25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


கண்ணியம் தவறாத நடிகர்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கண்ணியம் தவறாத நடிகர்கள்

 சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் சில நடிகர்கள் ரசிகர்களை வசியம் பண்ணும் அளவிற்கு ஹேண்ட்ஸம் லுக் உடன் சொக்க வைத்து இருக்கிறார்கள். அதிலும் அவர்கள் நடித்த காதல் ரொமான்டிக் படங்கள் என்றால் விரும்பி பார்க்கும் அளவிற்கு சில படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. அப்படி அழகாக இருந்தாலும் அவர்கள் எந்த கிசுகிசுவிலும் மாட்டாமல் கண்ணியமாக இருந்திருக்கிறார்கள்.  

தமிழில் ஆவாரம்பூ என்ற படத்தின் மூலம் சக்கரை கதாபாத்திரத்தில் அறிமுகமானார்வினித். அதன் பிறகு ஜென்டில்மேன், ஜாதிமல்லி, மே மாதம், சக்தி ஆகிய படங்களில் ஹீரோவாகவும் காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி போன்ற படங்களில் துணை நடிகராகவும் நடித்தார். அப்படிப்பட்ட இவரை பார்க்கும் பொழுது ஆர்ப்பாட்டமே இல்லாத நடிகராக கொள்ளை அழகுடன் இளசுகளை கவர்ந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் நடித்த படங்களான அலைபாயுதே, என்னவளே, மின்னலே, டும் டும் டும், ரன் போன்ற அனைத்து படங்களும் காதல் மற்றும் ரொமாண்டிக் ஹீரோ, நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திஇளசுகளின் மனதை கொள்ளையடிக்க வைத்தவர் மாதவன். அதுவும் இவர் காதல் ப்ரபோஸ் பண்ணும் விதம்தான் இப்பொழுது வரை பல இளைஞர்களுக்கு உதவி செய்து வருகிறது. ஆனாலும் இவர் மீது இதுவரை எந்தவித கிசுகிசுவும் வெளிவந்தது இல்லை. 

சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகும், பேசினால் கண்ணிமைக்காமல் பார்க்கும் அளவிற்கு ஹேண்ட்ஸம்

ஹீரோவாக ஜொலித்திருக்கிறார்அருண் விஜய். அதுவும் இவர் முக்கால்வாசி நடித்த படங்கள் அனைத்துமே காதல் சம்பந்தப்பட்ட படங்கள் தான். அந்த வகையில் இவரை ஒரு காதல் ஹீரோ என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட இவர் மீது இப்பொழுது வரை எந்தவித கிசுகிசுமே வந்ததில்லை. அந்த அளவிற்கு ஒரு கண்ணியமான ஹீரோவாக இருக்கிறார்.

மாப்பிள்ளை யார் மாதிரி வேண்டுமென்று கேட்டால் அரவிந்த்சாமி மாதிரி தான் வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு கொள்ள அழகுடன் வசீகரமான தோற்றத்துடன் இருந்தார். இவர் ஹீரோவாக நடித்த சமயத்தில், தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துவார். பெண் ரசிகர்கள் அவ்வளவு இருந்தாலும் அதை பெருசாக அலட்டிக்காமல் கமுகமாக இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

ஷாம்: வசியம் பண்ணும் அளவிற்கு கண்ணாலேயே பேசி கவரக்கூடிய ஹீரோவாக ஜொலித்தார். “12B ” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி அதை தொடர்ந்து காதல் படங்களை நடித்து வந்தார். ஆனாலும் இவருக்கு பெருசாக பட வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையாததால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். மறுபடியும் ரீ என்டரி கொடுக்கும் விதமாக வாரிசு படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கு படத்தில் நடித்து  வருகிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News