25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


தினை அப்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தினை அப்பம்.

தேவையான பொருட்கள்:
1 கப் தினை அரிசி,1/2 கப் பச்சரிசி,3 டேபிள்ஸ்பூன் உளுந்து,1 வாழைப்பழம்,1கப் வெல்லம்,10 ஏலக்காய் ,1 பெரிய மூடி தேங்காய் துருவல்.

செய்முறை: 
தினை அரிசியை அளந்து சுத்தம் செய்து அதனுடன் பச்சரிசி உளுந்து சேர்த்து மூன்று மணிநேரம் வரை ஊறவிடவும்.
தினையை சுத்தம் செய்து புடைத்து பின் ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸிஅல்லது கிரைண்டரில் போட்டு அரைக்கவும் முக்கால்வாசி அரைப்பட்டதும் தேங்காய்துருவல் சேர்க்கவும்.
பின் ஏலக்காய் வாழைப்பழம் சேர்த்து அரைத்து எடுக்கவும் .வெல்லத்துடன் சிறிது தண்ணீர்சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் ,இறக்கி வடிகட்டி பின் இதனுடன் சேர்த்துகலந்து கொள்ளவும்.
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை சின்ன கரண்டியால் எடுத்து ஊற்றவும் .இரண்டு புறமும் நன்றாக வேகவிட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான ஆரோக்கியமான தினை அப்பம் ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News