குடமிளகாய் உணவில் சேர்த்து கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. குடமிளகாய் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பீட்டா-கரோட்டின் மற்றும் ஆந்தியக்சிடென்ட் போன்ற சத்துக்கள் நிறைந்தது. இது நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் லூட்டின் போன்ற பியானோகெமிக்கல்கள் கண்கள் மற்றும் பார்வையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.குடமிளகாயில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால், உடலில் நீர்சத்து இல்லாமையை தவிர்க்கிறது. இதனுடன், கழிவுகளை வெளியேற்றவும் உதவும். குடமிளகாயில் காலோரிகள் குறைவாக இருப்பதால், இதை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. குடமிளகாயில் இருக்கும் ஆந்தியக்சிடென்ட்கள் மற்றும் இழை அதிகமுள்ளதால், இதை உணவில் சேர்ப்பது தாமதமாக ஜீரணமாகும், மற்றும் கோலஸ்டிரால் அளவை குறைக்கும். குடமிளகாயில் உள்ள சில வேதிப்பொருட்கள் மூட்டுவலியை குறைக்கவும், உடல் அழற்சிகளை தணிக்கவும் உதவுகின்றன.
ஆப்பிள், பீட்ரூட் ,கேரட் ஜூஸ் செய்து நாட்டுசர்க்கரை சேர்த்துச் பருகலாம் .முருங்கை கீரை சூப் ,முருங்கை கீரை பொரியல் உண்ணலாம்.தினமும் ஏதாவது ஒரு வகையான கீரை வகை சேர்த்து கொள்ளுங்கள்.தினமும் கருப்பு திராட்சை இரண்டுm இரவே ஊற வைத்து மறுநாள் அதை சாப்பிட்டு ஊற வைத்த தண்ணீர் அருந்தலாம்.அசைவம் என்றால் வாரம் ஒரு முறையோ, இரண்டு முறையோ, ஆட்டின் சுவரொட்டி, ஈரல் ,உணவில் சேர்க்கலாம்.அத்திப்பழம், மாதுளை பழங்கள் உண்ணலாம்.கருப்பட்டி காபி பருகலாம். சுத்தமான தேனில் பேரிச்சை பழம் ஊறவைத்து தினமும் 2 சாப்பிடலாம்.பீட்ரூட் பொரியல், பீட்ரூட் சாறு, பீட்ரூட் பச்சடி என பீட்ரூட் அதிக அளவில் சேர்த்து கொள்ளுங்கள். சீனி தவிர்ப்பது நல்லது. அதிகஅளவு புளிப்பு சுவை சேர்ப்பது வேண்டாம்.
பலரும் உடல் எடையை குறைக்க பழங்களை தவிர்ப்பது வழக்கமாகி விட்டது. ஆனால், இது தவறான நடைமுறை என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மாம்பழம் சாப்பிட்டால் அது கூட எடையை குறைக்க உதவும்!"மாம்பழம் ருசிகரமானது. ஆனால், அதை அதிகமாகச் சாப்பிட்டால் கலோரிகள் கூடும். எனவே, ஒரு நாளுக்கு ஒரு மாம்பழம் சாப்பிடலாம். மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது. இதனால் இடைச்சிறு உணவுகள் குறையும்.மாம்பழம் இனிப்பானது என்றாலும், அதில் உள்ள நார்ச்சத்து, சர்க்கரையை சீராக வெளியிடும். பழமாக சாப்பிடுவதுதான் சிறந்தது, ஜூஸ் வேண்டாம்.மாம்பழம் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. குறைந்த கலோரி கொண்டதால், உடலை சோர்வில்லாமல் வைத்து எடையை கட்டுப்படுத்த உதவும்.உடல் எடையை குறைக்க ஆசைப்படுபவர்கள், உணவிலிருந்து பழங்களை தவிர்க்க வேண்டாம்.மாம்பழம் சாப்பிடலாம். ஆனால் அளவோடு உண்டால் தான் நலம்! பருவத்திற்கு ஏற்ற பழங்களை சீராக சேர்த்துக்கொள்வதே சீரான ஆரோக்கியத்திற்கு வழி.
மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் சரியாகும்.மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது.எனவே அந்த கீரையை சூப்செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் சரியாகும்.அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில்உள்ள புண் குணமாகும். மேலும் கொப்பரை தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அல்சர் காணாமல் போகும்.பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத்தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றும்.தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் சரியாகும்.பாகற்காயை விட பாகற்பழம் மிகவும் சிறந்தது. இதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் குடல் பலம் பெறுகிறது. மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கிறது.வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி, வயிற்று பிரச்சனைகளும் நீங்கிவிடும்.தண்டுக் கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளதால் உடல் குளிர்ச்சியடைந்து மூலநோய் மற்றும் குடல்புண் ஆற்றி விடும்.அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் அல்சரை குணமாக்கிவிடும்.புழுங்கள் அரிசி சோற்றின் வடிகஞ்சியை வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் பெறலாம்.அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர்சீக்கிரம் நீங்கிவிடும். அகத்திக்கீரை சூப் செய்தும் குடிக்கலாம்.துளசி இலை சாற்றில் மாசிக்காயை, வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் பெறலாம்.வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்துகலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.அத்தி மரப்பட்டை சாற்றுடன் சம அளவு பசும்பால் சேர்த்து சிறிதளவு கற்கண்டும் கூட்டி100மிலி அளவுகுடித்துவர வயிற்றுப் புண் மற்றும் வாய் புண் குணமாகும்.அத்தி இலையுடன் சம அளவு வேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வரலாம்.சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சைஅளவு எடுத்துப் பாலில் கலந்து பருகி வரலாம்.
கோடைக் காலத்தில் அதிகம் கிடைக்கும் ஒரு சத்தான பழம் முந்திரி பழம் . இது சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்த தனித்துவமான சுவையைக் கொண்டது. மென்மையான தோற்றம் கொண்ட இந்த பழம் உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.முந்திரி பழத்தில் வைட்டமின் C, இரும்புச் சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பல நன்மைகள் அடங்கியுள்ளன. இதில் அடங்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணம் செல் அழிவைத் தடுக்கும். அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட இந்த பழம், செரிமானத்திற்கு உகந்ததாகவும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் உதவியாக இருக்கிறது. முந்திரி பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். மேலும், எலும்புகளின் வலிமை உயரும், இரத்த சோகை குறையும், உடலின் வெப்பம் தணியும். இதில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.கோடையில் உடலுக்கு தேவைப்படும் ஈரப்பதத்தையும், குளிர்ச்சியையும் வழங்கும்.
முல்லை மலரை தலையில் சூடிக்கொண்டு அதன் மனத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி, மனத்தெளிவு உண்டாகும். முல்லை பூவின் சாரை எடுத்து மூக்கில் ஒரு சொட்டு விட்டால் அடிக்கடி வரும் தலைவலி வராது.கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள்'வாரம் மூன்று நாட்களுக்கு கண்ணில் ஒரு சொட்டு விட்டால் கண்பார்வை குறைபாடுசரியாகும். மாதவிடாய் சமயத்தில் வரும் அதிகமான வயிற்றுவலி ஏற்பட்டால் முல்லை பூவை கசாயம் செய்து குடித்தால் சரியாகும்.கருப்பை பிரச்சனை இருந்தால் முல்லை பூகசாயம் செய்து வாரம் ஒரு மூன்று அல்லது நான்கு நாள் குடித்தால் கருப்பை பிரச்சனை சரியாகும்.ஒரு கைப்பிடி அளவுள்ள முல்லை பூவை எடுத்துக் கொண்டு அதைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி அது வற்றியதும் 15 மில்லி அளவு அதை இரண்டு முறை ஒரு நாளுக்குக் குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.
செவ்வாழைப்பழத்தில் மற்ற பழங்களை விட குறைவான கலோரி அளவு கொண்டுள்ளது. இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. செவ்வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். செவ்வாழைப் பழம் சருமத்தில் உள்ள குருதி சுற்று இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதில் 75% நீர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உள்ளதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது. செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் B6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. தலைமுடியில் உள்ள பொடுகு மற்றும் வறட்சி குறைய, செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்க்கலாம். செவ்வாழைப் பழத்தில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.
உடல் வளர்ச்சி, தசை சக்தி, மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த புரதம் முக்கியம். உடலுக்குத் தேவையான புரதம் அதிகம் உள்ள சில பழங்கள்: அவகேடோ – 1 கப்: 3 கிராம் புரதம்கொய்யா – 1 கப்: 4 கிராம் புரதம்கிவி – 1 கப்: 2 கிராம் புரதம்மாதுளை – 100 கிராம்: 1.7 கிராம் புரதம்சர்க்கரை பாதாமி (ஆப்ரிகாட்) – 100 கிராம்: 1.4 கிராம் புரதம்கிரேப் புரூட் – 1 கப்: 1.3 கிராம் புரதம்குழிப்பேரி (பீச்) – 1 கப்: 1 கிராம் புரதம்வாழைப்பழம் – 1 கப்: 1.6 கிராம் புரதம்செர்ரி–1கப்:1.6கிராம்புரதம் பலாப்பழம் – 1 கப்: 3 கிராம் புரதம் இந்த பழங்களை உணவில் சேர்த்து உடலுக்கு தேவையான புரதத்தை எளிதில் பெறலாம்.
தேனடையில் தான் தேனீக்கள், மகரந்தம் மற்றும் தேனை சேமித்து வைக்கும். இதுமெழுகுபோன்றுஅமைந்திருக்கும், வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் தேன், பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. ஆனால், தேனடை இயற்கையானது.தேனடையில் இருக்கும் தேனில் தேனீக்கள் சேகரித்த மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் ராயல் ஜெல்லி என்ற மெழுகு இருக்கும். இதனால், தனி தேனை விட மகரந்தம், ராயல் ஜெல்லி மெழுகு அடங்கிய தேனில் மருத்துவ குணங்கள் அதிகம் என்று நம்பப்படுகிறது. தேன் கூட்டில் செறிந்து கிடக்கும் தேனில் புரதங்கள், தாதுக்கள்,நீர்,மகரந்தம், பிரக்டோஸ், குளுக்கோஸ், கரிம அமிலங்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவை தாராளமாக உள் ளன. இவற்றை உண்ணும்போது மனித உடல் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நச்சு உயிரிகளை எதிர்த்து போராடும் வலிமையை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.தும்மல், சளி மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாக தேனடையை நம் முன்னோர்கள் மென்று சாப்பிட்டு உள்ளனர். இதில் காணப்படும் கொலாஜன்கள் உள்பட பல் வேறு பொருட்கள் தோல் சுருக்கத்தை தடுக்கின்றன. குடல் நுண்ணுயிரிகளை மீண்டும் உருவாக்கி உணவு செரிமானத்தில் பங்களித்து உண்ட உணவின் சத்துகள் தகுந்த முறையில் உடலுக்கு கிடைக்க உதவுகிறது. தைராய்டு உள்பட அனைத்து ஹார்மோன் சுரப்பை நிலைப்படுத்துகிறது. மேலும், கல்லீரலில் நச்சுகளை நீக்கி கல்லீரல் நன்கு செயல்பட உதவுகிறது. எனவே தேனடையை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என டாக் டர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளில் கருத்தரித்தல் மருத்துவத்தில் தேனடை முக்கிய ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக் கப்படுகிறது.
பேரிச்சம் பழம், இனிமையான சுவையுடன் கூட, நம் உடலுக்கு மிகவும் அவசியமான பல சத்துக்களை கொண்ட ஒரு அற்புதமான பழம். நார்ச்சத்து: பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நமது செரிமானத்தை சீராக வைத்து, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. பொட்டாசியம்: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்திற்குவும் பொட்டாசியம் மிகவும் முக்கியம். பேரிச்சம் பழத்தில் இது நிறைந்துள்ளது.இரும்பு: இரத்த சோகையைத் தடுக்க இரும்பு அவசியம். பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்பு, உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கால்சியம்: எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் முக்கியம். பேரிச்சம் பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது. வைட்டமின் பி6: நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் பி6 அவசியம். பேரிச்சம் பழத்தில் இது நிறைந்துள்ளது. மெக்னீசியம்: இது தசை மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கு அவசியம். பேரிச்சம் பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: இவை உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. பேரிச்சம் பழத்தில் பல வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. பேரிச்சம் பழத்தின் நன்மைகள்: எடை இழப்பு: பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தருகிறது, இதனால் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.எலும்பு ஆரோக்கியம்: பேரிச்சம் பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன. இதய ஆரோக்கியம்: பேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செரிமான ஆரோக்கியம்: பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்து, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.