம்பாப்வே யின் கர்ட்னி ஜான் லாக் ஜோடி, பிரிட்டனின் ஜே கிளார்க், டென்மார்க்கின் ஜோஹன்னஸ் லிட்சென் இங்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் நிக்கி பூனாச்சா, ஜான்லாக் ஜோடி 6–2, 7-6 என வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.  பேட்மின்டன்  சீனாவில், ஆசிய பாட்மின்டன் (கலப்பு அணி) சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. 

Feb 14, 2025

உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டு 38வது சீசன் பதக்கபட்டியலில் தமிழகம் ஆறாவது இடம் பிடித்தது.

உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டின் 38வது சீசன் ,18 நாள் நடந்த இதில், 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 32 விளையாட்டுகளில் போட்டிகள் நடந்தன.தமிழகத்தின் ரோகித் தனுஷ் (நீச்சல்),நர்மதா (துப்பாக்கிசுடுதல்), ஆரோக்கியா அலிஷ், அஜித் நாராயணா (பளு துாக்குதல்), வேலவன் செந்தில் குமார் (ஸ்கு வாஷ்), சதிஷ் குமார் (பாட்மின்டன் ஒற்றையர், கலப்பு இரட்டையர்), அபினவ் சண்முகம், மணிஷ் சுரேஷ் குமார் ஜோடி (டென்னிஸ்), செலினா (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்டோர் தங்கம் கைப்பற்றினர். ஸ்குவாஷ் (ஆண்கள் இரட்டையர்), கூடைப்பந்து, பீச் வாலி பாலில் தமிழகம் தங்கம் வசப்படுத்தியது. தடகளத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அசத்திய தமிழகத்தின் வித்யா (400 மீ., தடை ஓட்டம்) 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார். தவிர பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), பவித்ரா (போல் வால்ட்), ஆதர்ஷ் ராம் (உயரம் தாண்டுதல் ) அசத்தினர். தேசிய விளையாட்டில் தமிழகம் 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடம் பிடித்தது.முடிவில் தேசிய விளையாட்டு கொடி இறக்கப்பட்டது. 2027ல் தேசிய விளையாட்டு நடக்க உள்ள மேகாலயா முதல்வர் கான்ராடு சங்மாவிடம் கொடி வழங்கப்பட்டது." இந்திய விளையாட்டுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த தயாராக உள்ளோம். அப்போது நமது நட்சத்திரங்கள் பதக்கங்கள் வென்று, இந்திய தேசியக் கொடியை உயரே பறக்கச் செய்வர்," என்று அமித் ஷா கூறினார். 

Feb 13, 2025

ஆண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் வேலவன் செந்தில்குமார் வெற்றி .

அமெரிக்காவின் பிட்ஸ் பர்க் நகரில் ஆண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கின்றது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், அமெரிக்காவின் ஷாஜகான்கானை எதிர் கொண்டார். முதல் இரு செட்டை 11-7, 11-4 என கைப்பற்றிய வேலவன், அடுத்த செட்டை 9–11 என நழுவ விட்டார். நான்காவது செட்டில் 11-7 என சிறப்பாக செயல்பட்ட இவர், முடிவில் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

Feb 13, 2025

உத்தரகாண்ட் தேசிய விளையாட்டு போட்டிகள்

 டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் செலினா, மகாராஷ்டிராவின் அனுபவ ஸ்வஸ்திகா மோதினர்.முதல் இரு செட்டை கைப்பற்றிய செலினா, அடுத்த மூன்று செட்டுகளை இழந்து, கடைசி இரு செட்டை வசப்படுத்தினார்.நீண்ட போராட்டத்தின் முடிவில், 4-3 செலினா (11-7, என்ற 11-2, 6-11, 7-11, 8-11, 11-7, 11-9) கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையர் பைனலில் தமிழக வீரர் சத்யன், மகாராஷ்டி ராவின் ஜாஷ் மோடியை சந்தித்தார். சத்யன் 3-4 ) என்ற  (7-11, 6-11, 11-7, 11-8, 14-12, 6-11, 11-6) கணக்கில்  வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜாஷ் மோடி தங்கம் வென்றார். கலப்பு இரட்டையர் பைனலில் மேற்கு வங்கத்தின் ஆயிஹா, அனிர் பன் ஜோடி 3-2 என தங்கப் பதக்கம் வென்றார். ஹாக்கி பெண்களுக்கான ஹாக்கி பைனலில் ஹரியானா, மத்திய பிரதேச அணிகள் மோதின. இதில் ஹரியானா அணி 4,1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றது. மல்யுத்தம்   பெண்களுக்கான 'பிரீஸ் டைல்' மல்யுத்தத்தில் மகா ராஷ்டிராவின் சுவாதி(53 கிலோ), ஹரியானாவின் தப்ஸ்யா(57 கிலோ) தங்கம் வென்றனர். ஆண்கள் பிரிவில் சர்வீசஸ் வீரர் ஜெய்தீப் (74 கிலோ), டில்லியின் முகுல் (86 கிலோ) தங்கம் வென்றனர். 

1 2 ... 123 124 125 126 127 128 129 ... 136 137

AD's



More News