25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஹாக்கி போட்டியில் மலேசியாவை இந்தியா வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹாக்கி போட்டியில் மலேசியாவை இந்தியா வென்றது.

மலேசியாவில் 21 வயதுக்குட்ட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, மலேசிய அணிகள் மோதின. போட்டி துவங்கிய 8, 9 வது நிமிடத்தில் மலேசியாவின் முகமது தானிஷ், ஆஸ்மன் தலா ஒரு கோல் அடிக்க, இந்தியா 0-2 என பின்தங்கியது. பின் இந்திய வீரர்கள் சுதாரித்துக் கொண்டனர். 11-வது நிமிடம் ஷர்தானந்த். 13 வது நிமிடம் அர்ஷ்தீப் தலா ஒரு கோல் அடித்தனர். முதல் பாதி 2-2 என சமனில் முடிந்தது.

இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் பிரியோபத்ரா (39வது) ரோகித் (40 வது) கோல் அடித்து உதவினர். முடிவில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஐப்பான் பிரிட்டனை சாய்த்த இந்தியா வெற்றி பெற்றது. 9 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இன்று ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News