25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இன்றைய தினம்

Apr 13, 2024

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 தமிழ் புத்தாண்டு சந்தோசத்திற்கும்,கொண்டாட்டதிற்கு மான தருணம் இதுகுடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள்.இந்த புனிதமான விடுமுறை நாள் உங்களுக்குமிகுந்த சந்தோசங்களையும்,வளங்களையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்.

Apr 10, 2024

ரம்ஜான் வாழ்த்துக்கள்

மழையும் வெயிலும்மண்ணுக்கு வேண்டும்ஈகையும் நட்பும்மனிதனுக்கு வேண்டும்இந்நன்னாளில் உங்கள்எல்லா துன்பங்களும்கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்கஇனிய ரமலான் வாழ்த்துக்கள்

Apr 08, 2024

"யுகாதி"கொண்டாட்டம்

சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.உகாதி என்கிற சொல் சமசுகிருதம் மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. சமசுகிருதத்தில்"யுக" என்ற சொல்லுக்கு வயது என்றும்,"அடி" என்ற சொல்லுக்கு தொடக்கம் என்கிற பொருள் கணப்படுகிறது."ஓர் ஆண்டின் தொடக்கம்" என்கிற பொருளில்"உகாதி" என்கிற சொல் வந்துள்ளதைக் காணலாம்.உகாதி சித்திரை மாதத்தின் சுத்த பாட்டிமை தினத்தில் வருகிறது. பெரும்பாலும், இப் பண்டிகை, ஆங்கில நாட்காட்டியின் படி, மார்ச்சு மாதக் கடைசியில் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வருகிறது.கர்நாடக மாநிலத்தில் இது "யுகாதி" என்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் "உகாதி" என்றும் அழைக்கப்படுகிறதுதமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு மொழி பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இதனால், இப் பச்சடியில் இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு போன்ற சுவைகள் கலந்துள்ளன. இது, வருகிற புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறதுமகாராட்டிரம் மாநில இந்துக்களால் இந்த நாள் குடீ பாடவா என்று கொண்டாடப்படுகிறது. .சிந்து மாகாணம், சிந்தி இன மக்கள் இதனை சேட்டி சந்த் என்று கொண்டாடுகிறார்கள்மணிப்பூர் வாழ் மக்கள் இதனை "சாஜிபு நொங்மா பன்பா" எனக் கொண்டாடுகின்றனர்.பாலி மற்றும் இந்தோனேசியா வாழ் இந்துக்கள் இதனை நைபி என்று கொண்டாடுகின்றனர்.

Apr 07, 2024

85வது பிறந்தநாள் அஞ்சலி திரு.க.வீ.அழ.ராம.மு.ராம.முத்தையா செட்டியார்

சின்னய்யா அழகப்பர் சிறுவிழிகள் மலர்ந்த தினம் சகலகலாவல்லித் தாய் பன்னெடும் நாள் புரிந்த தவம் முன்னவர் வழிபாட்டால் முந்தி வந்த மூலதனம் முளைத்தெழுந்த தாமரையாய் முகம் காட்டி மலர்ந்த தினம் விளைவிக்க கல்விப்பயிர் விவசாயி ஜனித்த தினம் சளைக்காமல் அள்ளியிட சூரியனார் உதித்த தினம் மழையாகத் தனம் பொழிய மனை தவழ்ந்த மன்னரினம் மகத்தான கல்வித்தாய் மகவொன்றை ஈன்ற தினம் துளைத்திடும் நோவுக்கே தனை ஈந்த வள்ளலினம்.byவள்ளி முத்தையா 

Mar 07, 2024

சிவராத்திரி

 சிவராத்திரி என்பது விழா அல்ல.அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிப்பது  சரியானது.சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதைபுரிந்து கொள்ளலாம்.அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும்,அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றிபோய்க் கொண்டே இருக்கும்.நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன. சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர் .நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம். பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது‘அன்பே சிவம்!’ பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும். அலைபாயும் மனதை கட்டுப் படுத்த சிவராத்திரி மகாவிரதத்தை தத்துவம் உணர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

Mar 07, 2024

மகளிர் தின வாழ்த்துக்கள்

 ஆசைகளைவெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டார்கள்அவர்களிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேசும் போதுஅவர்களின் ஆசைகள் மற்றும் இலட்சியங்கள் அவர்களின்உணர்வுகளை மதிப்போம் துணை யாய் நிற்போம்.

Feb 23, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் பத்தாம் திருநாள்

 பத்தாம் திருநாள் 24.02.2024 சனிக்கிழமை (மாசி மாதம் 12ம் தேதி) பஞ்சமூர்த்தி புறப்பாடு காலை 7.15 7.45 மணிக்குள் கும்ப லக்னத்தில் தீர்த்தவாரி, மாலை 6.00 மணிக்கு பஞ்ச மூர்த்தி புறப்பாடுமண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா - ஸ்ரீமதி R.நளினா ராமலெக்ஷ்மிஸ்ரீ S.R.ஸ்ரீராம் ராஜா - ஸ்ரீமதி S.சாரதா தீபாபஜன் மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர்: திரு. S.S. மாடசாமிராஜா அவர்கள் தலைமையில் வாழும் கலை அமைப்பினர்

Feb 22, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ஒன்பதாம் திருநாள்

 ஒன்பதாம் திருநாள் 23.02.2024 வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 11ம் தேதி) தேர்த்திருவிழாபல்வேறு வாத்யமேள தாளங்களுடன், காலை 6.00 மணிக்கு மேல் கும்ப லக்னத்தில் தேர்த்திருவிழாமண்டகப்படிதாரர்கள் ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்இரவு 7.35 மணிக்கு தேர் உலா பாதையில் வலம் வருதல்.மண்டகப்படிதாரர்கள் ராம்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு நிகழ்த்துபவர்; செல்வன் R.M.பாலு, M.A.M.Phil., மதுரை. மற்றும் குழுவினர்.

Feb 21, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் எட்டாம் திருநாள்

எட்டாம் திருநாள்22.02.2024 வியாழக்கிழமை (மாசி மாதம் 10ம் தேதி) தெப்போற்சவம்இரவு 7.00 மணிக்கு திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மானசரோவர் திருக்குளத்தில் தெப்போற்சவம் தொடர்ந்து அம்பாள், ஸ்வாமி குதிரை வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் 

Feb 20, 2024

மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் ஏழாம் திருநாள்

 ஏழாம் திருநாள்21.02.2024 புதன்கிழமை(மாசி மாதம்09ம் தேதி) திருக்கல்யாணம் துவாதசி திதியும், புனர்பூச நக்ஷத்திரமும், ஸித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில்காலை10.30-11.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் ஸ்வாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.இரவில் ஸ்வாமி, அம்பாள் பூப்பல்லாக்குமண்டகப்படிதாரர்கள் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு  நிகழ்த்துபவர் : ஸ்ரீ B.V.கணேஷ் (இசை பேராசிரியர், மியூசிக் அகாடமி, சென்னை)

1 2 ... 7 8 9 10 11 12 13 14 15 16

AD's



More News