டி-20' உலக கோப்பை 10வது சீசன் அட்டவணை ..
இந்தியா, இலங்கைகையில், 'டி-20' உலக கோப்பை அடுத்த ஆண்டு, மொத்தம் 55 போட்டிகள் நடக்கும். இந்தியாவில் , 'டி-20' உலக கோப்பை 10வது சீசன், அடுத்த ஆண்டு பிப்ரவரி 7- மார்ச் -8, இல் ஆமதாபாத், டில்லி, சென்னை, கோல்கட்டா, மும்பையில் போட்டிகள் நடக்க உள்ளன. ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் பைனல் நடக்கவுள்ளது.
நான்கு பிரிவுகளாக ,20 அணிகள், பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும். பின் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா நேற்று இதற்கான அட்டவணையை வெளியிட்டார். முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 38. வரும் 'டி-20' உலக கோப்பை தொடருக்கான தூதராக, இவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
0
Leave a Reply