25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >>


முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அருப்புக்கோட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 24.06.2023 அன்று இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம்  நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுகிற விதமாக, தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்நோக்கு சிறப்பு முகாம்களை நடத்திட  தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி அமலா உயர்நிலைப்பள்ளி மற்றும் அருப்புக்கோட்டை APTSMPS மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் 24.06.2023, சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண்,காது மூக்கு, தொண்டை மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால்  வழங்கப்பட இருக்கிறது.இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இசிஜி, எக்கோ, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும்;, ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.
மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைக்கான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது.இந்த மருத்துவ முகாமில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News