சிவகாசியில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி, மணிக்கட்டி ஊரணியில் (03.04.2024) மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட வாக்காளர் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 தமிழகத்தில் ஏப்ரல்-19 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களித்து 100 சதவீத இலக்கை அடையும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, சிவகாசி மாநகராட்சி மணிக்கட்டி ஊரணியில் மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள், தன்னார்வலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட வாக்காளர் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் பொதுத் தேர்தல் 2024-ல் எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாட்டினுடைய அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு, மூன்று தேர்தல்களில் சுமார் 70 லிருந்து 75 சதவீதம் தான் வாக்கு பதிவாகி உள்ளது. அதாவது நாளில் ஒருவர் ஓட்டு போடுவதில்லை.
தேர்தல் நாளன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறையும் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் மொத்தம் 1895 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் கடந்த தேர்தல்களில் சுமார் 20 வாக்குச் சாவடிகளில் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. அந்த 20 வாக்குச் வாக்குச்சாவடிகளில் சுமார் 10க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள்; சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் உள்ளன.இப்பகுதியில் இந்த முறை முழுமையாக மாநில சராசரியை விட அதிகமான மக்கள் வாக்கு செலுத்த வேண்டும். நகர்ப்புற பகுதியில் வேலைக்கு செல்லக்கூடிய கூடியவர்கள், இளைஞர்கள் மாணவர்கள் கூட அவர்களுக்கு வாக்குரிமை இருந்தும் வாக்குப்பதிவை கடந்த தேர்தலில் பதிவு செய்யலாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. அதை எல்லாம் களைந்து அனைவரும் வாக்களிக்க வர வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்கள், மாணவர்கள், வேலைக்கு செல்ல கூடியவர்கள் அனைவரும் இந்த முயற்சியை கூட்டு முயற்சியாக இருந்து வாக்குப்பதிவை உயர்த்த வேண்டும் என்பதை உங்களுக்கு வலியுறுத்துவதற்காக இது போன்ற விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிவகாசி பகுதியில் பல்வேறு தனியார் அமைப்புகள் சமூக பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளிலும் தன்னார்வ அமைப்புகள் பங்கேற்று அனைத்து மக்களும் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் வாக்கு சதவீதம் குறைவாக இருக்கின்றதோ அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வாக்குப்பதிவு நாளன்று அனைவரும் வாக்களிப்பதற்கு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த தேர்தலில் சிவகாசி பகுதியில் அதிக அளவில் வாக்குபதிவு நடைபெற நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உறுதி மேற்கொண்டு இதனை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள்; பலர் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, மணிக்கட்டி ஊரணி தொடங்கி சுமார் 8 கி.மீ நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் மக்களவை பொதுத் தேர்தல்-2024 முன்னிட்டு, அதி நவீன மின்னனு திரை வாகனத்தில் 100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் திரு.விஸ்வநாதன், தனித்துணை ஆட்சியர்(முத்திரை) திரு.பிரேம்குமார், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply