25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


ஆரோக்கியம்

Mar 05, 2026

புற்றுநோய் வராமல் தடுக்கும் பாலக் கீரை.

பாலக் கீரை(Spinach) வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த சத்துணவு. இது புற்றுநோயைத் தடுக்கும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும், எலும்புகளைப் பலப்படுத்தும், கண் பார்வைக்கு நல்லது, மலச்சிக்கலைப் போக்கும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த சோகையைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம். இதில் உள்ள பீட்டாகரோட்டின், ஃபிளவனாய்டுகள் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுகிறது.எலும்புகளை வலுப்படுத்தவும், உடல் வலிமைக்கும் உதவுகிறது.ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலேட், வைட்டமின் K மூளை செல்களைப் பாதுகாத்து அல்சைமர் அபாயத்தைக் குறைக்கும்.இரும்புச்சத்து நிறைந்தது, இரத்த இழப்பைக் குறைத்து இரத்த சோகையைத் தடுக்கும்.வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண் பார்வைக்கு நன்மை பயக்கும்.நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

Feb 26, 2026

உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் அகத்திக் கீரை.

அகத்திக் கீரை, மருத்துவக் குணங்கள் நிறைந்தது. பித்தம், தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பித்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் வல்லமை இந்தக் கீரைக்கு உண்டு. இந்தக் கீரை அதிக உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். லேசாகக் கசக்கும் ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், குடல் புழுக்களை அழிக்கவும் துணைபுரியும். இந்தக் கீரையை அளவாகச் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியத்துடன் வாழலாம். அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் பேதி ஏற்படும். புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ போன்றவை இதில் அதிகமாக இருக்கின்றன.அகத்திக்கீரையுடன்சின்னவெங்காயத்தைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் குடல் வலிமை பெறும். அரிசி கழுவிய நீரில் அகத்திக் கீரையை வேகவைத்து சூப் செய்து குடித்தால், கல்லீரலும் இதயமும் வலுவாகும். ஜீரண சக்தியைஅதிகரிக்கச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இதை உண்டால், உடலின் உஷ்ணம் குறையும், கண்கள் குளிர்ச்சி பெறும், மாலைக்கண் நோய் குணமாகும்.வாயுக்கோளாறு உள்ளவர்கள், அகத்திக் கீரையை அதிகமாகச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதை நன்றாக வேகவைத்துத்தான் சாப்பிட வேண்டும். கீரையின் நிறம் மாறும் அளவு சமைக்க வேண்டும். 'முருங்கை கீரை வெந்து கெட்டது, அகத்திக் கீரை வேகாமல் கெட்டது' என்பார்கள்.பொதுவாக, மாதத்துக்கு இரண்டு நாட்களுக்கு மேல் அகத்திக் கீரையை உட்கொள்ளக்கூடாது. அதோடு, கீரை உணவை இரவில் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அவை ஜீரணமாக 8 மணி நேரம் ஆகும். இரவில் உண்டால் சரியாகச் செரிக்காது.

Feb 23, 2026

வயிற்றில் வரும் "குடகுட" சத்தம் -பசி மட்டும் காரணம் அல்ல! 

பலரும் நினைப்பது போல, வயிற்றில் குடகுட சத்தம்  வந்தாலே பசி என்று அர்த்தம் இல்லை.உங்கள் வயிறு காலியாக இருக்கும்போது, குடல்கள் தங்களைத் தாங்களே சுத்தம் செய்துகொள்ளும் ஒரு இயற்கை செயல்முறை நடக்கிறது.குடல்கள் வலுவாக அசைந்துஉள்ளே இருக்கும் மீதமுள்ள காற்றுஜீரணமாகாத சிறிய கழிவுகள்இவைகளை மெதுவாக கீழே தள்ளுகின்றன.இதை எளிமையாகச் சொன்னால் உங்கள் செரிமான மண்டலத்தின் "துவைக்கும் இயந்திரம்" செய்யும் சத்தம் தான் அது!இது ஒரு நல்ல அறிகுறிகுடல்கள் சுறுசுறுப்பாக இயங்குகிறது என்பதற்கான சான்றுஉடல் தன்னைத் தானே பராமரிக்கும் புத்திசாலித்தனமான செயல்அதனால் அடுத்த முறை வயிறு குடகுடன்னு சத்தம் போட்டா,  பயப்படவேண்டாம். உங்கள் உடல் சுத்தம் செய்யும் வேலையில்தான் இருக்கிறது.ஆரோக்கியமான குடல்.

Feb 18, 2026

உணவு சாப்பிட சரியான நேரம் (ஆரோக்கியத்துக்குப் பொருத்தமான நேரங்கள்)

காலை உணவு (Breakfast)- 7.00-8.30எழுந்து1 மணி நேரத்துக்குள் சாப்பிடுவது நல்லது உடல் சக்தி அதிகரிக்கும் மதிய உணவு (Lunch)12.00-1.30ஜீரணம் நல்லபடி நடக்கும் அதிக கனமான உணவு இதே நேரத்தில் சரி. மாலை சிறு உணவு (Evening snack) -4.00-5.30 பழம்/கண்டல்/தேநீர் போன்ற லைட் உணவு. இரவு உணவு (Dinner) -7.00-8.30தூங்குவதற்கு குறைந்தது 2-3 மணி நேரம் முன்பு லைட் & எளிதில் ஜீரணமாகும் உணவு.

Feb 17, 2026

ஆரம்பநிலைச் சர்க்கரை வியாதிக்குக் கோவைக்காய் .

வைட்டமின் ஏ, கால்சியம், ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை இதில் நிறைந்துள்ளன. வயிற்றுப் புண், வாய்ப்புண், மூல நோய் வேதனை ஆகியவற்றை நீக்கும். ஆரம்பநிலைச் சர்க்கரை வியாதிக்குக் கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாற்றை அடிக்கடி உட்கொண்டால் சர்க்கரை வியாதிக்குப் பக்கவிளைவும் அதிகம் ஏற்படுவதில்லை. பரம்பரையில் நீரிழிவு நோய்இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதற்கொண்டே உணவில் சேர்த்துக்கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்." வாய்ப்புண்ணுக்குப் பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டால் வாய்ப்புண் ஆறும், வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்குக் கோவைக்காய் நல்லது.

Feb 16, 2026

இயற்கை மருந்தாகும் மணத்தக்காளி கீரை .

வயிற்றுப் புண் முதல் கருப்பை ஆரோக்கியம் வரை தீர்வு தரும் இயற்கை மருந்து.நவீன உணவு கலாச்சாரத்திற்கு மத்தியில்,மணத்தக்காளி கீரை ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில்'காட்டுக்கீரை' என்று அழைக்கப்படும் இது, செரிமான மண்டலத்தைச் சீரமைப்பதில் முதன்மை வகிக்கிறது. இந்த கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் A, C, E மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு, கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சத்துக்கள் நிறைந்த இந்த கீரையைச் சிறுபருப்பு அல்லது பயத்தம்பருப்புடன் சேர்த்துமசியலாக சமைத்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியையும் வலுவையும் தரும். தாதுக்கள் பற்றாக்குறையை நீக்கி ஆரோக்கியமான வாழ்வை தரக்கூடிய இந்தநாட்டுக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொள்வது நலம் பயக்கும்.

Feb 10, 2026

ஊட்டச்சத்துகளின் குவியல் முருங்கைக் கீரை!

உலகின் மருத்துவக் குணம்மிக்க காய்கறிகளுள் முன்னணியில் இருக்கிறது முருங்கை.முருங்கையின் இலை, காய், விதை, பட்டை என எல்லாமும் அதீத பலன் தரக்கூடியவை. அவற்றில் பல்வேறு அத்தியாவசிய ឈប់ សំ (Phytochemicals) இருப்பதால் ஊட்டச்சத்து மிகுந்ததாக விளங்குகிறது. மற்ற காய்கறிகளைவிடப் பல மடங்கு ஊட்டச்சத்து மதிப்புகளையும் கொண்டிருக்கிறது. எந்த அளவுக்கு என்கிறீர்களா?முருங்கை இலையில் ஆரஞ்சுப்பழத்தை விட 7 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. கேரட்டை விட 10 மடங்கு அதிக வைட்டமின் ஏ நிறைந்தது. பாலை விட 17 மடங்கு அதிக கால்சியம் முருங்கையில் இருக்கிறது. யோகர்ட்டை விட 9 மடங்கு அதிக புரதம் கொண்டிருக்கிறது. வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது. கீரையை விட 25 மடங்கு அதிக இரும்புச்சத்து முருங்கை இலையில் உள்ளது.

Feb 04, 2026

உடலுக்குச் சக்தியைத் தரும் பச்சைப் பட்டாணி.

பட்டாணியில் மாவுச்சத்து, கொழுப்பு, தயாமின், நயாசின், ரைபோஃப்ளேவின், புரதச்சத்து(இறைச்சியிலிருந்து கிடைக்கும் சக்திக்கு ஈடானது), கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து,பட்டாணியில் உள்ளன.உடலுக்குச் சக்தியைத் தரும், பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் மூளைக்குத் தேவைப்படும் ஊட்டத்தைத் தரும், மூளை நோயைத் தடுக்கும்.ஜீரண உறுப்புகள் பலமடையும், குடல் புண்ணை ஆற்றும், வாய் துர்நாற்றமும் நீங்கும், வாய்- நாக்குப் புண் குணமாகும். ஜீரண உறுப்புகள் நன்கு செயல்படும்.கண் பார்வைக்கு வைட்டமின் ஏ இன்றியமையாதது.உடல் வலி, தலைவலி ஆகியவை ஏற்படாமல் இருக்கவும், பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதிலுள்ள வைட்டமின் சி பயன்படுகிறது.நுரையீரல் நோய் குணமடையும், நுரையீரலுக்கும் இதயத்துக்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது, இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.மருந்துபோல இதைத் தினமும் ஒரு கைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுங்கள்.

Feb 03, 2026

உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் உருளைக்கிழங்கு .

உருளைக்கிழங்கு உலகெங்கிலும் மிகவும் விரும்பப்படும் ஒரு கிழங்கு வகை என்றாலும், அதன் ஆரோக்கிய பலன்கள் குறித்து விவாதங்கள் நிலவுகின்றன.உருளைக்கிழங்கில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, இது வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதில் உள்ள எதிர்ப்புச் சக்தி வாய்ந்த ஸ்டார்ச் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், வேகவைத்த அல்லது தோல் நீக்கப்படாத உருளைக்கிழங்கில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து உள்ளது, இது நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். உருளைக்கிழங்கின் ஆரோக்கியம், அதை எப்படிச் சமைக்கிறோம் என்பதை பொறுத்தது. உருளைக்கிழங்கை வறுத்து சாப்பிடுவது அதிகப்படியான கலோரிகள், உப்பு மற்றும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பை அதிகரிக்கிறது. இது உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் அபாயத்தை அதிகரிக்கலாம். மேலும், அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வது, சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும்.உருளைக்கிழங்கை சரியான முறையில்(தோலுடன் வேகவைத்தல், வறுக்காமல் சாப்பிடுவது) உட்கொண்டால், அது உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் ஒரு ஆரோக்கியமான உணவாகும். ஆனால், வறுத்த வடிவில் தவிர்ப்பது நல்லது.

Feb 02, 2026

ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும் பேரிக்காய்.

உலகம் முழுதும் பரவலாக பயிரிடப்படும் தாவரம் பேரி,- இதன் தாயகம் மத்திய ஆசிய கண்டப்பகுதி. இதை,3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் பயன்படுத்துவதாக வரலாற்று செய்தி உள்ளது. பண்டைய கிரேக்க, ரோமானிய நாகரிகங்களில், உணவு வகைகளில் பயன்படுத்தப்பட்டது. இப்போது உலகின் பல பகுதியிலும் உணவாக உள்ளது. குறிப்பாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.பேரிக்காயில் நார், வைட்டமின்- சி. கே மற்றும் பொட்டாஷியம் சத்துகள் நிறைந்துள்ளன. நடுத்தர அளவிலான,180 கிராம் எடையுள்ள பேரிக்காயை உண்டால்,100 கலோரிகள் கிடைக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இதய மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். பேரிக்காயில் உள்ள பொட்டாஷியம், ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.இது நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு உகந்த உணவாக உள்ளது. ஜாம், சாலட் மற்றும் இனிப்பு வகைகள் தயாரிக்க பேரிக்காய் பயன்படுகிறது. இதன் மென்மையான இனிப்பு சுவை அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது. தோலுடன் சாப்பிடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.பச்சை, சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக, அனைத்து பேரிக்காய்களும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஒரு பெரிய பேரிக்காயில் கிட்டத்தட்ட 6 கிராம் நார்ச்சத்து உள்ளது. "ஒரு பெரிய பேரிக்காயில் சுமார்27கிராம்கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 18 கிராம் இயற்கை சர்க்கரைகள் உள்ளன, 

1 2 ... 8 9 10 11 12 13 14 ... 38 39

AD's



More News