மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்னை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இவை இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம்.அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கும், பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும்.நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு, ஆவி பிடித்தல்தான் சரியான ட்ரீட்மென்ட் .மாதம் ஒரு முறை தொடர்ந்து ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கின் மேல் உள்ள புள்ளிகள் நிரந்தரமாக மறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.மசித்த வாழைப்பழத்துடன், ஓட்ஸ், சில துளிகள் தேன் சேர்த்து, மூக்கில் தடவி, ஸ்க்ரப் மற்றும் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.2 தேக்கரண்டி பட்டை பொடி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஸ்க்ரப் செய்தால் அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை பிளாக் ஹெட்ஸை விரைவில் நீக்கும்.வாரம் ஒரு முறை முகத்தை ஸ்க்ரப் செய்யும்போது, மூக்கு பகுதியில் பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது.வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை கலவையை மூக்கின் மீது தடவி மேலிருந்து கீழாக மூக்கை ஒட்டி மசாஜ் செய்தால் சொரசொரப்பு இல்லாமல் பளிச்சென இருக்கும்.
நல்லெண்ணையை ஒரு கப் அளவு எடுத்து அதில் ஒரு கையளவு கறிவேப்பிலையை போட்டு குறைவான தீயில் சில நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் ஆற வைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து வர நரைமுடி வராது. முடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். கறிவேப்பிலையை பொடி செய்து தினமும் 2 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர கருகருப்பான ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
உதடுகள் மென்மையானவை என்பதால் அதனால் ஈரத்தன்மையுடன் வைத்துக்கொள்வது அவசியம். உணவில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளவும்.நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.தேங்காய் எண்ணெயை தினமும் இருமுறை உதடுகளில் தடவி, சில நொடிகள் மசாஜ் செய்யவும். இது, வறண்ட உதடுகளுக்கு ஈரப்பதத்தை சேர்க்கிறது.கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் கழுவலாம்.இயற்கை மாய்ஸ்ச்சுரைசரான தேன், வறண்ட மற்றும் வெடித்த உதடுகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்றது. உதடுகளில் ஏற்படும் வெடிப்பு, புண்களை சீக்கிரம் குணப்படுத்தும்.வெள்ளரிக்காய் துண்டை, உதடுகளில் மெதுவாக ஓரிரு நிமிடங்கள் தேய்க்கவும். பத்து நிமிடங்கள் சாறு உதட்டிலிருக்கும் படி விட்டு பின்னர், கழுவவும்.தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்யலாம்.
வெந்தயம், பாசிப்பயிறு இவற்றை இரவு ஊறவைத்து காலையில் அரைத்து தேய்த்து குளித்து வர முடி உதிராது. பளபளப்பாக, ஆரோக்கியமாக இருக்கும். தலைச்சூடு நீங்கும்.பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.ஒரு ஈரம் இல்லாத பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய முடிக்கு தேவையான அளவு திரிபலா சூரணத்தை போட்டுக் கொள்ள வேண்டும். 2 ஸ்பூன் திரிபலா சூரணம், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், வேப்ப எண்ணெய் 1/2 ஸ்பூன், இதை ஒரு பேஸ்ட் போல் தயார் செய்ய தேவையான அளவு தயிரை ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும்.உங்களது மண்டை ஓட்டில், மயிர்க்கால்களில் படும்படி இந்த பேஸ்டை நன்றாக அப்ளை செய்யவேண்டும். உங்களது முடியை பகுதி பகுதியாக பிரித்து நன்றாக மண்டையோட்டில் படும்படி இந்த ஹேர் பேக்கை தடவி, ஹேர் பேக் போட்டு, 30 நிமிடங்கள் ஊறவைத்து, அதன் பின்பு சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு உங்களுடைய விருப்பம் போல் தலைக்கு குளித்து கொள்ளலாம்.
தலைமுடி வறண்டு போயிருந்தால், தயிர் மற்றும் தேனில் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். தயிரில் புரோட்டீன் மற்றும் லாக்டிக் அமிலம் இருப்பதால் இது முடிக்கு ஊட்டமளிக்கிறது. தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் மாய்ஸ்சரைசிங் பண்புகள் இருப்பதால் முடியை பட்டுப் போல் ஆக்குகிறது. முதலில் உங்கள் தலைமுடியை சிக்கு இல்லாமல் சீவவும்.ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். பின், இந்த கலவையை நன்கு கலக்க வேண்டும்.இப்போது இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.பின்னர் அதை தலைமுடியில் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு, ஷாம்பூவுடன் முடியை சுத்தம் செய்யவும்.இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கும்.
சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதன் மூலம், இது சிறந்த சரும சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. நமது உடலுக்குள்ளும் ஊடுருவி, இளமையைப் பேணும் பணிகளையும் செய்வதால், சருமத்தின் பொலிவையும், மென்மையையும் அதிகரிக்கிறது.நச்சு நீக்கும் தன்மை கொண்டிருப்பதால், கோதுமைப்புல் பொடியானது பருக்கள் உண்டாவதைத் தடுத்து, மென்மையான வழவழப்பான சருமத்தினை அளிக்கிறது. கோதுமைப்புல் பொடியுடன் சிறிது பால் சேர்த்து பசை போலாக்கி, சருமத்தின் மீது தடவிக் கொள்வதால், பருக்கள், வெடிப்புகள், கரும்புள்ளிகள், சரும நிறம் மங்குதல் ஆகியவை மறையும்.
ஃப்ரீ ராடிகல்களினால் ஏற்படும் பாதிப்புகளை இது தடுக்கிறது. முதிர்ந்த செல்களைப் புத்துயிரூட்டும் தன்மையைக் கொண்டிருப்பதால், முதுமையைத் தடுக்கும் ஆற்றல் பெற்று, இளமையைப் பேண உதவுகிறது. சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தின் நெகிழும் தன்மையை நிலை நிறுத்த உதவுகிறது. இதன் மூலம் சருமத்தின் இளமைப் பொலிவை மீட்டுத் தருகிறது.நரைத்துப் போன தலைமுடியின் நிறத்தை மாற்றி, பழைய படி கருமையாக்கும் தன்மை கோதுமைப்புல் பொடிக்கு உண்டு. இந்த பவுடரைத் தலை முடியில் தடவிக் கொண்டு, குளித்து வந்தால், நரைமுடிகள் கருமையாகும்கோதுமைப்புல் பொடியைத் தலையில் தடவிக் கொண்டு குளித்து வந்தால், பொடுகு, வறட்சி மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்ற தலை சார்ந்த பிரச்சனைகள் தீரும். ஆகவே வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்புவுடன் கோதுமைப்புல் பொடியைக் கலந்து, தலையில் தடவிக் கொண்டு குளித்துவரலாம். இதனால், ஆரோக்கியமற்ற தலைமுடியை நல்ல ஆரோக்கியத்துடன் திகழும்.
சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்களில் கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இது ஒரு நோய் அல்ல, சிறிய மச்சம் போல் ஆரம்பித்து முகத்தில் வேகமாக பரவிவிடும்.பொதுவாக 20-35 வயதுள்ளவர்களுக்கு வரக்கூடிய தற்காலிகப் பிரச்சனையாக இருந்தாலும், சிலருக்கு மட்டும் மீண்டும் மீண்டும் வரலாம்.5-7 பாதாமை நீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, மைய அரைத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பிறகு நீரில் முகத்தை கழுவவேண்டும், தேனும், பாதாமும் சேர்ந்த கலவை வெகு சீக்கிரத்தில் மங்கு மறைந்து விடும்.ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து சம அளவு எடுத்து நீர்விட்டு மைய அரைத்து, முகத்தில் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசை போல் தடவவும், காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும், சில முறை இதை செய்து வந்தால், கருப்பு திட்டுகள் மறையும்.1 ஸ்பூன் தக்காளி சாறு, 1 ஸ்பூன் தயிர், 2 ஸ்பூன் ஓட்ஸ், இவற்றை பேஸ்ட் போல் செய்து , சருமத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் மீது நன்றாக தேய்த்து காய்ந்தபின் கழுவவும், வாரத்தில் 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து அதில் ரோஜாப்பூ இதழ்களை அரைத்து பேஸ்ட் செய்து கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு காய வைத்து, குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பளபளப்பு கிடைக்கும்
* உருளைக்கிழங்கை தோல் சீவிய பின் தேங்காய் போல துருவி கண்களை மூடி அதில் வைத்து மேல் ஒரு துணியுடன் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.*உருளைக்கிழங்கை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்டாக கண்களின் மேலும், கீழும் அப்ளை செய்யலாம்.*உருளைக்கிழங்கு சாறை இரவில் தூங்குவதற்கு முன் கண்களின் மேலும். கீழும் தடவிவிட்டு படுக்கலாம்.*உருளைகிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கலாம்.