தூதுவளை கஷாயம்
தேவையான பொருட்கள்:
10தூதுவளை இலை
1டேபிள்ஸ்பூன் தனியா
1டீஸ்பூன் மிளகு
2 ஏலக்காய்
1 துண்டு சித்தரத்தை
1 சிறிய துண்டு அதிமதுரம்
1டேபிள்ஸ்பூன் தேன்
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றும் பாதியாக அரைத்துக் கொள்ளவும்
குறிப்பு சித்திரத்தையும் அதிமதுரத்தை தட்டிப்போட்டு அரைக்கவும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வைத்ததை போடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணீர் ஆகவற்றும் வரை காத்திருக்கவும் அதன்பின் அடுப்பை அனைத்து விட்டு ஒரு வடிகட்டியால் வடிகட்டி தேன் கலந்து இளம் சூட்டில் பருகவும் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தூதுவளை கசாயம் தயார்.
தூதுவளை கசாயம் சளியை கரைத்து வெளியே தள்ள கூடியது இந்த கஷாயத்தில் சேர்த்து இருக்கும் பொருள்கள் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தொண்டைக்கு இதமானது.
0
Leave a Reply