இளம் இந்திய அணி உலக டேபிள் டென்னிஸ் பைனலுக்கு தகுதி .
உலக யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ருமேனியாவின் கிளஜ் நபோகா நகரில் ,19 வயது ஆண்கள் அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்திய அணி, வலிமையான சீன தைபேவை எதிர்கொண்டது.
முதல் போட்டியில் இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, 3-2 என (11-9, 11-8, 9-11, 8-11, 12-10) ஹிசெய்னை வீழ்த்தினார்.
இந்தியாவின் அன்குர் பட்டாச்சார்ஜீ, மாற்று ஒற்றையர் போட்டியில் 0-3 என (10-12, 10-12, 10-12) வீழ்ந்தார். 5வது போட்டியில் இந்தியாவின் அபிநந்த், 3-0 என
11-4, 11-8, 11-8) என ஹிசெய்னை வென்றார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று, முதன் முறையாக பைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
அங்கோலிகா, தின் யான்ஷி, அனன்யா இடம் பெற்றஇந்திய அணி, பெண்களுக்கான 15 வயது பிரிவு அரையிறுதியில் தென் கொரியாவை சந்தித் தது. இதில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கல பதக்கம் பெற்றது.
0
Leave a Reply