சர்க்கரை நோயாளிகளுக்கு, வரப்பிரசாதமாக உள்ள இலுப்பை
.இலுப்பை பூ, இலுப்பை வேர், இலுப்பை பழம், இலுப்பை விதை, என அத்தனையும் மருத்துவ குணங்கள் நிறைந்தவையே.இலுப்பை பழங்களை எடுத்துக் கொண்டால், மலச்சிக்கலை போக்கக்கூடியது. இலுப்பை மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு, பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது.. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சாறுதான் மருந்தாகிறது.சரும பாதுகாப்புக்கு இலுப்பை இலைகள் உபயோகமாகின்றன.. இலுப்பை இலைகளை கழுவி சுத்தம் செய்து, தண்ணீரை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். பலவீனமான நரம்புகளுக்கு இது தீர்வாக அமையும்.. இலுப்பை இலையை மார்பில் வைத்து கட்டிவந்தால், இளந்தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும்.
இலுப்பை விதைகள்: இலுப்பையின் விதைகள் சரும பாதுகாப்பை தரக்கூடியது.. தோல் பிரச்சினைகளை அகற்றக்கூடியது.. ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள், இந்த விதையை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் பலன் கிடைக்கும்,. இலுப்பை கொட்டையிலிருந்து, இலுப்பை எண்ணெய் எடுக்கப்படுகிறது.. அந்தவகையில், இலுப்பை பூக்களும் பெரும் பலனை தரக்கூடியது.. ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை என்று பழமொழியே உண்டு.. அதாவது, கரும்பு இல்லாமல் சர்க்கரை கிடைக்காத மக்கள் இனிப்புச்சுவைக்கு, இலுப்பை பூக்களையே பயன்படுத்தலாம்
அன்றைய காலங்களில், பழங்குடியினர் இதைதான், சர்க்கரையை போல பயன்படுத்தியிருக்கிறார்கள்.. இந்த பூக்களை அரிசியுடன் சேர்த்து சமைத்து, தேனை தொட்டு சாப்பிட்டு வந்துள்ளனர். வெறும் சர்க்கரையை தவிர, புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம் போன்றவை இந்த பூக்களில் உள்ளன. இரும்புச்சத்து: இந்த பூக்களில் ஏராளமான இரும்புச்சத்து நிறைந்துள்ளது.. இலுப்பைப்பூவை தினமும் சாப்பிட்டு வந்தாலே, ஹீமோகுளோபின் பிரச்சனை தீர்ந்துவிடும்.. இந்த பூக்களை கழுவி சுத்தம் செய்து, பாலில் கலந்து குடித்து வந்தால் உடலில் பலம் கிடைக்கும்..
பலவீனமானவர்கள், உடல் மெலிந்தவர்கள், இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து, காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் குடித்து வந்தால், உடம்பு தேறும்..
இலுப்பை பூக்களை ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும். கடும் காய்ச்சல் இருப்பவர்கள், இலுப்பை பூக்களை கழுவி தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம்.. இதனால், வெப்பத்தினால் உண்டான காய்ச்சல் உடனடியாக நின்றுவிடும். உடலிலுள்ள நீர்ச்சத்து குறைபாடும் நீங்கும். மாதவிடாய் நேரத்தில் நிறைய ரத்த இழப்பு ஏற்படும்.. இவர்களுக்கு இலுப்பை பூக்கள் மிகவும் நல்லது.. அதுமட்டுமல்ல, இலுப்பைப்பூவை காயவைத்து பொடித்து, வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் கோளாறுகள் நீங்கும்.
0
Leave a Reply