ஈகை திருநாளான பக்ரீத் தினம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் உங்களிடம் உள்ளதை பகிர்ந்து கூடி வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் நாளாக கொண்டாட படுகிறது. நீங்கள் பிறரின் தேவைகளை பூர்த்தி செய்யும்போது எல்லாம் வல்ல இறைவன் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார்.நண்பர்களுக்கும், உறவினருக்கும், எளியோருக்கும் உதவி செய்யும் , நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை நினைவூட்டும் நாள். இந்த ஈகை திருநாளில் உங்களிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து உதவுங்கள்..பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
பெட்ரோல் டீசலில் ஓடும் வாகனங்களைவிடஎலெக்ட்ரிக்கில் ஓடும் வாகனங்களால்தான் சுற்றுச்சூழலுக்குப்பெரிய ஆபத்து!’ அந்த உண்மைஇதுதான். எலெக்ட்ரிக்வாகனங்கள் சத்தம் போடாது; இரண்டாவதுவாகனங்களில் புகையே வராது. அட, எக்ஸாஸ்ட் பைப் என்று சொல்லக்கூடிய சைலன்சரே இருக்காதுஇதுகொஞ்சம் வியக்கத்தக்க உண்மை. இது காலங்காலமாகச்சொல்லப்பட்டு வந்தாலும், கான்பூரில் உள்ள IIT (Indian Institute of Technology)–யின் மூலம் லேட்டஸ்ட்டாக நடத்தப்பட்டஓர் ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஸ்டடி ரிப்போர்ட்இப்படிச் சொல்கிறது: ‘‘ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி வாகனங்களைஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்கள் நாம் நினைப்பதுபோல், எக்கோ ஃப்ரெண்ட்லியான கார்கள் இல்லை!’’இந்தப் படிப்பாராய்ச்சியின்படி, எலெக்ட்ரிக் கார்கள், ஒரு சாதாரண ICE வாகனத்தைவிட (பெட்ரோல்/டீசல் வாகனம்) சுமார் 15-50% எமிஷனைத் தன் வாழ்நாளில் வெளியிடுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் 15 – 60% அதிகமாக இருக்கிறதாம் சாதா ICE வாகனங்களைவிட! ‘‘உண்மைதான்; நாம் நினைப்பதுபோல் எலெக்ட்ரிக் வாகனங்கள்,ICE வாகனங்களை ஒப்பிடும்போது நல்லஎக்கோ ஃப்ரெண்ட்லி கார்கிடையாது. பொதுவாக, நாம்வாகனம் ஓடும்போது வெளியிடப்படும் நச்சுப்புகையை மட்டும் கணக்கிடுகிறோம்.TPE(TailpipeEmission)படி… அதாவது,எக்ஸாஸ்ட் புகையை மட்டும்வைத்துக் கணக்கிட்டால்,ICE வாகனங்கள் புகையை உமிழ்வது உண்மைதான். ஆனால், அந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க நாம்எவ்வளவு நச்சுப்புகையை வெளியிடுகிறோம் தெரியுமா?எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எது முக்கியம்? லித்தியம் அயன் பேட்டரி! அந்த Li பேட்டரிக்கு முக்கியமான 3 மூலப்பொருட்கள் லித்தியம், கோபால்ட், மாங்கனீசு (Lithium, Cobalt, Manganese). ஒருஎலெக்ட்ரிக் வாகனத்துக்குப் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரியில் சுமார் 8 கிலோ லித்தியம்,14 கிலோ கோபால்ட் மற்றும்20 கிலோ மாங்கனீசு இருக்கும். இவை தயாரிப்பதற்கு நீர் மற்றும் மண்வளம் நாம் நினைப்பதைவிட அதிகமான அளவில் மாசுபடும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இது மண் அரிப்பையும் ஏற்படுத்தி, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தையும் காலி செய்யும் என்பதும் உண்மை.என்ன தீர்வு என்றால்,இந்த கான்பூர்IIT ஆய்வில்,அதற்கு ஒரு வழிசொல்லியிருக்கிறார்கள்.அதாவது, ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் இதற்கு நல்லதீர்வு என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக வகை சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாசுபாடு நமது நிலம், நீர், காற்றை மாசுபடுத்துகிறது. பருவநிலை மாற்றம் சொ காரணமாக வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் பனிப்பாறைகள் உருகி கடல்நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளது. நவீன வளர்ச்சி என்ற பெயரில் அதிகரித்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு காரணமாக பூமியின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. இந்தாண்டு மையக்கருத்தாக 'பிளாஸ்டிக் மாசுவுக்கு தீர்வு' என்பது.
தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள்(LabourDay அல்லதுLaborDay) என்பது உலகம் முழுவதும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன.
ஒரு முறை காசியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையில் வாடினர். உண்பதற்கு வழியில்லாமல் பல உயிர்கள் செத்து மடிந்தன. பிரம்ம கபாலத்தை நிரப்பினால்தான் அந்தப் பஞ்சம் தீரும் என்பதால், சிவன் பிரம்ம கபாலத்தை எந்தியவராய் பிட்ஷாடன மூர்த்தியாய் திரிந்து கொண்டிருந்தார். அவரது கையிலிருந்த கபாலம் யார் வந்து என்ன பிட்சையிட்டாலும் நிரம்பவேயில்லை. அப்போது பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தாள்.தன்னுடைய அட்சயப் பாத்திரத்திலிருந்து அள்ள அள்ளக் குறையாமல் அனைவருக்கும் அன்னத்தை வாரி வழங்கி அனைவரின் பசிப்பிணி தீர்த்தாள்.சிவனார் கையிலிருந்த பிரும்ம கபாலம் நிரம்பும் அளவுக்கு அதில் உணவினை இட்டாள். அதன் பிறகே அது இறைவனின் திருக்கரத்தில் இருந்து நீங்கியது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னபூரணி தேவி அவதரித்ததும் அட்சய திருதியை நாளில்தான்,அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூரணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத்தொடங்கி, தினமும் 108 முறை சொல்லலாம்.அட்சய திருதியை அன்றைக்கு, முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அரிசிதான் முனை முறியாத அரிசி.கல் உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள் வாங்கலாம். மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி. வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி எழுதுகோல் லட்சுமி படம், அடுப்பு பணப்பெட்டி மணிபரஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய் மஞ்சள்,குங்குமம் போன்றவற்றை, வசதிக்கேற்ப புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, ததும் வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி பூஜையில் வைத்து வணங்கலாம்.அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்றும்,மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரா மணந்தார் என்றும், புராணங்கள் சொல்கின்றன.அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு [பொன்னனர் என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மணம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
சித்திரை, தமிழ் மாதத்தின் முதல் நாள் திருவிழா நிகழும் போது வருஷ பிறப்பு என்றும் அழைக்கப்படுகிறது.பிரம்மதேவனால் பிரபஞ்சம் உருவான நாளாக புத்தாண்டு தமிழ் சமூகத்தினரிடையே கொண்டாடப்படுகிறது. அதேசமயம்,'நல்லிணக்கத்தின் இளவரசர்' இந்திரதேவ், அமைதி மற்றும் மனநிறைவை உறுதிப்படுத்த இந்த நாளில் பூமிக்கு விஜயம் செய்தார் என்றும் சிலர் நம்புகிறார்கள். எனவே, இந்த நாள் ஆண்டின் மிகவும் சாதகமான மற்றும் குறிப்பிடத்தக்க நாளாகக் கருதப்படுகிறது. தமிழ் புத்தாண்டு அன்று, சூரியனின் நிலை தெற்கு மற்றும் வடக்கு அரைக்கோளத்திற்கு இடையில் பூமியின் நடுவில் இருக்கும். இது மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான சமநிலையை குறிக்கிறது.மக்கள் தங்களுடைய வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் பொடித்த அரிசி மாவால் செய்யப்பட்ட'கோலம்' மூலம் அழகுபடுத்துகிறார்கள். இந்த ரங்கோலி அல்லது கோலத்தின் நடுவில்'குத்துவிளக்கு' என்று அழைக்கப்படும் ஒரு விளக்கு வைக்கப்படுகிறது, இது ஒருவரின் வாழ்க்கையில் இருளை அகற்றுவதைக் குறிக்கிறது.இந்த புனித நாளில் மக்கள் சைவ உணவை உண்கின்றனர். மாங்காய் பச்சடி(வெல்லம், மிளகாய், வேப்பிலை, உப்பு, பூக்கள் மற்றும் புளி ஆகியவற்றின் கலவை), அப்பளம், பாயாசம், தேங்காய்ப்பால், பருப்பு வடை, அவியல், தயிர், வேப்பம் பூ ரசம் போன்ற மற்ற சுவையான உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன.பெரியவர்களின் ஆசீர்வாதமாக குழந்தைகளுக்கு பரிசுகளும் பணமும் வழங்கப்படுகிறது.பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று தெய்வங்களை வணங்குவதன் மூலம் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். ஒரு சில தமிழ் குடும்பங்கள் தங்கள் முன்னோர்களின் உயிர் பிரிந்தவர்களின் இரட்சிப்புக்காக'தர்ப்பணம்' போன்ற புனித சடங்குகளை செய்கின்றனர்.தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்
இராஜபாளையம் டைம்ஸ் இணைய தள சேவை 3 ஆம் வருடப் பிறப்பை 15 லட்சம் பார்வையாளர்களுடன் உங்களுடன் கொண்டாடுகிறது. 23 வருடங்களாக இராஜபாளையம் டைம்ஸ் இராஜபாளையத்தில் வலம் வருகிறது .rajapalayamtimes.com (APP) SMARTPHONE ல் PLAYSTORE ல் DOWNLOAD செய்து வாசிக்கவும்.
இயற்கையின் வரப்பிரசாதமான நீரின் முக்கியத்துவம் அறியவே கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ் இயலாது தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இன்றுவரை காணப்படவில்லை.உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் அகலவில்லை. .தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும். அன்றாடம் செய்யும் சிறுசிறு வேலைகளும் தண்ணீர் சேமிப்புக்கு வழிவகுக்கும். பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம் இதன்மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது.உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்..உலக நாடுகளில்40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
உகாதி என்பது இந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தென் மாநிலங்களில் புத்தாண்டின் தொடக்கத்தைக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இது பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வருகிறது. பங்குனி மாதஅமாவாசைக்கு மறுநாளே யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.யுகத்தின் ஆரம்பம் இந்த நாளில் தொடங்கியது என்பதால் யுகாதி என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றனஉகாதி அன்று மக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து, அலங்கரித்து, புதிய ஆடைகளை அணிந்து, உப்பு, இனிப்பு, புளிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு விதமான சுவைகளுடன் செய்யப்படும் பாரம்பரிய உணவான உகாதி பச்சடி போன்ற சிறப்பு உணவுகளைத் தயாரிக்கிறார்கள்.. வேப்பம் பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு போன்றவற்றைச் சேர்த்து இந்தப் பச்சடியைச் செய்கிறார்கள். இதைக் கன்னட மொழியில் 'பேவு பெல்லா என கூறுகிறார்கள்.யுகாதி பண்டிகையின் போது காலையிலையே எழுந்து எண்ணெய் வைத்து குளியல் செய்து புதிய ஆடைகளை அணிந்து இந்த நாளினை கொண்டாடி மகிழ்வார்கள்.வாசலில் மாவிலை தோரணம் கட்டி, வண்ண கோலமிட்டு வீட்டினை அழகுபடுத்துவார்கள்இந்த நாளில் அம்பிகை வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. அதோடு ஒரு சிலர் குலதெய்வ வழிபாடுகளையும் செய்வார்கள் பூஜையில் தெலுங்கு இனத்தவர்கள் பாட்டு பாடி வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.யுகாதி பண்டிகை காலங்களில் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும்.ராஜபாளையம் நகரில் வாழும் தெலுங்கர்கள் எல்லாருமே கொண்டாடி மகிழ்வர் விளையாட்டு போட்டிகள் வைத்து கொண்டாடுவர் .
சென்னை தி.நகரின் பரபரப்பான சாலைகளில் ஒன்று ஜி.என்.செட்டி சாலை. இந்த சாலையில்தான் புதிய பத்மாவதி தாயார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த இடம் திரைப்பட நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமான,தனதுஇடத்தைக் அவர் திருப்பதி பெருமாள் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக ,கோயில் கட்டுவதற்காகக் கொடுத்தார்.நிலத்தின் மொத்த அளவு ஆறு கிரவுண்டு. மூன்று கிரவுண்டு நிலத்தில் தாயார் திருக்கோயிலும் மீதமுள்ள இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம், மண்டபம், மடப்பள்ளி ஆகியன கட்டப்பட்டுள்ளன. சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்வேங்கடேசபெருமாள் கோயில் ஒன்று தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது.திருப்பதியில் பத்மாவதி தாயாருக்குத் தனிக் கோயில் இருப்பதைப் போன்று சென்னையிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் பலரும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதற்கான பணிகளை2019 ம் ஆண்டு தேவஸ்தானம் தொடங்கியது. ஆலயம் கட்டி முடிக்க 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.கடந்த12- ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இன்றுமார்ச்17- ம் தேதி காலை7.30 மணி முதல்7.44 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு காலை10 மணி முதல்11 மணி வரை சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத்தை ஒட்டி வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் பாதுகாப்பு வசதிகளும் முறையாகச் செய்யப்பட்டுள்ளன.