25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


சமையல் குறிப்பு

Jun 17, 2025

இறாலை சமைக்கும் போது 10-13 நிமிடங்கள் மட்டுமே வேக வைக்க வேண்டும்.

எலுமிச்சைப்பழம் உலர்ந்து விட்டால் கொதி நீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறைய சாறு கிடைக்கும்.நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.புளியை அவ்வப்போது கரைத்துக் கொண்டிருப்போம்.இதனால் மீதம் உள்ள புளி வீணாகும். இதனை தவிர்க்க புளி பேஸ்ட் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.பச்சை மிளகாயின் காம்பு பகுதியை நீக்கி விட்டு ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.இறாலைசமைக்கும்போது 1013 நிமிடங்கள்மட்டுமேவேகவைக்கவேண்டும்அப்படிவேகவைத்தால்இறால்மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.

Jun 16, 2025

மின்சார பிரஷர் குக்கர்கள்

மின்சார பிரஷர் குக்கர்கள் பாரம்பரிய முறைகளை விட வேகமாக உணவை சமைக்கின்றன. இதனால் நேரம் மற்றும் ஆற்றல் மிச்சமாகிறது. வழக்கமான கேஸ் அடுப்பில் சமைப்பதை விட குறைவான ஆற்றலே பயன்படுத்துகிறது. விரைவான சமையல் செய்முறை மற்றும் மூடி அமைப்பு உள்ளதால், உணவின் விட்டமின்கள் மற்றும் தாதுக்களை பாதுகாக்க உதவுகிறது. பிரஷர் குக்கர்கள் துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியம் போன்ற பல்வேறு பொருட்களில் கிடைக்கின்றன. இவை நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்தவை.சமைக்கும்போது அதிக ஸ்டார்ச்சை வெளியிடும் ஒரு உணவாக பாஸ்தா இருக்கிறது. எனவே, இதை ஒருபோதும் குக்கரில் சமைக்க வேண்டாம். ஒரு பாத்திரத்தில் சமைத்த பிறகு அதிகப்படியான தண்ணீரை வடிகட்டுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Jun 09, 2025

வீட்டில் ரவை உப்பு மா மீதி இருந்தால்…

சமையலுக்கு பருப்பு வேக வைக்கும் போது அதனுடன் வரமிளகாய் சேர்த்து வேக வைத்தால் பருப்பு சீக்கிரமாக வெந்து விடும்.வீட்டில் செய்யும் ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க ஊறுகாயில் சிறிதளவு குக்கிங் வினிகர் சேர்த்து கலந்து வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.சிக்கன் மட்டன் ரோஸ்ட் செய்யும் போது எண்ணெய் அதிகமாகி விட்டால் சிறிது அரிசி மாவு தூவினால் சரியாகிவிடும். கறி சுவை மற்றும் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.கருவேப்பிலை இலைகளை அரிசியுடன் போட்டு வைத்தால் வண்டுகள், பூச்சிகள் என எதுவும் எட்டி கூட பார்க்காது.வீட்டில் ரவை உப்புமா மீதி இருந்தால் அதனோடு சிறிது அரிசி மாவை கலந்து வடையாக தட்டி எண்ணெயில் வறுத்து எடுத்தால் அட்டகாசமான வடை தயார். 

Jun 01, 2025

பிரெட் பக்கோடா செய்வதற்கு…

உங்கள் வீட்டில் உள்ள கண்ணாடி அழுக்கடைந்து விட்டால் ஒரு துண்டு உருளைக்கிழங்கு எடுத்து தேய்த்த பின் தண்ணீர் வைத்து கழுவினால் கண்ணாடி பளபளக்கும்.வாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும், ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்ததுபிரெட் பக்கோடா செய்வதற்கு முன் வெட்டி வைத்திருக்கும் பிரெட் ஸ்லைஸ்களை பாலில் முக்கி எடுத்த பிறகு பக்கோடா மாவில் போடுங்கள் அட்டகாசமான சுவை கிடைக்கும்.காலிஃபிளவரை சமைக்கும் போது சிறிதளவு பால் சேர்த்து சமைத்தால் வெள்ளை நிறம் மாறாது.பச்சை வாடையும் இருக்காது.பன்னீரை வெதுவெதுபான தண்ணீரில் போட்டு எடுத்தால் மென்மையாக மாறிவிடும். பின் பன்னீர் கிரேவி செய்தால் அட்டகாசமான ருசியில் இருக்கும்

May 26, 2025

சமையல் அறை சுத்தமாக இருக்க..

காஸ் அடுப்பு மற்றும் சமையல் மேடையில், திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து, ஊற விடவும். அதன் பின் தண்ணீர் ஊற்றி துடைத்தால், எண்ணெய் பிசுக்கு அகன்று விடும்கண்ணாடி பாட்டிலில் வீசும் துர்நாற்றம் போக்க, அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு சிட்டிகை கடுகு அல்லது சோடா உப்பு போட்டு குலுக்கி, ஊற வைத்து கழுவலாம். சமையல் அறையில், எண்ணெய் பிசுக்கு ஒட்டி இருக்கும். டைல்சை சாதாரண துணியால் துடைத்த பின், + வெதுவெதுப்பான நீரில் சலவை சோடாவை கலந்து, பிசுக்கு உள்ள இடங்களில் பூசி, உலர்ந்த துணியால் துடைத்தால், 'பளிச்'சென மின்னும். மின்சார அடுப்பில் பால் போன்றவற்றைக் கொதிக்க வைக்கும்போது.அடுப்பின் மீது அவை கொட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அடுப்பை தொட்டாலோ அல்லது ஓர் உலோகக் கரண்டியால் பாலைக் கிளறினாலோ கடுமையான மின்சார.ஷாக்' அடிக்க வாய்ப்புள்ளது.பாத்திரங்களை அலம்பும் நீரில், அவ்வப்போது சிறிது வினீகரை கலந்து கழுவினால், பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும் கைகளும் மென்மையாக இருக்கும்.

May 25, 2025

பாலின் ருசி மாறாமல் இருக்க….

வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் தீய்ந்த பாலில் சூடு ஆறு முன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்ணீரில் போட்டு உரிக்கவும் கண்ணும் கரிக்காது.கிச்சன் திண்ணையில் தேவையில்லாத ஸ்மெல்,எறும்பு, பூச்சிகள் வராமலிருக்க ஒரு பாத்திரத்தில் 4 கிராம்பை தட்டி அதனுடன் 1/4ts மஞ்சள் தூள், 1 கப் தண்ணீர் கலந்து இதில் காட்டன் துணியை நனைத்து துடைத்தால் போதும்தேனில் 4 கிராம்பை போட்டு வைத்தால் எறும்பு வராது.காய்கறி சூப்பில் 1பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, ஒரு கைப்பிடி மல்லி இலை, 6 சின்ன வெங்காயம், பாதி தக்காளி,  1Tbs சீரகம், 10 மிளகை இடிகல்லில் இடித்து சேர்த்தால் சூப் நல்ல சுவை மணமாக இருக்கும்.

May 19, 2025

பாயாசம், கேசரி போன்றவை செய்யும் போது அரிசி, ரவை வெந்த பிறகு தான் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

பாயாசம், கேசரி போன்றவை செய்யும் போது அரிசி, ரவை வெந்த பிறகு தான் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.தயிர் பச்சடி நீர்த்து விட்டால் சிறிது நிலக்கடலையை வறுத்து பொடியாக்கி கலந்து விட்டால் தயிர் பச்சடி கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.டீ, காபி குடிக்கும் கப்பில் படிந்துள்ள கரையை நீக்க ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி கறை உள்ள இடத்தில் தேய்த்து கழுவ கறை போகி விடும்.ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது அதனுடன் குளிர்ந்த பால் சேர்த்து அரைத்தால் ஆப்பம் நல்ல மெத்து மெத்தென மென்மையாக இருக்கும்.முட்டையை பயன்படுத்தி எந்த உணவு செய்தாலும் அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொள்வது நல்லது.

May 05, 2025

எலுமிச்சை சாதம் சுவையாக இருக்க.....

புளியைஅரிசி களைந்த தண்ணீரில் ஊற போட்டு, பிழிந்து ரசம் வைத்தால் சுவையாக இருக்கும்.தேங்காய் சாதம், எலுமிச்சைசாதம்,தயார்செய்யும்போதுகொஞ்சம்பொட்டுக்கடலையை வறுத்துக்கொட்டினால் சுவையாக இருக்கும். பால் உறைக்கு ஊற்றும்போது வெதுவெதுப்பாக இருந்தால் தான், தயிர் நன்கு உறையும். சூடாகவோ அல்லது ஆறியதாகவோ இருந்தால் தயிர் சரியாக உறையாது.டால்டா,நெய் போன்றவை கெட்டியாக இருக்கும்போது பாத்திரத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும். ஸ்பூனை சூடாக்கிக் கொண்டு எடுத்தால் சுலபமாக வரும்.எலுமிச்சை சாதத்துக்கு தாளிக்கும் போது அதனுடன் 2 பச்சைமிளகாய், சிறிய துண்டு இஞ்சி, பாதி வெங்காயம், மல்லி இலையை அரைத்து சேர்த்தால்' எலுமிச்சை சாதம் சுவையாக இருக்கும்.

Apr 28, 2025

பருப்பு கலவை சாதம் செய்ய...

குக்கரில் சிறிதளவுஎண்ணெய்ஊற்றிஅதில்கடுகு,உளுந்து, சீரகம்சேர்த்துதாளித்துஅதன்பின்நறுக்கியவெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் காய்கறிகள் அனைத்தும் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பின் அதில் மேலே கூறிய அளவில் பெருங்காயம், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் அரிசி, புளி கரைசல் மற்றும் துவரம் பருப்பு சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். அதில் சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து குக்கரைமூடவும்.விசில்  வந்தவுடன் குக்கரை இறக்கவும்.இப்போது பருப்பு கலவை சாதம் பரிமாற ரெடி.

Apr 22, 2025

தொக்கு வகைகள், ஊறுகாய் வகைகள் செய்யும் போது…

 எந்த வகையான அசைவ உணவு சமைத்தாலும் கழுவும் போது சமையல் வினிகர் கொஞ்சம் மஞ்சள் தூள் கொஞ்சம் சேர்த்து கழுவிய பின் பிசைந்து வைத்தால் வீட்டில் வாடை வராது.தொக்கு வகைகள், ஊறுகாய் வகைகள் செய்யும் போது கடுகு வெந்தயம் இரண்டையும் வறுத்து பொடி செய்து கடைசியாக தூவி கிளிறி இறக்கினால் சீக்கிரம் கெடாது.அசைவ உணவு சாப்பிடும்போது எலுமிச்சம்பழத்தை நான்காக நறுக்கி வெங்காயத்தையும் வைத்து கொண்டு சாப்பிட்டால் சாப்பிடும் போது திகட்டாது.தயிர் கொண்டு கை அலம்ப மண்ணெண்ணெய் வாசம் போய்விடும்.பாலை கொதிக்க விடாமல் லேசாக சூடாக்கி, ஒரு ஸ்பூன் சர்க்கரையை அப்பாலில் கரைத்து பின்னர் உறை ஊற்றினால் தயிர் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.வற்றல் குழம்பு செய்யும்போது, தாளித்த எண்ணெய் பிரிந்து மேலேவரும் வரை  கொதிக்க விட வேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News