25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் >> ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >> ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா >> ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில்  இலக்கிய மன்றம் நிறைவு விழா >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண் டாள் கோயிலில் யுகாதி விழா . >> கோதண்டராமர் கோவிலில் பிரமோற்சவ விழா. >> பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >>


முதுமை

Apr 23, 2025

வயதானவர்களை தாக்கும்  (சர்கோபீனியா நோய் )

மனிதர்கள் முதுமை அடையும்போது, உடலின் தசைகள் மெதுவாக வலிமையிழக்கத் தொடங்குகின்றன. இந்த நிலைமைக்கு மருத்துவத்தில் 'சர்கோபீனியா' என்ற பெயர் உள்ளது..இது வயதினால் மட்டுமல்ல; உடற்பயிற்சியின்மை, மது மற்றும் புகை பழக்கம், புரதச்சத்து மற்றும் வைட்டமின் டி குறைபாடும் முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.வயதானவர்கள் எப்போதும் அமராமல், சற்று நடக்கவும், நிற்க வேண்டும். ஒரு வாரம் படுக்கையில் இருந்தால், 5% வரை தசை இழப்பு ஏற்படும். அதை மீண்டும் மீட்டெடுக்க மிகவும் கடினம்.இதைவிட ஆபத்தானது தசை குறைபாடு ஏற்படுவதால். சர்க்கரை அளவு கூடும்,  நடையிலும் தடை ஏற்படும். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் போன்றவை தசையை வலிமையாக்கும் சிறந்த வழிகள்.60-70 வயதினருள் 13% பேர், 80-க்கு மேல் உள்ளவர்களில் பாதி பேர் வரை இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். அதனால், தினமும் சிறிய பயிற்சிகளுடன் உடலை இயக்குங்கள்.

Apr 16, 2025

உணவை மென்று சாப்பிட சிரமப்படுபவர்களுக்கு...

பல் இல்லாத முதியோர்கள்உணவை  மென்று சாப்பிட  மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் பெரும்பாலும் திரவ உணவையோ அல்லது திரவம் அதிகமாகக் கலந்துள்ள உணவையோதான் எடுத்துக்கொள்வார்கள். இதனால் உணவின் அளவு மட்டுமல்ல,அதன் ஊட்டச்சத்து நிலையும் குறைந்துவிடும்.மெல்வதற்குச் சிரமப்படும் முதியோர்களுக்கான சில யோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பின்பற்றினால் அவர்களின் ஊட்டச்சத்து நிலை மேம்படும். ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.பால்அருந்தவும்,பனீர், சீஸ்சாப்பிடவும்,மெல்வதற்குக்கடினமானபொருள்களைநன்றாகஅரைத்து, மசித்துச்சாப்பிடவும்.காய்கறிகளை வேகவைத்து மசித்துச் சாப்பிடவும். மிருதுவான பழங்களான வாழை, பப்பாளி, மாம்பழம், வேகவைத்த ஆப்பிள் சாப்பிடவும் அன்னாசி, எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ்கள் குடிக்கவும்.குழைய வேகவைத்த சாதம், சேமியா, பொங்கல் மற்றும் உப்புமா சாப்பிடலாம்.வேகவைத்த முட்டை,மிருதுவான இறைச்சி,வேகவைத்த மிருதுவான மீன்.தக்காளி போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிட வேண்டியிருந்தால் பொடியாக நறுக்கியோ தோலுரித்தோ சாப்பிடலாம்.சூப் வகைகள், ரொட்டித் துண்டுகளைப் பாலோடு சேர்த்துச் சாப்பிடலாம்.ஐஸ்க்ரீம், ஜெல்லி, புட்டிங்ஸ், பாயசம், பாஸந்தி, ஜாமூன் மற்றும் ஜாங்கிரி போன்ற மிருதுவான உணவுகளைச் சாப்பிடலாம்.

Apr 09, 2025

எந்த நோயும் இல்லை ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி உரிய காலத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்.

வயதானவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, தைராய்டு, சிறுநீரக பிரச்சனை போன்ற நோய்களில் ஏதேனும் இருந்தால் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் இந்த மாத்திரைகளோடுவைட்டமின்டி.பி6, பி 12, கால்சியம்மாத்திரைகளையும்பரிந்துரைத்திருப்பார்கள்.அதையும்தவிர்க்காமல்எடுத்துகொள்ளுங்கள்.மருத்துவர் குறிப்பிட்ட அளவு மட்டுமேயான மாத்திரைகளை எடுத்துகொள்ள வேண்டும். சுயமாக மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதே போன்று மாத்திரைகள் வாங்கும் போது அது பயன்பாட்டில் உள்ளதா என்பதையும் பரிசோதிப்பது அவசியம். மாத்திரைகள் விஷயத்தில் எப்போதும் சமாதானம் ஆக வேண்டாம்.நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய், தைராய்டு என எந்த நோயாக இருந்தாலும் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வயதானவர்கள் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை.வீடு தேடி வந்து ரத்த பரிசோதனை செய்கிறார்கள். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்கள் வீட்டிலேயே அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வசதீயாக வீட்டிலேயே பரிசோதனை செய்யும் கருவி வாங்கி வைத்துகொள்ளலாம்.எந்த நோயும் இல்லை ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி உரிய காலத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்.

Apr 02, 2025

படுக்கைப்புண்

படுக்கைப்புண் என்பது அழுத்தப்புண். அதாவது தொடர்ந்து ஏற்படும் அழுத்தத்தினால் திசுக்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் பிராணவாயுவும், ஊட்டச்சத்தும் திசுக்களுக்குக் குறைகிறது. தசைகளிலிருந்து கழிவுப் பொருட்கள் வெளியேறுவது குறைந்து அங்குள்ள திசுக்கள் இறந்து புண்ணாகிவிடும். முதலில் தோலில் நிற மாற்றம் இருப்பதைக் காணலாம். பிறகு புண்ணாகி மிகவும் ஆழமானதாக மாறிவிடும். இது உடலில் பெரும்பாலும் எலும்புகள் புடைத்துக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஏற்படும். அந்த இடங்கள் படுக்கைகளில் அழுத்தப்படும் போது அழுத்தம் அதிகரித்து, ரத்த ஒட்டம் குறைந்து திசுக்கள் இறந்து அழுத்தப்புண் உண்டாகிறது.தோலில் ஏதாவது ஒரு அசாதாரணமான மாற்றம் ஏற்பட்டால் உடனே அதை மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.புண் ஏற்பட்டுள்ள பகுதியில் அழுத்தம் ஏற்படாமல் இருக்கத் தலையணை அல்லது காற்றுத் தலையணை வைத்து அழுத்தத்தைக் குறைக்கலாம்.சுமார் 2 மணி நேரத்திற்கு ஒருமுறையாவது புண் இருக்கும் இடத்திற்கு அழுத்தம் ஏற்படாமல் நிலையை மாற்றிப் படுக்கவைக்க வேண்டும். (Change of position).தேவையானால் கிருமிநாசினி மருந்து மூலம் புண்ணைச் சுத்தம் செய்து தகுந்த மருந்துகளை வைத்துக் கட்டுப்போட வேண்டும்.உடல்நலம் தேறத் தேவையான கலோரி, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற உணவு வகைகளைக் கொடுக்கலாம். புண் மிகவும் ஆழமாகவோ, அழுகியோ இருந்தால் அதை மருத் மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க வேண்டும்.முதியோர் கவனிப்பில் பொதுக் கவனிப்பும், அடிப்படை வசதிகளுமே மிகவும் முக்கியமானவை. இவற்றைச் செவிலியர் மிக கவனமாகக் கடைப்பிடித்தால் பலதொல்லைகள் வராமலேயே தவிர்க்க முடியும் அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தக்க சிகிச்சை அளிக்க முடியும்.

Mar 26, 2025

மூத்த குடிமக்கள் அல்சைமர் நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி,  முடிந்தவரை பலருடன் பேசுவதும் சுறுசுறுப்பாகப் பழகுவதும்தான்.

வயதானவர்கள் அதிகம் பேசினால் கிண்டல் செய்யப்படுவார்கள், ஆனால் மருத்துவர்கள் அதை ஒரு வரமாகப் பார்க்கிறார்கள் : ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் அதிகம் பேச வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் தற்போது நினைவாற்றல் இழப்பைத் தடுக்க வழி இல்லை.  அதிகம் பேசுவதுதான் ஒரே வழி.   மூத்த குடிமக்கள் அதிகம் பேசுவதால் குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன.  பேசுவது மூளையை செயல்படுத்துகிறது, ஏனெனில் மொழியும் எண்ணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன, குறிப்பாக விரைவாக பேசும்போது, இது இயல்பாகவே சிந்தனையை விரைவுபடுத்துகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது.   பேசாத மூத்த குடிமக்களுக்கு ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிகமாகப் பேசுவது மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மனநோயைத் தடுக்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.  பெரும்பாலும் எதையும் பேசாமல் இதயத்தில் எல்லாவற்றையும் வைத்துக்கொள்வது, மூச்சுத் திணறல் மற்றும் அசௌகரியமாக உணர்கிறது, எனவே, பெரியவர்கள் அதிகம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது. பேச்சு முகத்தின் சுறுசுறுப்பான தசைகளுக்குப் பயிற்சி அளிக்கிறது, தொண்டைக்கு பயிற்சி அளிக்கிறது, நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது, கண்கள் மற்றும் காதுகளை சேதப்படுத்தும் தலைச்சுற்றல் மற்றும் காது கேளாமை போன்ற மறைந்திருக்கும் ஆபத்துகளைக் குறைக்கிறது.   ஓய்வு பெற்ற மூத்த குடிமகன், அல்சைமர் நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, உங்களால் முடிந்தவரை பலருடன் பேசுவதும் சுறுசுறுப்பாகப் பழகுவதும்தான்.   இதற்கு வேறு பரிகாரம் இல்லை.

Mar 18, 2025

முதுமையில் ஏன் அடிக்கடி கீழே விழுந்து விடுகிறார்கள்?

 வயதுஆக ஆக உடலைச் சரிசமமான முறையில் வைத்துக்கொள்ள உதவும் உறுப்புகளின் திறன் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. உடலைச் சரியான நிலையில் வைத்துக்கொள்வதற்கு உள்காது, சிறுமூளை, கண், சதைகள் மற்றும் மூட்டுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த ஒருங்கிணைப்பில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் நிலைத்தடுமாறிக் கீழே விழ வாய்ப்பு உண்டு. இம்மாற்றம் முதுமையில் அதிகம் ஏற்படுவதால் முதுமைக் காலத்தில் அடிக்கடிக் கீழே விழுந்து விடுகிறார்கள்.வயதான காலத்தில் கீழே விழுவதற்குப் பல காரணங்கள் உண்டு. நரம்பு சார்ந்த நோய்கள் (உ.ம்: அறிவுத்திறன் வீழ்ச்சி, உதறுவாதம், பக்கவாதம்)காது சார்ந்த நோய்கள்.கண் பார்வைக் குறைதல் (உ.ம்: கண் புரை) மூட்டுவலி மற்றும் சதைகள் சார்ந்த நோய்கள்ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படுவது. அதாவது, ஒருவர் படுத்த நிலையில் இருக்கும்போது, ரத்த அழுத்தம் சரியாக இருக்கும். ஆனால், திடீரென்று எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது, ரத்த அழுத்தம் வேகமாகக் குறைந்துவிடுகிறது (Postural hypotension). இதனால் கீழே விழ வாய்ப்புகள் அதிகமாகின்றன.

Mar 12, 2025

58 வயதுக்கு மேல் வேலை இடம் , சமூகம், குடும்பம் உலகம் கூட உங்களை மறக்கத் தொடங்கும். மனம் வருந்த வேண்டாம்:

58 முதல் 65 வயது வரை உங்கள் வேலை இடம் உங்களை விட்டு விலகும். நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையில் எவ்வளவு வெற்றி பெற்றிருந்தாலும், (அ) அதிகாரம் கொண்டிருந்தாலும், ஒருநாள் சாதாரண மனிதராகவே பார்க்கப்படுவீர்கள். அதனால், உங்கள் பழைய பதவியோ, தொழிலின் பெருமையோ மாறாது என்று நினைத்து அவற்றில் பற்றிக் கொள்ளாதீர்கள்.65 முதல் 72 வயது வரை, இந்த வயதில் சமூகமும் உங்களை விட்டு விலகத் தொடங்கும். உங்கள் நண்பர்கள், பழைய தொடர்புகள் குறைந்து, வேலை இடத்திலும் உங்களை அவ்வளவாக எவரும் நினைவில் கொள்ள மாட்டார்கள். "நான் ஒருகாலத்தில்..." என்று சொல்லாதீர்கள், காரணம் இன்றைய தலைமுறை அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதை ஏற்றுக் கொண்டு, மனம் வருந்தாதீர்கள் ! 72 முதல் 77 வயது வரை இந்தக் கட்டத்தில் உங்கள் குடும்பமும் நெருங்கியதாய் இருக்க முடியாது. உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருந்தாலும், பெரும்பாலும் நீங்கள் உங்கள் துணையோ (அ)தனியாகவோ இருப்பீர்கள். பிள்ளைகள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வருவது ஒரு அன்பின் வெளிப்பாடு, அதனால் அவர்கள் அடிக்கடி வரவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். அவர்கள் வாழ்க்கை பொறுப்புகளில் மூழ்கியிருக்கிறார்கள்!77 வயதுக்கு மேல்: இந்தக் கட்டத்தில் உலகம் கூட உங்களை மறக்கத் தொடங்கும். ஆனால் இதை ஒரு துன்பமாக நினைக்காதீர்கள், இது இயற்கையின் நடைமுறையாகும். ஒவ்வொருவரும் இதே பாதையை கடந்து செல்லவேண்டும்.எனவே, உங்கள் உடல் இன்னும் வலுவாக இருக்கும்போது, வாழ்க்கையை முழுமையாக அனுபவியுங்கள்!விளையாடுங்கள், விரும்பியதை செய்யுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். அன்பு நண்பர்களே, சகோதரர்களே, சகோதரிகளே,மேலே குறிப்பிட்ட விஷயங்கள்  உண்மையாகவே நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன.இதை எழுதியவருக்கு மனமார்ந்த நன்றி & பாராட்டுகள்!58 வயதுக்குமேல்: நண்பர்கள்குழுவாகஉருவாகுங்கள். ஒருகுறிப்பிட்டஇடத்தில், ஒருகுறிப்பிட்டநேரத்தில்சந்தித்து,பழையநினைவுகளைபகிர்ந்துமகிழுங்கள். தொலைபேசியில் பேசிக் கொண்டு இருங்கள்.வாழ்க்கையை சந்தோஷமாக கழியுங்கள்.எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் !

Mar 01, 2025

அறுபது வயது முதியவர், தனியாக இருந்தால்....

அறுபது வயது முதியவர், தனியாக இருந்தால், 60 வயது முதியவர் போல் இருப்பார்..!!60 வயதுடைய இரண்டு பேர் சந்தித்தால், 30 வயதுடையவர்கள் போல இருப்பார்கள்..!!!60 வயதுடைய மூன்று பேர் ஒன்று சேர்ந்தால் 20 வயது இளையவர்களாகத் தெரிகிறார்கள்..!!!!60 வயதுடைய ஆறு பேர் ஒன்று சேர்ந்தால், அவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள்போல இருப்பார்கள் அதனால்தான் ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களை மறக்காமல் தொடர்ந்து சந்தித்து வந்தால், முதுமையின் அறிகுறிகள் மறைந்துவிடும்.நண்பர்களை மறந்து விடாதீர்கள்..!

Feb 26, 2025

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் ,தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலிக்கு நல்ல தீர்வு.

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம் 2 முதல் 3 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் போதும், நல்ல தூக்கம் வரும். உடலில் இருக்கும் சோர்வு பறந்துபோகும்.சாதாரண வயிற்றுப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெய் பூசி மசாஜ் செய்துவரகுணமாகும். உங்களுடைய குழந்தைகளின் பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தால் அவர்கள் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்கூடாக காண்பீர்கள்.தூங்க செல்லும் முன் இரண்டு நிமிடங்கள் தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வதால் கால்களில் இருக்கும் வீக்கம், வலி ஆகியவை குணமாகும். இதனை செய்ய ஆரம்பித்த இரண்டு நாட்களில் பலனை அனுபவிப்பீர்கள் தொடர்ந்து செய்வதால் நல்ல தூக்கம், வலியில்லாத கால்கள் வசப்படும்.  சிலருடைய கால்களில் எரிச்சல் உணர்வும் வலியும் காணப்படும் அதற்கும்  இது நல்ல தீர்வு.

Feb 11, 2025

வயதாகி விட்டதே என்று வருத்தப்படாதீர்கள்."

இப்படி வருத்தப்படுகிறவாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை என்று சந்தோசப்படுங்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள்! 50-க்குப் பிறகு கிடைக்கும் ஒவ்வொரு ஆண்டும் போனஸ்! அறுபதுக்கு பிறகு கிடைக்கும் ஒவ்வொருமாதமும் போனஸ்! 70க்குபிறகுஒவ்வொரு வாரமும் போனஸ்! 80க்கு பிறகு ஒவ்வொரு துளிமே போனஸ்தான்! வாழ்ககையின்ஒவ்வொரு  நிமிடத்தையும் மகிழ்ச்சி அனுபவியுங்கள்!!

1 2

AD's



More News