சுவையான ஜவ்வரிசி காராபூந்தி செய்ய ஜவ்வரிசியை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதனுடன் சிறிது மிளகாய் துாள், பெருங்காயத்துாள், தேவையான அளவு உப்பு, மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த சுவை அருமையாக இருக்கும்.பக்கோடா தயாரிக்கும் முன், பேசினில் நெய், சமையல் சோடா சேர்த்து விரல்களால் நன்றாக நுரைக்க தேய்க்கவும். அதன்பின், கடலைமாவு, பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து கலந்து எண்ணெயில் உதிர்த்துப் போட்டால், பக்கோடா கரகரப்பாக இருக்கும்.பச்சரிசி - நான்கு ஆழாக்கு, பாசிப்பருப்பு -இரண்டு ஆழாக்கு எடுத்து வெறும் வாணலியில் வறுத்து, இரண்டும் கலந்து அரைத்து வைத்துக்கொள்ள, காராசேவ், ரிப்பன், தேன்குழல், பக்கோடா, பஜ்ஜி என, எதுவேண்டுமானாலும் செய்யலாம். மாவை கரைத்து, சீரகம்,மிளகு, பெருங்காயத்துாள், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தோசையும் வார்க்கலாம். குலாப் ஜாமூன்பொரித்த எண்ணெயில் சிறு சிறு துண்டுகளாக பிரட்டைப் பொரித்து எடுத்து, பரிமாறும் கிண்ணங்களில் பிரட் துண்டுகளை போட்டு, அதன் மேல், ஜாமூன்களை வைத்து கொடுக்க, அதிகபடியான ஜீராவை பிரட் உறிஞ்சிக் கொள்ளும். அந்த பிரட் துண்டுகளை தனியாகவே சாப்பிடலாம்.பலகாரங்கள் செய்வதற்கு அரிசி மாவு மற்றும் இதர மாவு வகைகளை மெஷின் அல்லது மிக்ஸியில் அரைத்ததுமே பயன்படுத்தாமல், நன்றாக சூடு ஆறியதும் உபயோகிக்கவும்.
சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் மாறாமல் இருக்கும்.மக்காச்சோள மாவு சேத்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.எந்த ஸ்வீட் செய்தாலும், சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால், இனிப்பு துாக்கலாக இருக்கும்.போளி தட்டும் போது, வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால், இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.பலகாரம் செய்ய எந்த மாவை உபயோகிப்பதாக இருந்தாலும், அதை சலித்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.எண்ணெயில் பொரித்து எடுத்தவுடன் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வடிக்க, வடிகட்டி அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்தலாம்.
பாயாசம் தண்ணியாக இருந்தால் 2 டீஸ்பூன் சோள மாவு கரைத்து விட்டு கொதிக்கவிடவும்... குலாப் ஜாமூன் ஜீரா மீதமானால் தயிருடன் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து லஸ்ஸியாக குடிக்கலாம்...வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பி னால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.வெங்காயத்தை இரண்டாகநறுக்கி தண்ணீரில் போட்டு வைத்தால் பொடியாக நறுக்கும் போது கண்கள் எரியாது.கேசரி செய்யும் போது, மூன்று மேஜைக் கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும்.
ஒரு கிலோ பச்சரிசியுடன், 100 கிராம் உளுந்து சேர்த்து வறுத்து, அதனுடன், 100 கிராம் பொட்டுக்கடலை சேர்த்து மிஷினில் அரைத்து வைத்து விட்டால், தேவைப்படும் போது, சீரகம் போட்டு தேன் குழல் செய்யலாம். சுவையும்கூடும். நேரமும் மிச்சம்.ரவா. மைதா, சர்க்கரை இம்மூன்றையும் சமமானஅளவில்எடுத்து, சிறிதுதண்ணீர்சேர்த்துகெட்டியாககரைக்கவும். குழிக்கரண்டியில் மாவை எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு எடுத்தால், வித்தியாசமான ரவை பணியாரம் தயார். காராபூந்தியில் காரம் அதிகமானால், மாவுடன் உப்பு, சிறிது எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்கலாம்.லட்டு பிடிக்கும் போது, ஜீராவில், 100 கிராம் நெய் சேர்த்தால், நெய்யில் செய்தது போல் ருசிக்கும்.ஜாமூன், பாதுஷா போன்றவை செய்யும்போது, மீதமாகும் ஜீராவை பாயசத்துடன் சேர்க்க, கமகம் மணத்துடன் இருக்கும். ஏலக்காய் சேர்க்கவே வேண்டாம்.
துணிகளில் பட்ட எண்ணெய் மற்றும் கிரீஸ் கரைகள் எளிதில் போகாது இந்த கறைகளை போக்க துணியில் சிறிது நீலகிரி தைலத்தை தேய்த்து கசக்கினால் கரை மறையும்.அசைவம் சமைத்த பாத்திரங்களில் ஒரு வித வாசனை வரும். அந்த வாசனை போக வேண்டுமானால் சிறிதளவு புளியை தேய்த்து பின்னர் சோப்பில் கழுவ வேண்டும்.மிக்ஸி ஜாரில் உள்ள பிளேடு சில சமயங்களில் டைட்டாக ஆகிவிடும். இதை கழட்டுவதற்கு வெதுவெதுப்பான தண்ணீரை பிளேடு மூழ்கும் வரை ஊற வைத்து சிறிது நேரம் கழித்து, கழட்டினால் ஈசியாக கழட்டி விடலாம். கலங்கலாக இருக்கும் சுட்ட எண்ணெயில், உருளைக்கிழங்கை நான்கைந்து வில்லைகளாக நறுக்கிப் போட்டு பொரித்துஎடுத்தால், எண்ணெய் துாய்மையாகி, மீண்டும் உபயோகிக்க முடியும்.'நான் - ஸ்டிக்' தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, சுகியனை போட்டு மூடி சிம்மில் வைக்கவும். வெந்ததும் திருப்பிப் போடுங்கள். சுவையில் சிறிதும் குறையாத, எண்ணெயில்லாத சுகியம் ரெடி.
சமையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்புப் பெறும் போது, சமையல் கேஸ் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் சிலிண்டர் வினியோகிக்கும்' நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வெப்பமான பிற பொருட்களில் இருந்து சிலிண்டரை சில அடிகள் தள்ளி வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது வேறு வித எரிவாயு சம்மந்தமான அடுப்புகளை வைத்து பயன்படுத்தக் கூடாது. சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் ரப்பர் டியூப் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும்.கேஸ் கசிவு ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் ரெகுலெட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின் சுவிட்சுகள். மின் சாதனங்களை இயக்கக்கூடாது வெளிப்புறம் இருக்கும் மின் இணைப்பில் மின் சப்ளையை துண்டிக்க வேண்டும்.சிறிதளவு கோதுமை மாவு கேஸ் சிலிண்டர் விபத்தைத் தடுக்கும். நினைவில் வைத்து மற்றவர்களுக்கும் சொல்லுங்கள். மும்பை தீயணைப்பு வீரர்
எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால் சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும்.தேங்காய் சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதங்களுக்கு முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் வாசனை தூக்கும். பார்ப்பதற்கும் அழகஇருக்கும்.சிறிது தனியாவையும், காயவைத்த 2 மிளகாயையும் எண்ணெயில் விட்டு வறுத்துப் பொடி செய்துகொண்டு, கலந்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழச் சாதத்தில் தூவிக் கிளறினால், தனியா பொடிஊறிஎலுமிச்சைசாதம்ருசிஅபாரமாகஇருப்பதுடன், வித்தியாசமாகவும் கலராகவும் இருக்கும்.பாசிப்பருப்பை குக்கரில் வேக வைக்கும்போது. குழைந்து விடாமல் பருப்பு இதழ் இதழாக இருக்க! மூடியுள்ள ஒருபாத்திரத் தில் பருப்பை போட்டு, இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மூடி, குக்கரில் வேக வைத்தால்... பருப்பு நன்றாக வெந்திருக்கும்.பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ் கலந்து பஜ்ஜி சுட்டால் சுவையும், கலரும் வித்தியாசமாக இருக்கும்.
ரசம் அதிகமாக கொதிக்ககூடாது காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாதுதக்காளியையும் வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.பிரிட்ஜில் வாழைப்பழமும்,உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய் எண்ணெயோ நன்றாக காயக்கூடாது குழம்போ பொரியலோ அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
பூரி மாவு பிசையும் முன் கோதுமை மாவையும், ரவையும் சேரத்து மிதமான தீயில் வறுத்து கொள்ளுங்கள்.மாவில் அரிசி தண்ணீர் சேர்த்து பிசைந்தால் பூரி வெகுநேரம் மிருதுவாக இருக்கும்.பூரி மாவை பிசைந்த பின், அதில் ஒரு விரலை வைத்து அழுத்தி பார்த்தால் விரல் தடம் தெரிய வேண்டும்.விரல் மாவுக்குளே போய்விடக்கூடாது. விரலை வைத்து அழுத்தும் போது கடினமாக இருக்க கூடாது.
வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்ணீரில் போட்டு உரிக்கவும். கண்ணு கரிக்காது. வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களில் மில்க் ஷேக் செய்யும்போது கொஞ்சம் வெண்ணெய் போட்டு செய்தால் மில்க் ஷேக் நன்றாக நுரைத்துக் கொண்டு வரும்.கூட்டு, பொரியல், வறுவல் போன்றவற்றில் உப்பு அல்லது காரம் அதிகமாக சேர்த்து விட்டால் சிறிதளவு ரஸ்க் தூளை பொடித்து சேர்த்து பாருங்கள் உப்பு, காரத்தை அது ஈர்த்துக் கொண்டு விடும்.கத்திரிக்காய் எண்ணெய் கறி சமைக்கும் போது ஒரு ஸ்பூன் கட்டித்தயிரை கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை கலந்தால், பொரித்த பூரி அதிக நேரம் நமத்து போகாமல் இருக்கும்.