பொடுகு ,பேன், அரிப்புக்கு ஹேர் பேக்
வெந்தயம், பாசிப்பயிறு இவற்றை இரவு ஊறவைத்து காலையில் அரைத்து தேய்த்து குளித்து வர முடி உதிராது. பளபளப்பாக, ஆரோக்கியமாக இருக்கும். தலைச்சூடு நீங்கும்.பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.
ஒரு ஈரம் இல்லாத பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய முடிக்கு தேவையான அளவு திரிபலா சூரணத்தை போட்டுக் கொள்ள வேண்டும். 2 ஸ்பூன் திரிபலா சூரணம், தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், வேப்ப எண்ணெய் 1/2 ஸ்பூன், இதை ஒரு பேஸ்ட் போல் தயார் செய்ய தேவையான அளவு தயிரை ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும்.
உங்களது மண்டை ஓட்டில், மயிர்க்கால்களில் படும்படி இந்த பேஸ்டை நன்றாக அப்ளை செய்யவேண்டும். உங்களது முடியை பகுதி பகுதியாக பிரித்து நன்றாக மண்டையோட்டில் படும்படி இந்த ஹேர் பேக்கை தடவி, ஹேர் பேக் போட்டு, 30 நிமிடங்கள் ஊறவைத்து, அதன் பின்பு சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு உங்களுடைய விருப்பம் போல் தலைக்கு குளித்து கொள்ளலாம்.
0
Leave a Reply