பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள்,கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க இந்த சார்கோல் Facepack போதும்.1. தேவையான பொருட்கள்சார்க்கோல்- 1 ஸ்பூன்முல்தானி மிட்டி- 1 ஸ்பூன்ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்தயாரிக்கும் முறைஒரு பவுலில் சார்க்கோல், முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் போன்றவற்றைக் கலந்து முகத்தில் தடவி15 நிமிடம் கழித்து கழுவவும்.சருமம் ஏற்கனவே வறண்டிருந்தால் இந்த பேஸ்பேக்கில் சிறிது தேனைக் கலக்கவும்
2 ஸ்பூன் உருளை கிழங்கு ஜூஸ், 2 ஸ்பூன் தக்காளி ஜூஸ், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் ,நல்ல ரிசல்ட் கிடைக்கும்.முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி சருமம் வெள்ளையாகும். முகம் நல்ல வெள்ளையாக மாறும்.
பனிக் காலத்தில், உடலில் ஒருவித வறட்சித் தன்மை ஏற்படும். அதிகப்படியான குளிரால், பலருக்கும் சருமம் வறண்டு, முகம் பொலிவின்றி காட்சியளிக்கும். இச்சமயத்தில், நம் முகத்தின் மிருது தன்மை குறையும். குளிர்காலத்தில் தான் உங்களின் சருமத்திற்கும், தலை முடிக்கும் அதிககவனம்செலுத்தவேண்டும். இந்நேரத்தில், வெதுவெதுப்பான நீர் மிகவும் நல்லது. 'மாய்சுரைஸர்' சோப்பை பயன்படுத்தி, வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, உங்கள் சருமம் வறண்டு போவதை தடுக்கும்.குளிர் காலத்தில், நிறைய தண்ணீர் குடிப்பதால், நம் சருமம் வறட்சியாகாமல், ஈரப்பதத்துடன் இருக்கும். நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வது நல்லது.மூலிகை தேநீரும், சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்திருக்கும்.பிரெஷ் ஆன அதிக நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆப்பிள், ஸ்ட்ரா பெர்ரி போன்றவற்றுடன் பிரக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவர் போன்ற காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்க்க, சருமம் வறண்டு போகாது.உதட்டை அடிக்கடி எச்சில் படுத்தாதீர். இப்படி செய்வதால், உதடு காய்த்து போகும். அதற்குபதிலாக தரமான ' லிப் பாம் ' உபயோகிக்கலாம்.
நல்லெண்ணையை ஒரு கப் அளவு எடுத்து அதில் ஒரு கையளவு கறிவேப்பிலையை போட்டு குறைவான தீயில் சில நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஆற வைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தடவ முடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். "கறிவேப்பிலையை பொடி செய்து தினமும்2 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர கருகருப்பான ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தலை பெறலாம். ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.பின் அடுத்த நாள் ஊறவைத்த வெந்தய விதையில் செம்பருத்திப் பூக்கள் மற்றும் இலைகளை கலந்து மென்மையான பேஸ்ட்டைபோல் அரைக்கவும். இதனை உங்கள் தலைமுடியில் தடவி உலர்த்திய பின் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும்.இந்த அற்புதமான ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு வளரும்.இவ்வாறு வீட்டில் எளிதாகக் கிடைக்கும் வெந்தயம் மற்றும் செம்பருத்தியை பயன்படுத்தி தலைமுடியின் அழகை அதிகரிக்கவும்.
ஒரு நாளைக்கு. இரண்டு அல்லது மூன்று முறையாவது, முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவுங்கள். இப்படி சுத்தம் செய்யும் போது, சோப்பையோ, பேஸ் வாஷை யோ பயன்படுத்தினால், முகத்திலுள்ள இயற்கையான எண்ணெய் பசை குறைந்து விடக் கூடும். அதனால், பனிக்காலத்தில் முகம் கழுவ, 'மாய்சுரைஸர் பேஸ்வாஷ்' தான் சிறந்தது குளிர் காலத்தில், தொடர்ந்து ஆயில் மசாஜ் செய்வது. சருமத்திற்கு மிக நல்லது. மிதமான சூடுள்ள எண்ணெயில், குளிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன், மசாஜ் செய்து குளியுங்கள். இதனால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், வேப்பெண்ணெய் மற்றும் அவகோடோ எண்ணெய் போன்றவை, 'மசாஜ்' செய்வதற்கு ஏற்றவைகுளிர் காலத்திற்கேற்ப 'ஆயில் மிக்ஸ்டு மாய்சுரைஸரை' உபயோகிக்கலாம். இது, உங்கள் சரும வறட்சியை தடுக்கும்; சருமத்தை மிருதுவாக்கும்.கோடை காலத்தில் தான், 'சன் ஸ்கிரீன் லோஷன்' பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர், பலர். பனிக் காலத்திலும் வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன், 'சன் ஸ்கிரீன் லோஷனை' பூசிக் கொள்ளலாம்உடலில் மற்ற பகுதிகளை விட, கைகள் மிகவும் மிருதுவானது. எனவே, 'மாய்சுரைஸர் லோஷனை' உங்கள் கைகளிலும், கால் பாதங்களிலும் மறக்காமல் பூசிக் கொள்ளுங்கள். இது, அப்பகுதியில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும்.
யாருக்குத்தான் கருமையான நீளமான பளபளப்பான கூந்தல் பிடிக்காது. ஆரோக்கியமான கூந்தலை பெற, நாம் தலை முடியை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். நம்மில் பலர் கூந்தலை பராமரிக்க சந்தைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், அவை ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் காலப்போக்கில் கூந்தலுக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும்.எனவே, சருமம் மற்றும் முடி ஆகிய இரண்டிற்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், இவை எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. வீட்டில் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு ஹேர் மாஸ்க் தயார் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவை, பொடுகு, முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும். தீப்புண்களில் தேனை தொடர்ச்சியாக பூசிவந்தால் காயம் விரைவாக ஆறுவதோடு. காயத்தால் ஏற்படும் வடுவும் மறையும். சிறிதளவு தேனோடு, காய்ச்சிய பாலேடு, சந்தனம், கடலைமாவு ரோஜா எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசவும்.15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்' முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.
கற்றாழை ஜெல் அல்லது வீட்டில்வளர்ந்ததை சுத்தம் செய்து அதில் பால் சேர்த்து5 நிமிடம் மசாஜ் செய்யுங்க. கடலை மாவில், பால் அல்லது தயிர்சேர்த்து முகத்திற்கு ஃபேக் போட்டு,10 நிமிடம் கழித்து மெதுவாக குளிர்ந்த நீரில் கழுவுங்க. இயற்கையான ஃபேஷியல் வீட்டிலேயே,முகம் பொலிவாக மிருதுவாக வெண்மையாக இருக்கும்.
வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள், இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.
காய்சாத பாலில்5 நிமிடம் முகத்தில் மசாஜ் செய்யுங்கஅரிசி மாவுடன் காய்ச்சாத பால் சேர்த்து நிமிடம் ஸ்கரப் செய்யுங்க ஆவி பிடித்து விட்டு காட்டன் துணியில், முகத்தை மெதுவா அழுத்தி துடைத்தால் ,வெண்மை, கரும்புள்ளிகள் வந்து விடும்.