25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


சமையல் குறிப்பு

May 05, 2025

எலுமிச்சை சாதம் சுவையாக இருக்க.....

புளியைஅரிசி களைந்த தண்ணீரில் ஊற போட்டு, பிழிந்து ரசம் வைத்தால் சுவையாக இருக்கும்.தேங்காய் சாதம், எலுமிச்சைசாதம்,தயார்செய்யும்போதுகொஞ்சம்பொட்டுக்கடலையை வறுத்துக்கொட்டினால் சுவையாக இருக்கும். பால் உறைக்கு ஊற்றும்போது வெதுவெதுப்பாக இருந்தால் தான், தயிர் நன்கு உறையும். சூடாகவோ அல்லது ஆறியதாகவோ இருந்தால் தயிர் சரியாக உறையாது.டால்டா,நெய் போன்றவை கெட்டியாக இருக்கும்போது பாத்திரத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும். ஸ்பூனை சூடாக்கிக் கொண்டு எடுத்தால் சுலபமாக வரும்.எலுமிச்சை சாதத்துக்கு தாளிக்கும் போது அதனுடன் 2 பச்சைமிளகாய், சிறிய துண்டு இஞ்சி, பாதி வெங்காயம், மல்லி இலையை அரைத்து சேர்த்தால்' எலுமிச்சை சாதம் சுவையாக இருக்கும்.

Apr 28, 2025

பருப்பு கலவை சாதம் செய்ய...

குக்கரில் சிறிதளவுஎண்ணெய்ஊற்றிஅதில்கடுகு,உளுந்து, சீரகம்சேர்த்துதாளித்துஅதன்பின்நறுக்கியவெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் காய்கறிகள் அனைத்தும் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பின் அதில் மேலே கூறிய அளவில் பெருங்காயம், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் அரிசி, புளி கரைசல் மற்றும் துவரம் பருப்பு சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். அதில் சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து குக்கரைமூடவும்.விசில்  வந்தவுடன் குக்கரை இறக்கவும்.இப்போது பருப்பு கலவை சாதம் பரிமாற ரெடி.

Apr 22, 2025

தொக்கு வகைகள், ஊறுகாய் வகைகள் செய்யும் போது…

 எந்த வகையான அசைவ உணவு சமைத்தாலும் கழுவும் போது சமையல் வினிகர் கொஞ்சம் மஞ்சள் தூள் கொஞ்சம் சேர்த்து கழுவிய பின் பிசைந்து வைத்தால் வீட்டில் வாடை வராது.தொக்கு வகைகள், ஊறுகாய் வகைகள் செய்யும் போது கடுகு வெந்தயம் இரண்டையும் வறுத்து பொடி செய்து கடைசியாக தூவி கிளிறி இறக்கினால் சீக்கிரம் கெடாது.அசைவ உணவு சாப்பிடும்போது எலுமிச்சம்பழத்தை நான்காக நறுக்கி வெங்காயத்தையும் வைத்து கொண்டு சாப்பிட்டால் சாப்பிடும் போது திகட்டாது.தயிர் கொண்டு கை அலம்ப மண்ணெண்ணெய் வாசம் போய்விடும்.பாலை கொதிக்க விடாமல் லேசாக சூடாக்கி, ஒரு ஸ்பூன் சர்க்கரையை அப்பாலில் கரைத்து பின்னர் உறை ஊற்றினால் தயிர் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.வற்றல் குழம்பு செய்யும்போது, தாளித்த எண்ணெய் பிரிந்து மேலேவரும் வரை  கொதிக்க விட வேண்டும்.

Apr 15, 2025

தேநீரில் இஞ்சி எலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து  தயாரித்தால்…

பிரியாணியில் காரம் அதிகாமானால் எலுமிச்சை பழச்சாறு, நாட்டுச் சர்க்கரை, வெல்லப்பாகு. நெய்யில் பொரித்த உலர் திராட்சை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து கிளறினால்' காரம் குறையும். கேசரி செய்யும் போது கடைசியாக சிறிதளவு கடலை மாவை வறுத்து சேர்த்து கிளறி இறக்கினால் அசோகா டேஸ்டில் இருக்கும். தினமும் அருந்தும் தேநீரில் இஞ்சி எலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து  தயாரித்தால் ,சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும்  இருக்கும். முட்டைக்கோசை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை தயிரில் போட்டு ஊறவைக்க வேண்டும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு. உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்தால் முட்டைகோஸ் தயிர் பச்சடி புது சுவையுடன் இருக்கும்.

Apr 11, 2025

வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை கொஞ்சம் போட்டால் வாசனையாக இருக்கும்.

தேங்காயைத் துருவி அதை கொதி நீரில் போட்டு வைத்துவிட்டு பிறகு கைப்பொறுக்கும் சூட்டில் எடுத்து பிழிந்தால் நல்ல கெட்டியான பால் கிடைக்கும்.வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை கொஞ்சம் போட்டால் வாசனையாக இருக்கும்.மாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை சிறது  சேர்த்து அரைத்தால் வார்க்கும் தோசை மிருதுவாக இருக்கும் சாம்பார் தண்ணீராக இருந்தால், பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்க்கலாம். சாம்பார் கட்டிப்படுவதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.தேங்காயை அதன் கண் பகுதி மேல் நோக்கியவாறு  வைத்தால், நீண்ட நாள்வரை அழுகிப் போகாமலிருக்கும்.

Mar 31, 2025

பிளாஸ்கினுள் துர்நாற்றம் நீங்க…

குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்,விரைவில் குணமாகும்.கற்பூரம். பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை,மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் சிறிதளவு ரவையை வறுத்து சேர்த்து கிளறினால் கெட்டியாகிவிடும்....வடை, அடை, தோசை செய்யும்போது சிறிது வறுத்து அரைத்த ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென இருக்கும்... பிளாஸ்கினுள் எலுமிச்சை தோல்கள் சிலவற்றை போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவினால் துர்நாற்றம் நீங்கும்.

Mar 27, 2025

கீரை போண்டா

சுவையான கீரை போண்டா சுலபமாக சட்டுன்னு செய்யலாம்... இதற்கு முருங்கைக் கீரையை உருவி, கழுவி தட்டில் பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு கொரகொரப்பாக அரைத்து தட்டில் வைத்து, அதில் பொடித்த வெங்காயத்தை கையில் மைய அழுத்தி பொடியாக உதிர்த்து சேர்த்து, இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பொடித்த கீரையை சேர்த்து நன்கு பிசைந்து, அதனுடன் கடலை மாவு, கோதுமை மாவு, ரவை, அரை கப் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து உப்பு காரம் சரி பார்த்து, கெட்டியாக தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். கீரையில் உள்ள தண்ணீர் போதுமானது. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உருட்டி போட்டு எடுத்தால் டீக்கடை கீரை போண்டா  தயார். மாலை டிபன் ஆக சாப்பிட அருமையாக  இருக்கும்.

Mar 24, 2025

கோதுமை கொழுக்கட்டை சுவையாக இருக்க...

 முந்திரி, பாதாம் சிக்கிகளை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொண்டு, அந்தத் தூளை பாயசம், ஃப்ரூட் சாலட், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் மேலே தூவிப் பரிமாறினால், சுவை சூப்பராக இருக்கும்.முருங்கைக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்படியே பிரிட்ஜில் வைத்து காயவிடாதீர்கள்.முருங்கையை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு ஃபிரீசரில் வையுங்கள். சமைக்கும் போது எடுத்து கழுவி சேர்த்து கொள்ளலாம். குருமாவில் சிறிது பாதம் அரைத்து ஊற்றலாம். இது கொழுப்பை கட்டுபடுத்தும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் உதவும்.தேங்காய் சேர்த்து குருமா வைக்கும் போது ,ஒரு சிலருக்கு சேராது.மற்ற பொருட்களை மட்டும் வதக்கி அரைத்த பிறகு கடைசியாக தேங்காய் பால் சேர்த்து குருமா வைக்கலாம்.கொஞ்சம் தண்ணியாக இருந்தாலும் ருசியில் எந்த விதமான மாற்றமும் இருக்காது.கோதுமை இரண்டு கப் எடுத்து துணியில் கட்டி வேகவைத்து எடுத்து, பின் தட்டில் ஆறவிட்டு, வாணலியில் நெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி மாவை கொழுக்கட்டையாக உருட்டி, வேக வைத்து எடுத்தால், கோதுமை கொழுக்கட்டை சாப்பிட சுவையாக இருக்கும்.

Mar 16, 2025

தேங்காய்த் துருவல் மீதியானால்

தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். கேசரி பால்கோவா தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம். ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து ,நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.தோசை மாவு பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும்.

Mar 13, 2025

 மகிழம்பூ, தேன்குழல் செய்ய....

* பலகாரங்களை எடுத்து வைக்க காற்றுப் புகாத சம்படங்கள் போன்றவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு பலகாரங்கள் சுட ஆரம்பிக்கவும்.* மகிழம்பூ, தேன்குழல் செய்ய, இரண்டு கப் அரிசி மாவு, முக்கால் கப் பயத்தம் பருப்பு, முக்கால் கப் நெய், கால் கப் கடலைப்பருப்பு என்ற அளவு சரியாக இருக்கும். இதை பெருங்காயத்துாள் மற்றும் எள் சேர்த்து செய்யலாம்.* தட்டை செய்யும்போது, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொரு உருண்டையும் மஸ்லின் துணியின் மீது வைத்து தட்டைகளாகத் தட்டினால், மாவிலுள்ள ஈரத்தை துணி இழுத்துக் கொள்ளும். பின்னர், எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுத்தால், தட்டை மொறுமொறுப்பாக இருக்கும்.*வாய் அகலமான இரும்பு வாணலி அல்லது அடிகனமான வாணலியை பலகாரங்களைப் பொரிக்க உபயோகிக்கவும்.தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 13 14

AD's



More News