எவராக இருந்தாலும்பெண்ணோ., ஆணோ அழகான தலைமுடிக்காக எதுவும் செய்யத் தயாராக இருப்பார்கள். கருகரு முடிதான் ஒருவருக்கு அழகைத் தருகிறது. அந்த முடியை பராமரிக்க உதவுவதில் சமையலுக்கு பயன்படுத்தும் சின்ன வெங்காயமும் ஒன்று .நம் பாட்டிமார்கள்காலத்தில் தலையில் பூஞ்சைத் தொற்றினால் அரிப்பு என்றால் உடனே இரண்டு சின்ன வெங்காயத்தை உழித்து அதன் சாற்றை தலையில் வைத்து அழுத்தி தேய்ப்பதை பார்த்திருக்கிறோம். அன்று பாட்டிமார்கள் செய்த விஷயம் இன்று விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து ,சந்தைகளில் கிடைக்கும் வெங்காயச்சாறு கலந்த ஷாம்பூக்கள்.உதிர்வைத் தடுப்பதுடன், முடியின் வேரை வலுப்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள கந்தகம்(சல்பர்) என்னும் வேதிப்பொருள் இருப்பதே. இது முடி வளர்ச்சிக்கு உதவும் அவசியமான புரதம் ஆன கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் சின்ன வெங்காய சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், தலைமுடி உதிர்வைத் தடுப்பதுடன், முடியின் வேரை வலுப்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. பொடுகு போன்ற தொற்றுக்களை நீக்கவும் உதவுகிறது..இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து முடியை பாதுகாக்க உதவுகிறது. மேலும் சிலருக்கு வயது ஆவதற்கு முன்பே முடி நரைக்கும் பிரச்சனை உண்டு இதை தடுக்கவும் சின்ன வெங்காயச்சாறு உதவுகிறது. நம் உச்சம் தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் கலவைகள் வெங்காயச் சாற்றில் உள்ளன மேலும் முடி வளர்ச்சிக்கு உதவும் மயிர் கால்களுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குகிறது.ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதை தோல் உரித்து மண் போக நன்கு கழுவிக்கொண்டு மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாறை எடுத்து நேரடியாகவும் தலையில் தடவி 30 நிமிடம் கழித்து அலசலாம். தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து வேசாக சூடுபடுத்தியும் முடியில் வேர்க்கால்களில் படுமாறு தடவி மசாஜ் செய்யலாம். இந்த சின்ன வெங்காய சாற்றுடன் தேன் அல்லது கற்றாழை ஜெல் போன்றவற்றைக் கலந்து ஹேர் பேக் போல் முடிக்கு போட்டு பின் குளிக்கலாம்.முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர இதை டிரை செய்யுங்கள்.ஒரு டேபிள் ஸ்பூன் அளவு வெங்காயச் சாற்றுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்துக் கலந்து தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர்.வெங்காயச்சாறு தயாரிக்கும் போது நறுக்கிய சின்ன வெங்காயத்தை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வெங்காயம் நன்கு வெந்து அதில் உள்ள சாறு வெளியேறி நீர் குறைந்ததும் அந்த நீரை வடிகட்டியும் முடிக்கு அப்ளை செய்வது இன்னொரு முறை. வெங்காயத்தை மைய அரைத்து அப்படியே பேக் போட்டுக் குளித்தாலும் முடிக்கு ஊட்டச்சத்து தரும். இப்படி பல முறைகள் உள்ளன. கூடுமானவரை இந்தச் சாறைத் தடவி தனியே இருந்து தலைக்கு குளிப்பது நல்லது.அலர்ஜி அல்லது தொற்று பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணர் ஆலோசனைப்படி பயன் படுத்துவதே சிறந்தது.
நம்மில் பலருக்கு என்னதான் உணவு கட்டுப்பாடுடன் இருந்தாலும், ஒரு நேரமாவது சாதம் சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும். கொஞ்சம் சாப்பிட்டால் போதும், நமது வயிற்றை நிறைவாக வைக்கும். அரிசி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என பலர் கூறி கேட்டிருப்போம்.சாதம் சாப்பிட்டால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறு என நிபுணர்கள் கூறுகிறார்கள். அரிசி சாப்பிடுவதால் உடல் எடை கூடாது.அரிசியில் உள்ள மாவுச்சத்து உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில், உள்ள வைட்டமின்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை பல வழிகளில் சாப்பிடலாம்.நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அரிசியை அவித்தோ அல்லது வேகவைத்தோ சாப்பிட வேண்டும். இப்படி செய்வதால் உடல் எடை அதிகரிக்காது. இது மிகவும் நல்லது.சரியான நேரத்தில் அரிசி சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு மதிய உணவு அல்லது இரவு உணவுடன் சாதம் சாப்பிடலாம். கிச்சடி வடிவிலும் அரிசி உங்கள் உணவில் சேர்க்கலாம். ஏனெனில், இதில் பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் உள்ளன. இவை புரதத்தின் நல்ல மூலமாகும். வறுத்த அரிசி சாப்பிடலாம்.அரிசியை எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்த பின் சாப்பிடக்கூடாது. இந்த வகை உணவு தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இது உடல் எடையை வேகமாக அதிகரிக்க கூடியது.நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், குறைந்த அளவு மட்டுமே அரிசி சாப்பிடுங்கள். காய்கறிகளுடன் வேகவைத்து சாப்பிடுவது மிகவும்ஆரோக்கியமானது..
உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பில் கற்றாழை முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்றாழையில் உடலுக்குத் தேவையான முக்கியமான எட்டு அமினோ அமிலங்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன.வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும்.கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி,15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப் பருவினால் ஏற்படும் ஒவ்வாமை நீங்கும். கற்றாழையின் சதைப் பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.சதைப் பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.கண்களில் அடிபட்டாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.
துளசி இலைகளை எடுத்துக் கொண்டால், வெறுமனே மென்று சாப்பிட்டால், சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துமாம்.. காரணம், துளசி இலைகளில் அதிக அளவு பாதரசம், இரும்புச்சத்து இருப்பதால், நாம் துளசியை மெல்லும்போது அவை வெளிப்படும்.. மென்று சாப்பிடுவது நம் பற்களை கறைபடுத்தும்.. நிறமாற்றத்தை பற்களுக்கு தந்துவிடும். எனாமலில் தேய்மானத்தையும் ஏற்படுத்தும்.. அதனால், லேசாக மெல்ல வேண்டும்.. அல்லது முழுவதுமாக துளசியை விழுங்க வேண்டும் என்கிறார்கள்.
மாதுளை பழச்சாறை தினமும் குடித்து வந்தால், கொலஸ்டிரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறையும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி,BPயை சீராக வைக்க உதவும்.கொலஸ்டிரால் மற்றும்BP குறையும்.மாதுளையில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. இது சரும செல்களுக்கு மட்டுமில்லாமல், உடலில் செல்கள் பாதிப்பு, அழற்சியால் ஏற்படக் கூடியChronicdiseasesillness கூறப்படும் நாட்பட்ட நோய்களை குறைக்கும். உடல் செல்கள் புத்துணர்ச்சியாக இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும், மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பானம். மாதுளையில் உள்ள சத்துக்கள்,antiinflammatory கொண்டுள்ளன. அதாவது, உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களில் ஏற்படும் அழற்சி, சேதம் ஆகியவற்றை ரிப்பேர் செய்து, மூட்டு வலி, வீக்கம், வாதம் போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கும் பெண்களின் கருப்பை ஆரோக்கியத்தை பலப்படுத்தும், கருப்பை சார்ந்த குறைபாடுகளை சரி செய்யும் ஆற்றல் மாதுளையில் உள்ளது. எனவே, பெண்கள் தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பது, மாதவிடாய் முதல் பல பிரச்சனைகளை சுலபமாக சரி செய்ய உதவும் மாதுளையில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் செல்களை ஆரோக்கியமாக வைப்பது, வெளித் தோற்றத்திலும் பிரதிபலிக்கும். தினமும் மாதுளை ஜூஸ் குடித்தால் சருமப் பொலிவு கிடைக்கும், வயதாகும் அறிகுறிகள் தாமதமாகும், இதனால் இளமையான தோற்றம் பெறலாம். நோய், ஊட்டச்சத்து குறைபாடு, பலவீனம், கெமிக்கல் சிகிச்சை போன்றவற்றால் முடி அதிகமாக கொட்டினால், தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்தால், முடி உதிர்வு குறைந்து, முடி அடர்த்தியாக வளரத் துவங்கும்.
கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலால் சருமத்தின் நிறம் கருமையாகத் தொடங்கிவிடும். நீங்கள் வெளியே அதிகம் சுற்றுபவராக இருந்தால், இந்த கோடை வெயிலால் சருமத்தின் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், சருமத்திற்கு பராமரிப்புக்களை தவறாமல் கொடுத்து வர வேண்டும்.தினமும் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களை தவறாமல் கொடுப்பதன் மூலம் சரும செல்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, சரும நிறமும் மேம்படுவதுடன் சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அப்படி சரும நிறத்தை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் ரோஸ் வாட்டர்.இந்த ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் இரவு முகத்திற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், வெயிலால் முகம் கருமையாவது தடுக்கப்படுவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும். இப்போது சரும நிறத்தை அதிகரிக்க உதவும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்குகள்.முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்: * முல்தானி மெட்டி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் * ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன் பயன்படுத்தும் முறை: * முதலில் ஒரு பௌலில் முல்தானி மெட்டி பவுடரை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.காபி பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்: * காபித் தூள் - 2 டேபிள் ஸ்பூன் * ரோஸ் வாட்டர் - 2-3 டேபிள் ஸ்பூன் பயன்படுத்தும் முறை: * ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்: * சந்தன பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் * ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன்பயன்படுத்தும் முறை: * ஒரு பௌலில் சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்: * கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் * ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன் பயன்படுத்தும் முறை: * முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம், கழுத்து, கைகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் தேவையான பொருட்கள்: * கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன் * ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன் பயன்படுத்தும் முறை: * முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் இரவு பயன்படுத்தி வந்தால், முகம் கருத்துப் போவதைத் தடுக்கலாம்.
உடற்பயிற்சி + உணவுப்பழக்கத்தின் மூலம் மட்டும் அல்ல. தங்கள் உடல் எடையை சீராக பராமரிப்பவர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர், தினமும் காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆய்வு சொல்கிறது.காலை உணவு சரியாக இருந்துவிட்டால், அன்றைய நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலும், சுறுசுறுப்பும், சத்துக்களும் நமக்கு கிடைத்துவிடும்., உடலில் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனை தரக்கூடியது இந்த வைட்டமின் C அதிகமுள்ள உணவுகள்தான். வைட்டமின் C, மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை.. கெட்ட கொழுப்பை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன், செரிமானத்துக்கும் உதவி புரிகிறது.. உடைக்காத முழுத்தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகு தோசை போன்றவற்றில் வைட்டமின் C அதிகம் நிறைந்திருக்கின்றன.பால், தயிர், பாலாடைக்கட்டிகள் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச்சத்தும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்துக்குத் தேவையான சக்திகள் கிடைக்கின்றன.. அதேபோல ஒரு தக்காளி பழத்தையாவது சாப்பிடுவதால், வைட்டமின் C ஓரளவு பெற முடியும்.. ஓட்ஸ் உணவுகளில் கலோரிகள் குறைந்த கார்போ ஹைட்ரேட்டுகள், பீட்டா குளூக்கன் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், கொழுப்பின் அளவை குறைக்கிறது.. சாதாரண ஓட்ஸையே வாங்கி, வேக வைத்து, அதில் தேன், பால், நட்ஸ்களை சேர்த்து சாப்பிட்டாலே போதுமான சத்துக்கள் கிடைக்கும். வெறும் ஓட்ஸிலேயே சிறிது காய்கறிகளை வேகவைத்து உப்புமா போலவும் சாப்பிடலாம்.அரிசி அவல்களைவிட, கோதுமை அவல்களில் நிறைய சத்துக்கள் உள்ள து. இந்த அவல்களில் டிபன் செய்து சாப்பிடுவதால் நல்ல எனர்ஜி கிடைக்கிறது. இப்படி காலை உணவுகளில் எது சாப்பிட்டாலும் இவைகளுடன் சேர்த்து, கிரீன் டீ ஒன்று குடிக்கலாம்.. காலை உணவை சரியாக எடுத்து கொள்ள முடியாத சூழலில், வேகவைத்த முட்டை அல்லது வாழைப்பழம் சாப்பிடலாம், வெறும் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சீரகம், பெருஞ்சீரகம், பட்டைத்தூள், சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கலாம்.. அல்லது ஒரு ஸ்பூன் ஓமத்தை, தண்ணீரில் கலந்து, கொதிக்கவைத்து வடிகட்டி, குடித்துவந்தாலும் தொப்பை கரையும்.. எலுமிச்சம் சாறு + இஞ்சி கலந்து தண்ணீர் குடிக்கலாம்..இறைச்சி சாப்பிட்டபிறகு, அரை மணிநேரம் கழித்து, சிறிது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், இறைச்சியில் உள்ள புரதச்சத்து முழுவதும் ஊறச்செய்து, செரிமானம் ஆகிவிடும்..கொய்யா இலையில் கசாயம் போல செய்து குடிக்கலாம்.. டீ போட்டுக் குடிக்கலாம்.. இதில் சிறிது இஞ்சியையும் தட்டி சேர்த்து குடித்தால், உடல் எடை குறையும். கெட்ட கொழுப்புகள் கரைந்துவந்துவிடும். அல்லது கொய்யா இலையின் சாறு எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை மெல்ல குறையும். உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.. கொய்யாக்காயையும் தினமும் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்..
நன்றாகதலைமுடி வளர, ஒரு பங்கு சீயக்காய், 1/4 பங்கு வெந்தயம், 1/2 பங்கு பச்சைப் பயிர், புங்கங்காய் ஒரு கைப்பிடி அளவு ஆகியவற்றை நன்றாக ஊறவைத்து பின்பு மிக்சியில் போட்டு அரைத்து கூந்தல் ஷாம்பாக பயன்படுத்தலாம்.ரசாயனம் இல்லாத இயற்கையான முறையில் பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வதை கட்டுப்படுத்தி, முடி வளர ஆரம்பிக்கும்.காயவைத்த செம்பருத்தி பூ ,ஆலமரத்தின் வேரைப்பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் கருமையாக வளரும்.வெங்காயத்தையும், முட்டைகோசையும் பொடிப்பொடியாக நறுக்கி இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலை செம்பு பாத்திரத்தில் வைத்து சிறிது யூடிகோலன் சேர்த்தால்வெங்காயம் வாசனை நீங்கிவிடும்.இந்த சாறுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து சீயக்காய் பொடி போட்டு தலை குளித்து வந்தால் முடி பளபளப்பாகவும், மிகவும் மென்மையாகவும் காணப்படும்.
கடலை மாவுடன் தக்காளி மற்றும் தேன் சேர்த்து தினமும் இரவில் முகத்தில் தடவி10 நிமிடம் கழித்து வாஷ் செய்யவும்.தக்காளியுடன் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து ஸ்க்ரப் போல் முகத்தில் அப்ளை செய்யவும். பச்சை பால், கடலை மாவு, தேன் சேர்த்து மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி20 minituesகழித்து காட்டன் துணியை நனைத்து துடைத்து எடுத்தால் சருமம் ஜொலிக்கும்.கடலை மாவுடன் தயிர், ஓட்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து, வெவெதுப்பான நீரால் வாஷ் செய்யவும்.கடலை மாவில் எலுமிச்சை பிழிந்து மிக்ஸ் செய்து, பருவில் வைத்தால் போதும், முகத்தில் முகப்பருவே வராமல் நின்று விடும்.கடலை மாவு குளிர்ச்சி என்பதால் முகத்தில் அதிக நேரம் ஊற விட கூடாது. அதே போல் நீரை கொண்டு மட்டுமே வாஷ் செய்ய வேண்டும்.
முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள பெண்கள்நினைப்பார்கள்.ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன. சில நிமிடங்களில் முகம் பளபளக்க....தேவையான பொருட்கள்· எலுமிச்சை பழம்-1· தக்காளி - 1· அரிசி - 3 ஸ்பூன்· தயிர் - 2 ஸ்பூன்· மஞ்சள் - 3 ஸ்பூன்· கடலை அல்லது அரிசி மாவு - சிறிதளவு செய்முறை-முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் எலுமிச்சை, தக்காளி, அரிசி போன்றவற்றை நன்கு அரைத்து,பின் இதை ஒரு வட்டிகட்டியில் வடித்து தண்ணியாக எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தயிர், மஞ்சள், கடலை அல்லது அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் சிறிய ப்ரெஷ் கொண்டு அப்ளை செய்யவும்.20நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும் முகம் பிரகாசமாக இருக்கும்.இந்த FacePackஐ வாரத்திற்கு ஒருமுறையாவது பயன்படுத்தி வர முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.