25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

Dec 23, 2021

தூவானம்  2020 2021

  இரு மகான்களின் திருவிழா  ஒரே தினத்தில்! அதே நாளில் எம் பள்ளி  பாரதியின், பிரதிகளின் அணிவகுப்பு மேலும்  சிறப்பு.        பாரதிகளின் திறமைகளைப் பார்க்க வந்த சிறப்பு விருந்தினர்கள் குழந்தைகளோடு குழந்தைகளாகவே மாறிப் போன விதம் அருமை. திரு. சோமசுந்தரம் அவர்களின் சிலேடைப் பேச்சு அற்புதம்.         வருங்கால இந்தியாவின், நேர்மையான தலைவர்களை உருவாக்க ஆசைப்படும் உன்னத தலைவரான திரு.ஷியாம் அவர்கள், உயரிய கருத்துக்களை எடுத்துச் சொன்ன விதம் மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.        எம்பள்ளியின் பாரதிகளிடையே நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்தியும், வெளிக்கொணர வைத்தும்,கதை சொல்லும் ஆசானாக மாறி வாழ்க்கையின் மதிப்புகளை எடுத்துச் சொன்ன திரு.வெங்கடேசன் அவர்களின் பேச்சு பாராட்டுக்குரியது.      மாணவர்கள், பாரதியின் பிம்பமாகவே மாறி அவருடைய கருத்துக்களையும், உணர்வுகளையும்  பேச்சுத் திறமை மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினார்கள்.        பார்ப்பவர்களுக்கும் பாரதியின் எண்ணங்களை நினைவூட்டி அவர்களையும் பங்களிக்க தூண்டிய மாணவர்களின் செயல்பாடுகள் வியப்பைத் தந்தது.         பாரதி கண்ட புதுமை பெண்களாய் வலம் வரும் பள்ளி தாளாளர் திருமதி.ஆனந்தி மற்றும் பள்ளி தலைமையாசிரியை திருமதி. ஜெயபவானி அவர்களும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற  மாணவச் செல்வங்களைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.   

Dec 21, 2021

இலக்கிய நிகழ்ச்சியின் சிறப்பும் அதன் பெருமையும்     

 இராஜபாளையம்ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆங்கிலப் பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர் திரு. இராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நல்கி விருந்தினரை அறிமுகம் செய்ய பள்ளித் தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் நினைவுப் பரிசை வழங்கி சிறப்பு செய்தார்.       'படிக்கும் பொழுது நீங்கள்தான் ஆசிரியர்! பரீட்சை எழுதும்போதும் நீங்கள் தான் ஆசிரியர்! உங்களது ஆசிரியரோ பெற்றோர்களோ உங்களுக்கு வெறும் உதவியாளர் தான்!' என்றுரைத்து சிந்திக்க வைத்தார்.       'உங்களுக்கு பிடித்த நபர் யார் என்று முதல் கேள்வி கேட்க அதற்கு ஒரு மாணவி என் அம்மா என்று கூறினார். இரண்டாவது மாணவி எனக்கு என்னைத் தான் பிடிக்கும் என்றார்'. ஆனந்தா வித்யாலயா பள்ளிக்கூட மாணவர்கள் அற்புதமானவர்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறி சந்தோஷப்பட்டார்.      இரண்டாம் கேள்வியாக உங்களுக்கு பிடித்த மூன்று பறவைகள் ஏதேனும் சொல்லுங்கள் என்று கேட்க. ஒரு மாணவன் எனக்கு கழுகு, மயில்,கிளி என்று பதில் கூறினான். அவர் தமக்குப் பிடித்த பறவைகள் மூன்றை வரிசைப்படுத்தினார். அவை சமூகத்திற்கு எப்படியெல்லாம் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை சிலாகித்துப் பேசினார். காகம் கிடைத்ததைப் பகிரும். சுற்றுப்புறத்தை சுத்தம் செய்யும். கொக்கு வாய்ப்பிற்காக காத்திருக்கும். கோழி இரைக்காக தொடர்ந்து முயற்சி செய்யும். என்பதை சுவைபடக் கூறினார்.      மூன்றாம் கேள்வியாக உங்களுக்கு பிடித்த மூன்று பூக்கள் எவை என்று கேட்டார்? அதற்கு ஒரு மாணவி, தாமரை, செம்பருத்தி, ரோஜா என்று கூறினார். மூன்றும் அழகாக இருக்கும். ஒன்று சாமிக்கு வைக்கப்படும் இன்னொன்று பெண்கள் சூடுவர். அவருக்கு பிடித்த மூன்று பூக்களை கூறினார். அவை வாழைப்பூ, பருத்திப்பூ, எருக்கம்பூ அதில் ஒன்று சாப்பிட மற்றும் ஒன்று உடை தயாரிக்க, அடுத்ததாக மருத்துவத்திற்கு உதவும் என்று கூறினார். அவரின் பொன்னான நேரத்தில் பல விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைந்தோம்.      இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் M.S சுப்புலட்சுமி நினைவு இசைப்பள்ளி நிறுவனர் திரு உமாசங்கர் அவர்கள் கலந்து கொண்டு ஒரு பாடலை இசையோடு சொல்லித்தந்து மாணவர்களை பாட செய்து மகிழ்வூட்டினார்.      இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக உற்சாகமூட்டுவதாக அமைந்திருந்தது.                                    

Dec 18, 2021

இண்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயா இனிதான துவக்கம்

 இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ்சிட்டியின் சார்பாக இண்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயாதொடங்கும் நிகழ்ச்சி ரோட்டரி கிளப் தலைவர் M.C..பீமானந்த்அவர்கள் தலைமையில், பள்ளித் தாளாளர் ஸ்ரீமதி. ஆனந்தி அவர்கள்முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக Rtn.T.சரவணராஜ் அவர்கள் (தலைவர் ,ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை ) கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் திரு..காளிதாஸ் அவர்கள்அனைவரையும் வரவேற்க, Rtn. வெங்கடபெருமாள் அவர்கள் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்ய, பள்ளித் தாளாளரும், ரோட்டரி கிளப்தலைவரும் விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தியும், நினைவுப்பரிசு வழங்கியும் கௌரவம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் இண்ட்ராக்ட்கிளப் தலைவராக மாணவர் K. சந்தீப் மற்றும் செயலாளராக மாணவிR.A.தாமரைச்செல்வி பதவி ஏற்றுக் கொண்டனர்.சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் தம்எதிர்காலத்தை சிறப்பாக்கிக் கொள்ள தங்கள் தனித் திறமைகளைவளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதனை பல்வேறு தலைவர்களைமேற்கோள் காட்டியும், அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களையும்கூறி விளக்கினார். "வெற்றியாளர்கள் மாறுபட்ட செயல்களை செய்யமாட்டார்கள். அவர்கள் செயல்களை சற்று வித்தியாசமாகசெய்வார்கள். மாணவர்கள் படிப்புடன் சேர்த்து தங்களுக்கான தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வருங்கால சமுதாயத்தைப்பாதுகாக்க உடலுடன் மனதினையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்என்றும் கூறினார்.மேலும் மகாத்மா காந்தி, நேரு, காமராஜர் மற்ற பிற தேசதலைவர்கள் எவ்வாறு தன்னலம் கருதாமல் பொது நலத்திற்காகதங்களை தியாகம் செய்தனர் என்பதையும் மிகச் சிறப்பாகவிளக்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர், ரோட்டரி கிளப் தலைவர்மற்றும் செயலாளர் வாழ்த்துரை வழங்க மாணவர் செயலாளர்தாமரைச்செல்வி நன்றியுரை கூற தேசிய கீதத்துடன் விழா இனிதேநிறைவுற்றது. விழாவில் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

Dec 18, 2021

நிதி அறிவும், சிந்தனை வளமும்

 இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்நிதி கல்வி அறிவு (Financial Literacy) நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக Rtn.பார்த்தசாரதி அவர்கள் கலந்து கொண்டார். பள்ளித் தாளாளர்திருமதி ஆனந்தி அவர்கள் அனைவரையும் வரவேற்ற. பின் விருந்தினருக்குநினைவுப்பரிசு கொடுத்து சிறப்பு சேர்த்தார். பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் Rtn. பார்த்தசாரதி அவர்களை அவையினருக்குஅறிமுகம் செய்தார்.திரு பார்த்தசாரதி அவர்கள் தமது உரையில் பல விஷயங்களை மிகத்தெளிவாக விளக்கிக் கூறினார். “உங்கள் கையில் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்என்ன செய்வீர்கள்?” என வினவ ஒவ்வொருவரும் தத்தம் பதில் களை கூறினர்.பண மதிப்பு தற்போது அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? என்று கேட்கஅதற்கு மாணவன் தங்கப்பாண்டி, பண மதிப்பு குறைந்து கொண்டே வருகிறதுஎன்பதை அழகாக, ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்கினான். அதாவது தான்எல்கேஜி படிக்கும் பொழுது ஸ்கூல் Bag விலை ரூபாய் 200 என்றும் தற்போதுஅதன் விலை ரூபாய் 1000 என்றும் கூறினான். இதுவே பணமதிப்புகுறைந்ததற்கான அடையாளம் என்றான். தன்னுடைய விளக்கக் காட்சிகள்மூலம், “நாம் உறங்கும் போதும், நமக்காக பணம் வேலை செய்ய, நாம் என்னசெய்ய வேண்டும்?” என்று ஒரு கேள்வியை எழுப்பி சிந்திக்க வைத்தார்.ஒவ்வொருவரும் தம்முடைய மொத்த வருமானத்தில் 30 சதவீதம் சேமித்து,அதை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். குறிப்பாக பிட்காயின், கிரிப்டோகரன்சி, டிமேட் (DEMAT) A/c, கடன்பத்திரங்கள், பங்குகளில் முதலீடு, தங்கத்தில் முதலீடு பற்றியும் கேட்கப்பட்டகேள்விகளுக்கு Rtn. பார்த்தசாரதி அவர்கள் தகுந்த பதில் கொடுத்துஅனைவரையும் உற்சாகப்படுத்தினார்.மேலும் அவர்கள் குறும்பட காணொளி மூலம் சிறப்பு குழந்தைகளுக்காகஒரு குழந்தையின் சகோதரி, தானாகவே எடுத்து உண்ணும் ஸ்பூனைக்கண்டுபிடித்து, அதை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து அதன் மூலம் அந்தசகோதரிக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிட்டியது என்றும் கூறினார்.Rtn.பார்த்தசாரதி அவர்களின் மாணவர்களுடனான உரையாடலும்,அணுகுமுறையும், மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. இந்தநிகழ்வில் கணினி ஆசிரியர் திரு காளிதாஸ் நன்றி நவில நிகழ்ச்சி இனிதேநிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியை நிர்வாக அலுவலரும், ஆசிரியர்களும் சிறப்பாகஏற்பாடு செய்திருந்தனர்.

Dec 07, 2021

வனவாழ்வின் உயிர்ப்பும் ஒளிப்பதிவின் உன்னதமும்

 இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் My experiences in wild lands என்ற தலைப்பில்புகைப்படக் கலை சம்பந்தமான ஒரு அருமையான நிகழ்ச்சிநடைபெற்றது. அற்புதமான அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஒளிப்பதிவாளர்ரமணீதரன் சார் அவர்களும் கிருஷ்ணன் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டனர்.பள்ளித் தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் தலைமையேற்கதிருமதி இந்திரா வரவேற்புரை நல்க பள்ளி முதல்வர் திருகோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களைஅறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு பள்ளித்தாளாளர் நினைவுப்பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தார்.ரமணீதரன் சார் அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது மிகுந்த மகிழ்வாய் இருந்தது. அவர் தான் எடுத்த பலவிதமானபறவைகள், வனவாழ் உயிரினங்களின் புகைப்படங்கள்வாழ்க்கைமுறை இருப்பிடம் மற்றும் உணவுப் பழக்கம் பற்றிய பலசுவையான தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார். புலிகளும்,மான்களும் யானைகளும் பறவைகளும் கரடிகளும் செந்நாய்களும்இன்னும் வன உயிரினங்களும் எங்களோடு ஆனந்த வன நிகழ்ச்சியில்சர்வ சுதந்திரமாக உலா வந்தனர்.மாணவர்களை உற்சாகக் கடலில் அமிழ்ந்தனர். ஆசிரியர்கள்வானளவு மகிழ்ச்சியில் திளைத்தனர். அனைவரும் மிகுந்தஉற்சாகத்துடன் கைத்தட்டி ஆர்ப்பரித்து நிகழ்ச்சியின் சிறப்பு பெருமைசேர்த்தது. side-by-side ஏகப்பட்ட அதிசயங்கள் ஒவ்வொன்றையும்நிதானமாக விளக்கியது அருமையிலும் அருமை. யானைகள் பற்றிக்கூறும்போது யானைகள் கூட்டமாக வாழும் என்றும் உடல் அசைவின்மூலம் எதிரில் உள்ளவர்களை எச்சரிக்கும் என்பதனை உலக அளவில்பரிசு பெற்ற தனது புகைப்படங்களைக் கொண்டு விளக்கினார்.புலிகளின் பெயரை சொல்ல சொல்ல வியந்து போனோம் அங்கேநேரில் சென்று பார்த்தது போல் இருந்தது யானைகள் புலிகள் இவற்றின்தாக்குதல் முறைகள் சில்லிட வைத்தது.மாணவர்களுக்கு மான்களில் பல்வேறு இனங்களையும்அவற்றில் ஆண் பெண் இனங்காண்பது எப்படி என்பதையும் புலிகள்பற்றிய அரிதான செய்திகளை விளக்கமாகவும் சுவையாகவும் எடுத்துக்கூறினார். புலிகளின் வேகம் உடல் எடை அவர்களுக்கு பெயரிடும்முறை ஆண் மற்றும் பெண் புலிகளைக் கண்டறியும் முறை பற்றியும்மிக ஆர்வமுடன் எடுத்துரைத்தார்.நிறைவாக நாம் வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வனஉயிர்கள் பெருகி காட்டின் வளம் பெருகினால் நாடு செழிக்கும் என்றகருத்தையும் ஆணித் தரமாய் கூறி மாணவர்கள் உள்ளங்களில்அழுத்தமாய் பதிய வைத்தார்.சிறப்பு விருந்தினர்களின் மிகச்சிறந்த ஒளிப்படங்களுக்காகசர்வதேச விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது என்றதகவல் அறிந்ததில் மகிழ்ந்தோம். அவரின் துறை சார்ந்த செயற்பாடுகள்எங்களை அதிசயிக்க வைத்தது.சந்தோசங்களை அலை அலையென பரவச் செய்த நண்பருக்குநன்றி .மிகுந்த அன்பாய் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட கிருஷ்ணன்அவர்களுக்கும் நன்றி இருவருக்கும் ஆனந்தா வித்யாலயா சார்பாகமனம் நிறைந்த அன்பை மகிழ்வை பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Dec 01, 2021

குழந்தைகள் தின விழாவின் முத்தாரம்

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 , 7 மற்றும் 8  ஆம் வகுப்பு மாணவர்களிடம்  உரையாட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின்  மாநிலச் செயலாளர் கண்மணிராசா வந்திருந்தார். தன்னை மாணவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட பின் அவர்கள் அனைவரின் பெயரையும் ஒவ்வொன்றாக கேட்டறிந்தார். அவர்களில் ஒருவர் பெயர் தமிழரசு.அந்த மாணவனின் பெற்றோருக்கு தமிழ் மொழியின் மேல் உள்ள விருப்பத்தால் வைத்திருக்கலாம் என்று கூறினார் இன்னொரு மாணவனின் பெயர் வசந்தன். இராஜபாளையத்தில் சுதந்திர போராட்ட தியாகியின் பெயரை வைத்திருக்கலாம் என்றுக் கூறினார்.இதன் தொடர்ச்சியாக இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை கேட்டதற்கு, வல்லபாய் படேல், வ.உ. சிதம்பரனார், சுபாஷ் சந்திரபோஸ், திருப்பூர் குமரன், மகாகவி பாரதியார், நேரு, காந்தி என்ற பெயர்களை மாணவர்கள் சொன்னதும் வியந்து மகிழ்ந்தார். இதற்கு அடுத்து நம்முடைய விளையாட்டுகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா? எனக் கேட்க மாணவர்கள் ஒவ்வொரு விளையாட்டின் பெயரை சொல்லிக் கொண்டு வந்தனர். முதலில் கல்லா? மண்ணா? என்ற விளையாட்டில் என்ன சொல்லி விடுவீர்கள் என கேட்டபோது அவர்கள் தெரியாமல் திகைக்கஉம் மண்ணிலே நிற்கிறோம் உலக்கரிசியை திங்கிறோம்'  என்னை உன்னால தொட முடியலை இதே மாதிரி எம் மண்ணையும் உன்னால தொட முடியாது என்பதற்கான அர்த்தம் இது என்று கூறினார். இவ்விளையாட்டின் மூலம் மண்ணின் மீதும் நாட்டின் மீதும் ஒரு பற்றினை உருவாக்கும் அற்புதம் பொதிந்து உள்ளது என்றார். 'பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம் என்ன பூ பறிக்கிறீர்கள் என்ன பூ பறிக்கிறீர்கள் எனக் கேட்பது உங்களுடைய பொருளை உங்கள் அனுமதியின்றி எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்கிறது.அடுத்து திருடன் போலீஸ் விளையாட்டை பற்றிக் கூறினார். இந்த வார்த்தையைக் கேட்டதும் மாணவர்கள் மத்தியில் ஒரே குதூகலம். திருடனாய் இருந்தால் போலீசிடம் இருந்து தப்பிக்கலாம். ஓடி ஓடி ஒளியலாம், அலைக்கழிக்கலாம் என்றார். இது ஒரு மிகுந்த உற்சாகமான விளையாட்டாக மாணவர்கள் எண்ணிக் களித்தனர். 'மலையிலே தீப்பிடிக்குது பிள்ளைகளே ஓடி வாங்க' இதற்கு அர்த்தம் கூறியது அதிசயமாக இருந்தது. தீப்பிடித்தால் மரங்கள் விழுந்து விடும், வளம் குறைந்து விடும் , விரைந்து வாருங்கள். உங்களுக்கான மலையை நீங்கள் தான் காக்க வேண்டும் என்று பொருள்படும்படி கூறினார். இப்படி பல விளையாட்டுகளிலும் ஒரு வியக்கத்தக்க பின்னணி உள்ளது என்பதை மாணவர்கள் உணர்ந்தனர். உண்மையிலேயே இந்த நிகழ்ச்சி மிகச்சிறந்த உரையாடலாக அமைந்தது. மாணவர்களின் ஆர்வம் உற்சாகம் அளவிடற்கரியதாக அமைந்துவிட்டது.

1 2 3 4 5 6

AD's



More News