25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

May 09, 2023

ஆனந்தா வித்யாலயா பள்ளியில் ஆதித்ரா அய்யனார் + 2 மாணவனின் சாதனை + 2 மாணவன் சாதனை

ஆனந்தா வித்யாலயா பள்ளியில் + 2  மாணவனின் சாதனை மாணவன் ஆதித்ரா அய்யனார் 4 பாடங்களில் 100 % மதிப்பெண் எடுத்து 600 க்கு 583 மார்க்பெற்று சாதித்துள்ளார். ஆதித்ராவின் முயற்சி, உழைப்பு,பெற்றோரின் பங்களிப்பு,ஆசிரியர்களின் அன்பான ஒத்துழைப்பு  எல்லாம் ஒருங்கிணைந்து மகத்தான சாதனை புரிய வைத்திருக்கிறது. இராஜபாளையம் டைம்ஸ் சார்பில் பள்ளி மாணவனை வாழ்த்துகிறோம்.

Jan 27, 2023

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவின்  23 ஆவது விளையாட்டு விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவின்  23 ஆவது விளையாட்டு விழா பள்ளி நிறுவனர் திரு. M.V.பீமராஜா அவர்களின் ஆசியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக  இராஜபாளையம் முனிசிபல் கமிஷனர் திரு. பார்த்தசாரதி அவர்கள் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு ஆற்ற தலைமை ஆசிரியர்  திருமதி ஜெயபவானி அவர்கள் விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்தார். சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் படிப்பிற்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை போல விளையாட்டிற்கும்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது நமது பொறுப்பு. உயிர் வாழ தேவையான காற்றை சுவாசிக்க ஏராளமான மரங்களை நட்டு வைத்து வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும், Reduce, Refuse, Reuse என்ற கோட்பாட் டினை கடைபிடித்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். நல்ல திடமான உடம்பு, திறமையான அறிவைக் கொடுக்கக் கூடிய யோகா, சிலம்பம் போன்ற விளையாட்டுக்கள் மாணவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று மாணவர்களுக்கு  மிக அழகாக எடுத்துரைத்தார்.விழாவில் மாணவர்கள் டேக் வான்டோ, யோகா, பிரமிடு, வில்வித்தை, சிலம்பம், ஏரோபிக்ஸ் மற்றும் பல வகையான உடற்பயிற்சிகளை மாணவர்கள் அழகாக நிகழ்த்திக் காட்டினர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினர். விழாவில் நிர்வாகக் குழு  உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Jan 17, 2023

ஆனந்தா வித்யாலயாவின்  23 ஆம் ஆண்டு விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவின்  23 ஆம் ஆண்டு விழா குதூகலத்தோடும் கோலாகலத்தோடும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மேகநாத ரெட்டி அவர்களும், கௌரவ விருந்தினராக திருச்சி மாநகராட்சி ஓய்வு பெற்ற கமிஷனர் திருமதி பிரேமா அவர்களும் கலந்து கொண்டனர். பள்ளி நிறுவனர் திரு பீமராஜா ஐயா அவர்களுக்கு மலர் அஞ்சலி செய்து தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளி முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைக்க, தலைமை ஆசிரியர்  திருமதி ஜெயபவானி அவர்கள் கௌரவ விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். விருந்தினர்களுக்கு பள்ளித் தாளாளர் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தார். நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளியின் ஆண்டறிக்கையை தலைமை ஆசிரியரும், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டறிக்கையை முதல்வரும் சமர்ப்பித்தனர். சிறப்பு விருந்தினர் தமது உரையில், "தனக்கும் ஆண்டு விழாவிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது, அந்த மேடையில் தான் வாங்கிய  கைத் தட்டல்களே   ஒரு கலெக்டராக வருவதற்கு உந்து சக்தியாக விளங்கியது" என்று கூறினார்.  மாணவர்களிடம் ஏதோ ஒரு தனித் திறமை இருக்கிறது. அதை கடின உழைப்பின் மூலம்  அதை வெளிக் கொணர வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.  அவையில் உள்ளோர்க்கு மூன்று கேள்விகளை முன் வைத்த விதம் - மிக வித்தியாசமாக இருந்தது. எத்தனை பேர் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் ?எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கிறார்கள் ?எத்தனை பேர் நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள் ?என்ற கேள்விகள் அனைவரையும்  அதிகமாய் சிந்திக்க வைத்தது. மேலும் தன்னுடைய பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது எனவும் வெற்றிக்கான வழிமுறைகள் அவர்களுடைய அணுகு முறையில் தான் உள்ளது என்பதையும் மிக அழகாக எடுத்துரைத்தார்.கௌரவ விருந்தினர் தமது உரையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை உற்சாகப்படுத்தியும் ஊக்கப்படுத்தியும் வளர்க்க வேண்டும் என்றும் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்றும் கூறினார்.தனக்கு பாடம் கற்பித்த ஆசிரியரையும் தான் படித்த கல்லூரியையும் நினைவு கூர்ந்தார். ஆசிரியர்கள் பல்வேறு நீதிக் கதைகளையும் அறிஞர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி நல்வழிப்படுத்த வேண்டும் என்றார்.கல்வியின் சிறப்பை தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்ற குறளின் மூலமும் ஒரு மன்னருக்கு அவருடைய அரண்மனையில் மட்டுமே சிறப்பு கிடைக்கும் .ஆனால் கற்றவருக்கோ தான் சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும் என கல்வியின் பெருமையையும் சுவைபடக் கூறினார். சிறப்பு விருந்தினர்கள் படிப்பிலும், சகல துறைகளிலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தனர். ஆசிரியை நாகுபொற்செல்வி நன்றி உரை கூறினார்.நிகழ்ச்சியில் மாணவர்களின் பரத நாட்டியம், குழு நடனம், நாடகம், சேர்ந்திசைப்பாடல், சிலம்பம், உரை வீச்சு, மௌன நாடகம், போன்ற பன்முகத் தன்மையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  ஆசிரியர்கள் மாணவர்களின் திறமைகளை அற்புதமாக வெளிக் கொணர்ந்து, அவற்றை திறம்பட தொகுத்துத் தந்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் திரு.வெங்கட பெருமாள் செய்திருந்தார்.

Nov 22, 2022

இராஜபாளையம் ரன்னர்ஸ் கிளப் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான  மாரத்தான் போட்டி

ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இராஜபாளையம் ரன்னர்ஸ் கிளப் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான  மாரத்தான் போட்டி முதன்முறையாக நடைபெற்றது. இதில் இராஜபாளையத்தைச் சேர்ந்த 600 மாணவர்களும் 400 மாணவிகளும் கலந்து கொண்டனர்.  போட்டியில்  சூப்பர் சீனியர் பிரிவில் எமது பள்ளி பதினோறாம் வகுப்பு மாணவன்  S.கார்த்திகேயன் இரண்டாம் இடமும், சீனியர் பிரிவில் பத்தாம் வகுப்பு மாணவன் R.வெற்றிவேல் இரண்டாம் இடமும் பெற்று  சிறப்பு சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர், நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

Nov 14, 2022

குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி பள்ளியின் குழந்தைகள் தின விழா 12.11.2022 சனிக்கிழமை அன்று ஆனந்தா கார்டனில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.*சிறப்பு விருந்தினராக ஏ.கே.டி.ஆர் கல்லூரி முதல்வர் டாக்டர். ஜமுனா மற்றும் அறுசுவை ஆற்றல் நிறுவனர்.சரண்யா தேவி அவர்களும் கலந்து கொண்டார்கள். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித்தலைமை ஆசிரியர் திருமதி. ஜெய பவானி அவர்கள் வரவேற்றுப் பேசினார்கள். பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தினார்கள்.*எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் மாறுவேடப்போட்டிகளில் சிறப்பாக பங்கேற்றார்கள். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நாகரீக நடை நடந்தும், உற்சாகத்துடன் கலந்து கொண்டும் அரங்கத்தை மேலும் அலங்கரித்தார்கள்.டாக்டர். ஜமுனா அவர்கள் தாய், தந்தை, பெரியோர் அனைவரையும் போற்றி வணங்க வேண்டும் என்று கூறினார்கள். திருமதி சரண்யா தேவி அவர்கள் பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளிடம் நேர்மறை சிந்தனைகளை பரவலாக்க வேண்டும் என்று பேசினார்கள்.எழுத்தாளார். ரஜினி பெத்துராஜா அவர்கள் மாணவச்செல்வங்களை மகிழ்வுடன் வாழ்த்தினார்கள்.பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் பெற்றோர்கள் மிக அன்பாக, அழகாக, உற்சாகமாக விழாவினைப் பற்றிய பின்னூட்டம் கொடுத்தார்கள். மாறுவேடப் போட்டியில் வெற்றி பெற்றமாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினார்கள். நடை அலங்காரத்தில் கலந்து கொண்ட பெற்றோர் அனைவருக்கும் பள்ளித் தாளாளர். ஆனந்தி அவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தார்கள்.ஆசிரியர் முத்துலட்சுமி நன்றியுரை கூற, மொத்தத்தில் விழா மிக இனிமையாக, மகிழ்வாக நிறைவுபெற்றது.

Oct 28, 2022

SERVE YOURSELF, SERVE NATION

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காகஆற்றல் ஊட்டும் நிகழ்வு பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாககர்னல் ராகேஷ் பிரசாத், சாத்தூர் S.R.N.M கல்லூரி N.C.C. அதிகாரி டாக்டர் அஜந்தா மற்றும் Rtn. பார்த்தசாரதி அவர்களும் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களை முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன்அவர்கள் வரவேற்று அறிமுகம். செய்ய பள்ளித் தாளாளர் திருமதி ஆனந்திஅவர்கள் விருந்தினர்களுக்கு சிறப்புப் பரிசினை வழங்கி கௌரவம் செய்தார்.கர்னல் தமது உரையில் மாணவர்களிடம் அவர்களின் எதிர்கால லட்சியம் என்ன என்பதைக் கேட்டு அதற்கான திட்டமிடலை பற்றிஎடுத்துக் கூறினார். ஒவ்வொரு மாணவர்களும் சிறு வயதிலேயே ஒரு குறிக்கோளினை கொண்டிருக்க வேண்டும் என்றும் அதனை அடைவதற்கு இடையறாது உழைக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். மேலும் நல்லொழுக்கம் மட்டுமே ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார். எதிர்கால வாழ்வு சிறக்க கடின உழைப்பும் நற்குணமும் மிக அவசியம் தேவை என்றார், மக்களின் நல்ல பண்புகளே அவர்களின் பெருமையைத் தீர்மானிக்கிறது என்று மிக அழகாகக் கூறினார்.இந்திய ராணுவத்தில் சேருவதற்கான வழிகளைப் பற்றியும், என். டி.ஏ.(NDA) எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து பயில்வது,தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறை பற்றியும் மாணவர்களுக்கு சிறப்பாக விளக்கினார். நிறைவாக மாணவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு சரியாக பதிலையும் எடுத்துக் கூறினார். ஆசிரியை திருமதி நிவேதா அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

Oct 01, 2022

ஒற்றை பெருமரமும், சிறகசைக்கும் வண்ணத்து பூச்சிகளும்

 25.09.2022 ஞாயிறு மாலையில் M.V.பீமராஜா ஜானகிஅம்மாள்அறக்கட்டளை சார்பாக - நம் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனந்தாஸ் M.B. ராதா கிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு அவர்பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் இளம் சாதனையாளர்விருது 2022 வழங்கும் விழா நடைபெற்றது. நிர்வாகக்குழு உறுப்பினர்கள்விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .வாழ்நாள் சாதனையாளர் விருது இலக்கிய ஆளுமை திரு.வண்ணதாசன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அவர்களைபார்ப்பதற்காகவே நகரில் உள்ள இலக்கிய மன்றங்கள் சார்ந்த அன்பர்கள்வந்திருந்தனர்.இளம் சாதனையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாணவச்செல்வங்கள் G.தமிழ் குமரன் மற்றும் ரத்தன் ஜெ ராஜா மிக மிகத்திறமைசாலிகள் என்பதை நேரில் காணும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்கள் இருவரின் ஏற்புரையும் மிக்க அழகு.ஐஸ்வர்யா முகுந்தன் சார், நரேந்திரகுமார் சார், ராதா   மேம் உரையும் சிறப்பாக இருந்தது.சிறப்புரையாற்றிய நரேந்திர குமார் அவர்கள் சாதனையாளரின் பல்வேறு புத்தகங்களை வாசித்து முக்கியமான வரிகளை நமக்கு எடுத்துக்கூறிய விதம் அருமை. வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவிருந்தினரின் தன்னடக்கம், நேர்மையான உரைவீச்சு, எண்ணங்களின்வெளிப்பாடு என அனைத்தும் மிக அழகாக அமைந்திருந்தது.வண்ணதாசன் அவர்கள் உரையின் மூலம் அவர் மிகஎளிமையானவர், இயல்பாகப் பேசுபவர் என்று தெரிந்து கொண்டோம்.1. அழைப்பிதழை வைத்துக் கொண்டே அதில் இடம்பெற்ற அந்த மரத்தைதானாகவும், அதில் இலைகளாய் தெரிந்த வண்ணத்துப் பூச்சிகளைபார்வையாளராகவும் உருவகித்து அவர் பேசியது சுவையாகவும், மனதைதொடுவதாகவும் இருந்தது.2. அமாவாசை தினமான இன்று காலையில் தான் தன் முன்னோர்களைநினைவு கூர்ந்து அவர்களை வேண்டி வணங்கி வந்ததாகக் கூறினார்.3. “நான் தாமிரபரணிக்காரன், அந்த தாமிரபரணி என்னோட ஆறு” என்று கம்பீரமாக கூறியது கவனம் ஈர்த்தது.4. “நான் எழுதும் எழுத்துகள் எல்லாம் என்னுடையது அல்ல. என்முன்னோர்களுடையது.” முன்னோர்கள் என்று குறிப்பிட்டது -புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், கி.ராஜ நாராயணன் மற்றும் தனது தந்தைதி.க.சிவசங்கரன்இவர்களைத்தான்.5. “நான் 1962 ல் இருந்து எழுதிக் கொண்டு இருக்கிறேன். இதோ இப்போதும்என் எழுத்துப் பணி தொடர்கிறது. இந்த எழுத்துப் பணிக்காக தரப்பட்டவிருதை ஏற்றுக் கொள்கிறேன். இது மேலும் மேலும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கிறது. ஆம் நேற்று எழுதினேன். இன்று எழுதிக்கொண்டிருக்கிறேன். நாளையும் எழுதுவேன் என்று கூறினார்.”6, “இந்த நிறைந்த சபையில் நானும் நிறைந்து இருக்கிறேன்”. என்றுபெருமையுடன் அனைத்தையும் அத்தனை சுவையாக கூறி நிறைவுசெய்தார்”மகிழ்ச்சி FM சார்பில் பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்களுக்கு நல்மாமணி விருது கொடுத்ததில் பெருமை அடைந்தோம்.ஆனந்தி அவர்களின் நன்றி உரை மிக வெளிப்படையாகவும் உணர்வுபூர்வமாகவும் அமைந்து,அனைவர் மனசையும் சாரலாய் தொட்டு விட்டுச்சென்றது. உமா சங்கர் அவர்களின் ஒருங்கிணைப்பு மிகச் சிறப்பு.விழா ஏற்பாடுகளை ஆனந்தா கல்விக்குழுமம் மிகச் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தது. சரியான நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு குறிப்பிட்டநேரத்தில் நிறைவு பெற்றது பாராட்டும்படியாக இருந்தது.

Sep 20, 2022

இராஜபாளையம் வட்டார அளவிலான குறு வட்ட விளையாட்டு போட்டிகள்

இராஜபாளையம் வட்டார அளவிலான குறு வட்ட விளையாட்டு போட்டிகளில் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிமாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் திருமதி..ஆனந்தி, முதல்வர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு. பரமசிவம் ஆகியோர் வாழ்த்தினர்.மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள கீழ் கண்ட மாணவர்கள் தகுதி பெற்று உள்ளனர்.BOYSHandball  -     U17          -       WinnerHandball  -     U19          -       WinnerTable tennis - U14(D)     -       WinnerTable tennis  - U19(S)    -       WinnerTable tennis  -  U19(D)   -       WinnerGIRLSHandball   -    U19            -    WinnerKho -          -  Kho U19      -    WinnerTable tennis - U17(S)        -   WinnerATHLETIC WINNERSBOYSHigh Jump   -        (U19) -     R.T.Arunvignesh    -   ITriple Jump--        (U19) -     R.T.Arunvignesh    -   I100m   -                 (U19) -    S.Lalit Sathguru     -   I400m                     (U19)   -    S.Lalit Sathguru    -   I200m                    (U19)     -    S.Yuvankumar      -   I 4x100m Relay   (U19)        -  S.Yuvankumar, S.Lalit Sathguru,  R.T.Arunvignesh, S.Gousik Saravanan -  I4x400m Relay  ( U19)       -  S.Lalit Sathguru, S. Karthikeyan, M.Ganesh ayyar, A.Ajaylakshman          - I

Sep 05, 2022

ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில்  ஆசிரியர் தின விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில்  ஆசிரியர் தின விழா  பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி. P. விஜயலட்சுமி அவர்கள் கலந்து  கொண்டு சிறப்பு செய்தார். பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்க, தாளாளர் திருமதி.ஆனந்தி  விருந்தினரை அறிமுகம் செய்து, பரிசுகள் வழங்கி கெளரவம் செய்தார்.சிறப்பு விருந்தினர் தமது உரையில் , எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் ஆசிரியர் கவனிப்பினிலே. என்ற வரிகளுக்கேற்ப இன்று சமுதாயத்தில் ஒரு நல்ல மாணவனை உருவாக்குவதில்  ஆசிரியரின் பங்கு மகத்தானது என்றார்.ஆசிரியர்கள் மாணவர்களிடம் தோழமையுடனும், மற்ற மாணவர்களுடன் ஒப்பிடாமலும் அவர்களின் மன நிலை புரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறி 'அனைத்து பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கும் தமது ஆசிரியர் தின வாழ்த்தினை தெரிவித்தார்.ஆசிரியர்கள் மாணவர்களை ஏற்றிவிடும்  ஏணிகளாகவும், தன்னை உருக்கிக் கொண்டு மற்றவர்களுக்கு வெளிச்சம் காட்டும் மெழுகுவர்த்திகளாக இருக்கிறார்கள் எனவும் கூறினார்.மேலும் சமுதாயம் நன்கு முன்னேற மாணவர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அழகாக எடுத்துக் கூறினார்.மாணவர்கள் பரதம், உரைவீச்சு, சேர்ந்திசைப் பாடல்  போன்ற கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை அழகாக வெளிப்படுத்தினர்.  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார். நிகழ்வில் AKDR பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியைகள் திருமதி.பிரேமா மற்றும் திருமதி. சரஸ்வதி, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திருமதி.ரமணி சந்திரசேகர் ராஜா, திருமதி.கீதா சந்திரன் ராஜா, நிர்வாக அலுவலர் திரு. வெங்கடப்பெருமாள், கலை இலக்கிய பெருமன்ற மாநில உறுப்பினர் திரு. கண்மணி ராசா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  ஆசிரியர்கள் மிக அழகாக விழாவினை ஒருங்கிணைக்க நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. 

Sep 05, 2022

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஜெய பவானி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில்சிறப்புவிருந்தினராக ஆசிரியை திருமதி.விஜயலட்சுமி அவர்கள் கலந்துகொண்டு நல்ல மனிதனாக வாழ உடற்பயிற்சியும் தேவை என்பதை வலியுறுத்தியும் சிறுகதைகள் கூறியும் மாணவர்களை உற்சாகப் படுத்தினார்.மேலும் சிறப்பு விருந்தினராக திருமதி. கேன்டி பெர்னான்டஸ் கலந்து கொண்டு சிறப்புசெய்தார்.ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தினத்தைப் பற்றி முதலாம் வகுப்பு மாணவி சுபிக்க்ஷா ஸ்ரீ தனது பேச்சால் அனைவரையும் கவர்ந்தாள்.அறிவியல் சாதனங்களின் பயன்பாடு பற்றி இரண்டாம் வகுப்பு மாணவன் அஸ்வின் மற்றும் மகிழ்ச்சியின் சிறப்பு குறித்த கருத்துக்களை ஐந்தாம் வகுப்பு மாணவன் ஸ்ரீநித் ஆகியோர் அழகாக பேசினார்கள்.நான்காம் வகுப்பு மாணவி ஜெனிதா அப்பாவின் பெருமை பற்றி எடுத்துரைத்தாள்.நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவிகள் இயற்கை பற்றிய பாடல் ஒன்றை பாடினார்கள். மற்றும் நாட்டுப்புற கலைகளை நினைவூட்டும் வண்ணம் நடனம் ஒன்றும் ஆடினார்கள். கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை பள்ளித்தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் பாராட்டி பேசினார். பள்ளியில் நடைபெற்ற கதை சொல்லும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக ஐந்தாம் வகுப்பு மாணவி மதுமித்ரா நன்றியுரை கூற விழா இனிதேநிறைவடைந்தது.

1 2 3 4 5 6

AD's



More News