சமையலறையை பாதுகாக்க.
மஞ்சள், உப்பைக் கலந்து சமையல் அறையில் தூவினால் இடுக்களில் ஒளிந்திருக்கும் கிருமிகள் முற்றிலும் அகலும்.
நொச்சி இலையை சமையல் அறையில், பரப்பி வைத்தால் கொசுக்கள் அண்டாது.
2 கப் வினிகரை ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய்யுடன் சேர்த்து, அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கலந்து சமையல் அறையில் ஸ்ப்ரே செய்தால் கரப்பான் பூச்சிகள் வராது.
எண்ணெய் பாட்டில் வைக்கும் தட்டில் (tray ) ஒரு காட்டன் துணி அடியில் போட்டால் ஒரு வாரம் கழித்து ஜன்னல், இரும்பு பொருள் துடைக்க பயன்படுத்தலாம்.
பிழிந்த லெமன் மூடி இருந்தால் அதில் உப்பு தொட்டு அடுப்பு, விளக்கை தேய்த்தால் பளபளப்பாக இருக்கும்.
0
Leave a Reply