உலக சுற்றுச்சூழல் தினம்.
பெட்ரோல் டீசலில் ஓடும் வாகனங்களைவிடஎலெக்ட்ரிக்கில் ஓடும் வாகனங்களால்தான் சுற்றுச்சூழலுக்குப்பெரிய ஆபத்து!’ அந்த உண்மைஇதுதான். எலெக்ட்ரிக்வாகனங்கள் சத்தம் போடாது; இரண்டாவதுவாகனங்களில் புகையே வராது. அட, எக்ஸாஸ்ட் பைப் என்று சொல்லக்கூடிய சைலன்சரே இருக்காது
இதுகொஞ்சம் வியக்கத்தக்க உண்மை. இது காலங்காலமாகச்சொல்லப்பட்டு வந்தாலும், கான்பூரில் உள்ள IIT (Indian Institute of Technology)–யின் மூலம் லேட்டஸ்ட்டாக நடத்தப்பட்டஓர் ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஸ்டடி ரிப்போர்ட்இப்படிச் சொல்கிறது: ‘‘ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி வாகனங்களைஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்கள் நாம் நினைப்பதுபோல், எக்கோ ஃப்ரெண்ட்லியான கார்கள் இல்லை!’’
இந்தப் படிப்பாராய்ச்சியின்படி, எலெக்ட்ரிக் கார்கள், ஒரு சாதாரண ICE வாகனத்தைவிட (பெட்ரோல்/டீசல் வாகனம்) சுமார் 15-50% எமிஷனைத் தன் வாழ்நாளில் வெளியிடுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் 15 – 60% அதிகமாக இருக்கிறதாம் சாதா ICE வாகனங்களைவிட! ‘‘உண்மைதான்; நாம் நினைப்பதுபோல் எலெக்ட்ரிக் வாகனங்கள்,ICE வாகனங்களை ஒப்பிடும்போது நல்லஎக்கோ ஃப்ரெண்ட்லி கார்கிடையாது. பொதுவாக, நாம்வாகனம் ஓடும்போது வெளியிடப்படும் நச்சுப்புகையை மட்டும் கணக்கிடுகிறோம்.TPE(TailpipeEmission)படி… அதாவது,எக்ஸாஸ்ட் புகையை மட்டும்வைத்துக் கணக்கிட்டால்,ICE வாகனங்கள் புகையை உமிழ்வது உண்மைதான். ஆனால், அந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க நாம்எவ்வளவு நச்சுப்புகையை வெளியிடுகிறோம் தெரியுமா?
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எது முக்கியம்? லித்தியம் அயன் பேட்டரி! அந்த Li பேட்டரிக்கு முக்கியமான 3 மூலப்பொருட்கள் லித்தியம், கோபால்ட், மாங்கனீசு (Lithium, Cobalt, Manganese). ஒருஎலெக்ட்ரிக் வாகனத்துக்குப் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரியில் சுமார் 8 கிலோ லித்தியம்,14 கிலோ கோபால்ட் மற்றும்20 கிலோ மாங்கனீசு இருக்கும். இவை தயாரிப்பதற்கு நீர் மற்றும் மண்வளம் நாம் நினைப்பதைவிட அதிகமான அளவில் மாசுபடும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இது மண் அரிப்பையும் ஏற்படுத்தி, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தையும் காலி செய்யும் என்பதும் உண்மை.என்ன தீர்வு என்றால்,இந்த கான்பூர்IIT ஆய்வில்,அதற்கு ஒரு வழிசொல்லியிருக்கிறார்கள்.அதாவது, ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் இதற்கு நல்லதீர்வு என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.
பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக வகை சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாசுபாடு நமது நிலம், நீர், காற்றை மாசுபடுத்துகிறது. பருவநிலை மாற்றம் சொ காரணமாக வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் பனிப்பாறைகள் உருகி கடல்நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளது. நவீன வளர்ச்சி என்ற பெயரில் அதிகரித்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு காரணமாக பூமியின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. இந்தாண்டு மையக்கருத்தாக 'பிளாஸ்டிக் மாசுவுக்கு தீர்வு' என்பது.
0
Leave a Reply