அட்சய திருதியை
ஒரு முறை காசியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையில் வாடினர். உண்பதற்கு வழியில்லாமல் பல உயிர்கள் செத்து மடிந்தன. பிரம்ம கபாலத்தை நிரப்பினால்தான் அந்தப் பஞ்சம் தீரும் என்பதால், சிவன் பிரம்ம கபாலத்தை எந்தியவராய் பிட்ஷாடன மூர்த்தியாய் திரிந்து கொண்டிருந்தார். அவரது கையிலிருந்த கபாலம் யார் வந்து என்ன பிட்சையிட்டாலும் நிரம்பவேயில்லை. அப்போது பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தாள்.
தன்னுடைய அட்சயப் பாத்திரத்திலிருந்து அள்ள அள்ளக் குறையாமல் அனைவருக்கும் அன்னத்தை வாரி வழங்கி அனைவரின் பசிப்பிணி தீர்த்தாள்.சிவனார் கையிலிருந்த பிரும்ம கபாலம் நிரம்பும் அளவுக்கு அதில் உணவினை இட்டாள். அதன் பிறகே அது இறைவனின் திருக்கரத்தில் இருந்து நீங்கியது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னபூரணி தேவி அவதரித்ததும் அட்சய திருதியை நாளில்தான்,அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூரணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத்தொடங்கி, தினமும் 108 முறை சொல்லலாம்.
அட்சய திருதியை அன்றைக்கு, முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அரிசிதான் முனை முறியாத அரிசி.கல் உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள் வாங்கலாம். மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி. வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி எழுதுகோல் லட்சுமி படம், அடுப்பு பணப்பெட்டி மணிபரஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய் மஞ்சள்,குங்குமம் போன்றவற்றை, வசதிக்கேற்ப புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, ததும் வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி பூஜையில் வைத்து வணங்கலாம்.
அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்றும்,மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரா மணந்தார் என்றும், புராணங்கள் சொல்கின்றன.அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு [பொன்னனர் என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மணம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
0
Leave a Reply