உளுந்து வடை செய்யும் போது உளுத்தம் மாவு தளர்ந்து இருந்தால் சிறிதளவு பச்சரிசி மாவை அதில் தூவினால் உளுத்தமாவில் தேவைக்கு அதிகமாக உள்ள தண்ணீரை உறிஞ்சிவிடும். அல்லதுசோள மாவு (corn flour) சேர்த்தால் உடனடியாக ஊறி மாவு கெட்டியாவதுடன் சுவையும் அபாரமாக இருக்கும்.வடை செய்வதற்கு வெள்ளை உளுந்தை போடாமல் கருப்பு உளுந்து உடைச்ச உளுந்து போட்டால் அதோட சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்உடைத்த கருப்பு உளுந்தை ஊறவைத்து அதன் தோலை கழுவி எடுக்காமல் அப்படியே அரைத்து பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு கருவேப்பிலை சேர்த்து வடை செய்தால் வடை சுவையாகவும் மணமாகவும் கருப்பு உளுந்தின் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.உளுந்து வடைக்கு அரைத்த மாவுடன் ஊறவைத்த பயத்தம் (பாசிப்) பருப்பைக் கலந்து வடை செய்தால் சுவையாகவும் மொறு மொறுப்பாகவும் இருக்கும்.உளுந்தம் பருப்பை வடைக்கு அரைக்கும் போது பச்சரிசியையும் கொஞ்சம் சேர்த்து அரைத்தால் வடை மொறுமொறுவென்று இருக்கும். அதே போல் வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமானால் சிறிது அரிசிமாவினை சேர்த்தால் கெட்டியாகிவிடும்.
பால் லேசாகத்திரிந்து விட்டால், அதில் சிறிது சமையல்சோடா சேர்த்து கலந்து உறை ஊற்றவும். கெட்டித்தயிராகி விடும்.குளிர்காலத்தில் தயிர் எளிதில் உறையாது. பாலை ஒரு ஹாட்பாக்ஸில் ஊற்றி, உறை ஊற்றி மூடி வைத்து விட்டால் மூன்று மணி நேரத்தில் உறைந்து விடும்.பொரித்தெடுத்த ஜாமூனை சூடான சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவைக்காமல், நன்கு ஆறிய சர்க்கரைப்பாகில் சேர்த்தால் ஜாமூன் விரியாமல், கரையாமல், உடையாமல் சுவையாக இருக்கும்.தேன்குழல், சீடை ஆகியவற்றைச்செய்யும் போது மாவை வெந்நீர் ஊற்றிப்பிசைந்தால் எத்தனை நாளானாலும் நமத்துப் போகாது.வெள்ளரிக்காய் சூப் தயாரிக்கும்போது வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துச்சேர்த்தால் நன்றாக இருக்கும்.
டீ தயாரிக்கும் பொழுது டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.ஒரு கப் நல்லெண்ணெய்யை சூடாக்கி, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம், இரண்டு வெற்றிலை, சிறிய வில்லை அளவு கற்பூரத்தை பொடித்து சேர்த்து,மறுபடியும் சூடு செய்து வைக்கவும். மறுநாள் இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு குளித்தால் ஜலதோஷம் பிடிக்காது, புத்துணர்வும் கிடைக்கும். வெண்ணெய் பாக்கெட்டை இரவு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டுவைத்தால், வெண்ணெய் கையிலோ, பேப்பரிலோ ஒட்டாமல் வரும். மேலும் வெண்ணெய் காய்ச்சி இறக்கியதும் ,அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வைத்தால், நெய் வாசனையாக இருக்கும்.இட்லிக்கு அரிசி ஊற வைக்கும்போது அரிசி யோடு ஐந்தோ, ஆறோ சோயா பீன்ஸை ஊற வைத்து அரைத்தால் இட்லி மல்லிப்பூப் போல் மிருதுவாக இருக்கும்.காய்கறி, பருப்பு, ரசம் இவற்றிற்கு அளவாக நீரைச்சேர்த்து கொதிக்கவிடவும். வெந்த பிறகு நீரை வடித்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகி விடும். அப்படி நீரை வடித்தால் அந்த வடிநீரை குழம்பு, கூட்டு இவற்றில் சேர்த்து விடவும்.
கூட்டு, குருமா, கிரேவி வகைகளில் தண்ணீர் அதிகமானால் பாலில் சோள மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து கலந்து கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும். . வெண்பொங்கல் காரமாக இருந்தால் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்தால் காரம் குறைந்து விடும். சூப் செய்தாலும் சிறிதளவு பொட்டுக்கடலை மாவை தண்ணீரில் கரைத்து சூப்புடன் சேர்த்து செய்து பாருங்கள், சூப் கெட்டியாக, டேஸ்ட்டியாக இருக்கும். சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த பெருங்காய நீரை உபயோகித் தால் மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும். அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியு டன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி.
பாகற்காய் துண்டுகளை உப்பு சேர்த்து பிசறி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அலசி விட்டு சமைத்தால் அவ்வளவாக கசக்காது.கூட்டு, பொரியலுக்கு தேங்காய்ப்பூ இல்லையா! புழுங்கல் அரிசியை பொரித்து பொடி செய்து தூவி இறக்கினால், தேங்காய் சேர்ந்த சுவை கிடைக்கும்.தோசை மாவில் உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம்பருப்பை ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்து விட்டால் உப்பு சரியாகிவிடும். பால் பாயசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கிவிடும் அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது குழம்பும் ருசியாக இருக்கும்.சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.
ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறு மொறு வென்றிருக்கும். ஜாங்கிரி செய்யும்போது, பத்து ஜாங்கிரியை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலே தயிர் ஊற்றி, கொஞ்சம் உப்பு போட்டு ஊறவைத் துச் சாப்பிட்டுப் பாருங்களேன். சூப்பர் ருசி!தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.மாதுளம்பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து பூ வெந்ததும் எடுத்துவிட்டு ஆறியதும் பாலில் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். இதுபோல தொடர்ந்து எட்டு நாட் களுக்கு அருந்தினால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.பருப்பு ரசம் நுரையுடன் பொங்கிவரும் போது கொத்தமல்லித்தழையை உடனே போடாமல் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, ஐந்து நிமிடம் தாமதித்து ரசத்தில் கிள்ளிப்போட்டால் மல்லி அதன் பசுமை மாறாமல் ரசம் கமகமவென்று வாசனையுடன் இருக்கும்.
எந்த கிழங்கை வேக வைத்தாலும் 10 நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்து, பின் வேகவைத்தால் வேகமாக வெந்துவிடும். சுண்டல் செய்யும் போது சீரகம், ஓமம், மிளகு ஆகியவற்றை வறுத்து பின் பெருங்காயம், சுக்கு சேர்த்து பொடி செய்யவும். எந்த சுண்டல் செய்தாலும் இறக்குவதற்கு முன் இந்த பொடியை தூவிக் கிளறினால், வாயுக்கோளாறு, வயிறு உப்புசம்: ஏற்படாமல் நீங்கும். பருப்பு பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் சிறிது கொள்ளுப் பயரையும் சேர்த்து கொண்டால் பொடி மிகவும் சுவையாக இருக்கும் இது வாயுப் பிரச்சனையை தீர்ப்பதோடு கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. பாயாசம் செய்யும் போது ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க வெறும் வாணலியில் நெய் சேர்த்து வறுத்தால் ஐவ்வரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும். குருமா, தேங்காய்ச் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும் குருமாவில் தேங்காயின் அளவை குறைத்து, பாதாம் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம். இது கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தும்.குழந்தைகளுக்கும் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
குலாப் ஜாமுனை எண்ணெய்யில் பொரிக்கும்போது சிறிது கருகி விட்டாலும் ஜாமும் இருகி, சுவை மாறிவிடும். இதற்கு ஜாமுனை சர்க்கரை பாகுடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து சூடு செய்து இறக்கினால் போதும் ஜாமும் மிருதுவாக இருக்கும்.அதிரசம் செய்யும்போது அதிரச மாவுடன் பேரிச்சம் பழத் துண்டுகள் சேர்த்து, பிசைந்து அதிரசம் செய்தால் புது சுவையுடன் இருக்கும் குழந்தைகள் விரும்பி உண்பர்.சிலருக்கு சீடை செய்யும்போது வெடித்து விடும். அதற்காகவே சீடைச் செய்வதை கைவிட்டு இருப்பார்கள். இனி சீடை செய்யும் போது, மாவினை சீடையாக உருட்டிய பிறகு, ஊசியால் சிறு துளையிட்ட பின் எண்ணெய்யில் பொரித்தால் வெடிக்காது.பலகாரத்தில் அதிக எண்ணெய்த் தன்மை இருந்தால் இரண்டு நாட்களுக்குமேல் பயன்படுத்த முடியாது. எனவே எண்ணெய் பலகாரங்கள் செய்ய ஆரம்பிக்கும் போதே, எண்ணெய்யில் சிறு துண்டு புளியைப் போட்டு பின், பலகாரங்களைப் பொரித்து எடுத்தால் பலகாரங்கள் எண்ணெய் உறியாமல் இருக்கும்.இந்த தீபாவளிக்கு சிறு தானியங்கள் தான் டிரெண்ட் உங்கள் வீட்டில் எந்தச் சிறுதானிய பலகாரம் செய்தாலும் மாவுடன், சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், பலகாரம் ருசியாக இருக்கும்முறுக்கு வெள்ளையாக ருசியாக மொறுமொறுன்னு இருக்க டிப்ஸ்பச்சரியை கழுவி வெயிலில் காய வைக்காமல் நிழலில் ஒரு துணியில் காய வைக்க வேண்டும். உளுந்தை சிவக்கவோ பழுப்பாகவோ வறுக்கக்கூடாது. வாணலி சூடு ஆனவுடன் உளுந்தை போட்டு வாசம் வரும்வரை அடுப்பை சிம்மில் வைத்து வறுக்க வேண்டும். உளுந்தில் கறுப்பு உளுந்து, சிவந்த உளுந்தை பொறுக்கி எடுத்து விட வேண்டும்.முக்கால் பங்கு சூடு ஆறியவுடன் காய்ந்த அரிசியுடன் ஒன்றாக உளுந்தை கொட்டி வைக்கலாம்.மிஷினில் அரைக்கும் முன் 1/2 பச்சரிசி கொடுத்து அரைத்தபின் முறுக்கு மாவு அரைக்க வேண்டும். மிஷினில் வேற மாவு கலந்தால் முறுக்கு மாவு பிணையும் போது கலர் மாறும். மாவு பிணையும் போது தேங்காய் பால் சேர்த்துபிணைய முறுக்கு வெள்ளையாகவும் வாசனையுடனும் மாறுமொறு வென்று இருக்கும்
கடலை எண்ணெய் உள்ள பாத்திரத்தில் சிறிது மிளகு போட்டு வைத்தால், நீண்ட நாட்களுக்கு எண்ணெய் கெடாமல் ஃபிரஷ்ஷாக இருக்கும்.சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.பலகாரம் செய்ய எண்ணெய் காய வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.
தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.சாப்பிட்ட தட்டில் மீதமுள்ளஉணவை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு தட்டை சிங்கில் போடுவோம். அப்படி போடும் முன் தட்டை லேசாக அலசி விட்டுப் போட்டால், பாத்திரம் தேய்ப்பவர் யாராக இருந்தாலும் முகம் சுளிக்காமல் சுத்தம் செய்வர்.சமைக்கும் போது ருசி பார்க்க உள்ளங்கையில் ஊற்றி டேஸ்ட் செய்த பிறகு கையை கழுவ வேண்டும்.அல்லது ஒரு ஸ்பூன், கரண்டி கொண்டு 'டேஸ்ட் பார்த்து எச்சில் செய்த பிறகு அதைஅப்படியே கழுவாமல் மீண்டும் பயன்படுத்த கூடாது.கீழே பச்சை முட்டை கொட்டி விட்டால் அதன் மேல் தூள் உப்பை தூவி காய்ந்த துணி அல்லது நியூஸ் பேப்பரால் துடைத்தால் அந்த இடத்தில் முட்டை வாடை இருக்காது.கீழே எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மேல் கோல மாவு அல்லது அரிசி மாவை தூவி காய்ந்த துணியால் துடைத்து விட்டால் அந்த இடத்தில் எண்ணெய் சிந்திய அடையாளமே இருக்காது.