தெலுங்கு வருடப்பிறப்பு
உகாதி என்பது இந்தியாவின் சில பகுதிகளில், குறிப்பாக கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தென் மாநிலங்களில் புத்தாண்டின் தொடக்கத்தைக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இது பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வருகிறது. பங்குனி மாதஅமாவாசைக்கு மறுநாளே யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.யுகத்தின் ஆரம்பம் இந்த நாளில் தொடங்கியது என்பதால் யுகாதி என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன
உகாதி அன்று மக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து, அலங்கரித்து, புதிய ஆடைகளை அணிந்து, உப்பு, இனிப்பு, புளிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு விதமான சுவைகளுடன் செய்யப்படும் பாரம்பரிய உணவான உகாதி பச்சடி போன்ற சிறப்பு உணவுகளைத் தயாரிக்கிறார்கள்.. வேப்பம் பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு போன்றவற்றைச் சேர்த்து இந்தப் பச்சடியைச் செய்கிறார்கள். இதைக் கன்னட மொழியில் 'பேவு பெல்லா என கூறுகிறார்கள்.
யுகாதி பண்டிகையின் போது காலையிலையே எழுந்து எண்ணெய் வைத்து குளியல் செய்து புதிய ஆடைகளை அணிந்து இந்த நாளினை கொண்டாடி மகிழ்வார்கள்.வாசலில் மாவிலை தோரணம் கட்டி, வண்ண கோலமிட்டு வீட்டினை அழகுபடுத்துவார்கள்இந்த நாளில் அம்பிகை வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. அதோடு ஒரு சிலர் குலதெய்வ வழிபாடுகளையும் செய்வார்கள் பூஜையில் தெலுங்கு இனத்தவர்கள் பாட்டு பாடி வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.யுகாதி பண்டிகை காலங்களில் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும்.ராஜபாளையம் நகரில் வாழும் தெலுங்கர்கள் எல்லாருமே கொண்டாடி மகிழ்வர் விளையாட்டு போட்டிகள் வைத்து கொண்டாடுவர் .
0
Leave a Reply