இன்று சென்னை திருப்பதி பத்மாவதி தாயாருக்கு புதிய கோயில் கும்பாபிஷேகம்
சென்னை தி.நகரின் பரபரப்பான சாலைகளில் ஒன்று ஜி.என்.செட்டி சாலை. இந்த சாலையில்தான் புதிய பத்மாவதி தாயார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த இடம் திரைப்பட நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமான,தனதுஇடத்தைக் அவர் திருப்பதி பெருமாள் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக ,கோயில் கட்டுவதற்காகக் கொடுத்தார்.நிலத்தின் மொத்த அளவு ஆறு கிரவுண்டு. மூன்று கிரவுண்டு நிலத்தில் தாயார் திருக்கோயிலும் மீதமுள்ள இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம், மண்டபம், மடப்பள்ளி ஆகியன கட்டப்பட்டுள்ளன.
சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்வேங்கடேசபெருமாள் கோயில் ஒன்று தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது.திருப்பதியில் பத்மாவதி தாயாருக்குத் தனிக் கோயில் இருப்பதைப் போன்று சென்னையிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் பலரும் பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அதற்கான பணிகளை2019 ம் ஆண்டு தேவஸ்தானம் தொடங்கியது. ஆலயம் கட்டி முடிக்க 10 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
கடந்த12- ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இன்றுமார்ச்17- ம் தேதி காலை7.30 மணி முதல்7.44 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு காலை10 மணி முதல்11 மணி வரை சீனிவாச திருக்கல்யாணம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேகத்தை ஒட்டி வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் பாதுகாப்பு வசதிகளும் முறையாகச் செய்யப்பட்டுள்ளன.
0
Leave a Reply