25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

Sep 06, 2023

ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி ஆசிரியர் தினவிழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் செப்டம்பர் 05.09.23.ஆம் தேதி ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி ஜெய பவானி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி.மதுமிதா அவர்கள் கலந்துகொண்டு  "சொல்புத்தி,சுயபுத்தி"நமக்கு அவசியம் என்பதை சிறப்பாக  எடுத்துக் கூறினார். *டாக்டர் இராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்றை மூன்றாம் வகுப்பு மாணவன் அஸ்வின் மற்றும் ஆசிரியர்களின் பயணத்தைப் பற்றி நான்காம் வகுப்பு மாணவன் மாதேஷ் ஆகிய இருவரும் அருமையாக பேசினார்கள்.ஆசிரியர்களை பாராட்டும் வண்ணம் மூன்றாம் வகுப்பு மாணவிகள் பாடல் ஒன்று பாடினார்கள்.நான்காம் வகுப்பு மாணவன் பொற்கலைராஜன் தன்னம்பிக்கை தரக்கூடிய பாடல் ஒன்றை பாடி அனைவரையும் வியக்க வைத்தான்.நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பதை குட்டிக்கதை மூலம் முதலாம் வகுப்பு மாணவி மதுமிகா கூறினாள்.மேற்கத்திய நடனங்களை நினைவூட்டும் வண்ணம் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவிகள் நடனம் ஒன்றும் ஆடினார்கள்.                                                                                                                                                                                                                                                                               கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை பள்ளித்தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் பாராட்டி பேசினார். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.                             நிறைவாக ஐந்தாம் வகுப்பு மாணவி ஜெனிதா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.

Aug 16, 2023

ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 ஆவது சுதந்திர தின விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 ஆவது சுதந்திர தின விழா பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக  திருமதி.சுதா இளவரசு அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றினார்.  பள்ளி முதல்வர்  திரு. கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்க, தாளாளர் விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவம் செய்தார். நிகழ்வில் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி. ரமணி சந்திரசேகர் ராஜா கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு ஆற்றிய உரையில் இந்திய திரு நாட்டில் ஏராளமான வளங்கள் உள்ளன. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்த  வேண்டும் என்று கூறினார். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டுதல்  இருந்தால் ஒவ்வொருவரும் சாதிக்கலாம் என்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.  ஹெலன் கெல்லர், வால்ட் டிஸ்னி, ஹாரிபாட்டர் போன்ற சாதனையாளர்களை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு உற்சாக மூட்டினார். கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தமது திறமைகளை  மிக அழகாக வெளிப்படுத்தினர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன . நிகழ்ச்சி ஏற்பாடுகளை   ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அலுவலர் வெங்கட் பெருமாள் அவர்களும் கலந்து கொண்டார்.  ஆசிரியை பத்மாவதி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

Aug 12, 2023

இண்ட்ராக்ட் கிளப் ஆஃப்  ஆனந்தா வித்யாலயாவின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் பதவி ஏற்கும்  நிகழ்ச்சி

ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியின் சார்பாக இண்ட்ராக்ட் கிளப் ஆஃப்  ஆனந்தா வித்யாலயாவின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் பதவி ஏற்கும்  நிகழ்ச்சி பள்ளித் தாளாளர் ஸ்ரீமதி. ஆனந்தி அவர்கள் முன்னிலையில்  சிறப்பாக  நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக Rtn.PAG.S.M.யூசுப் ராஜா அவர்கள் கலந்து கொண்டார். Rtn. வியாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்க, பள்ளித் தாளாளர் விருந்தினர் களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் இண்ட்ராக்ட் கிளப் தலைவராக மாணவி. R.A. தாமரைச்செல்வி மற்றும் செயலாளராக மாணவி V.K.சனந்தா பதவி ஏற்றுக் கொண்டனர்.பள்ளி முதல்வர் திரு.S. கோபாலகிருஷ்ணன் தலைவர்  மற்றும் செயலாளரை அறிமுகம் செய்ய  யூத் சர்வீஸ் சேர்மன் Rtn. வெங்கடபெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் தமது உரையில் தலைமைப் பண்பை எவ்விதம் வெளிக்கொணர்வது  என்பது பற்றிப் பேசினார்.  மாற்றம் மாணவர்களிடமிருந்து தொடங்க வேண்டும் என்றும், சிலிகான் வேலியில் பணிபுரியும் தகவல் தொடர்பு  நிறுவனங்களில் தென் தமிழகத்தின் பங்கு அதிக அளவில் இருப்பதை எடுத்துரைத்தார்.ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் திரு. காளிதாஸ் நன்றியுரை கூற  தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. விழாவில் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

Jul 27, 2023

வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

சிவகாசி அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பழைய மாணவர்கள் PRIDES 2K23 Sports Meet என்ற பெயரில்   விருதுநகர்  மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு கைப்பந்துப் போட்டிகளை நடத்தினர்.12 அணிகள் கலந்து கொண்ட மாணவிகள் பிரிவில்  இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இறுதிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். மேலும் 19 அணிகள் கலந்து கொண்ட மாணவர்கள் பிரிவில் எம் பள்ளி மாணவர்கள்  மூன்றாம் பரிசையும் பெற்று பள்ளிக்கு சிறப்பு சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் திருமதி R. ஆனந்தி, பள்ளி முதல்வர் திரு. S.கோபாலகிருஷ்ணன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு. பரமசிவம் ஆகியோர் வாழ்த்தினர்.

Jul 19, 2023

கல்வி வளர்ச்சி தினவிழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் கல்வி வளர்ச்சி தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இரண்டாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா ஸ்ரீ அனைவரையும் வரவேற்று பேசினாள். மாணவன்அஸ்வின் காமராசர் போல் உடை அணிந்து அழகாக பேசினான். மாணவன் சத்ரேஸ் கல்வியின் சிறப்புகள்பற்றி எடுத்துரைத்தான். மாணவிகள் பெண் கல்வி பற்றியபாரதிதாசன் பாடலை இனிமையாக பாடினார்கள். மேலும் மாணவிகள் அஜ்வா மற்றும் ஜெனிதா இருவரும் குருகுல முறை மற்றும் தற்கால கல்விமுறை பற்றியும் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்கள். மாணவர்கள் குருஷித் மற்றும் மதுமிகாஇருவரும் தனித்தனியே பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தார்கள்.நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் பாராட்டினார். மேலும் அவர் மாணவர்களிடையே நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கவனிக்க வேண்டும் என்றும் கேள்விகள் சில கேட்டும் உற்சாகப்படுத்தினார்.பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி ஜெயபவானி அவர்கள் கல்வி பற்றிய செய்திகளை கூறினார். பள்ளி நிர்வாகக் குழு அலுவலர் திரு. வெங்கட பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் கல்விக்கண் திறந்த காமராசர் பற்றிய செய்தியை விளக்கமாகக் கூறினார். மாணவன் மாதேஷ் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.

Jul 15, 2023

ஆனந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மனறங்களின் தொடக்க விழா நிகழ்ச்சி

ஆனந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மனறங்களின் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பத்திரிக்கையாளர்,  ஊடகவியல் பயிற்றுனர் திரு. அரவிந்தன் அவர்கள் கலந்து கொண்டார். பள்ளி தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்ந நிகழ்ச்சியில் மாணவி தாமரைச்செல்வி வரவேற்புரை ஆற்ற பள்ளி முதல்வர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.  விருந்தினருக்கு பள்ளித் தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் பரிசு வழங்கி கௌரவம் செய்தார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் கூறியதாவது   கல்வி என்பது வகுப்பறை பாடப் புத்தகத்தில் மட்டும் இருப்பது அல்ல அது எங்கும் பரவி இருக்கிறது. நாம் ஐம்புலன்களையும் விழிப்பாக வைத்திருந்தால் மட்டுமே அந்த கல்வியை அடைய முடியும். ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வியை எழுப்பினால் மட்டுமே அது சாத்தியப்படும். கேள்விகளை கேட்க கேட்க நிறைய கற்றுக் கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டில் கல்வி என்பது சில பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. மற்றவர்கள் அவரவர் குலத் தொழிலை செய்தனர். காமராஜர் ஆட்சிக்கு வந்த பின்பு தான் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வியை கொண்டு வந்தார். மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிவதற்கு உதவியாக மதிய உணவு திட்டத்தையும் கொண்டு வந்தார். இதனை இன்று இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன. அதனால் தான் அவருடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம். படிக்காமல் சச்சின் போல் புகழ் அடையலாம் என்று நினைக்கலாம். அது கோடியில் ஒருத்தரால்தான் முடியும். நீங்கள் என்னவாக ஆக விரும்பினாலும், உங்களுக்கு பின்னால் கல்வியை அடித்தளமாக இடுங்கள். அரசியல்வாதியாக இருந்தால்  ஐந்து ஆண்டுகள்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும். மாவட்ட ஆட்சியாளராக இருந்தால் 50 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்யலாம். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுங்கள். கவலை இன்றி மகிழ்ச்சியுடன் இருங்கள் என்றார். மாணவர்களின் தனிப்பாடல், உரை வீச்சு, சேர்ந்திசைப் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவன் தமிழ் இனியன் நன்றிஉரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

Jul 11, 2023

3212 மாவட்டம் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையத்தின்பதவி ஏற்பு விழா

3212 மாவட்டம் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையத்தின்பதவி ஏற்பு விழா 9.07. 2023 ஞாயிறு அன்று மிகச் சிறப்பாக நடை பெற்றது.தலைவராக Rtn. பார்த்தசாரதி, செயலராக Rtn. ஆனந்தி, பொருளாளராக Rtn.K.S.வெங்கட் ராஜா,  அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.IPDG .Rtn. இதயம் முத்து அவர்கள் முதன்மை விருந்தினராகவும், A2B - K.T. ஸ்ரீனிவாசராஜா, A2B - K.S. ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் முக்கியமான ரோட்டரி அன்பர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இன்று  புதிதாக 5 உறுப்பினர்கள் இணைந்தனர். இன்று சேவைத் திட்டங்களாக 9 பேருக்கு தையல் இயந்திரங்கள் ,  13 பேருக்கு அரிசிப்பை, பெட்ஷீட், வேஷ்டி, துண்டு, சேலைகள், மற்றும் இரண்டு பள்ளி மாணவர்க்கு நோட்டு, புத்தகங்கள், அமர்சேவா சங்கம், ஓம் பிரணவாஸ்ரம் அமைப்புகளுக்கு நிதி உதவி, +2 வில், நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற 12 பள்ளிகளுக்கு பாராட்டுக் கேடயங்கள்  வழங்கப் பட்டன. வாழ்த்துரைகளோடு விழா இனிதே நிறைவு பெற்றது.

Jun 22, 2023

உலக யோகா தினம்

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் பள்ளி தாளாளர் திருமதி ஆனந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினராக வாழும் கலை அமைப்பின் சார்பில் திருமதி சுகந்தி, திருமதி.விஜி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் எல்.ஐ.சி வெங்கட் நாராயண ராஜா, LIC மேலாளர் மற்றும் துணை மேலாளர்  கலந்து கொண்டு விழாவினை சிறப்பு செய்தனர்.பள்ளி முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தார்.எல் ஐ சி வெங்கட்நாராயணராஜா தனது உரையில் யோகாவின் தந்தை என அழைக்கப்படுபவர் சிவபெருமான் என்றும், தற்கால யோகாவின் தந்தை பதஞ்சலி முனிவர், மற்றும் திருமலை கிருஷ்ணமாச்சாரியார் என்றும் எடுத்துரைத்தார்5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை கற்றுக் கொள்வதோடு தொடர்ந்து பயிற்சியும் செய்ய வேண்டும் என்றார். இந்த ஆண்டின் பொன்மொழியாக  'வசு தேவ குடும்பகம்' .இதன் பொருள் "உலகம் ஒரு குடும்பம் " என்பது தான்  என்றும் எடுத்துரைத்தார்.இன்று உலகம் முழுவதும் 190 நாடுகளில் மக்கள் யோகா தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.முந்தைய அமெரிக்கா, குளிர்பானங்களின் கூடாரமாக இருந்தது .இன்றைய அமெரிக்கவில் எங்கு பார்த்தாலும் யோகா மையங்களும், தியான மையங்களும்  தான் நிறைந்து காணப்படுகின்றன என்றும் கூறினார். மேலும் மாணவர்களுக்கு சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக L.I.C. சார்பில் உண்டியல்கள் வழங்கப்பட்டன.விழாவில் மாணவர்களுக்கு எளிதான யோகா வழிமுறைகளும், பயிற்சிகளும் , வாழும் கலை அமைப்பின் சார்பாக செய்து காண்பிக்கப் பட்டன.

Jun 09, 2023

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச் சூழல் தினம்

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலகச் சுற்றுச் சூழல் தினம் பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினராக திருமதி. R. விஜயலட்சுமி, Master NLP practitioner  அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்று சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். மேலும்,இன்றைய தினத்தின்  கருப்பொருள் 'Beat plastic pollution'என்ற வாசகத்தினை அனைவர் மனதிலும் பதிய வைத்தார்.பள்ளித் தாளாளர் சிறப்பு விருந்தினரை கௌவரம் செய்து தனது உரையில் இந்த சுற்றுப்புற சூழலின் Motto Save the Earth, Save Yourselves,  Think Green,Be Green,Beat the plastic என்பதையும், மனச் சுழலையும், சுற்றுச் சூழலையும் சரி செய்வது அவசியம் என்பதையும் எடுத்துரைத்தார்.சுற்றுச்சூழல் காப்போம்", Demerits of plastics என்பன பற்றி மாணவிகளும் , சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய உரையை தமிழாசிரியையும் எடுத்துக் கூறினர்.  சேர்ந்திசைப் பாடல் மூலமாக மாணவிகள் இயற்கையைக் காப்போம் என்ற விழிப்புணர்வுப் பாடலையும் பாடினர். சிறப்பு விருந்தினர் தமது உரையில் If I can't help myself, how can I help others? என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் சுற்றுப்புறச் சூழலை எப்படி,  எதைச் செய்வதன் மூலம் பாதுகாக்கலாம் என்று மாணவர்களிடையே உரையாடல் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உரையாடலில் மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.விழாவில் பள்ளி  நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி. ரமணி சந்திரசேகர் ராஜா மற்றும் திருமதி. ரம்யா மோகனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

May 12, 2023

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்  தேர்வு எழுதிய  ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி

2023 மார்ச்சில் நடைபெற்ற பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்  தேர்வு எழுதிய  ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 58  மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். (100% தேர்ச்சி) பள்ளியில் S. ஆதித்திர அய்யனார் 583/ 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.  இவர் பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடுகள்  பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். மாணவர் M. லக்ஷ்மண் 581/ 600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் இயற்பியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி M. லோச்சனா சிவப்பிரியா 577/ 600 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், ஆங்கிலத்தில் நூற்றுக்கு 98 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். மேலும் மாணவர்கள் M. சிவரஞ்சனி, S. துவாரகேஷ்  மற்றும் P. ரோஹித்ராம் கணிப்பொறி அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், வேதியியலில்   C.விஷ்வா R.S.கௌசிகா மற்றும் M. சண்முக தர்ஷினி ஆகியோர் நூற்றுக்கு 99 மதிப்பெண்களையும், உயிரியல் பாடப்பிரிவில் மாணவி K.பிரதிக்ஷா நூற்றுக்கு 99 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 36 பேர் 75 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முதல்வர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

1 2 3 4 5 6

AD's



More News