25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இன்றைய தினம்

Aug 16, 2025

கிருஷ்ண ஜென்மாஷ்டமி

மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தைபோற்றும் விதமாககொண்டாடப்படுவதே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகும்.இது மக்களுக்கு கலாச்சாரம்,ஒற்றுமை,தெய்வீக குணங்கள்ஆகியவற்றை கற்றுத்தரும் விதமாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, ரோகிணி அஷ்டமிஉள்ளிட்ட பலபெயர்களால் இந்தபண்டிகை உலகம்முழுவதிலும் உள்ளமக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

Aug 15, 2025

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

பல வண்ணங்கள், வடிவங்கள் உணர்வுகள், மொழிகள் ஆகியவை உள்ளன. எனினும், அனைத்து இந்தியர்கள் ஒன்று!சுதந்திர பூமியில் நாம் சுவாசிப்பதற்கு தங்கள் சுவாசங்களை இழந்த தியாகிகள் அனைவருக்கும் நன்றி செலுத்துவோம் இந்த நன்னாளில்.தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Aug 08, 2025

வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள்

வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள். மஹாலட்சுமி தாயாரை போற்றி வணங்கி அனைத்து செல்வ வளங்களையும் பெறுவோம். 

Jul 30, 2025

சர்வதேச நண்பர்கள் தினம் .

அனைவரது வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.  இன்பம், துன்பம் என அனைத்து சூழல்களிலும் துணையாக இருப்பவர்களே உண்மையான நண்பர்கள். அனைவருக்கும் இருக்கும் ஒரே உறவு 'நண்பர்கள்'. மற்ற உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வுசெய்யக்கூடியது. பல வேறுபாடுகளை கடந்தது நட்பு மட்டுமே. சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட நண்பர்களை அதிகம் சேர்ப்பது முக்கியம். நண்பர்கள் தினம் பல நாடுகளில், வெவ்வேறு தேதியில் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா., சார்பில் ஜூலை 30ல் சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

Jul 29, 2025

காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்தும் புலிகள்.

உலகில் வாழும் புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளன. அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க கோரிஜூலை 29ல்உலகபுலிகள்தினம்கடைபிடிக்கப்படுகிறது.இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, வியட்நாம், பூடான், நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, கம்போடியா, சீனா, தைவான், லாவோஸ், ரஷ்யா என 13 நாடுகளில் புலிகள் வாழ்கின்றன. புலிகள், தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால் காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது. காடுகளில் உற்பத்தியாகும் நதிகளையும் பாதுகாக்கிறது. இயற்கையை பாதுகாக்கும் புலிகளை பாதுகாக்கஉலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Jul 28, 2025

ஸ்ரீவில்லிபுத்துார்ஆண்டாள்கோயிலில்இன்றுஆடிப்பூரதேரோட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்(ஜூலை 28) காலை 9:10 மணிக்கு துவங்க இதனை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஸ்ரீரங்கம் ரெங்க நாதர், மதுரை கள்ளழகர் கோயில்களில் இருந்து நேற்று பட்டு, மங்களப் பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்  கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்களைகோயில் யானை ஜெயமால்யதா முன் செல்ல மங்களப் பொருட்கள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது.

Jul 11, 2025

உலக மக்கள் தொகை தினம்.

 உலக மக்கள் தொகை தினம்  ஜூலை 11-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாக ஆணையம் 1989-ம் ஆண்டு முதல் ,உலக மக்கள் தொகை தினத்தை அனுசரிக்கப் பரிந்துரைத்தது. உலக மக்கள் தொகை தினம் என்பது உலகளாவிய மக்கள் தொகை வளர்ச்சி, மக்கள் தொகை மாற்றங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கியமான பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. 

Jul 07, 2025

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான முருகப்பெருமானின் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 2023ல் திருப்பணிகள் துவங்கின. பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை, 6:15 முதல், 6:50 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றது. . 6100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப் பட்டன. கோயிலுக்குள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 12ம் கால யாக சாலை பூஜை அதிகாலை 4:00 மணிக்கு நடை பெற்றது. காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் ராஜகோபுர கும்ப கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம்நடை பெற்றது.அதேநேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர்,வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர், உள்வெளி பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபி ஷேகம் நடை பெற்றது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க 20 ட்ரோன் வசதி செய்யப்பட்டது.

Jul 02, 2025

ROTARY CLUB OF RAJAPALAYAM Cordially invites you to the INSTALLATION CEREMONY

ROTARY CLUB OF RAJAPALAYAM  Cordially invites you to the  INSTALLATION CEREMONY  Of Rtn. Srimaan Ramachandra Raja  ,As  PresidentRtn.Dr.N. Karthikeyan, as SecretaryFor the year 2025 - 2026 ,On 02/07/2025, Wednesday 6.30 pm ,@PRR Rotary Hall, Cotton Market, Rajapalayam.Chief Guest - Rtn. PDG AKS V.R. MUTHUEND POLIO NOW COORDINATOR ZONE. 5 Year 2025-2028Guest of Honour - Rtn PDG H. SHAJAHAN Special Guest - P.V. ABINAV RAJAManaging Director, Ramco Systems Ltd.,FelicitationRtn. Dr. M. RADHA MD.DM., Asst Governor, Zone-11Rtn. PAG. T. MAYIL BALASUBRAMANIANRtn. R. Ananthi, President. Rtn.Dr.N. Karthikeyan,Secretary 

Jun 21, 2025

ஆரோக்கியமான வாழ்விற்கான யோகா* என்ற தலைப்பில் யோகா பற்றிய அறிமுக வகுப்பு ஆன்லைனில் நடைபெற உள்ளது.

உங்களின் உடல், மன ஆரோக்கியத்திற்காக, சர்வதேச யோகா தினத்தில் யோகா கற்றுக் கொள்ள ஓர் வாய்ப்பு.ஞானோதயம் கல்வி அறக்கட்டளை* 21.06.2025 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடத்தும்  *ஆரோக்கியமான வாழ்விற்கான யோகா* என்ற தலைப்பில் யோகா பற்றிய அறிமுக வகுப்பு ஆன்லைனில் நடைபெற உள்ளது.கட்டணங்கள் ஏதுமில்லை.இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள (கூகுள் பார்மை)https://forms.gle/dRAgtxYTSfwD8mec9Google form பூர்த்தி செய்து whatsapp குரூப்பில் இணைந்தால்  காலை 10 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் யோகா வகுப்பில் பங்கேற்கலாம்.WhatsApp group Link https://chat.whatsapp.com/LvatF8EYKLJFqSf3Kd8Ujc

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News