25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


அழகுக் குறிப்பு

Oct 02, 2024

முடி உதிர்வு பிரச்சினைக்கு நெல்லிக்காய்

முடி உதிர்வு பிரச்சினையால் சிரமப்படுபவர்களுக்கு 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறுடன், சமஅளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை தலையில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிக்கவும்.காய்ந்த நெல்லிக்காய், புங்கங்கொட்டை. சீயக்காய் இவை மூன்றையும் தேவையான அளவு எடுத்து ஓர் இரும்பு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து அந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அந்த சாற்றை வடிகட்டி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். 

Sep 18, 2024

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க குங்குமப்பூ

கோடைகாலம் வந்துவிட்டால் அதிகப்படியான வெப்பம் சுட்டெரித்து,பெண்கள், ஆண்கள் என இரு பாலருக்கும் சரும பாதிப்பு  பிரச்சனைகள் ஏற்படும்.  .காலநிலை மாற்றத்தின் காரணமாக சரும பாதிப்பும் அடிக்கடி ஏற்படும். அந்தவகையில் வெயிற் காலத்தில் சருமத்தை  பாதுகாக்கதேன் மற்றும் தயிருடன் குங்குமப்பூ சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் மெதுவாக தடவி,15,20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கும்.குங்குமப்பூவை இரவு முழுவதும் ரோஸ் தண்ணீரில் கலந்து வைத்து, முக டோனராகப் பயன்படுத்தலாம். இது முகத்தில் ஏற்படும் துளைகளை தடுக்கும்.குங்குமப்பூ கலந்த எண்ணெயை பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்து மெதுவாக சருமத்தில் மசாஜ் செய்யவும். இதனால் சருமத்தில் இரத்தம் ஓட்டம் சீராக இருக்கும்.

Sep 17, 2024

கழுத்தை சுற்றிலும் உள்ள கருமை நீங்க ….

சிலருக்கு முகத்தை காட்டிலும் கழுத்தை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். வெயில், நகை அலர்ஜி, உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் சிலருக்கு கழுத்தில் கருமை உண்டாகும்.இதற்கு சரியான பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம். இயற்கை பொருட்கள் கொண்டு எப்படி கருமையை போக்கலாம் .பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.கற்றாழை ஜெல்லில் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து நன்கு கலந்து, கழுத்துப்பகுதியில் ஸ்க்ரப் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.கடலை மாவுடன், கால் டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்ந்து கெட்டியாக பேஸ்ட் போல கலந்து, கருமையான இடத்தில் நன்கு தடலி காய்ந்தவுடன் தேய்த்து கழுவவும்.பாசிப்பயிறு மாவு உடன் தயிரை கலந்து கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து கழுவ நல்ல பலன் கிடைக்கும்.

Sep 05, 2024

மூக்கில் மேல் உள்ள பிளாக் ஹெட்ஸ் நீக்க

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்னை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இவை இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம்.அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கும், பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும்.நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு, ஆவி பிடித்தல்தான் சரியான ட்ரீட்மென்ட் .மாதம் ஒரு முறை தொடர்ந்து ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கின் மேல் உள்ள புள்ளிகள் நிரந்தரமாக மறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.மசித்த வாழைப்பழத்துடன், ஓட்ஸ், சில துளிகள் தேன் சேர்த்து, மூக்கில் தடவி, ஸ்க்ரப் மற்றும் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.2 தேக்கரண்டி பட்டை பொடி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஸ்க்ரப் செய்தால் அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை பிளாக் ஹெட்ஸை விரைவில் நீக்கும்.வாரம் ஒரு முறை முகத்தை ஸ்க்ரப் செய்யும்போது, மூக்கு பகுதியில் பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது.வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை கலவையை மூக்கின் மீது தடவி மேலிருந்து கீழாக மூக்கை ஒட்டி மசாஜ் செய்தால் சொரசொரப்பு இல்லாமல் பளிச்சென இருக்கும்.

Sep 04, 2024

இளநரை வராமல் இருக்க..

 நல்லெண்ணையை ஒரு கப் அளவு எடுத்து அதில் ஒரு கையளவு கறிவேப்பிலையை போட்டு குறைவான தீயில் சில நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் ஆற வைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து வர நரைமுடி வராது. முடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். கறிவேப்பிலையை பொடி செய்து தினமும் 2 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர கருகருப்பான ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

Sep 01, 2024

உதடு வறட்சியைத் தடுக்க….

உதடுகள் மென்மையானவை என்பதால் அதனால் ஈரத்தன்மையுடன் வைத்துக்கொள்வது அவசியம்.  உணவில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளவும்.நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.தேங்காய் எண்ணெயை தினமும் இருமுறை உதடுகளில் தடவி, சில நொடிகள் மசாஜ் செய்யவும். இது, வறண்ட உதடுகளுக்கு ஈரப்பதத்தை சேர்க்கிறது.கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் கழுவலாம்.இயற்கை மாய்ஸ்ச்சுரைசரான தேன், வறண்ட மற்றும் வெடித்த உதடுகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்றது. உதடுகளில் ஏற்படும் வெடிப்பு, புண்களை சீக்கிரம் குணப்படுத்தும்.வெள்ளரிக்காய் துண்டை, உதடுகளில் மெதுவாக ஓரிரு நிமிடங்கள் தேய்க்கவும். பத்து நிமிடங்கள் சாறு உதட்டிலிருக்கும் படி விட்டு பின்னர், கழுவவும்.தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்யலாம்.

Aug 28, 2024

பொடுகு ,பேன், அரிப்புக்கு ஹேர் பேக்

வெந்தயம், பாசிப்பயிறு இவற்றை இரவு ஊறவைத்து காலையில் அரைத்து தேய்த்து குளித்து வர முடி உதிராது. பளபளப்பாக, ஆரோக்கியமாக இருக்கும். தலைச்சூடு நீங்கும்.பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.ஒரு ஈரம் இல்லாத பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய முடிக்கு தேவையான அளவு திரிபலா சூரணத்தை போட்டுக் கொள்ள வேண்டும். 2 ஸ்பூன் திரிபலா சூரணம், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், வேப்ப எண்ணெய் 1/2 ஸ்பூன், இதை ஒரு பேஸ்ட் போல் தயார் செய்ய தேவையான அளவு தயிரை ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும்.உங்களது மண்டை ஓட்டில், மயிர்க்கால்களில் படும்படி இந்த பேஸ்டை நன்றாக அப்ளை செய்யவேண்டும். உங்களது முடியை பகுதி பகுதியாக பிரித்து நன்றாக மண்டையோட்டில் படும்படி இந்த ஹேர் பேக்கை தடவி, ஹேர் பேக் போட்டு, 30 நிமிடங்கள் ஊறவைத்து, அதன் பின்பு சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு உங்களுடைய விருப்பம் போல் தலைக்கு குளித்து கொள்ளலாம். 

Aug 26, 2024

தயிர் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்

தலைமுடி வறண்டு போயிருந்தால், தயிர் மற்றும் தேனில் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். தயிரில் புரோட்டீன் மற்றும் லாக்டிக் அமிலம் இருப்பதால் இது முடிக்கு ஊட்டமளிக்கிறது. தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் மாய்ஸ்சரைசிங் பண்புகள் இருப்பதால் முடியை பட்டுப் போல் ஆக்குகிறது. முதலில் உங்கள் தலைமுடியை சிக்கு இல்லாமல் சீவவும்.ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். பின், இந்த கலவையை நன்கு கலக்க வேண்டும்.இப்போது இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.பின்னர் அதை தலைமுடியில் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு, ஷாம்பூவுடன் முடியை சுத்தம் செய்யவும்.இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கும்.

Aug 22, 2024

சருமத்தை சுத்தம் செய்து, பருக்களைகுணப்படுத்துகிறது, கோதுமைப்புல் பொடி

சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதன் மூலம், இது சிறந்த சரும சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. நமது உடலுக்குள்ளும் ஊடுருவி, இளமையைப் பேணும் பணிகளையும் செய்வதால், சருமத்தின் பொலிவையும், மென்மையையும் அதிகரிக்கிறது.நச்சு நீக்கும் தன்மை கொண்டிருப்பதால், கோதுமைப்புல் பொடியானது பருக்கள் உண்டாவதைத் தடுத்து, மென்மையான வழவழப்பான சருமத்தினை அளிக்கிறது. கோதுமைப்புல் பொடியுடன் சிறிது பால் சேர்த்து பசை போலாக்கி, சருமத்தின் மீது தடவிக் கொள்வதால், பருக்கள், வெடிப்புகள், கரும்புள்ளிகள், சரும நிறம் மங்குதல் ஆகியவை மறையும்.

Aug 20, 2024

முதுமை, நரைமுடி, பொடுகுமற்றும்தலைமுடிப்பிரச்சனைகள் தடுக்கும் கோதுமைப்புல் பொடி

ஃப்ரீ ராடிகல்களினால் ஏற்படும் பாதிப்புகளை இது தடுக்கிறது. முதிர்ந்த செல்களைப் புத்துயிரூட்டும் தன்மையைக் கொண்டிருப்பதால், முதுமையைத் தடுக்கும் ஆற்றல் பெற்று, இளமையைப் பேண உதவுகிறது. சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கி சருமத்தின் நெகிழும் தன்மையை நிலை நிறுத்த உதவுகிறது. இதன் மூலம் சருமத்தின் இளமைப் பொலிவை மீட்டுத் தருகிறது.நரைத்துப் போன தலைமுடியின் நிறத்தை மாற்றி, பழைய படி கருமையாக்கும் தன்மை கோதுமைப்புல் பொடிக்கு உண்டு. இந்த பவுடரைத் தலை முடியில் தடவிக் கொண்டு, குளித்து வந்தால், நரைமுடிகள் கருமையாகும்கோதுமைப்புல் பொடியைத் தலையில் தடவிக் கொண்டு குளித்து வந்தால், பொடுகு, வறட்சி மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்ற தலை சார்ந்த பிரச்சனைகள் தீரும். ஆகவே வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்புவுடன் கோதுமைப்புல் பொடியைக் கலந்து, தலையில் தடவிக் கொண்டு குளித்துவரலாம். இதனால், ஆரோக்கியமற்ற தலைமுடியை நல்ல ஆரோக்கியத்துடன் திகழும்.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 24 25

AD's



More News