25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


ஆரோக்கியம்

Jan 06, 2024

எள்  விதைகள்

 இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பார்கள்.. இளைப்பு என்றால் களைப்பு என்று பொருள்.. களைப்பு உட்பட பல்வேறு தொந்தரவுகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால், பலன் பெறுவார்கள்.. எள் செடியின் இலைகள், பூக்கள், காய்கள், விதைகள் என அனைத்துமே மருத்துவ சக்தி கொண்டது.. கருப்பு, சிவப்பு, வெள்ளை என நிறங்களில் எள் இருந்தாலும், கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகம் என்றால், வெள்ளை, சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து நிறைய உள்ளது.. அதனால், எந்த எள்ளாக இருந்தாலும், தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால் நிறைய பலன்களை பெறலாம்.மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் B, E, இரும்புச்சத்து, ஜிங்க், புரதச்சத்து இப்படி பல்வேறு சத்துக்கள் எள்ளில் உண்டு. குறிப்பாக, ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து, ஒரு கைப்பிடி எள்ளில் இருக்கிறதாம்.. இந்த கால்சியம் சத்துக்கள்தான், பற்களுக்கும், எலும்புகளை உறுதிப்படுத்துவதற்கும் பேருதவி புரிகிறது.. மூட்டுகளிலுள்ள ஜவ்வுகளுக்கு பலத்தை தருவது இந்த கால்சியம் சத்துக்கள்தான். எண்ணெய்கள்: எள்ளில் நிறைந்துள்ள எண்ணெய்கள், நம்முடைய சருமத்துக்கு கவசம் போல பாதுகாப்பை தரக்கூடியவை.. புண்கள், சொறி, சிரங்கு, போன்ற பாதிப்புகளை நீக்கக்கூடிய தன்மை இந்த எள் எண்ணெய்களுக்கு உண்டு. மேலும், சரும வறட்சியை நீக்கி, பொலிவை தரக்கூடியது.. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை எள் விதைகள் சீர்செய்கின்றன.. மாதவிடாய் முடிந்து, 15 நாட்களுக்கு பின் எள் சாப்பிட்டால் அடுத்த முறை மாதவிடாய் நேரத்தில், எந்தவிதமான தொந்தரவும் இருக்காது. அல்லது பனை வெல்லம்,கருஞ்சீரகத்துடன் எள் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.எள் விதைகளை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள கழிவுகள் வெளியேறிவிடும். இதனால் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. எள்ளு விதையை லேசாக வறுத்து தூளாக்கி, நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், மூலநோய்க்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும். அல்லது எள் இலைகளுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டாலும், ரத்த மூலநோய் குணமாகும்.அந்தவகையில், இந்த எள் செடியின் இலைகளும் மருத்துவ சக்தி நிறைந்தது.. இந்த இலைகளை தண்ணீரில் சேர்த்து பிழிந்து சாறு எடுத்து, முகம் கழுவினால், கண் நரம்புகள் உறுதியாகும்.. முகம் பொலிவுபெறும். அல்லது இந்த இலைகளை கசாயம் போல வைத்து குடிக்கலாம்.. மாதவிடாய்: உடல் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெற இந்த எள் துணைபுரிகிறது.. படபடப்பு தன்மையை குறைத்து, மனதை சாந்தப்படுத்தும் தன்மை எள் விதைகளுக்கு உண்டு. சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் இருந்தால், எள் விதைகள் இவைகளை போக்குகின்றன.எள் சாப்பிட்டு வரும்போது, சிறுநீர் தாராளமாக பிரியும்.. அதேபோல, சிறுநீரகங்களின் கற்கள் ஏற்படுவதையும் தடுக்கும் தன்மை எள் விதைகளுக்கு உண்டு.

Jan 04, 2024

சண்டி கீரை..( லச்ச கெட்ட கீரை )

இந்த கீரைக்கு மட்டும் நிறைய பெயர்கள் உண்டு.. லச்லக்கெட்டை, லச்சக்கொட்டை, லச்ச கெட்ட கீரை, நஞ்சு கொண்டான் கீரை, நஞ்சுண்டான் கீரை, லஜ்ஜை கீரை, இப்படி பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இலைகள்: அகலமான இலைகளை உடைய இந்த சண்டிக்கீரையை, பலர் அழகுக்காக வீடுகளில் வளர்ப்பார்கள்.. வைட்டமின் A, C, நிறைந்த இந்த சண்டிக்கீரை, உடம்பிலுள்ள விஷத்தையே முறிக்கும் திறனுடையது.. அதனால்தான் இந்த கீரைக்கு "நஞ்சுண்டான் கீரை" என்று பெயர் வந்ததாம்.உடலில் உள்ள நச்சுக்கள், அசுத்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது இந்த கீரை.. ரத்தத்திலுள்ள உப்பின் அளவை சீராக்கக்கூடியது.. வாத நோயால் பல நாட்கள் படுத்திருக்கும் நோயாளிகள், இந்த கீரையை உணவில் சமைத்து சாப்பிட்டாலே, எழுந்து நடமாடும் அளவுக்கு தெம்பாகிவிடுவார்களாம். மூட்டு வலி குறைய, இந்த கீரையை சமைத்து சாப்பிடுவார்கள்.. தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகிறதாம். மூட்டுப்பகுதிகளில் வீக்கம் அதிகமாக இருந்தால், இந்த கீரையின் இலைகளில் நல்லெண்ணெய் தடவி, இளஞ்சூட்டில் வீக்கம் மீது வைத்து கட்டுவார்கள். இதனால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.. சண்டித்தைலம் என்றே மூட்டுவலிக்கு, கடைகளில் விற்கிறார்கள்.உடம்பில் பித்தம் அதிகமாகி சூடு அதிகமாகிவிட்டாலும், இந்த கீரையை சமைத்து சாப்பிடும்போது பலன்தரும். நுரையீரலில் தொற்று இருந்தாலும், சளி இருந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.. சண்டிக்கீரையை சுத்தம் செய்யும்போது, இதன் நடுவில் உள்ள நரம்பை, கத்தியால் கீறிவிட்டு, எடுத்து விட வேண்டும்.. நரம்பை நீக்கியபிறகுதான், பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். அதற்கு பிறகு, சாதாரண கீரைகளை போலவே இதையும், பொரியல், துவையல், கூட்டு, சாம்பார், செய்யலாம்.. சிலர் இதை பயன்படுத்தி சூப் செய்வார்கள். இந்த கீரையை பாசி பருப்பு போட்டு கூட்டு போல செய்யலாம்லஜ்ஜை என்றால் வெட்கம் என்று பொருள். வெட்கத்தையே ஓரங்கட்டிவிடுமாம் இந்த லஜ்ஜை கீரை.. ஆட்டு ரத்தத்தை பொரியல் செய்யும்போது, சண்டிக்கீரையையும் சேர்த்து சமைத்து சாப்பிட தருவார்கள்.சிறுநீரகக் கற்கள் உட்பட சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளை இந்த சண்டிக்கீரை தீர்க்கக்கூடியது.. இதனால், உடலில் ஏற்படும் வீக்கங்கள் தடுக்கப்படுகின்றன.. சிறுநீர் வெளியேறாவிட்டால், இந்த சண்டிக்கீரையை நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்ட, சிறிது வெந்தய தூள் கலந்து குடித்தாலே போதும். உடலுள்ள கழிவுகள், அசுத்த நீர் வெளியேறிவிடும். இதனால், உடல் எடையும் குறையும்..

Jan 02, 2024

சர்க்கரை நோயாளிகளுக்கு, வரப்பிரசாதமாக உள்ள இலுப்பை

.இலுப்பை பூ, இலுப்பை வேர், இலுப்பை பழம், இலுப்பை விதை, என அத்தனையும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையே.இலுப்பை பழங்களை எடுத்துக் கொண்டால், மலச்சிக்கலை போக்கக்கூடியது. இலுப்பை மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு, பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது.. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சாறுதான் மருந்தாகிறது.சரும பாதுகாப்புக்கு இலுப்பை இலைகள் உபயோகமாகின்றன.. இலுப்பை இலைகளை கழுவி சுத்தம் செய்து, தண்ணீரை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். பலவீனமான நரம்புகளுக்கு இது தீர்வாக அமையும்.. இலுப்பை இலையை மார்பில் வைத்து கட்டிவந்தால், இளந்தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும்.இலுப்பை விதைகள்: இலுப்பையின் விதைகள் சரும பாதுகாப்பை தரக்கூடியது.. தோல் பிரச்சினைகளை அகற்றக்கூடியது.. ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள், இந்த விதையை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் பலன் கிடைக்கும்,. இலுப்பை கொட்டையிலிருந்து, இலுப்பை எண்ணெய் எடுக்கப்படுகிறது.. அந்தவகையில், இலுப்பை பூக்களும் பெரும் பலனை தரக்கூடியது.. ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை என்று பழமொழியே உண்டு.. அதாவது, கரும்பு இல்லாமல் சர்க்கரை கிடைக்காத மக்கள் இனிப்புச்சுவைக்கு, இலுப்பை பூக்களையே பயன்படுத்தலாம் அன்றைய காலங்களில், பழங்குடியினர் இதைதான், சர்க்கரையை போல பயன்படுத்தியிருக்கிறார்கள்.. இந்த பூக்களை அரிசியுடன் சேர்த்து சமைத்து, தேனை தொட்டு சாப்பிட்டு வந்துள்ளனர். வெறும் சர்க்கரையை தவிர, புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம் போன்றவை இந்த பூக்களில் உள்ளன. இரும்புச்சத்து: இந்த பூக்களில் ஏராளமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது.. இலுப்பைப்பூவை தினமும் சாப்பிட்டு வந்தாலே, ஹீமோகுளோபின் பிரச்சனை தீர்ந்துவிடும்.. இந்த பூக்களை கழுவி சுத்தம் செய்து, பாலில் கலந்து குடித்து வந்தால் உடலில் பலம் கிடைக்கும்..பலவீனமானவர்கள், உடல் மெலிந்தவர்கள், இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து, காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் குடித்து வந்தால், உடம்பு தேறும்..இலுப்பை பூக்களை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும். கடும் காய்ச்சல் இருப்பவர்கள், இலுப்பை பூக்களை கழுவி தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம்.. இதனால், வெப்பத்தினால் உண்டான காய்ச்சல் உடனடியாக நின்றுவிடும். உடலிலுள்ள நீர்ச்சத்து குறைபாடும் நீங்கும். மாதவிடாய் நேரத்தில் நிறைய ரத்த இழப்பு ஏற்படும்.. இவர்களுக்கு இலுப்பை பூக்கள் மிகவும் நல்லது.. அதுமட்டுமல்ல, இலுப்பைப்பூவை காயவைத்து பொடித்து, வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் கோளாறுகள் நீங்கும். 

1 2 ... 8 9 10 11 12 13 14 15 16 17

AD's



More News