குழந்தைகளை அங்கீகரிப்பதற்காக இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது "பால் திவாஸ்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தேதியில் தான் நம்முடைய இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் பிறந்த நாளும் அமைகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்டவர். ஒவ்வொரு குழந்தையையும் அவர் இந்தியாவின் எதிர்காலமாகவே பார்த்தார்.குழந்தைகள் ஒரு தோட்டத்தில் உள்ள மொட்டுகளை போன்றவர்கள், அவர்களை மிகவும் கவனமாகவும்,அன்புடனும் நாம் பரமரிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம், நாளைய குடிமக்கள்” என்று நேரு ஒருமுறை அவருடைய உரையாடலில் கூறியிருந்தார். எனவே இவருடைய பிறந்தநாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.
அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதிகளுடன் முருகன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணமும், முருகன் அவ்வையாரிடம் சுட்ட பழம் வேண்டும்? சுடாத பழம் வேண்டுமா? என கேட்ட திருவிளையாடலும் நடத்தப்படுகிறது.முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை" என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.
தீபாவளியை சூழ்ச்சிகளும், தீமைகளும் தறிகெட்டு ஓட, நன்மையும் அன்பும் நாடிவர இன்பமாய் கொண்டாடுவோம். தீபாவளியைபெரிய சப்தத்துடன் கூடிய வெடிகளை வெடித்து மற்றவர்களை துன்பப்படுத்தாமல், சுற்றுப்புறச் சூழலை நாம் பாது காக்க வேண்டும். இந்த தீபாவளி திருநாள் ஒரு புதிய ஆரம்பம்புதிய கனவுகள் மற்றும் நம்பிக்கைகளுடன் உங்கள் வாழ்க்கையை தொடங்குங்கள்.சகலவிதமான சந்தோஷங்கள், உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் வந்தடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
குஜராத்தில் வதோதராவில் 2022ம் ஆண்டு அக்டோபரில், பிரதமர் மோடி முன்னிலையில் இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின், இன்று முதல் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வர உள்ளது. குஜராத்தின் வதோ தராவில் அமைக்கப் பட்டுள்ள ஆலையில், இன்று முதல் துவங்க உள்ளது. பிரதமர் நரேந் திர மோடி மற்றும் ஸ்பெ யின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இணைந்து, இந்த ஆலையை துவக்கி வைக்க உள்ளனர்.இந்திய விமானப் படை கடந்த 1960-களில் இருந்து “அவ்ரோ ஹாக்கர் சிட்டிலே எச்.எஸ்.748 “ரக விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்த விமானங்கள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள நிலையில், இவற்றுக்கு மாற்றாக ஸ்பெயனின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 C- 295 ரக விமானங்களை வாங்க. 2021-ம் ஆண்டு” ஏர்பஸ் டிபன்ஸ் அண்டு ஸ்பேஸ்” நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.21,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின்படி, ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் ஆலைகளில் இருந்து 16 விமானங்கள் இந்தியாவுக்கு தயாரித்து அனுப்பப்படும் என்றும், மீதமுள்ள 40 விமானங்களை இந்தியாவிலேயே” டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ்” நிறுவனத்துடன் இணைந்து ஏர்பஸ் தயாரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது., இன்று முதல் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வர உள்ளது
புகழ் பெற்ற நகைக் கடையான JOY ALLUKAS இன் நகைக் கண்காட்சி இராஜபாளையத்தில் இன்று முதல் 3 நாட்கள் ( 25, 26, 27)-ம் தேதி வரை நடைபெறுகிறது
சரஸ்வதி தேவி என்பவள் வெள்ளை தாமரையில் அமர்ந்து சாந்தம் நிறைந்த பார்வையோடு கலைகளின் அம்சமாக திகழக்கூடிய ஒரு தெய்வீக அம்சம் ஆகும். நவராத்திரி என்ற ஒன்பது நாட்கள் கொண்ட விழாக் காலத்தில் 9-வது நாளில் சரஸ்வதி பூஜை செய்யப்படுகிறது. அடுத்த நாள் விஜயதசமி என்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படு கிறது. அந்த நாளில் தான் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் பூஜை செய்கிறார்கள். நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நோட்டுப் புத்தகங்கள், லேப்டாப், செக் புத்தகங்கள், கணக்கு புத்தகங்கள் ஆகிய வற்றையும் பூஜையில் வைத்து வழிபடுவது சம்பிரதாயமாகும்.கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு உரிய நாள் ஆயுத பூஜை என்று சொல்லப்படக்கூடிய சரஸ்வதி பூஜை நாள் ஆகும். வீடுகள் மற்றும் அலுவல கங்களில் உள்ள அனைத்து பொருட்கள், இயந்திரங்கள், வாகனங்கள், புத்தகங்கள், கதவுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் சுத்தம் செய்து சந்தனம்,குங்குமம் இட்டு அலங்கரிக்கப்படும். மாவிலை தோரணம் மற்றும் வாழை மரங்கள் கட்டி பூஜைகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.'செய்யும் தொழிலே தெய்வம் என்ற ஆன்மீக பண்பாட்டு மனோபாவ அடிப்படையில் அனைத்து தொழிலை செய்பவர்களும் தம்முடைய தொழில் மற்றும் தொழில் கருவிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் அளித்து வணங்கக்கூடிய நாளாகவும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நாட்கள் அமைகின்றன.
மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும்.ஆனால் மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் சிறப்பாக திகழ்கிறது இச்சிறப்பு பெற்ற மகாளய அமாவாசை அக்டோபர் 02 ம் தேதி புதன் கிழமை மகாளய அமாவாசை தினம் வருகிறது.மகாளய அமாவாசை அன்று செய்ய வேண்டியவை-1.பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.2.பிறகு பகல் பொழுதில் முன்னோர்களின் படத்திற்கு முன் இலை பரப்பி அதில் அவர்களுக்கு பிடித்த உணவுகளை பரிமாறி வைத்து வழிபட வேண்டும்.3.மகாளய அமாவாசை அன்று கண்டிப்பாக யாராவது ஒருவருக்காவது உணவு, உடை போன்ற ஏதாவது ஒன்றை தானமாக வழங்க வேண்டும்.4.நிறைவாக மாலை 6 மணிக்கு பிறகு வீட்டில் உள்ள முன்னோர்களின் படத்திற்கு முன்பு தனியாக ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தின் முக்கிய தலைவரான மகாத்மா காந்தியின் பிறந்தநாளை , இந்தியாவில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.இது ஒரு தேசிய விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது . காந்தியின் அகிம்சை, சத்தியம் மற்றும் கீழ்ப்படியாமை ஆகியவற்றின் கொள்கைகளை நினைவு கூறும் நாளாகும். அவரது பாரம்பரியத்தை மதிக்கவும், அமைதி மற்றும் நீதி பற்றிய அவரது போதனைகளை மேம்படுத்தவும் ,நாடு முழுவதும் பல நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது.. புதிய அனுபவங்களுடன் சுற்றுலா நமக்கு நிறைய மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகளை வழங்குகிறது. சுற்றுலா என்பது ஒரு இடத்திற்குச் செல்லும் மக்களுக்கு விடுமுறை மற்றும் சேவைகளை வழங்கும் மற்றும் ஏற்பாடு செய்யும் வணிகமாகும். ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் கூற்றுப்படி, சுற்றுலா என்பது தனிப்பட்ட அல்லது தொழில்முறை நோக்கங்களுக்காக அவர்களின் வழக்கமான சூழலுக்கு வெளியே உள்ள பிற இடங்கள் அல்லது நாடுகளுக்கு மக்களை நகர்த்துவதை முன்வைக்கிறது. நமது பயணம் விடுமுறையாக இருந்தால், நம் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் நாட்டிற்குள் அல்லது நாட்டிற்கு வெளியே பல இடங்களுக்குச் சென்று, வெவ்வேறு இடங்களின் வெவ்வேறு கலாச்சாரங்களைப் பற்றிய சில அறிவைப் பெறலாம்.ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு 1980 செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினத்தை சர்வதேச அனுசரிப்பாகக் கொண்டாடியது.ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் சிலைகள் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே இந்த தேதி உலக சுற்றுலா தினமாக தேர்வு செய்யப்படுகிறது.1997 இல் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த அதன் பன்னிரண்டாவது அமர்வில், ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் பொதுச் சபையானது, உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுவதில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் பங்காளியாக செயல்பட ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தது.நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மறைந்த இக்னேஷியஸ் அமடுவா அடிக்பி, செப்டம்பர் 27ஆம் தேதியை உலக சுற்றுலா தினமாக மாற்றும் யோசனையை முன்வைத்தவர்.ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் நாட்டில் உலக சுற்றுலா தினத்தை ஒரு சிறப்பு கருப்பொருளுடன் கொண்டாடுகிறோம்.ரியாத், சவுதி அரேபியா மற்றும் உலக சுற்றுலா தின தீம் 2023 "சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு" ஆகும்.உலக சுற்றுலா தினம் 2024 "சுற்றுலா மற்றும் அமைதி" என்ற கருப்பொருளுடன் ஐரோப்பாவில் நடத்தப்படுகிறது.உலக சுற்றுலா தினம் 2025 தெற்காசியாவில் "சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்" என்ற கருப்பொருளுடன் நடத்தப்படுகிறது.சுற்றுலாத் துறைக்கு மரியாதை செலுத்தும் வகையில், சுற்றுலாத் துறையில் பணிபுரிபவர்களைக் கௌரவிப்பதற்கும், பயணம் செய்வதற்கும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.சர்வதேச சமூகத்தின் கலாச்சார, அரசியல், சமூக மற்றும் பொருளாதார விழுமியங்களை பாதிக்கும் வகையில் சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.உலக சுற்றுலா தினம், முழு உலகத்தின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் சுற்றுலா எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் விளக்குகிறது.
மஹாபரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு திதி,, தர்ப்பணம் செய்து, யம தீபம் ஏற்றினால் யமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்குச் செல்லவேண்டிய, நம் முன்னோர்களின் வேதனையைக் குறைத்து, சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார் என்பது ஐதீகம். மகாளய பட்சத்தின் போது வருகை தரும் பித்ருக்களுக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது யம தீபம் மட்டுமே.மகாளபட்சத்தில் வரும் மஹா பரணி அன்று யமதீபம் ஏற்றி யமதர்மராஜாவை வழிபட வேண்டும்.நாட்டில் உள்ள மிக புண்ணிய தலங்களில் மிகமுக்கிய மானதாக கருதப்படுவது காசியும், கயாவும் தான் இங்கு சென்று இறந்தாலும் சரி, இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தாலும் சரி அவர்கள் உடனடியாக முக்தியை அடைவார்கள் என்பது நம்பிக்கை. ஆனால் அனைவராலும் காசிக்கோ அல்லது கயாவிற்கோ சென்று முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாது. ஆனால் அங்கு சென்று தர்ப்பணம் கொடுத்த பலனை தரக் கூடிய அற்புதமான நாள் தான் மகா பரணி,மகாபரணியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்கள் இறை நிலையாகிற முக்தியை பெறுவார்கள் என்பது ஐதீகம். மகாளய பட்சத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு சொல்லப்படும் மிக முக்கியமான, பித்ருக்களின் ஆசிகளை பெறுவதற்குரிய நாளாக கருதப்படுவது மகாபரணி நாளாகும்.