ராகி சாக்லேட் பணியாரம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
கோகோ பவுடர் - கால் கப்
நாட்டு சர்க்கரை - அரை கப்
பால் - 1 கப்
எண்ணெய்,நெய்,பேக்கிங் பவுடர்,
வெண்ணிலா எசன்ஸ் சிறிதளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோகோ பவுடர், நாட்டு சர்க்கரை, பால், எண்ணெய், பேக்கிங்பவுடர் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு நன்கு கலக்கவும்.
பணியாரக் கல்லை சூடாக்கி, அதில் நெய் தடவி, மாவு கலவையை ஊற்றி, மூடி வைக்கவும்.ஒரு பக்கம் வெந்ததும், திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.
சூடான, 'ராகி சாக்லேட்பணியாரம்' தயார். குழந்தைகள் விரும்பி உண்பர். ஆரோக்கியத்திற்கும் உகந்தது.
0
Leave a Reply