25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

Jun 08, 2022

ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்

ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக மதுரையைச் சேர்ந்த திரு. சிவகுமார் கணேசன் அவர்கள் கலந்து கொண்டார். பள்ளி தாளாளர் திருமதி இரா. ஆனந்தி அவர்கள் முன்னிலை வகிக்க பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு  நினைவுப் பரிசு வழங்கி கௌரவம் செய்தார்.   எழுத்தாளர், இயற்கை ஆர்வலர் , புகைப்படக் கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட திரு.சிவகுமார் கணேசன் அவர்கள் மாணவர்களை அய்யனார் கோவில் சாலையில் அமைந்துள்ள வலக்கட்டு கருப்பசாமி கோவில் முதல்  இராஜபாளையம் ஆறாம் மைல் நீர்த்தேக்கம் வரை அழைத்துச் சென்றார். அங்கு பறவை கவனித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மீன்கொத்தி, பனங்காடை, சின்னான், தையல்சிட்டு, வானம்பாடி, அடைக்கல குருவி, உண்ணிக் கொக்கு, தேன்சிட்டு, நீர்க்காகம், கரிச்சான் குருவி, கிளி, பறந்து, மணிப்புறா, கருப்பு-வெள்ளை புதர் சிட்டு, கருப்புவெள்ளை மீன்கொத்தி, பஞ்சுருட்டான் போன்ற பறவைகளை மாணவர்களுக்கு காண்பித்தார். மாணவர்களும் அதை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து அவர்களுக்கு உண்டான ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டனர். காலை 6.30 மணி அளவில் தொடங்கி 9 மணி அளவில் முடிந்த இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக திரு சிவகுமார் கணேசன் அவர்கள் தான் கண்டு ரசித்த பல வகையான பறவைகளின் புகைப்படங்களை காணொலி மூலம் போட்டுக் காண்பித்தார். அதில் கரிச்சான், சுடலை குயில், பெரிய கொக்கு, நீர்க்காகம், கிளிகள், குயில், வைரி, தென்துருவ சின்னான், பெரிய மீன் கொத்தி,கதிர்க்குருவி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, குக்குறுவான், கொத்தி நாரை போன்ற பறவைகளின் புகைப்படங்களை காண்பித்தார். மேலும் பறவைகள் அடிக்கடி தன் இறகுகளை விரித்து தன் அழகால் அடிக்கடி வருடி விடுகின்றன. அது ஏன் என்று தெரியுமா என வினா எழுப்பி அவர் கூறியதாவது பறவைகளின் வால் பகுதியில் கொழுப்பு போன்ற ஒரு பிசின் உள்ளது அதனை தன் அலகுகளால் எடுத்து இரவுகளின் மீது வீசுகிறது. இதைச் செய்வதன் மூலம் தன் இறகுகளை அது பாதுகாத்துக் கொள்கிறது மற்றும் அது சீராக பறப்பதற்கு உதவுகிறது என கூறினார். இதுபோன்று பறவைகளைப் பற்றி பல தகவல்களை கூறி மாணவர்களின் மனதில்  பறவை கவனித்தல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். 

Mar 28, 2022

உலக சிட்டுக்குருவிகள் தினம் காடுகள்தினம் மற்றும் தண்ணீர்தினம்

      இராஜபாளையம்ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவிகள் தினம், காடுகள் தினம் மற்றும் தண்ணீர்தினத்தை முன்னிட்டு  ஒரு சிறப்பு நிகழ்ச்சி பள்ளித்தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில்நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சாத்தூர் டாக்டர் D.அறம்அவர்கள் கலந்து கொண்டு  விழாவை சிறப்பு  செய்தார். மாணவர் வெங்கடேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்த முதல்வர் S.கோபாலகிருஷ்ணன் அவர்கள்சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். தாளாளர் திருமதி ஆனந்திஅவர்கள் விருந்தினருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் நடனம், சேர்ந்திசை பாடல், ஆங்கில உரையாடல்தமிழ் மற்றும் ஆங்கில உரைவீச்சு மற்றும் ஆசிரியர்களின்  சேர்ந்திசைபாடல் என கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.                  சிறப்பு விருந்தினர் தனதுஉரையில் சிட்டுக்குருவிகள் தினம், காடுகள் தினம்மற்றும் தண்ணீர் தினத்தின் இந்தஆண்டு Slogan (முழக்கம்) என்ன என்பதையும் இயற்கையைபாதுகாப்பதன் அவசியத்தையும் மாணவர்களுக்கு அழகாக எடுத்துக் கூறினார். மேலும் உலகம் தோன்றி 500 கோடிகளாகிவிட்டன என்றும் இன்னும் 500 கோடிஆண்டுகள் சூரியன் உயிர்ப்புடன் இருக்கும்என்ற செய்தியையும், அண்டை நாடான சீனாஉருவாக்கி இருக்கும் செயற்கை நிலவு பற்றியும்  பல்வேறுதிருக்குறள்களை மேற்கோள் காட்டியும், இயற்கையை போற்றி பாதுகாக்க அவசியத்தையும்அழகாக எடுத்துக் கூறினார். இடையிடையே மாணவர்களுக்கு உலக சிட்டுக் குருவிகள்தினத்தின் இந்த ஆண்டு Slogan என்ன என்று கேட்டதற்கு I Love Sparrows எனவும்காடுகள் தின Slogan காடுகள்மற்றும் நிலையான உற்பத்தி மற்றும்நுகர்வு என்பதையும் தண்ணீர் தினத்தின் Slogan கண்ணுக்குதெரியாத நிலத்தடி நீரை காணக் கூடியதாகமாற்றுதல் என்பதையும் கேள்விகள் மூலம் கேட்டு பதில்கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகமூட்டினார். இறுதியில்மாணவி ஜெயஸ்ரீ  நன்றி நவிலவிழா  இனிதே நிறைவுற்றது.

Mar 18, 2022

ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    இராஜபாளையம்ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  துளிஅமைப்பின் மூலம் கலசலிங்கம் பல்கலைக்கழகமாணவிகள் நடத்திய ஊட்டச்சத்து உணவு vs செயற்கை சுவை உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி  பள்ளிமாணவர்களுக்குநடத்தப்பட்டது.  பள்ளித்தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள்நிகழ்ச்சியை தலைமை தாங்கி விருந்தினரை கவுரவும் செய்ய பள்ளி முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி,  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு இடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது. உணவின்முக்கியத்துவம், துரித உணவால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி PPT மூலம் தெளிவாகவிளக்கினார்கள்.Interaction, கேள்வித்தாள் அமர்வின் மூலம் பள்ளி மாணவர்களின் கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டனர். எதைக்கண்டு நாம் துரித உணவு அல்லதுசெயற்கை உணவு நோக்கி நகர்கிறோம் என்பதை படவிளக்கம் மூலம் அறிவுறுத்தினார்கள். மாணவர்களைஉற்சாகப்படுத்த ,ஓவியப் போட்டியும் நடத்தி, சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து  பரிசுகள் வழங்கினர். இது பள்ளி மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. மிகச்சிறந்த முன்னெடுப்பாக நாளைய தலைமுறைக்கு இந்தநிகழ்வு அமைந்தது. பல மாணவர்கள் இனிமேல் Junk Food எடுப்பதில்லை என, உறுதி மொழியும்எடுத்துக்கொண்டது, நிகழ்வின் வெற்றிக்கான அறிவுரையாக அமைந்தது. கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவிகளுக்கு ,எங்கள் நன்றிகளும், வாழ்த்துக்களும். வளர்ந்த மாணவர்கள் ,வளரும் மாணவர்களுக்கு ,இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது, தன்னையும் ,அடுத்த தலைமுறையையும், சிறந்தபாதையில் கொண்டு செல்லும். ஆசிரியர்பூங்கோதை நன்றி நவில விழாஇனிதே நிறைவு பெற்றது. 

Mar 18, 2022

வரையாடுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

 இராஜபாளையம்ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  WWF அமைப்பிலிருந்து T.S.சுப்பிரமணியன்அவர்கள்வரையாடுகள்பற்றியவிழிப்புணர்வுநிகழ்ச்சியை பள்ளிமாணவர்களுக்காக நடத்தியது. பள்ளி தாளாளர் திருமதிஆனந்தி அவர்கள் நிகழ்ச்சியை தலைமைதாங்க,  பள்ளிமுதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி, விருந்தினரை வரவேற்றார். வரையாடுகள் உலகில் மூன்று இடங்களில்மட்டுமே காணப்படுபவை.அவற்றின் உயிரியல் வகைப்பாடு, அதன் வாழ்வியல் முறைகள் , தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளுக்கு இப்போது உள்ள குறைபாடுகள்மற்றும் அவற்றின் மீதான தன் சொந்தஅனுபவத்தையும் பள்ளி மாணவர்களுக்கு PPT மூலம்காணொளி மூலம் விளக்கினார். T.S. சுப்பிரமணியன்அவர்கள் கேள்வி, பதில்கள் தொடர்புமூலம் காடுகளை காப்பதன் அவசியத்தைமிக நுட்பமாக எடுத்துரைத்தார். 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ளமலை முடிகளில் மட்டும் வாழும் பண்புடையவரையாடுகளின்  இலக்கியக்குறிப்புகள் உடல் அமைப்பு, வியத்திவரலாறு மற்றும் இனப்பெருக்கம், சூழலியல்காணப்படும் இடங்கள், மற்றும் பலமேற்கோள்கள், புகைப்படங்கள் மூலம் விளக்கப்பட்டது. இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, மான், வரையாடு, புலி, சிங்கவால் குரங்கு, கரடி, காட்டெருமை, சாம்பல்நிற அணில்கள், போன்றவற்றின் வாழ்விடம் ஆகும். மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியை சார்ந்து வாழும்நமக்கு, இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சிவாழ்வின் மிக முக்கிய பங்கைஅளிக்கிறது. அரசு மற்றும் WWF அமைப்பிற்கும்,பள்ளி சார்பாக நன்றியை தெரிவிக்ககடமைப் பட்டிருக்கிறோம். நாளைய தலைமுறையான மாணவக்கண்மணிகள் வியப்புடன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டார்கள். ஆசிரியை திருமதி அழகுராணிநன்றி நவில விழா இனிதேநிறைவு பெற்றது. 

Mar 18, 2022

இடாகினி கதாய அரத்தம் நவீன நாடகம்

 ஆனந்தா வித்யாலயாமெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் பிறை தோன்றிய  பொழுதில்  மணல் மகுடி  நாடகநிலத்தின்  "இடாகினிகதாய அரத்தம்”நாடகம் தொடங்கியது. ஒன்றைச் சொல்லி அதுஉணர்த்தும் பொருளை, கேட்பவன் கற்பனைக்கே விட்டு விடுவதே படிமம் என்பது. அப்படியான படிமங்களாலும், குறியீடுகளாலும், தொன்மங்களாலும் நேர்த்தியாக நெய்யப்பட்ட நவீன தமிழ் நாடகம்இது. மனிதர்களின் மூச்சுக் காற்று கூட நம்காதுகளில் படபடத்துக் கொண்டிருக்கிறது. புழுதி பறக்க நடந்துகொண்டே இருக்கும் நிராகரிக்கப்பட்ட மனித குலத்தின் காலடிஓசையும், பணி ஓசையும் நம்மைஇம்சித்துக் கொண்டே இருக்கும். முருகபூபதி அவர்களின் நாடகத்தின் மீதான முன்னெடுப்பு முற்றிலும்வித்தியாசமானவை. அவரின் விந்தை நிறைந்தஅறிவுக் கூர்மை நம்மை பெரும்வியப்பில் ஆழ்த்தியது. திரைச் சீலைக் கூடநாடகத்தில் அற்புதமாக நடித்திருந்தது. கலைஞர்களின் முகபாவங்கள். ஏக்கத்தின் குரல் இன்னும் அலையடித்துக்கொண்டே இருக்கிறது. மனசை பிசையும் காட்சிகளைகையகப்படுத்த முடியாது.அருமையானநடிகர்கள்! என்ன ஒரு நடிப்பு! தமிழகம் முழுவதும் சல்லடை போட்டு இந்தமுத்துக்களை கோர்த்த இயக்குநர் பாராட்டப்படவேண்டியவர், தத்ரூபமாக நடித்து சாதனை படைத்தஇளம் கலைஞர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். அவர்களின் உழைப்பு அசாதாரணமானது. உடல்மொழி அபாரம். பேச்சு மொழியோஅதனினும் மேலாக இருந்தது. இசையோடுகதையில், சூழல் சார்ந்து சரியானவிழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்பது விந்தை. இத்தனைஅழகாக ஒரு வெளியில் ஒருபிரமிப்பை நிகழ்த்த முடியுமா? முடியும் என்கிறார் முருகபூபதி. காலத்தைமுன்னும் பின்னும் நகர்த்தி சித்தரிப்பை உணர்த்தும் பாங்கு பார்வையாளனை இதுவரைஅறியாத ஒரு கலைத்துப் போடும்மாய உலகிற்கு அழைத்துச் செல்கிறது. பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி அனுபவங்கள்கிடைக்கப் பெற்றிருக்கும்.மேடைஅமைப்பே தன்னை மண்ணோடு இணைத்துக்கொண்டது. மேடை ஒளியோ இயற்கையோடுஇணைந்திருந்தது. சில கதைகளில் நாம்தொலைந்து போவோம். ஆனால் இதில்நாம் பொம்மைகள் போலே தொலைந்து போனஆச்சரியம் அடைந்தோம். கிட்டத்தட்ட கண்கள் சிமிட்ட மறந்துபோனோம். பிள்ளைகளின் ரசிப்பும், ஆரவாரமும் அவர்கள் இந்த கதைகளின்ஊடாக பயணித்ததை போல இருந்தது. ஒருஇரவில் நமது பள்ளியில் பார்த்த, கேட்ட, உணர்ந்த அனுபவங்கள் எவ்வாறுநினைவில் விட்டு நீங்கும். நாளையசமூகத்தை கட்டமைக்கும் பொறுப்பில் இது ஒரு மைல்கல்.முருகபூபதிநாடகத்தை வார்த்தையில் பதிவிட்டுச் சொல்வது கடினம். வாய்ப்புகிடைக்கும் பொழுது ஒவ்வொருவரும் பார்த்துஅனுபவம் கொள்ள வேண்டிய படைப்புஅது. மீண்டும் பல இடர்பாடுகளைத் தாண்டிநவீன நாடகத்தை இராஜபாளையத்தில், ஆளந்தா பள்ளியில் காணத்தரும் கவிஞர் ஆனந்தி அவர்களுக்குவாழ்த்துகளும், அன்புகளும்.

Mar 17, 2022

GRAND PARENTS DAY

RAJAPALAYAM ANANDA VIDYALAYA ,NURSERY AND PRIMERY SCHOOL CAMPUS ,18. 03. 2022 ,      FRIDAY   9. 30  AM.  ALL ARE INVITED.

Mar 02, 2022

தேசிய அறிவியல் தின விழா

   இராஜபாளையம் ஆனந்த வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினவிழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளின் அறிவியல் கண்காட்சிகளுடன் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக திரு. ராஜேஷ்(சீனியர் எஞ்சினியர் ஆரக்கிள் கம்பெனி பிரைவேட் லிமிடெட்) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் போட்டி நிறைந்த இவ்வுலகில் மாணவர்களுக்கு படிப்புடன் கூடிய பிற திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் அதை வெளிப்படுத்த வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுப்பதையும், பாராட்டிப் பேசினார்.  பள்ளியில் செயல்படும் இலக்கிய மன்றங்கள் மூலமாக மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மட்டுமல்லாமல் ஆங்கில மொழி பேசும் திறனையும் வளர்த்துக் கொள்ளவும், வேண்டும் என்றும். போட்டி நிறைந்த இவ்வுலகில் எவ்வாறு வெற்றி பெற்று சாதிக்க முடியும் என்பதையும் அழகாக எடுத்துக் கூறினார். மாணவர்கள்  சமுதாயத்திற்கு  சேவை  செய்வதற்காக  இந்திய  ஆட்சிப் பணியிலும்மருத்துவத் துறையிலும், தொழில்நுட்பத் துறையிலும் சிறந்து விளங்கி பேரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் எனவும் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. ஜெயபவானி கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கும், தன் நகைச்சுவை கலந்த பேச்சின் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தார். பள்ளித் தாளாளர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க, ஆங்கில ஆசிரியை திருமதி நிவேதா நன்றி நவில விழா இனிதே நிறைவடைந்தது. மாணவர்கள் தங்கள் படைப்புகளை சொட்டு நீர் பாசனம், முப்பரிமாண படம், இன்குபேட்டர், பட்டன் கேமரா, மைக்ரோ ஆர்கனிசம் லேசர் ஒளி மூலமான கண்டுபிடிப்பு, சானிடைசர் போன்ற படைப்புகளின் மூலம் தங்களது திறமையை   வெளிக்கொணர்ந்தனர். விழாவில் நிர்வாக அலுவலர் திரு வெங்கட பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு   செய்தார். விழாவிற்கான   ஏற்பாடுகளை   அறிவியல்   ஆசிரியர்கள்   சிறப்பாக செய்திருந்தனர்.   

Feb 21, 2022

பள்ளி மாணவர் S.சரவணன் NEET தேர்வில் தேர்ச்சி

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் S.சரவணன் NEET தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றதற்காக பாராட்டு பெற்றார். பள்ளியின் சார்பில் அவர் பெற்றோரை பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தினர்.M.V பீமராஜா ஜானகி அம்மான் அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர்கள். மற்றும் ஆசிரியர்கள் சரவணனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்தனர்.

Feb 18, 2022

"உன்னால் இந்த பள்ளியும் இந்த பள்ளியால் நீயும் பெருமையடைய வேண்டும்"

இளம் வயதிலிருந்தே மாணவர் சரவணன் அவர்களின் கல்வி ஆர்வம், விடா முயற்சி> கடின உழைப்பு, கற்றல் ஆர்வம்>  - எல்லாம்   அவரை  சாதனை புரிய வைத்துள்ளது. நம் பள்ளி மாணவர் சரவணன் - NEET தேர்வில்  தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில்  இடம் பெற்றது நம் பள்ளிக்கு பெருமை சேர்க்கிறது. பெற்றோரின்அரவணைப்பு, ஆசிரியர்களின் வழிகாட்டுதல்> நிர்வாகத்தின் ஒத்துழைப்பு மாணவர்களுக்கு என்றும் துணை இருக்கும். மேனேஜிங் டிரஸ்டி & பள்ளி தாளாளர் திருமதி ஆனந்தி, M.V. பீமராஜா ஜானகி அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன்  மற்றும் ஆசிரியர்கள் சரவணனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்தனர்.

Feb 18, 2022

ஆனந்தா மாணவர்களின் பேசும் பொற் சித்திரங்கள்

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியார் நினைவை போற்றும்வகையில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குஓவியப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதில் பாரதியார் கவிதைவரிகளின் காட்சியைப் புலப்படுத்தும் வண்ணம் ஓவியம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டன. ஆசிரியர்களின்ஒத்துழைப்புடன் மாணவர்கள் நன்கு புரிந்து கொண்டு அருமையாகஒவியங்களை சித்தரித்த விதம் வியப்புக்குரியதாக இருந்தது.மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதற்கு தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றத்தின் மாநில செயலாளர் திரு. கண்மணி ராசாகலந்துகொண்டு, மாணவர்களிடம் உரை ஆற்றினார். நம் ஊரைச்சார்ந்த சிறுவர் எழுத்தாளர் திரு.கோ.மா.கோ. இளங்கோ எழுதியபுத்தகங்கள் பரிசுகளாக தரப்பட்டன. ஆர்வமுடன் கலந்து கொண்டமாணவர்களுக்கு தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்களும் முதல்வர்திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களும் பள்ளியின் சார்பாகபாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

1 2 3 4 5 6

AD's



More News